என் கண்கள் தின்று தீர்ப்பதற்கென்று
வெட்கங்களை வாரி வழங்கும் நீ
என் இதழ்கள் இருப்பதைக்
கண்டு கொள்வதே இல்லையடி
உன் இதழ் சுழித்து நீ செய்யும்
அந்த ஒரே ஒரு சைகைக்காகத் தான்
காத்திருக்கின்றன என் இதழ்கள்
பொறுமையை ரொம்பவும்
சோதிக்காதேடி அவற்றைப் பார்த்தால்
பரிதாபமாகத் தெரியவில்லையா உனக்கு...?
அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று
நீ இப்படி வெட்கப் படுகிறாய்...?
உன் இதழில் ஒரு ஓரத்தில்
இன்றிரவு மட்டும்
படுத்துறங்கிப் போகிறேன்
என்றுதானடி சொன்னேன்...
வர வர உன் வெட்கங்களுக்கு
அளவே இல்லாமல் போய் விட்டதடி
முன்பெல்லாம் என்னைப் பார்த்து மட்டும் தான்
வெட்கப் பட்டுக் கொண்டிருந்தாய்
இப்போது என் புகைப்படத்தைப்
பார்த்து கூட வெட்கப்பட ஆரம்பித்து விடுகிறாய்
இப்படியே போய்க்கொண்டிருந்தால்
என் முத்தங்களை எல்லாம்
உன் வெட்கங்கள் எப்படித்தான்
சமாளிக்கப் போகிறதோ...?
தூங்கி எழுந்ததும்
கைகளை உயர்த்தி
கழுத்தை வளைத்து
நீ சோம்பல் முறிக்கும் அழகுக்கு
சொர்க்கத்தையே எழுதி வைக்கலாமடி
கன்னத்தில் முத்தத்தை
வாங்கிக்கொள் முதலில்,
பிறகு
சொர்க்கத்தை விலைபேசிப்
பார்க்கலாம் உன் இதழில்...
குழந்தைகள் கூட
அழகாக சாப்பிடுகின்றன
உனக்கு சாப்பிடத் தெரியவில்லையடி
ஐஸ்கிரீம் இதழ்களில் வடிவதைப்
பற்றியெல்லாம் நீ கவலைப்
படாதே அதைத் துடைக்கும் வேலையை
என் இதழ்கள் பார்த்துக்கொள்ளும்...
நேரில் தான் கூச்சப் படுகிறாய் என்றால்
செல்பேசியில் முத்தமிடுவதற்குக் கூட
என்ன வெட்கம் உனக்கு...?
இதற்குத் தான் அப்போதே சொன்னேன்
என் படத்தை எல்லாம்
உன் செல்பேசியில் சேர்த்து வைக்காதே என்று...
வெட்கம் தொலைத்த நம் விரல்கள்
சத்தமில்லாமல் பேசிக் கொள்ள
ஆரம்பித்த உடன்
உன் வியர்வை படர்ந்த இதழ்களால்
ஏதோ பேசிக் கொள்கிறாயே என்னடி அது...?
விரல்களுக்கு வந்த தைரியம்
உன் உதடுகளுக்கு இன்னும் வரவில்லையா
என்று கேட்பது போல் இருக்கிறது எனக்கு
உண்மை தானா அது...?
காலையில் எழுந்ததும் கையால்
மாவுக் கோலம் போடுகிறாய்
என்னைக் கண்டதும் காலினால்
வெட்கக் கோலம் போடுகிறாய்
எனக்கும் தான் கோலம்
போடத் தெரியும்
என் இதழ்களால்
உன் இதழ்களில்
முத்தக் கோலம்
போட்டுக் காட்டவா...?
வெட்கமாக இருப்பதாக
முகத்தை மூடிக்கொண்டால்
என்னால் முத்தமிட
முடியாது என்றா நினைக்கிறாய்...?
இதழ்களில் மட்டும் தான்
முத்தமிட வேண்டும் என்ற சட்டம்
எந்த நாட்டிலும் இல்லை தெரியுமா...?
