எந்த இடம் எந்த நேரம் தெரியவில்லை
அது ஒரு ஏகாந்த வேளை
நான்...நீ...நாம் மட்டுமே
எங்கு நோக்கினும் தனிமை
இவ்வுலகம் மிக அமைதியாக
மெல்லிய வேகத்தில்
சுழலத் தொடங்குகிறது
சுழற்சி வேகம் குறைந்ததில்
அந்த இரவு வருடங்களாய் நீண்ண்ண்டு
மெ து வா க நகர்கிறது
நிலவின் வெப்பத்தில்
குளிர்க் காற்று சூடேறி
நம் அணைப்பின் இறுக்கத்தில்
இடைவெளி தொலைத்தக் காற்று
சிரமப் பட்டு நம் சுவாசத்தை நிறைத்த போது
வெட்கம் மறந்த விழிகளுக்குள்
விழித்திருந்த உன் உறக்கத்தில்
சத்தமில்லா முத்தங்கள்
நம் இதழ்களுக்குள் நனைந்தன
அப்போது பரவிய மௌனத்தின் அலரலில்
என் செவிப்பறை தாண்டி ஒலித்த நிசப்தத்தில்
சூரிய ஒளியோடு கரைந்தது
அந்த நீண்ண்ண்ட இரவு
எல்லாம் சரியாகத்தான் நடந்தது
குழந்தை அழும் சத்தம் கேட்டு
காலையில் விழித்தெழும் வரை.......
Monday, December 15, 2008
எல்லாம் சரியாகத்தான் நடந்தது…
(பி.கு. இது ஒரு கற்பனை மட்டுமே...அதனால குழந்தை அழுதுச்சா...?
உட்வார்ட்ஸ் கிராப் வாட்டர் கொடுத்தீங்களா...?...அப்படினெல்லாம் யாரும் கேட்கக் கூடாது...)
Subscribe to:
Post Comments (Atom)
60 comments:
Me the first?? :):)
ஹை நானே தான் :):)
கவிதை சூப்பர் :))
//"எல்லாம் சரியாகத்தான் நடந்தது…"//
தலைப்பப்பார்த்தே டவுட் ஆனேன்...
//குழந்தை அழும் சத்தம் கேட்டு
காலையில் விழித்தெழும் வரை.......//
இத பார்த்ததும் கன்பார்ம் ஆகிடிச்சு :))))))
//பி.கு. இது ஒரு கற்பனை மட்டுமே...அதனால குழந்தை அழுதுச்சா...?
உட்வார்ட்ஸ் கிராப் வாட்டர் கொடுத்தீங்களா...?...அப்படினெல்லாம் யாரும் கேட்கக் கூடாது...)//
நான் அப்படி தான் கேட்பேன் :)))))))
\\வெட்கம் மறந்த விழிகளுக்குள்
விழித்திருந்த உன் உறக்கத்தில்
சத்தமில்லா முத்தங்கள்\\
ரொம்ப நாளா கானோமேன்னு நினைத்தேன்.
நினைத்தேன் வந்தாய் ...
அப்படியே என் மேல போட்டுட்டு நீ தப்பிச்சகலாம்னு பார்க்காத புதியவரே
;;;;))))
hi
hi
hi
//சூரிய ஒளியோடு கரைந்தது
அந்த நீண்ண்ண்ட இரவு
எல்லாம் சரியாகத்தான் நடந்தது
குழந்தை அழும் சத்தம் கேட்டு
காலையில் விழித்தெழும் வரை.......
//
கனவு நல்லா இருந்துச்சா??
ஆமா யாரு குழந்தை அது?
??????????????????????????
me the 10 th
//எந்த இடம் எந்த நேரம் தெரியவில்லை
அது ஒரு ஏகாந்த வேளை
//
அருமையான வேலை தான் போலும்!!!
