காலம் தனது காட்சியை மாற்றுகிறது. மழை நேர மாலைப் பொழுது கிழக்கே கீழ் வானத்தின் மேல் பகுதியில் மேகத்தின் நீர்க்குமிழ்களில் சூரிய ஒளி பிரதிபலித்து நிறப்பிரிகையடைந்து வானவில்லாய் ஏழு வண்ணம் காட்டுகிறது. வானவில்லின் அழகைக் கண்ட அந்தக் கூட்டுப் புழு தன் தலையை மட்டும் வெளியே நீட்டி வானவில்லைப் பார்க்கிறது. அப்போது அந்த வானவில் கூட்டுப் புழுவைப் பார்த்து கேட்கிறது...” நீ மட்டும் ஏன் இவ்வளவு சோகமாய் தனிமையில் வாழ்கிறாய்...? ” அதற்கு அந்தக் கூட்டுப் புழு “நான் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறேன்...அதனால் என்னை அனைவரும் வெறுக்கிறார்கள் அதனால் தான் இப்படி இருக்கிறேன்...” என்று சொன்னது. வானவில் கேட்டது “இதுவரை நீ யாரையாவது விரும்பி இருக்கிறாயா...?” “என்னையே யாருக்கும் பிடிக்காதபோது நான் எப்படி ஒருவரை விரும்ப முடியும்...?” அதற்கு வானவில் “நீ சொல்வது தவறு நீ யாரையும் விரும்பாமல் உன்னை அனைவரும் விரும்பவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்...?” “யார் இருக்கிறார்கள் நான் விரும்புவதற்கு...எல்லோருமே என்னை விட்டு விலகியே இருக்கிறார்கள்...” “உனக்கென்று யாருமே இல்லையா...?...பரவாயில்லை முதலில் என்னை விரும்பு. விரும்பும் அனைத்தும் உனக்கு அழகாய்த் தெரியும். பிறகு நடக்கும் அதிசயத்தைப் பார்” என்றது அந்த வானவில்.
இப்போது அந்தக் கூட்டுப் புழு வானவில்லை ரசித்து மனதால் விரும்பத் தொடங்கியது...இதுவரை அழுத கண்ணீத்துளியின் குமிழில் அந்த வானவில்லின் ஏழு வண்ணங்கள் பிரதிபலித்து உட்கிரகிக்கப் படுகிறது. கண்ணீர் கூட்டினுள் ஒரு இரசாயன மாற்றம் நடை பெறுகிறது. சிறிது நேரத்தில் அந்தக் கண்ணீர்க் கூட்டின் இமைக்கதவு திறக்கப்படுகிறது. அந்தக் கூட்டுப் புழு உரு மாறி...நிறம் மாறி வானவில்லின் வண்ணத்தில் கைதேர்ந்த ஓவியர் ஒருவர் எண்ணத்தில் காதல் கொண்டு வரைந்த ஓவியம் போல் பார்ப்பவர் பரவசத்தால் வசீகரிக்கப் படும் அழகிய பட்டாம் பூச்சியாய் வெளி வந்து வானில் சிறகடித்துப் பறந்து திரிந்தது.
எப்படி நடந்தது இந்த அதிசயம்...? மனதில் எதையுமே ரசிக்காமல் யாரையுமே விரும்பாமல் வெறுப்போடும் சோகத்தோடும் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல், முதலில் நாம் நம்மையும் பிறரையும் இவ்வுலகத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டால். மற்றவர்களும் இவ்வுலகமும் நம்மை விரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை...
கதை முடிந்தது விசயத்திற்கு வருகிறேன்...அந்த பட பட என்று பறந்து திரியும் அந்தப் பட்டாம்பூச்சி இப்போது என் கைகளில் விருதாகக் கிடைத்திருக்கிறது.
