எங்கே இருந்து வந்தோம்னு தெரியாது எங்க போகப் போறோம்னும் தெரியாது. இந்த ரெண்டு கேள்விக்கும் நடுவுல ஒரு அழகான வாழ்க்கை நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த உலகத்துல எவ்வளவோ அழகான விசயங்கள் இருக்கத் தாங்க செய்யுது. என்னிக்காவது ஒரு நாள் ஏதாவது ஒன்ன ரசிச்சிருக்கோமா ? எத்தனையோ முறை பூக்களப் பார்க்குறோம் நிலாவப் பார்க்குறோம் மழை பெய்யும் போதோ இல்ல வெயிலுக்காகவோ மரநிழல்ல ஒதுங்குறோம் என்னிக்காவது அந்த பூக்களையோ நிலாவையோ மழையையோ இல்ல அந்த மரத்தையோ ரசிச்சிருகிறோமான்னா நம்ம நிறையப் பேரோட பதில் இல்லைன்னு தாங்க இருக்கும்.
அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு தான் சொல்லுவோம். ஏன்னா இந்த போட்டியான இயந்திர வாழ்க்கையின் அதிவேகப் பயணத்துல நாமெல்லாம் நம்மள அறியாமலேயே கட்டாயப் பயணிகளா ஆக்கப்பட்டு இருக்குறோம். இன்றைய உலகத்துல இது தவிர்க்க முடியாத பயணம்ங்க.
ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரங் கூட பத்தலைன்னு சொல்லுரவங்க கூட இருக்குறாங்க. நாம வாழ்நாள்ல மூனுல ஒரு பங்க தூக்கத்துக்குன்னு ஒதுக்குவோம். இந்த தூக்கத்தக் கூட குறைச்சுக்கிட்டு எப்பப் பார்த்தாலும் எதாவது ஒரு பிரச்சனைய தலையில தூக்கிக்கிட்டு அலையிரவங்க நம்மள்ல நிறைய பேரு இருக்கிறாங்க.
இந்த உலகத்தையே தன்னோட நடிப்பால சிரிக்க வச்ச சார்லி சாப்லின் சொல்லுவாராம் மழையில நனையிரதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் அப்பத் தான் நான் அழுவுரது யாருக்கும் தெரியாதுன்னு.
வாழ்க்கையில பிரச்சனை இல்லாதா மனிதனே இல்ல. பிரச்சனை இல்லாட்டி அவன் மனுசனே இல்லீங்க. ஒவொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கத் தாங்க செய்யுது. அத மட்டுமே நினைச்சுக்கிட்டு இருந்தா இந்த வாழ்க்கையே பெரிய பிரச்சனையாயிடுங்க.
மாற்றம்ங்கிற ஒன்னத்தவிர எல்லாமே மாறிக்கிட்டுத் தாங்க இருக்கு இந்த உலகத்துல. அதனால நம்ம வாழ்க்கையோட எல்லாக் காயங்களுக்கும் காலத்துக்கிட்ட மருந்து இருக்கு ஏன்னா காலந்தாங்க மதிப்பு இல்லாதது. ஒரு மணி நேரத்துக்கு பத்து டாலர் சம்பாதிக்கிற ஒரு தொழிலாளியும் சரி அதே ஒரு மணி நேரத்துக்கு பத்தாயிரம் டாலர் சம்பாதிக்கிற ஒரு தொழிலதிபரும் சரி, அவங்க அந்தத் தொகைய சம்பாதிக்க எடுத்துக்கிட்டது ஒரு மணி நேரந்தாங்க. அப்ப அந்த ஒரு மணி நேரத்தோட மதிப்பு பத்து டாலரா ? இல்லா பத்தாயிரம் டாலரா ? இதுக்கு விடை சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் காலத்தோட மதிப்பு மாறுபடும்ங்க.