மொத்தத்தில் கவிதை பிரமாதம் :))
//சுழற்சி வேகம் குறைந்ததில்
அந்த இரவு வருடங்களாய் நீண்ண்ண்டு
மெ து வா க நகர்கிறது
//
ரசித்துப் படித்தேன்:)
செம, பி.கு வையும் சேத்து தான்… :))
நல்ல கவிதை
///வெட்கம் மறந்த விழிகளுக்குள்
விழித்திருந்த உன் உறக்கத்தில்
சத்தமில்லா முத்தங்கள்
நம் இதழ்களுக்குள் நனைந்தன///
ஆகா....
என்னதிது.....
ரொம்ப நாளுக்கு அப்புறம் மருபடியும்
வந்திடுச்சா.
இப்படி நான் கேக்கல
அதிரை ஜமால்,பூர்ணிமா அக்கா இவங்க தான் கேட்டாங்க.
//பி.கு. இது ஒரு கற்பனை மட்டுமே...அதனால குழந்தை அழுதுச்சா...?
உட்வார்ட்ஸ் கிராப் வாட்டர் கொடுத்தீங்களா...?...அப்படினெல்லாம் யாரும் கேட்கக் கூடாது...)//
நான் அப்படி தான் கேட்பேன் :)))))))
ரிப்பீட்டு......
புதியவன்,கவனமாகவே வசனங்களைக் கோர்த்தெடுத்து மனைவிக்குக் காதல் முத்தம் கொடுத்திருக்கிறீர்கள்.அருமை.
\\அது ஒரு ஏகாந்த வேளை
நான்\\
ஏகாந்த வேளை இனிக்கும்
இன்பத்தின் வாசல் திறக்கும்
இந்த பாடல் நினைவுக்கு வந்தது.
//ஸ்ரீமதி said...
Me the first?? :):)//
வாங்க ஸ்ரீமதி முதலில் வந்ததற்கு நன்றி...
//ஸ்ரீமதி said...
ஹை நானே தான் :):)//
நீங்களே தான்...
//ஸ்ரீமதி said...
கவிதை சூப்பர் :))
//"எல்லாம் சரியாகத்தான் நடந்தது…"//
தலைப்பப்பார்த்தே டவுட் ஆனேன்...
//குழந்தை அழும் சத்தம் கேட்டு
காலையில் விழித்தெழும் வரை.......//
இத பார்த்ததும் கன்பார்ம் ஆகிடிச்சு :))))))//
என்ன டவுட்...?
என்ன கன்பார்ம் ஆகிடுச்சு...?
//ஸ்ரீமதி said...
//பி.கு. இது ஒரு கற்பனை மட்டுமே...அதனால குழந்தை அழுதுச்சா...?
உட்வார்ட்ஸ் கிராப் வாட்டர் கொடுத்தீங்களா...?...அப்படினெல்லாம் யாரும் கேட்கக் கூடாது...)//
நான் அப்படி தான் கேட்பேன் :)))))))//
நீங்க ச்ச்ச்சின்ன பொண்ணுதான்...அதற்காக இப்படியெல்லாம் அடம்பிடிக்கப்படாது...
//அதிரை ஜமால் said...
\\வெட்கம் மறந்த விழிகளுக்குள்
விழித்திருந்த உன் உறக்கத்தில்
சத்தமில்லா முத்தங்கள்\\
ரொம்ப நாளா கானோமேன்னு நினைத்தேன்.
நினைத்தேன் வந்தாய் ...
அப்படியே என் மேல போட்டுட்டு நீ தப்பிச்சகலாம்னு பார்க்காத புதியவரே//
என்ன நண்பரே இப்படியெல்லாம் சொன்னா எப்படி...?...எல்லாம் உங்களுக்குப் பிடிக்குமேன்னு தான்...
//ஜீவன் said...
;;;;))))//
வாங்க ஜீவன் அண்ணா
என்ன ஒரே சிரிப்பா இருக்கு...
// PoornimaSaran said...
hi
hi
hi//
வாங்க
வாங்க
வாங்க பூர்ணிமா சரண்...
//PoornimaSaran said...