இன்றோடு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்
உன் வெட்கத்திற்கு...
என்ன ஆனாலும் பரவாயில்லை
நீ வெட்கப் பட்டுக் கொண்டேயிரு
நான் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறேன்
காலையில் உன் இதழைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளலாம் முடிவை...
நான் உன்னை அணைப்பதற்குக்
கைகளை கொண்டு வரும் போதெல்லாம்
நீயோ உன் வெட்கத்தை அணைக்காமல்
விளக்கை அணைப்பதிலேயே
கவனமாய் இருக்கிறாய்
அப்படி அந்த விளக்கு
என்ன பாவமடி செய்தது...?
என் கண்கள் செய்தது போல்.....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
93 comments:
\\"வெட்கங்களும் சில முத்தங்களும்..."\\
சிலது மட்டும் தானா
மற்றது எங்கே
//உன் இதழில் ஒரு ஓரத்தில்
இன்றிரவு மட்டும்
படுத்துறங்கிப் போகிறேன்//
இதெல்லாம் பேராசை,
அப்ப்டியே குடி இருந்துக்கிறேன்ன்னு சொல்லி பாருங்க, அனுமதி கிடைத்தாலும் கிடைக்கலாம்
\\உன் இதழ் சுழித்து நீ செய்யும்
அந்த ஒரே ஒரு சைகைக்காகத் தான்
காத்திருக்கின்றன என் இதழ்கள்\\
ஆஹா ஆஹா அருமை
\\குழந்தைகள் கூட
அழகாக சாப்பிடுகின்றன
உனக்கு சாப்பிடத் தெரியவில்லையடி
ஐஸ்கிரீம் இதழ்களில் வடிவதைப்
பற்றியெல்லாம் நீ கவலைப்
படாதே அதைத் துடைக்கும் வேலையை
என் இதழ்கள் பார்த்துக்கொள்ளும்...\\
அதுக்காகத்தான் அத்தான் ...
\\நேரில் தான் கூச்சப் படுகிறாய் என்றால்
செல்பேசியில் முத்தமிடுவதற்குக் கூட
என்ன வெட்கம் உனக்கு...?
இதற்குத் தான் அப்போதே சொன்னேன்
என் படத்தை எல்லாம்
உன் செல்பேசியில் சேர்த்து வைக்காதே என்று...\\
பாவம் செல்பேசி விடுங்கப்பா
\\வெட்கம் தொலைத்த நம் விரல்கள்
சத்தமில்லாமல் பேசிக் கொள்ள
ஆரம்பித்த உடன்
உன் வியர்வை படர்ந்த இதழ்களால்
ஏதோ பேசிக் கொள்கிறாயே என்னடி அது...?
விரல்களுக்கு வந்த தைரியம்
உன் உதடுகளுக்கு இன்னும் வரவில்லையா
என்று கேட்பது போல் இருக்கிறது எனக்கு
உண்மை தானா அது...?\\
வாங்கமா விடமாட்டார் போல ...
\\காலையில் எழுந்ததும் கையால்
மாவுக் கோலம் போடுகிறாய்
என்னைக் கண்டதும் காலினால்
வெட்கக் கோலம் போடுகிறாய்
எனக்கும் தான் கோலம்
போடத் தெரியும்
என் இதழ்களால்
உன் இதழ்களில்
முத்தக் கோலம்
போட்டுக் காட்டவா...?\\
முத்தம் போடலாம்
அவளும் சத்தம் போடலாம்
எப்படிங்க காட்டுவீங்க ...
\\வெட்கமாக இருப்பதாக
முகத்தை மூடிக்கொண்டால்
என்னால் முத்தமிட
முடியாது என்றா நினைக்கிறாய்...?
