அன்று மாலை சென்னை விமான நிலையத்தில் நான் வந்த விமானம் தரையிறங்கி வழக்கமான குடியுரிமைச் சோதனைகள் முடிந்து வெளியே வருகிறேன். அப்பொழுது விமான நிலையத்தின் அடுத்த பகுதியில் வேறொரு விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த சமவயதுடைய ஒரு இளைஞரை திடீரென அங்கு வந்த காவலர் சிலர் அவரிடம் ஏதோ சொல்லி விட்டு உடனே அவரை கைது செய்தனர். கையில் விலங்கிட்டு அங்கு வந்திருந்த அனைவரும் பார்த்திருக்க ஏதோ ஒரு மூன்றாம் தர ரவுடியைப் போல இழுத்துச் சென்றனர்.
அந்த இளைஞரைப் பார்த்தால் நன்கு படித்த ஒரு கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர் போல் தெரிந்தது. காவலர்கள் அந்த இளைஞரை இழுத்துச் செல்லும் போது அவர் தன் கைகளால் முகத்தை மூடிய படி தலைகுனிந்து அவர்களுடன் காவலர் வண்டியில் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு கூடியிருந்தவர்களும் இது அடிக்கடி நடக்கும் வாடிக்கையான விசயம் தான் என்பது போல ஐந்து நிமிடங்கள் அதைப் பற்றி பேசிவிட்டு பிறகு அவரவர் வந்த வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டனர். எனக்குள் ஒரு கேள்விக்குறி அந்த இளைஞர் அப்படி என்ன தான் தவறு செய்திருப்பார் ? இதைத் தெரிந்து கொள்ள நினைத்து சற்று தொலைவில் நின்றிருந்த ஒரு காவல்துறை உயர் அதிகாரியிடம் சென்று விசாரித்தேன்.
அவர் சொன்னார் அந்த இளைஞர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டதாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் பெயரில் அந்த இளைஞரை கைது செய்துள்ளதாகச் சொன்னார். அப்போது “ஏன் சார் அந்த இளைஞர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும் ?” எனறு நான் கேட்டதற்கு “என்ன குறைந்த பட்சம் மூன்று வருடம் சிறை தண்டனை கிடைக்கும்” என்றார். இப்போது நான் “குற்றம் நிரூபிக்கப் படலைன்னா ?”
அதற்கு அவர் “இது என்ன சார் கேள்வி குற்றம் நிரூபிக்கப் படலைன்னா தான் உடனே விடுதலை செஞ்சிருவோமே ” என்றார் கடமை உணர்வோடு.
இப்ப நீங்க சொல்லுங்க அந்த இளைஞர் உண்மையிலேயே தவறு செய்து அதனால் இப்படி அவருக்குத் தண்டனை கிடைத்திருந்தால் அவர் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தது சரி என்று சொல்லலாம். ஒருவேளை அவர் நிரபராதியாக இருந்து எந்த ஒரு குற்றமும் செய்யாமல் பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகவோ அவர் மேல் வீண் பழி சுமத்தப் பட்டு பொய்யான புகார் கொடுக்கப் பட்டிருந்தால்.
அவர் பலர் சூழ்ந்திருக்கும் பொதுவான இடத்தில் அவரின் சுயமரியாதை சூறையாடப்பட்டு அவமானத்தால் அலைக்கழிக்கப்பட்டு எத்தனையோ ஆசைகளுடனும் கனவுகளுடனும் புறப்பட்டு வந்த பயணம் தடைபட்டு சரியான நேரத்தில் செல்ல முடியாததால் வெளிநாட்டு வேலை நிராகரிக்கப்பட்டு. இத்தகைய அவமானங்களால் அவரின் மனத் துயரம், அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இந்தச் சமூகம் கொடுக்கும் அவப் பெயர்கள், அவர் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டபோது பார்க்கப்பட்ட ஏளனப் பார்வைகள் எத்தனை எத்தனையோ வார்த்தைகளில் சொல்லிட முடியாது.