கதை முடிந்தது விசயத்திற்கு வருகிறேன்...அந்த பட பட என்று பறந்து திரியும் அந்தப் பட்டாம்பூச்சி இப்போது என் கைகளில் விருதாகக் கிடைத்திருக்கிறது.
முதலில் இந்த பட பட பட்டாம்பூச்சி விருது கொடுப்பதற்காக என்னை தேர்வு செய்து என்னை மகிழ்ச்சி சாரலில் நனையவைத்த பூர்ணிமா சரணுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துக்களும் வாசிக்கப் பட்டு நண்பர்களால் நேசிக்கப் படுகிறது என்று நினைக்கும் போது என் மன நூலகத்தில் நான் வாசித்து அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் பெருமிதம் அடைகிறது. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற உற்சாகம் பெறுகிறேன்.
நான் பெற்ற இந்த பட்டாம்பூச்சி விருதை புதிய பிளாக்கர்களை ஊக்கப் படுத்தும் விதமாக பகிர்ந்தளிக்க பணிக்கப் பட்டிருக்கிறேன்.
அதிரை ஜமால் – கற்போம் வாருங்கள்...என்று சொல்லி சில மென் பொருட்களை எளிய நடையில் கதை வடிவில் சொல்லி இருக்கிறார். சில நேரங்களில் மறைந்த மருத்துவர் மாத்ரு பூதம் அளவிற்கு இல்லாவிட்டாலும்
சில பல மருத்துவக் குறிப்புகளை அவ்வப்போது சொல்வார். இன்னும் சில நேரங்களில் புலம்பல் என்ற பெயரில் எதையாவது எழுதி அவர் செய்யும் அலம்பல் தாங்க முடியாது. இவரிடம் இருந்து நல்ல பல மென்பொருள் குறிப்புகள் எதிர் பார்க்கப் படுகிறது.
மது – நான் எழுத நினைப்பதெல்லாம்...என்று குறைவாக எழுதினாலும் நிறைவான பதிவுகள் அவருடையது. கவிதை, கதை, நகைச்சுவை என்று என்று எழுத்துப் பணி தொடர்கிறது. நேரம் கிடைக்கும் போது மட்டும் எழுதுகிறார் என்றாலும் நேர்த்தியான எழுத்துக்கள்.
ஹேமா – வானம் வெளித்த பின்னும்...இவருடைய வலைப்பூ அறிமுகம் சமீபத்தில் தான் கிடைத்தது. நியூட்டனின் முதல் இயக்க விதியைத் தன்னுடைய தாக்கத்தின் வழியாக குறிப்பிட்டுள்ளார். இவருடைய கவிதைகளில் சில நேரம் காதல் தீவிரவாதம் தெரியும். சமூக அக்கரை சார்ந்த எழுத்துக்களில் வார்த்தைகள் வாள் வீச்சு போல் தெறிக்கும்.
இம்மூவருக்கும் பட பட பட்டாம் பூச்சி விருது கொடுத்தாயிற்று. இவர்கள் மென்மேலும் பல நல்ல படைப்புகளை வலையுலகிற்குத் தருமாறு வலையுலகின் சார்பாக நட்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவர்கள் செய்ய வேண்டியது :
@ இந்த பட்டாம்பூச்சி படத்தை உங்களோட ப்ளாக்ல போட்டுக்க வேண்டும்.
@ உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த எங்களை நினைக்க மறந்தால் கூட பரவாயில்லை ஆனா மறக்க வேண்டும் என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது.
@ நீங்களும் இந்த விருதை பாராபட்சம் பார்க்காமல் மற்றவங்களுக்கு பிரிச்சுக் கொடுத்திட வேண்டும். கொடுத்த பின் உங்கள் வலைப்பூவில் அவர்களுடைய இணைப்பை சரிபார்த்துக் கொள்ளவும்...
நன்றி...நன்றி...நன்றி....