இதழ்களில் மட்டும் தான்
முத்தமிட வேண்டும் என்ற சட்டம்
எந்த நாட்டிலும் இல்லை தெரியுமா...?\\
ஜூப்பரு
\\நான் உன்னை அணைப்பதற்குக்
கைகளை கொண்டு வரும் போதெல்லாம்
நீயோ உன் வெட்கத்தை அணைக்காமல்
விளக்கை அணைப்பதிலேயே
கவனமாய் இருக்கிறாய்
அப்படி அந்த விளக்கு
என்ன பாவமடி செய்தது...?
என் கண்கள் செய்தது போல்.....\\
ஃபைனல் டச் சூப்பர்.
:)))))அனைத்தும் அழகு :)))))
//தூங்கி எழுந்ததும்
கைகளை உயர்த்தி
கழுத்தை வளைத்து
நீ சோம்பல் முறிக்கும் அழகுக்கு
சொர்க்கத்தையே எழுதி வைக்கலாமடி
கன்னத்தில் முத்தத்தை
வாங்கிக்கொள் முதலில்,
பிறகு
சொர்க்கத்தை விலைபேசிப்
பார்க்கலாம் உன் இதழில்...//
:))))))
முத்த சத்தங்கள் மொத்தமாய்
உன் இதழ் சுழித்து நீ செய்யும்
அந்த ஒரே ஒரு சைகைக்காகத் தான்
காத்திருக்கின்றன என் இதழ்கள்\\
எப்படிய்யா எப்படி இப்படி..
காதலித்துப் பார் கவிதை வரும்..
சரியாத்தான்யா சொல்லியிருக்காங்க..
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சத்தம் ஜாஸ்தியாக்கீது
ஆனாலும் ஜாலியாக்கீது
\\காதலித்துப் பார் கவிதை வரும்..
சரியாத்தான்யா சொல்லியிருக்காங்க..\\
சரிதான் ...
காதலித்து பார்க்காவிட்டால் இன்னும் நிறைய வரும் அழுகையோடு ...
புதியவன்,மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும்.சீசீசீ....எனக்கே வெட்கமாப் போச்சு இந்தக் கவிதை பார்த்து.அப்போ உங்கள் அவளின் நிலை என்ன.உண்மையில் அழகான படங்களோடு மனதையே கொட்டி
விட்ட மாதிரி வரிகளின் அழகு.
புத்தாண்டுக்கு உங்கள் அவவுக்குக் கொடுக்க வேண்டியதுதானே
....கவிதையைத்தான் சொன்னேன்.வேறு ஒன்றுமில்லை.
சில வெட்கங்களும்..... பல முத்தங்களும்.....
அருமையான வரிகள்...
அனுபவம் இல்லாமல் இந்தவரிகள் வரா...
Simply Superb.....
புதியவனுக்கு என் வாழ்த்துக்கள்....
-- Malick
\\அனுபவம் இல்லாமல் இந்தவரிகள் வரா...\\
உண்மை உண்மை உண்மை
உண்மை உண்மை உண்மை
உண்மை உண்மை உண்மை
உண்மை உண்மை உண்மை
உண்மை உண்மை உண்மை
உங்களுடைய இந்த கவிதைக்கே சொர்க்கத்தை எழுதி வைக்கலாம்.
மிக மிக அருமை.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
/நான் உன்னை அணைப்பதற்குக்
கைகளை கொண்டு வரும் போதெல்லாம்
நீயோ உன் வெட்கத்தை அணைக்காமல்
விளக்கை அணைப்பதிலேயே
கவனமாய் இருக்கிறாய்
அப்படி அந்த விளக்கு
என்ன பாவமடி செய்தது...?
என் கண்கள் செய்தது போல்.....//
--- கிராமத்துப்பெண்ணின் நிதர்சணத்தை நினைவுப்படுத்தும் வரிகள்....
அருமை தோழரே....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
/நான் உன்னை அணைப்பதற்குக்
கைகளை கொண்டு வரும் போதெல்லாம்
நீயோ உன் வெட்கத்தை அணைக்காமல்
விளக்கை அணைப்பதிலேயே
கவனமாய் இருக்கிறாய்
அப்படி அந்த விளக்கு
என்ன பாவமடி செய்தது...?