இப்படிப் பொய்யான புகார்களினாலும் சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்படும் திடீர் கைதுகளின் பிறகு அவர் குற்றவாளி அல்ல என்று தெரிய வரும் போது அவர் கைது செய்யப்படும் போதும் இடைப் பட்ட காலத்தில் சிறையில் இருக்கும் போதும் அவரின் மனப் போராட்டங்களுக்கும் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமான அலைக்கழிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் துயரங்களும்கும் நம் நாட்டில் இந்த சட்டமும் சமூகமும் என்ன பதில் வைத்திருக்கிறது.............................?
(பி.கு. நம் நாட்டையும் சட்டத்தையும் சமுதாயத்தையும் குறை சொல்லும் எண்ணம் என்னில் அணுவினும் சிறிதளவேணும் கிடையாது...குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே இப்பொழுது எனது மனக் குறையாக உள்ளது...மற்றபடி என்னை ஈன்ற பொழுது என் அன்னை சந்தோசப் பட்டதை விட இந்தியத் திருமண்ணில் என்னை ஈன்றதற்காக ஒவ்வொரு இமைப்பொழுதும் பெருமிதப் படுபவன் நான்.........)
21 comments:
வந்துட்டேன்...
\\(பி.கு. நம் நாட்டையும் சட்டத்தையும் சமுதாயத்தையும் குறை சொல்லும் எண்ணம் என்னில் அணுவினும் சிறிதளவேணும் கிடையாது...குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே இப்பொழுது எனது மனக் குறையாக உள்ளது...மற்றபடி என்னை ஈன்ற பொழுது என் அன்னை சந்தோசப் பட்டதை விட இந்தியத் திருமண்ணில் என்னை ஈன்றதற்காக ஒவ்வொரு இமைப்பொழுதும் பெருமிதப் படுபவன் நான்.........)\\
hats off புதியவரே.
\\அதற்கு அவர் “இது என்ன சார் கேள்வி குற்றம் நிரூபிக்கப் படலைன்னா தான் உடனே விடுதலை செஞ்சிருவோமே ” என்றார் கடமை உணர்வோடு.\\
உணர்வே இல்லாத கடமை.
நம்மிடத்தில் மிகப்பெறும் மடமை.
\\ருவேளை அவர் நிரபராதியாக இருந்து எந்த ஒரு குற்றமும் செய்யாமல் பணத்திற்காகவோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகவோ அவர் மேல் வீண் பழி சுமத்தப் பட்டு பொய்யான புகார் கொடுக்கப் பட்டிருந்தால்.\\
பொய்யா அல்லது உண்மையா என்பது விசாரித்தபின் தான் தெரியும்.
ஆனாலும் பொது இடத்தில் ஒருவரின் சுயமரியாதை கெடாத வண்னம் செய்யலாமோ ...
நியாயமான ஆதங்கம்... வேறென்ன சொல்ல?? தெரியவில்லை.. :(
வணக்கம் புதியவன்! நம் நாட்டில் இது
சகஜம்! இதைவிட! சிறை சென்று தண்டனை
அடைந்து மேல் கோர்ட்டில் விடுதலை
அடைந்தவர்களும் உண்டு,
//மற்றபடி என்னை ஈன்ற பொழுது என் அன்னை சந்தோசப் பட்டதை விட இந்தியத் திருமண்ணில் என்னை ஈன்றதற்காக ஒவ்வொரு இமைப்பொழுதும் பெருமிதப் படுபவன் நான்.///
அருமை!அருமை!
சிலர் இருக்கிறார்கள் நமது அதிகாரிகளோ,
ஆள்பவர்களோ, தவறு செய்தால் உடனே
நம் தாய் நாட்டை குறை கூறுவது!
அந்த நிலைப்பாட்டில் இல்லாமல் நீங்கள்
தெளிவுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
அதிகாரிகள் மாறுவார்கள்,ஆட்சியாளர்களும்
மாறுவார்கள்,சட்ட, திட்டங்களும் மாறலாம்,
எதுவாகினும் நம் தாய், நாடு தாய் நாடுதான்
நல்ல பதிவு!