//சூரிய ஒளியோடு கரைந்தது
அந்த நீண்ண்ண்ட இரவு
எல்லாம் சரியாகத்தான் நடந்தது
குழந்தை அழும் சத்தம் கேட்டு
காலையில் விழித்தெழும் வரை.......
//
கனவு நல்லா இருந்துச்சா??//
பரவாயில்லைங்க... ஏதோ சுமாரா இருந்துச்சுங்க...
//PoornimaSaran said...
ஆமா யாரு குழந்தை அது?
??????????????????????????//
குழந்தைக்கு சொந்தக்காரவுங்களோட
குழந்தைதாங்க அது...
//PoornimaSaran said...
me the 10 th//
Yes...Yes...
// PoornimaSaran said...
//எந்த இடம் எந்த நேரம் தெரியவில்லை
அது ஒரு ஏகாந்த வேளை
//
அருமையான வேலை தான் போலும்!!!//
ஆமாங்க...அது ஒரு அருமையான வே(லை)ளை தாங்க...
// PoornimaSaran said...
மொத்தத்தில் கவிதை பிரமாதம் :))//
ரொம்ப நன்றிங்க...
//PoornimaSaran said...
//சுழற்சி வேகம் குறைந்ததில்
அந்த இரவு வருடங்களாய் நீண்ண்ண்டு
மெ து வா க நகர்கிறது
//
ரசித்துப் படித்தேன்:)//
உங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கும்
ரொம்ப ரொம்ப நன்றி பூர்ணிமா சரண்..
//Divyapriya said...
செம, பி.கு வையும் சேத்து தான்… :))//
நன்றி திவ்யப் பிரியா...
//தமிழ் தோழி said...
நல்ல கவிதை//
நன்றி தமிழ் தோழி...
//தமிழ் தோழி said...
///வெட்கம் மறந்த விழிகளுக்குள்
விழித்திருந்த உன் உறக்கத்தில்
சத்தமில்லா முத்தங்கள்
நம் இதழ்களுக்குள் நனைந்தன///
ஆகா....
என்னதிது.....
ரொம்ப நாளுக்கு அப்புறம் மருபடியும்
வந்திடுச்சா.
இப்படி நான் கேக்கல
அதிரை ஜமால்,பூர்ணிமா அக்கா இவங்க தான் கேட்டாங்க.//
ஆமா..அவங்கள்லாம் கேட்டாங்கள்ல அதனால தான்...நீங்க கேக்கலைல அப்ப சரி...
//தமிழ் தோழி said...
//பி.கு. இது ஒரு கற்பனை மட்டுமே...அதனால குழந்தை அழுதுச்சா...?
உட்வார்ட்ஸ் கிராப் வாட்டர் கொடுத்தீங்களா...?...அப்படினெல்லாம் யாரும் கேட்கக் கூடாது...)//
நான் அப்படி தான் கேட்பேன் :)))))))
ரிப்பீட்டு......//
அவங்க ச்ச்சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம கேட்டுட்டாங்க...நீங்க அப்படியெல்லாம் கேக்கக் கூடாது...
நன்றி தமிழ் தோழி..உங்கள் வருகைக்கும் குறும்பான தருகைக்கும்...
//ஹேமா said...
புதியவன்,கவனமாகவே வசனங்களைக் கோர்த்தெடுத்து மனைவிக்குக் காதல் முத்தம் கொடுத்திருக்கிறீர்கள்.அருமை.//
வாங்க ஹேமா
வசனங்கள்ல கவனமாகத் தான் இருக்கணும் இல்லைன நம்ம ஆளுங்க உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க...நன்றி ஹேமா...
//அதிரை ஜமால் said...
\\அது ஒரு ஏகாந்த வேளை
நான்\\
ஏகாந்த வேளை இனிக்கும்
இன்பத்தின் வாசல் திறக்கும்
இந்த பாடல் நினைவுக்கு வந்தது.//
பாடல் மட்டும் தானே நினைவுக்கு வந்தது...அப்ப பரவாயில்லை...
// புதியவன் said...