என் கண்கள் செய்தது போல்.....//
--- கிராமத்துப்பெண்ணின் நிதர்சணத்தை நினைவுப்படுத்தும் வரிகள்....
அருமை தோழரே....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
இந்த படங்களை எல்லாம் எங்க பிடிச்சீங்க?
கவிதைகள பத்தி சொல்லவே தேவை இல்ல :)
//வெட்கங்களும் சில முத்தங்களும்...// அனால் இதற்கு நிறைய பாராட்டலாம்.
அழகு கவிதை.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
மிக மிக அருமை. ..
புத்தாண்டு வாழ்த்துக்கள்
super kavithikkundaana photos great
புதியவரே..
புதிய வலைத்தளதிற்கு வந்ததற்கு
புதியவரின் கவிதைகளும் ஒரு காரணம்
புதியதாய் நிறைய சொல்ல
புதிய வரவின்(நான் தான்கோ)
புதிய ஆண்டு வாழ்த்துக்கள்
அய்யய்யோ.........
முத்தக்கவிதைகளை மொத்தமும் படிக்க வெக்கமாக உள்ளது.
யம்மா.....எப்படி சார் ஒரே மேட்டர்ல, இம்புட்டு கவிதை எழுதி கலக்குறீங்க! great!
anaithu kavithai varikalum arumai.
iniya puththandu nal valzthukkal
உங்களின் கவிதை வரி மிகவும் அருமை..
"வெட்கமாக இருப்பதாக
முகத்தை மூடிக்கொண்டால்
என்னால் முத்தமிட
முடியாது என்றா நினைக்கிறாய்...?
இதழ்களில் மட்டும் தான்
முத்தமிட வேண்டும் என்ற சட்டம்
எந்த நாட்டிலும் இல்லை தெரியுமா..."
இந்த வரிகள் என்னை கவர்ந்து விட்டது..
கவிதையும் படங்களும் அழகோ அழகு!!
புத்தாண்டு வாழ்த்துக்க்ள்!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
\\
காதலித்துப் பார் கவிதை வரும்..
சரியாத்தான்யா சொல்லியிருக்காங்க..
\\
நீங்க என்னா சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்
அதுக்கு இந்த கவிதை ஒரு நல்ல எடுத்துக்க்காட்டு
வாழ்த்துக்கள்
மிக மிக அருமை, அழகு கவிதைகள்
இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துகள் !!!
// அதிரை ஜமால் said...
\\"வெட்கங்களும் சில முத்தங்களும்..."\\
சிலது மட்டும் தானா
மற்றது எங்கே//
மற்றத தேட ஆள் அனுப்பிருக்கு
கிடச்சதும் சொல்லி அனுப்புறேன்...
// வால்பையன் said...
//உன் இதழில் ஒரு ஓரத்தில்
இன்றிரவு மட்டும்
படுத்துறங்கிப் போகிறேன்//
இதெல்லாம் பேராசை,
அப்ப்டியே குடி இருந்துக்கிறேன்ன்னு சொல்லி பாருங்க, அனுமதி கிடைத்தாலும் கிடைக்கலாம்//
அப்படின்னா சொல்லுரீங்க...?
அடுத்த முறை
சொல்லிப் பார்க்கிறேன்...என் எழுத்துக்களில்...
நன்றி வால்பையன்...
//அதிரை ஜமால் said...
\\உன் இதழ் சுழித்து நீ செய்யும்
அந்த ஒரே ஒரு சைகைக்காகத் தான்
காத்திருக்கின்றன என் இதழ்கள்\\
ஆஹா ஆஹா அருமை//
ஆஹா...ஆஹா...நன்றி...
// அதிரை ஜமால் said...