விருதைப்
பகிர்ந்தளித்து
விட்ட
பின்னறும்
ஒட்டியே
இருக்கிறது
என்
கைகளில்
அந்த
பட்டாம் பூச்சியின்
சில
வண்ணத் துகள்கள்………

49 comments:
ஆஹா
வாழ்த்துக்கள்
\\நீ சொல்வது தவறு நீ யாரையும் விரும்பாமல் உன்னை அனைவரும் விரும்பவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்...\\
தத்துவம் ...
\\முதலில் நாம் நம்மையும் பிறரையும் இவ்வுலகத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டால். மற்றவர்களும் இவ்வுலகமும் நம்மை விரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை...\\
அருமைங்கண்ணா ...
\\மறைந்த மருத்துவர் மாத்ரு பூதம் அளவிற்கு இல்லாவிட்டாலும்\\
அடப்பாவி விருது தர்ரேன்னு சொல்லிட்டு இப்படியா ...
நல்லாயிருப்பூ...
\\விருதைப்
பகிர்ந்தளித்து
விட்ட
பின்னறும்
ஒட்டியே
இருக்கிறது
என்
கைகளில்
அந்த
பட்டாம் பூச்சியின்
சில
வண்ணத் துகள்கள்………\\
ஃபனைல் டச்
வழக்கம்போல் சூப்பருங்கோ ...
நன்றிங்கோ ...
arumaiyana kathai.
புதியவன்,
பட்டமளிப்பு விழாவில் - பட்டம் வழங்குவதை விட , அப்போது வழங்கப்படும் சொற்பொழிவு மிக உயரியதாக கருதப்படும், அந்தவகையில் உங்களின் இந்த பதிவு - மிக உயரிய இடத்தை பிடிக்கின்றது. உங்களுக்கும் விருது வாங்கிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
\\நீ சொல்வது தவறு நீ யாரையும் விரும்பாமல் உன்னை அனைவரும் விரும்பவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்...\\
மிகச்சரி.
வாழ்த்துக்கள் புதியவன்!
கொஞ்சம் நேரம் இருந்தால் என் வலைப்பூ பக்கம் வந்து பாருங்களேன்.
கொஞ்சமாவது விமர்சனம் சொன்னால் நல்லா இருக்கும்.
வாழ்த்துக்கள்
உங்களுக்கும்
உங்களிடம்
விருதை
பெற்றவர்களூக்கும்
ட்ரீட் எப்போ?
யாராவது ட்ரீட் கொடுங்கப்பா!
கதை அருமை...
வாழ்த்துக்கள்:)
விருது பெற்றவர்களுக்கும்,
பெருந்தன்மையுடன் விருது வழங்கியவர்களுக்கும்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!
விருது வாங்கிட்டோமேன்னு சும்மா இருந்துடாதீங்க... நிறைய எழுதுங்க.. படிக்க நாங்க இருக்கோம்..!!
பறக்கிறேன் பறக்கிறேன்...
புதியவன் தந்த விருதே சிறகுகளாய்.
சிறகு முளத்ததாய் ஒரு ஞாபகத்தோடு பறக்கிறேன் பறக்கிறேன்.
கவிதை என்கிற பெயரில் கிறுக்ககளுக்கும் விருது தந்த புதியவனுக்கு நன்றி நன்றி.
புதியவன் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் :)))))
வாழ்த்துக்கள் நண்பர் புதியவர் அவர்களே..
பெற்றுக் கொளவது ஒரு இன்பம் என்றால், அதை பகிர்ந்து கொளவதில் இன்பம் இருமடங்கு பெருகும்..
வானம் உன் வசப்படும் என எழுதியுள்ளீர்கள்.. வானம் மட்டுமல்ல நாங்களும் உங்கள் வசப்பட்டுவிட்டேன்..
//முதலில் நாம் நம்மையும் பிறரையும் இவ்வுலகத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டால். மற்றவர்களும் இவ்வுலகமும் நம்மை விரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை...\\//
கெளப்பிட்டிங்க!!!
தேவா..