//ஸ்ரீமதி said...
கவிதை சூப்பர் :))
//"எல்லாம் சரியாகத்தான் நடந்தது…"//
தலைப்பப்பார்த்தே டவுட் ஆனேன்...
//குழந்தை அழும் சத்தம் கேட்டு
காலையில் விழித்தெழும் வரை.......//
இத பார்த்ததும் கன்பார்ம் ஆகிடிச்சு :))))))//
என்ன டவுட்...?
என்ன கன்பார்ம் ஆகிடுச்சு...?//
எல்லாமே சரியாதான் நடந்ததுன்னு தலைப்ப இழுத்தம்போதே சம்திங்ராங்-ன்னு நினைச்சேன்.. கடைசில குழந்தை அழுதுதுன்னு சொன்னதும் கன்பாஃர்ம் ஆகிடிச்சு.. :)
me the 40 :):)
//ஸ்ரீமதி said...
// புதியவன் said...
//ஸ்ரீமதி said...
கவிதை சூப்பர் :))
//"எல்லாம் சரியாகத்தான் நடந்தது…"//
தலைப்பப்பார்த்தே டவுட் ஆனேன்...
//குழந்தை அழும் சத்தம் கேட்டு
காலையில் விழித்தெழும் வரை.......//
இத பார்த்ததும் கன்பார்ம் ஆகிடிச்சு :))))))//
என்ன டவுட்...?
என்ன கன்பார்ம் ஆகிடுச்சு...?//
எல்லாமே சரியாதான் நடந்ததுன்னு தலைப்ப இழுத்தம்போதே சம்திங்ராங்-ன்னு நினைச்சேன்.. கடைசில குழந்தை அழுதுதுன்னு சொன்னதும் கன்பாஃர்ம் ஆகிடிச்சு.. :)//
சந்தேகம் சரியானால் சரிதான்...
//ஸ்ரீமதி said...
me the 40 :):)//
நன்றி ஸ்ரீமதி...
நல்ல கனவு...இல்லை, கவிதை! :) ஒரு சின்ன சந்தேகம்...கனவில் வந்தது மனைவியா அல்லது கனவு தேவதையா?
//து. பவனேஸ்வரி said...
நல்ல கனவு...இல்லை, கவிதை! :) ஒரு சின்ன சந்தேகம்...கனவில் வந்தது மனைவியா அல்லது கனவு தேவதையா?//
வாங்க து. பவனேஸ்வரி
அது ஒரு கற்பனைக் கனவு...
மனைவியா..?... கனவு தேவதையா...?
நல்ல கேள்வி...அவள் ஒரு கனவுக் காதலி...
நன்றி து. பவனேஸ்வரி...
அப்போது பரவிய மௌனத்தின் அலரலில்
என் செவிப்பறை தாண்டி ஒலித்த நிசப்தத்தில்
நல்ல முரண் :)
//மின்னல் said...
அப்போது பரவிய மௌனத்தின் அலரலில்
என் செவிப்பறை தாண்டி ஒலித்த நிசப்தத்தில்
நல்ல முரண் :)//
வாங்க மின்னல்
உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி...
///புதியவன் said...
//ஹேமா said...
புதியவன்,கவனமாகவே வசனங்களைக் கோர்த்தெடுத்து மனைவிக்குக் காதல் முத்தம் கொடுத்திருக்கிறீர்கள்.அருமை.//
வாங்க ஹேமா
வசனங்கள்ல கவனமாகத் தான் இருக்கணும் இல்லைன நம்ம ஆளுங்க உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க...நன்றி ஹேமா...///
யாரை சொல்ரீங்க?
///புதியவன் said...
//து. பவனேஸ்வரி said...
நல்ல கனவு...இல்லை, கவிதை! :) ஒரு சின்ன சந்தேகம்...கனவில் வந்தது மனைவியா அல்லது கனவு தேவதையா?//
வாங்க து. பவனேஸ்வரி
அது ஒரு கற்பனைக் கனவு...