\\குழந்தைகள் கூட
அழகாக சாப்பிடுகின்றன
உனக்கு சாப்பிடத் தெரியவில்லையடி
ஐஸ்கிரீம் இதழ்களில் வடிவதைப்
பற்றியெல்லாம் நீ கவலைப்
படாதே அதைத் துடைக்கும் வேலையை
என் இதழ்கள் பார்த்துக்கொள்ளும்...\\
அதுக்காகத்தான் அத்தான் ...//
எதற்காக ஜமால்...?
// அதிரை ஜமால் said...
\\நேரில் தான் கூச்சப் படுகிறாய் என்றால்
செல்பேசியில் முத்தமிடுவதற்குக் கூட
என்ன வெட்கம் உனக்கு...?
இதற்குத் தான் அப்போதே சொன்னேன்
என் படத்தை எல்லாம்
உன் செல்பேசியில் சேர்த்து வைக்காதே என்று...\\
பாவம் செல்பேசி விடுங்கப்பா//
விட்டாச்சு...
// அதிரை ஜமால் said...
\\வெட்கம் தொலைத்த நம் விரல்கள்
சத்தமில்லாமல் பேசிக் கொள்ள
ஆரம்பித்த உடன்
உன் வியர்வை படர்ந்த இதழ்களால்
ஏதோ பேசிக் கொள்கிறாயே என்னடி அது...?
விரல்களுக்கு வந்த தைரியம்
உன் உதடுகளுக்கு இன்னும் வரவில்லையா
என்று கேட்பது போல் இருக்கிறது எனக்கு
உண்மை தானா அது...?\\
வாங்கமா விடமாட்டார் போல ...//
எனக்கு ஒன்னும் தெரியாது...
// அதிரை ஜமால் said...
\\காலையில் எழுந்ததும் கையால்
மாவுக் கோலம் போடுகிறாய்
என்னைக் கண்டதும் காலினால்
வெட்கக் கோலம் போடுகிறாய்
எனக்கும் தான் கோலம்
போடத் தெரியும்
என் இதழ்களால்
உன் இதழ்களில்
முத்தக் கோலம்
போட்டுக் காட்டவா...?\\
முத்தம் போடலாம்
அவளும் சத்தம் போடலாம்
எப்படிங்க காட்டுவீங்க ...//
இது உங்களுக்குத் தெரியாதா என்ன...?
// அதிரை ஜமால் said...
\\வெட்கமாக இருப்பதாக
முகத்தை மூடிக்கொண்டால்
என்னால் முத்தமிட
முடியாது என்றா நினைக்கிறாய்...?
இதழ்களில் மட்டும் தான்
முத்தமிட வேண்டும் என்ற சட்டம்
எந்த நாட்டிலும் இல்லை தெரியுமா...?\\
ஜூப்பரு//
நன்றி...
//அதிரை ஜமால் said...
\\நான் உன்னை அணைப்பதற்குக்
கைகளை கொண்டு வரும் போதெல்லாம்
நீயோ உன் வெட்கத்தை அணைக்காமல்
விளக்கை அணைப்பதிலேயே
கவனமாய் இருக்கிறாய்
அப்படி அந்த விளக்கு
என்ன பாவமடி செய்தது...?
என் கண்கள் செய்தது போல்.....\\
ஃபைனல் டச் சூப்பர்.//
உங்கள் குறும்பான கரும்பான
பின்னூட்டங்களுக்கு...
மிக்க நன்றி ஜமால்...
// ஸ்ரீமதி said...
:)))))அனைத்தும் அழகு :)))))//
நன்றி ஸ்ரீமதி...
// ஸ்ரீமதி said...
//தூங்கி எழுந்ததும்
கைகளை உயர்த்தி
கழுத்தை வளைத்து
நீ சோம்பல் முறிக்கும் அழகுக்கு
சொர்க்கத்தையே எழுதி வைக்கலாமடி
கன்னத்தில் முத்தத்தை
வாங்கிக்கொள் முதலில்,
பிறகு
சொர்க்கத்தை விலைபேசிப்
பார்க்கலாம் உன் இதழில்...//
:))))))//
மிக்க நன்றி...