நம் நாட்டில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி நடத்த வேண்டும் என்ற அடிப்படை ஞானம் போலீஸுக்குக் கிடையாது. ரௌடிகளை பெரிய மனிதன் மாதிரி நடத்துவார்கள். ஆனால் இந்த மாதிரி குற்றம் சாட்டப்பட்டவரை கைது பண்ணும்போது கடைபிடிக்க வேண்டிய கண்ணியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.
ஹய்யோ இந்த மாதிரி யாருக்ும் நடக்கக் கூடாது...
பொய் வழக்கென்றால் நாம் மான நஷ்ட வழக்கு தொடரலாம்.
என்ன சொல்வதுனே தெரியலை..
//
நம் நாட்டையும் சட்டத்தையும் சமுதாயத்தையும் குறை சொல்லும் எண்ணம் என்னில் அணுவினும் சிறிதளவேணும் கிடையாது...குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே இப்பொழுது எனது மனக் குறையாக உள்ளது...மற்றபடி என்னை ஈன்ற பொழுது என் அன்னை சந்தோசப் பட்டதை விட இந்தியத் திருமண்ணில் என்னை ஈன்றதற்காக ஒவ்வொரு இமைப்பொழுதும் பெருமிதப் படுபவன் நான்//
உங்களை என் ஒரு நாள்
முதல்வராக கூடாதுன்னு யோசிக்கிறேன்
துடிக்கிறது தெரிகிறது
\\
உங்களை என் ஒரு நாள்
முதல்வராக கூடாதுன்னு யோசிக்கிறேன்
துடிக்கிறது தெரிகிறது\\
ரம்யா - தற்போதைய முதல்வரா நீங்க சொல்லவேயில்ல ...
வருகை தந்து கருத்துரைத்த
அதிரை ஜமால்
ஸ்ரீமதி
ஜீவன் அண்ணா
விஜய்
திவ்ய பிரியா
வால்பையன்
பூர்ணிமா சரண்
ரம்யா
ஆகிய அனைவருக்கும் நன்றி...
ya. action should taken after strong verification only.
but if the charge is not proved means the police don't even mind to ask sorry for what they have done.
// MayVee said...
ya. action should taken after strong verification only.
but if the charge is not proved means the police don't even mind to ask sorry for what they have done.//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி MayVee...மீண்டும் வருக...
Maana nashda vazakku yetru Thodaralam,aanaal atharkkaka selavidapogum nearathayum,panatthayum ninathu ponathodu pogadum inivarum kalam nallakalam Yena ganthiya vaziyil Pogathum..Shahul
//shahul said...
Maana nashda vazakku yetru Thodaralam,aanaal atharkkaka selavidapogum nearathayum,panatthayum ninathu ponathodu pogadum inivarum kalam nallakalam Yena ganthiya vaziyil Pogathum..Shahul//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Shahul...
//இப்படிப் பொய்யான புகார்களினாலும் சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்படும் திடீர் கைதுகளின் பிறகு அவர் குற்றவாளி அல்ல என்று தெரிய வரும் போது அவர் கைது செய்யப்படும் போதும் இடைப் பட்ட காலத்தில் சிறையில் இருக்கும் போதும் அவரின் மனப் போராட்டங்களுக்கும் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமான அலைக்கழிப்புகளுக்கும் அவமானங்களுக்கும் துயரங்களும்கும் நம் நாட்டில் இந்த சட்டமும் சமூகமும் என்ன பதில் வைத்திருக்கிறது.............................?//
Good Question... Answer yet to be framed....This is the greatest disaster in the world....
true one....
perumaiya irukku thozhare...indiavai nesikkum ungal varigalai paarkaiyil....
//sathya said...
true one....
perumaiya irukku thozhare...indiavai nesikkum ungal varigalai paarkaiyil....//
நம் தாய் நாட்டை நேசிப்பது பெருமையான விசயம் தானே சத்யா...?
கலையும் கலாச்சாரமும் பண்பும் பண்பாடும் பிறந்த இந்தியத் திருநாட்டில் பிறந்ததற்காக நாம் அனைவருமே பெருமைப் பட்டுக்கொள்ளலாம் தோழி...
kandippa perumai than thozhare..
Post a Comment