உங்க பாணில ரொம்ப ரொம்ப அழகா விருத குடுத்து இருக்கீங்க.
பட்டாம்பூச்சி கதை அருமை....chance less.
விருதுக்காக வாழ்த்துக்கள்.
சூடித்தந்த சுடர்கொடி... வாழ்த்துக்கள்..
இவ்வளவு அருமையான கருத்தை சொல்லி விருத்துகே விருது வழங்கிய பெருமை உங்களை சாரும். இதன் மூலம் இந்த விருதின் பெருமை நன்றாக தெரிகிறது...
மீண்டும் வாழ்த்துக்கள்..
முதமுறையாக உங்கள் தளம் பக்கம் வருகிறேன்..
பட்டாம்பூச்சி கதை அருமை..
அருமையான தெளிவான எழுத்து நடை..
வாழ்த்துக்கள் விருதிற்கு.. :)
//நீ யாரையும் விரும்பாமல் உன்னை அனைவரும் விரும்பவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்...//
அட்டகாசம்..
//விருதைப்
பகிர்ந்தளித்து
விட்ட
பின்னறும்
ஒட்டியே
இருக்கிறது
என்
கைகளில்
அந்த
பட்டாம் பூச்சியின்
சில
வண்ணத் துகள்கள்………//
ரொம்ப நல்லா இருக்கு..
// அதிரை ஜமால் said...
ஆஹா
வாழ்த்துக்கள்//
நன்றி ஜமால்...
//அதிரை ஜமால் said...
\\நீ சொல்வது தவறு நீ யாரையும் விரும்பாமல் உன்னை அனைவரும் விரும்பவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்...\\
தத்துவம் ...//
உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா...?
// அதிரை ஜமால் said...
\\முதலில் நாம் நம்மையும் பிறரையும் இவ்வுலகத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டால். மற்றவர்களும் இவ்வுலகமும் நம்மை விரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை...\\
அருமைங்கண்ணா ...//
நன்றி...நன்றி...
//அதிரை ஜமால் said...
\\மறைந்த மருத்துவர் மாத்ரு பூதம் அளவிற்கு இல்லாவிட்டாலும்\\
அடப்பாவி விருது தர்ரேன்னு சொல்லிட்டு இப்படியா ...
நல்லாயிருப்பூ...//
Cool...Cool...Thankz...
// அதிரை ஜமால் said...
\\விருதைப்
பகிர்ந்தளித்து
விட்ட
பின்னறும்
ஒட்டியே
இருக்கிறது
என்
கைகளில்
அந்த
பட்டாம் பூச்சியின்
சில
வண்ணத் துகள்கள்………\\
ஃபனைல் டச்
வழக்கம்போல் சூப்பருங்கோ ...//
ரொம்ப நன்றி ஜமால்...
//அதிரை ஜமால் said...
நன்றிங்கோ ...//
உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...
//சதுக்க பூதம் said...
arumaiyana kathai.//
ரொம்ப நன்றி சதுக்க பூதம்...
// Ravee (இரவீ ) said...
புதியவன்,
பட்டமளிப்பு விழாவில் - பட்டம் வழங்குவதை விட , அப்போது வழங்கப்படும் சொற்பொழிவு மிக உயரியதாக கருதப்படும், அந்தவகையில் உங்களின் இந்த பதிவு - மிக உயரிய இடத்தை பிடிக்கின்றது. உங்களுக்கும் விருது வாங்கிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.//
வாங்க இரவீ
உங்கள் விரிவான பின்னூட்டம்
எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...
ரொம்ப நன்றி இரவீ...
//அமிர்தவர்ஷினி அம்மா said...
வாழ்த்துக்கள்
\\நீ சொல்வது தவறு நீ யாரையும் விரும்பாமல் உன்னை அனைவரும் விரும்பவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்...\\
மிகச்சரி.//
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி...
//பட்டிக்காட்டான் said...