\\மற்றத தேட ஆள் அனுப்பிருக்கு
கிடச்சதும் சொல்லி அனுப்புறேன்...\\
மற்றவையும் கிடைச்சிடிச்சோ ...
// அமிர்தவர்ஷினி அம்மா said...
முத்த சத்தங்கள் மொத்தமாய்
உன் இதழ் சுழித்து நீ செய்யும்
அந்த ஒரே ஒரு சைகைக்காகத் தான்
காத்திருக்கின்றன என் இதழ்கள்\\
எப்படிய்யா எப்படி இப்படி..
காதலித்துப் பார் கவிதை வரும்..
சரியாத்தான்யா சொல்லியிருக்காங்க..
புத்தாண்டு வாழ்த்துக்கள்//
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
//காதலித்துப் பார் கவிதை வரும்..
சரியாத்தான்யா சொல்லியிருக்காங்க..//
ஆமாம்...சரியாத்தான்
சொல்லியிருக்கிறாங்க
காதலைக் காதலித்து பார்
கவிதை வருமென்று...
உங்கள் வருகைக்கு நன்றி...
உங்களுக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//அதிரை ஜமால் said...
சத்தம் ஜாஸ்தியாக்கீது
ஆனாலும் ஜாலியாக்கீது//
உங்களுக்கு மகிழ்ச்சியா இருந்தால் சரிதான்...
//அதிரை ஜமால் said...
\\காதலித்துப் பார் கவிதை வரும்..
சரியாத்தான்யா சொல்லியிருக்காங்க..\\
சரிதான் ...
காதலித்து பார்க்காவிட்டால் இன்னும் நிறைய வரும் அழுகையோடு ...//
அனுபவத்தோட சொல்லுரீங்க போல
அப்ப சரியா தான் இருக்கும்...
// ஹேமா said...
புதியவன்,மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும்.சீசீசீ....எனக்கே வெட்கமாப் போச்சு இந்தக் கவிதை பார்த்து.அப்போ உங்கள் அவளின் நிலை என்ன.உண்மையில் அழகான படங்களோடு மனதையே கொட்டி
விட்ட மாதிரி வரிகளின் அழகு.
புத்தாண்டுக்கு உங்கள் அவவுக்குக் கொடுக்க வேண்டியதுதானே
....கவிதையைத்தான் சொன்னேன்.வேறு ஒன்றுமில்லை.//
வாங்க ஹேமா
வெட்கமாப் போச்சா...?
அதனால என்னங்க
வெட்கம் தானே பொண்களோட
மிகச்சிறந்த ஆபரணம்...
நன்றி ஹேமா...
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
// Malick .A said...
சில வெட்கங்களும்..... பல முத்தங்களும்.....
அருமையான வரிகள்...
அனுபவம் இல்லாமல் இந்தவரிகள் வரா...
Simply Superb.....
புதியவனுக்கு என் வாழ்த்துக்கள்....
-- Malick//
வாங்க Malick
உங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி...
//அனுபவம் இல்லாமல் இந்தவரிகள் வரா...//
இப்படியெல்லாம் திடீர் தாக்குதல்
நடத்தக் கூடாது...
//அதிரை ஜமால் said...
\\அனுபவம் இல்லாமல் இந்தவரிகள் வரா...\\
உண்மை உண்மை உண்மை
உண்மை உண்மை உண்மை
உண்மை உண்மை உண்மை
உண்மை உண்மை உண்மை
உண்மை உண்மை உண்மை//
ஏன் இப்படி ஒரு கொலை வெறி...?
//Ravee (இரவீ ) said...
உங்களுடைய இந்த கவிதைக்கே சொர்க்கத்தை எழுதி வைக்கலாம்.
மிக மிக அருமை.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி இரவீ
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//அபுஅஃப்ஸர் said...
/நான் உன்னை அணைப்பதற்குக்
கைகளை கொண்டு வரும் போதெல்லாம்
நீயோ உன் வெட்கத்தை அணைக்காமல்
விளக்கை அணைப்பதிலேயே
கவனமாய் இருக்கிறாய்
அப்படி அந்த விளக்கு
என்ன பாவமடி செய்தது...?