மனைவியா..?... கனவு தேவதையா...?
நல்ல கேள்வி...அவள் ஒரு கனவுக் காதலி...
நன்றி து. பவனேஸ்வரி...///
நாங்க நம்பிட்டோம்.....
:))
//தமிழ் தோழி said...
///புதியவன் said...
//ஹேமா said...
புதியவன்,கவனமாகவே வசனங்களைக் கோர்த்தெடுத்து மனைவிக்குக் காதல் முத்தம் கொடுத்திருக்கிறீர்கள்.அருமை.//
வாங்க ஹேமா
வசனங்கள்ல கவனமாகத் தான் இருக்கணும் இல்லைன நம்ம ஆளுங்க உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க...நன்றி ஹேமா...///
யாரை சொல்ரீங்க?//
எல்லாம் நம்ம ஆளுங்களத் தான் தமிழ் தோழி...
//தமிழ் தோழி said...
///புதியவன் said...
//து. பவனேஸ்வரி said...
நல்ல கனவு...இல்லை, கவிதை! :) ஒரு சின்ன சந்தேகம்...கனவில் வந்தது மனைவியா அல்லது கனவு தேவதையா?//
வாங்க து. பவனேஸ்வரி
அது ஒரு கற்பனைக் கனவு...
மனைவியா..?... கனவு தேவதையா...?
நல்ல கேள்வி...அவள் ஒரு கனவுக் காதலி...
நன்றி து. பவனேஸ்வரி...///
நாங்க நம்பிட்டோம்.....
:))//
நம்பிக்கை தாங்க வாழ்க்கை...நன்றி தமிழ் தோழி...
அழகு ;-)
//புதியவன் said...
//தமிழ் தோழி said...
///புதியவன் said...
//து. பவனேஸ்வரி said...
நல்ல கனவு...இல்லை, கவிதை! :) ஒரு சின்ன சந்தேகம்...கனவில் வந்தது மனைவியா அல்லது கனவு தேவதையா?//
வாங்க து. பவனேஸ்வரி
அது ஒரு கற்பனைக் கனவு...
மனைவியா..?... கனவு தேவதையா...?
நல்ல கேள்வி...அவள் ஒரு கனவுக் காதலி...
நன்றி து. பவனேஸ்வரி...///
நாங்க நம்பிட்டோம்.....
:))//
நம்பிக்கை தாங்க வாழ்க்கை...நன்றி தமிழ் தோழி...//
100ல ஒரு வார்த்தை
//இனியவள் புனிதா said...
அழகு ;-)//
வருகைக்கும் அழகிய
தருகைக்கும் நன்றி...
இனியவள் புனிதா...
//தமிழ் தோழி said...
//நம்பிக்கை தாங்க வாழ்க்கை...நன்றி தமிழ் தோழி...//
100ல ஒரு வார்த்தை//
இப்பத்தான் சரியாச் சொல்லியிருக்கீங்க...
சத்தமில்லா முத்தங்கள்
நம் இதழ்களுக்குள் நனைந்தன //
Again class lines.
அருமை.
//அமிர்தவர்ஷினி அம்மா said...
சத்தமில்லா முத்தங்கள்
நம் இதழ்களுக்குள் நனைந்தன //
Again class lines.
அருமை.//
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...
//நான்...நீ...நாம் மட்டுமே//
இங்கயே மூணுப்பேரு இருக்கமாதிரி சொல்லீட்டீங்களா???
உங்களுக்கு "Romantic Poet" விருது குடுக்கலாம்....
//Natchathraa said...
//நான்...நீ...நாம் மட்டுமே//
இங்கயே மூணுப்பேரு இருக்கமாதிரி சொல்லீட்டீங்களா???
உங்களுக்கு "Romantic Poet" விருது குடுக்கலாம்....//
விருது எதற்கு...அன்பு இருந்தால் போதும்...நன்றி நட்சத்ரா...
:-) nice one..
//sathya said...
:-) nice one..//
நன்றி சத்யா...
Post a Comment