வாழ்த்துக்கள் புதியவன்!
கொஞ்சம் நேரம் இருந்தால் என் வலைப்பூ பக்கம் வந்து பாருங்களேன்.
கொஞ்சமாவது விமர்சனம் சொன்னால் நல்லா இருக்கும்.//
வாங்க பட்டிக்காட்டான்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...
நிச்சயம் உங்கள் வலைப்பூ வருகிறேன்...
// வால்பையன் said...
வாழ்த்துக்கள்
உங்களுக்கும்
உங்களிடம்
விருதை
பெற்றவர்களூக்கும்
ட்ரீட் எப்போ?
யாராவது ட்ரீட் கொடுங்கப்பா!//
வாங்க வால்பையன்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...
உங்களுக்கு இல்லாத ட்ரீட்டா...?
என்ன வேணும்னு சொல்லுங்க அடுத்த ஃப்ளைட்ல அனுப்பிச்சு வச்சுடலாம்...
// PoornimaSaran said...
கதை அருமை...
வாழ்த்துக்கள்:)//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி பூர்ணிமா சரண்...
//கணினி தேசம் said...
விருது பெற்றவர்களுக்கும்,
பெருந்தன்மையுடன் விருது வழங்கியவர்களுக்கும்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!
விருது வாங்கிட்டோமேன்னு சும்மா இருந்துடாதீங்க... நிறைய எழுதுங்க.. படிக்க நாங்க இருக்கோம்..!!//
வாங்க கணினி தேசம்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி...
நீங்க இருக்கிற தைரியத்தில தானே
எழுதிக் கொண்டு இருக்கிறேன்...
நன்றி உங்கள் உற்சாகமான தருகைக்கு...
// ஹேமா said...
பறக்கிறேன் பறக்கிறேன்...
புதியவன் தந்த விருதே சிறகுகளாய்.
சிறகு முளத்ததாய் ஒரு ஞாபகத்தோடு பறக்கிறேன் பறக்கிறேன்.
கவிதை என்கிற பெயரில் கிறுக்ககளுக்கும் விருது தந்த புதியவனுக்கு நன்றி நன்றி.
புதியவன் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.//
வாழ்த்தியதற்கு நன்றி ஹேமா...
உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...
//ஸ்ரீமதி said...
வாழ்த்துக்கள் :)))))//
வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீமதி...
உங்களுக்கும் இந்த விருது கிடைச்சிருக்கு
அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
//இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள் நண்பர் புதியவர் அவர்களே..
பெற்றுக் கொளவது ஒரு இன்பம் என்றால், அதை பகிர்ந்து கொளவதில் இன்பம் இருமடங்கு பெருகும்..
வானம் உன் வசப்படும் என எழுதியுள்ளீர்கள்.. வானம் மட்டுமல்ல நாங்களும் உங்கள் வசப்பட்டுவிட்டேன்..//
வாங்க இராகவன் அண்ணா
உங்களோட நிறைய பின்னூட்டங்களை
ரம்யா பிளாக்ல பார்த்திருக்கிறேன்...
நீங்கள் என் வலைபூ வந்து வாழ்த்தியது
என்க்கு ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது
நன்றி மீண்டும் வாருங்கள் அண்ணா...
//thevanmayam said...
//முதலில் நாம் நம்மையும் பிறரையும் இவ்வுலகத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டால். மற்றவர்களும் இவ்வுலகமும் நம்மை விரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை...\\//
கெளப்பிட்டிங்க!!!
தேவா..//
நன்றி தேவா...
//Divyapriya said...
உங்க பாணில ரொம்ப ரொம்ப அழகா விருத குடுத்து இருக்கீங்க.
பட்டாம்பூச்சி கதை அருமை....chance less.
விருதுக்காக வாழ்த்துக்கள்.//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி திவ்யப் பிரியா...
//சிம்பா said...
சூடித்தந்த சுடர்கொடி... வாழ்த்துக்கள்..