என் கண்கள் செய்தது போல்.....//
--- கிராமத்துப்பெண்ணின் நிதர்சணத்தை நினைவுப்படுத்தும் வரிகள்....
அருமை தோழரே....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....//
மிக்க நன்றி அபுஅஃப்ஸர்
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//Divyapriya said...
இந்த படங்களை எல்லாம் எங்க பிடிச்சீங்க?
கவிதைகள பத்தி சொல்லவே தேவை இல்ல :)//
நன்றி திவ்யப் பிரியா
படங்கள் அனைத்தும்
Googleல தான் தேடி எடுக்கிறேன்...
//கணினி தேசம் said...
//வெட்கங்களும் சில முத்தங்களும்...// அனால் இதற்கு நிறைய பாராட்டலாம்.
அழகு கவிதை.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!//
நன்றி கணினி தேசம்
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//பிரியமுடன்......... said...
super kavithikkundaana photos great//
ரொம்ப நன்றி பிரியமுடன்...
//நசரேயன் said...
மிக மிக அருமை. ..
புத்தாண்டு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நசரேயன்
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//அபுஅஃப்ஸர் said...
புதியவரே..
புதிய வலைத்தளதிற்கு வந்ததற்கு
புதியவரின் கவிதைகளும் ஒரு காரணம்
புதியதாய் நிறைய சொல்ல
புதிய வரவின்(நான் தான்கோ)
புதிய ஆண்டு வாழ்த்துக்கள்//
உங்கள் வரவை வலையுலகின்
சார்பாக வரவேற்கிறேன்...
உங்களிடம் இருந்து நல்ல பல
படைப்புகளை எதிர் பார்க்கிறோம்...
//அதிரை ஜமால் said...
\\மற்றத தேட ஆள் அனுப்பிருக்கு
கிடச்சதும் சொல்லி அனுப்புறேன்...\\
மற்றவையும் கிடைச்சிடிச்சோ ...//
இப்பத்தான் Googleல தேடிக்கிட்டு இருக்கிறாங்க...
கிடைச்சா E-Mail அனுப்புகிறேன்...
//தமிழ் தோழி said...
அய்யய்யோ.........
முத்தக்கவிதைகளை மொத்தமும் படிக்க வெக்கமாக உள்ளது.//
தலைப்பே அது தானே தமிழ் தோழி...
படிச்சுட்டு வெட்கம் வரலைனா தானே தவறு...
// Raj said...
யம்மா.....எப்படி சார் ஒரே மேட்டர்ல, இம்புட்டு கவிதை எழுதி கலக்குறீங்க! great!//
நன்றி ராஜ்...
//gayathri said...
anaithu kavithai varikalum arumai.
iniya puththandu nal valzthukkal//
நன்றி காயத்ரி
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
// viyaa said...
உங்களின் கவிதை வரி மிகவும் அருமை..
"வெட்கமாக இருப்பதாக
முகத்தை மூடிக்கொண்டால்
என்னால் முத்தமிட
முடியாது என்றா நினைக்கிறாய்...?
இதழ்களில் மட்டும் தான்
முத்தமிட வேண்டும் என்ற சட்டம்
எந்த நாட்டிலும் இல்லை தெரியுமா..."
இந்த வரிகள் என்னை கவர்ந்து விட்டது..//
நன்றி viyaa
கவிதை உங்களுக்குப் பிடித்திருந்தால்
எனக்கு மகிழ்ச்சியே...
//Divya said...
கவிதையும் படங்களும் அழகோ அழகு!!//
மிக்க நன்றி திவ்யா...
//Divya said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...//
// கவின் said...
:)//
நன்றி கவின்...
//Saravana Kumar MSK said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//
நன்றி சரவணா
உங்களுக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
// RAMYA said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!//
நன்றி ரம்யா
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//RAMYA said...