இவ்வளவு அருமையான கருத்தை சொல்லி விருத்துகே விருது வழங்கிய பெருமை உங்களை சாரும். இதன் மூலம் இந்த விருதின் பெருமை நன்றாக தெரிகிறது...
மீண்டும் வாழ்த்துக்கள்..//
வாங்க சிம்பா
உங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு உற்சாகமளிக்கிறது
ரொம்ப ரொம்ப நன்றி சிம்பா...
//Saravana Kumar MSK said...
முதமுறையாக உங்கள் தளம் பக்கம் வருகிறேன்..
பட்டாம்பூச்சி கதை அருமை..
அருமையான தெளிவான எழுத்து நடை..
வாழ்த்துக்கள் விருதிற்கு.. :)//
வாங்க சரவணா
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி...
//Saravana Kumar MSK said...
//நீ யாரையும் விரும்பாமல் உன்னை அனைவரும் விரும்பவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்...//
அட்டகாசம்..//
நன்றி...
// Saravana Kumar MSK said...
//விருதைப்
பகிர்ந்தளித்து
விட்ட
பின்னறும்
ஒட்டியே
இருக்கிறது
என்
கைகளில்
அந்த
பட்டாம் பூச்சியின்
சில
வண்ணத் துகள்கள்………//
ரொம்ப நல்லா இருக்கு..//
ரொம்ப நன்றி கவிஞரே...
Hi Puthiyavan
Just on a quick note, I am extremely sorry that I didn't know you gave me this award before. Somehow I missed it. Hope you don't mistake me. I ll put it on my blog. I can't believe I missed it. Got to know only from your comment.
Ungal comment parththa pirakuthan vanthu paarththen neengalum award kuduthirupeerkalo enru.Thank you so much. and I am so sorry again!
//முதலில் நாம் நம்மையும் பிறரையும் இவ்வுலகத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டால். மற்றவர்களும் இவ்வுலகமும் நம்மை விரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை...//
Exactly....Well said Pudhiyavan...
மத்த விஷயங்களை விரும்ப ஆரம்பிக்கிறனோ இல்லையோ உங்க எழுத்துகளை விரும்ப ஆரம்பிச்சாச்சு....
//Natchatra said...
//முதலில் நாம் நம்மையும் பிறரையும் இவ்வுலகத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டால். மற்றவர்களும் இவ்வுலகமும் நம்மை விரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை...//
Exactly....Well said Pudhiyavan...
மத்த விஷயங்களை விரும்ப ஆரம்பிக்கிறனோ இல்லையோ உங்க எழுத்துகளை விரும்ப ஆரம்பிச்சாச்சு....//
உங்களுடை பின்னூட்டங்கள் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...
என் எழுத்துகளை விரும்ப ஆரம்பித்தற்கு மிக்க நன்றி நட்சத்ரா...
“என்னையே யாருக்கும் பிடிக்காதபோது நான் எப்படி ஒருவரை விரும்ப முடியும்...?” அதற்கு வானவில் “நீ சொல்வது தவறு நீ யாரையும் விரும்பாமல் உன்னை அனைவரும் விரும்பவேண்டும் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்...?”
மனதில் எதையுமே ரசிக்காமல் யாரையுமே விரும்பாமல் வெறுப்போடும் சோகத்தோடும் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல், முதலில் நாம் நம்மையும் பிறரையும் இவ்வுலகத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டால். மற்றவர்களும் இவ்வுலகமும் நம்மை விரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை...
arumaiyana vaarthaikal...
butterfly award a ?superb ....
ungalukku kidachathil mahilchi....
ungal ezhuththu nadai migavum arumai .....
best wishes and congrats for this award....
encouraging above words are really good..
// sathya said...

encouraging above words are really good..//
என் எழுத்துக்களை பொறுமையாக படித்து ரசித்தற்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சத்யா...
Post a Comment