\\
காதலித்துப் பார் கவிதை வரும்..
சரியாத்தான்யா சொல்லியிருக்காங்க..
\\
நீங்க என்னா சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்
அதுக்கு இந்த கவிதை ஒரு நல்ல எடுத்துக்க்காட்டு
வாழ்த்துக்கள்//
இந்த வாழ்த்து எதற்கென்று தெரியவில்லை
இருந்தாலும் நன்றி ரம்யா...
//ஸாவரியா said...
மிக மிக அருமை, அழகு கவிதைகள்
இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துகள் !!!//
மிக்க நன்றி ஸாவரியா...
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வெட்கங்களையோ அல்லது
முத்தங்களையோ அல்லது
வெட்கத்தோடு உள்ள முத்தங்களையோ
சீக்கிரம்
//அதிரை ஜமால் said...
வெட்கங்களையோ அல்லது//
வெட்கங்களையும்...
//அதிரை ஜமால் said...
முத்தங்களையோ அல்லது//
முத்தங்களையும்...
//அதிரை ஜமால் said...
வெட்கத்தோடு உள்ள முத்தங்களையோ
சீக்கிரம்//
வெட்கத்தோடு உள்ள முத்தங்களையும்...
சீக்கிரம்...?
அட
வலைப்பூவில் ஏற்றுங்கள் என்றேன்
ஆகா ஆகா...வெட்கத்திற்கு இத்தனை
கவிதையா!!!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
//Thooya said...
ஆகா ஆகா...வெட்கத்திற்கு இத்தனை
கவிதையா!!!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்//
வாங்க தூயா
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
கவிதை அழகு.
படங்களோ கவிதை..
வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :) கவிதை நல்லாயிருக்கு :)
புதியவன் said...
//வண்ணத்துபூச்சியார் said...
கவிதை அழகு.
படங்களோ கவிதை..
வாழ்த்துக்கள்//
வாங்க சூர்யா
உங்கள் முதல் வருகைக்கும்
வாழ்த்துக்களுக்கும் நன்றி...
// Mathu said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :) கவிதை நல்லாயிருக்கு :)//
நன்றி மது...
உங்களுக்கும் எனது
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நீங்கள் முத்தவியல் படித்தவரோ?
//து. பவனேஸ்வரி said...
நீங்கள் முத்தவியல் படித்தவரோ?//
இயற்பியல் தெரியும் வேதியியல் தெரியும் அதென்னங்க "முத்தவியல்" ...?
superb:))
//PoornimaSaran said...
superb:))//
நன்றி...
Haiyooo... very romantic pudhiyavan....
எந்த வரியினை புடிச்சுருக்குன்னு குறிப்பிட்டு சொல்ல முடியலை அத்தனையுமே அழகோ அழகு....
Hmmm your girl is very lucky..... ;-)
//Natchatra said...
Haiyooo... very romantic pudhiyavan....
எந்த வரியினை புடிச்சுருக்குன்னு குறிப்பிட்டு சொல்ல முடியலை அத்தனையுமே அழகோ அழகு....
Hmmm your girl is very lucky..... ;-)//
Thanks a lot Natchatra...
நேரில் தான் கூச்சப் படுகிறாய் என்றால்
செல்பேசியில் முத்தமிடுவதற்குக் கூட
என்ன வெட்கம் உனக்கு...?
இதற்குத் தான் அப்போதே சொன்னேன்
என் படத்தை எல்லாம்
உன் செல்பேசியில் சேர்த்து வைக்காதே என்று...
again superb one..
//sathya said...
நேரில் தான் கூச்சப் படுகிறாய் என்றால்
செல்பேசியில் முத்தமிடுவதற்குக் கூட
என்ன வெட்கம் உனக்கு...?
இதற்குத் தான் அப்போதே சொன்னேன்
என் படத்தை எல்லாம்
உன் செல்பேசியில் சேர்த்து வைக்காதே என்று...
again superb one..//
ரசிப்பிற்கு நன்றி சத்யா...
Post a Comment