ஒரு சின்னப் பையன் தன்னோட அம்மா கிட்ட போயி கேட்டானாம் அம்மா அம்மா... அப்பாவோட சம்பளம் எவ்வளவுமான்னு அதுக்கு அவங்க அம்மா சொன்னாங்களாம் ஒரு மணி நேரத்துக்கு இருபது டாலர்ன்னு. அந்நில இருந்து அந்தப் பையன் தனக்குக் கிடைகிற பாக்கெட் மணியெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு டாலர்ன்னு சேர்த்து இருபதாவது நாள் தன்னோட அப்பாக் கிட்ட போயி அவன் சேர்த்து வச்ச இருபது டாலரக் கொடுத்து அப்பா அப்பா இந்தாங்க இருபது டாலர் உங்களோட ஒரு மணி நேர சம்பளம். தயவு செஞ்சி இத வச்சுக்கிட்டு என் கூட ஒரு மணி நேரம் இருங்கப்பா. நீங்க இதுவரை பத்து நிமிசங்கோட என்னோட இருந்ததில்லை உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னானாம்.
இந்த இயந்திர உலகத்துல நாம இழந்தது என்னானு இப்பவாவது தெரியுதா ?
இப்படியே பணத்துக்காக பாசத்த இழந்துக்கிட்டே இருந்தோம்னா. வருங் காலத்துல சாதாரண இல்லங்கள விட முதியோர் இல்லங்கள் தாங்க அதிகமா இருக்கும்.
நாம பாசத்தக் காட்டாம அவங்க கிட்ட இருந்து மட்டும் எதிர் பார்க்கிறது எந்த விதத்துல நியாயம்னு தெரியலைங்க. இப்ப நாம பாச விதைய விதைச்சாத் தானங்க எதிர்காலத்துல அதனோட நிழல எதிர் பார்க்க முடியும்.
பாசமெல்லாம் இல்லாம இல்ல அவங்க சந்தோசமா இருக்கத்தான நாங்க நேரங்காலம் பார்க்காம உழைச்சிக்கிட்டு இருக்கிறோம் அப்படீன்னு சொல்றீங்களா. நீங்க நேரமில்லன்னு பாசத்த பூட்டி வச்சிருந்தா அவங்களுக்கு எப்படிங்க தெரியும் ? அவங்களுக்காகவும் உங்களுக்காகவும் எனக்குத் தெரிஞ்ச ஒரு சின்ன வழிய சொல்லுறேன் கேளுங்க.
ஒரு நாளைக்கு இருக்கிற இருபத்து நாலு மணி நேரத்துல மணிக்கு ஒரு நிமிசமா சேர்த்து இருபத்து நாலு நிமிசத்த ஒரு நாளைக்கு நாம நமக்கே நமக்குன்னு ஒதுக்கி அதுல இருபது நிமிசத்த நம்ம குடும்பத்தோட மகிழ்ச்சியா மனம் விட்டு பேசுனம்னாவே நாம அந்த நாள் முழுசும் மகிழ்ச்சியா இருந்த சந்தோசம் கிடைக்கும்ங்க. நீங்க வேண்ணா இன்னிக்கே இத முயற்சி செஞ்சி பாருங்க. உங்களுக்கே ஒரு மாற்றம் தெரியும் அது நிச்சயமா மகிழ்ச்சியான மாற்றமாத் தாங்க இருக்கும்.
தூங்குறதுக்கு மட்டுமே மூடுற நம்ம கண்களை முழிச்சுக்கிட்டு இருக்கும் போதே இமைய மட்டும் மூடியபடி மீதியிருக்கிற நாலு நிமிசமும் அமைதியா நம்மளோட சுவாசத்த மட்டும் கவனிச்சுப் பாருங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமாத் தாங்க இருக்கும் போகப் போக உங்களுக்கு அந்த நாளோட டென்சனெல்லாம் குறைஞ்சு இந்த இயந்திர வாழ்க்கை இயற்கையாகவே உங்கள் வசப்படும்ங்க............................
(ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என்னுடைய
ஒரு சிறிய முயற்சி பிழையிருப்பின் பொறுத்தருள்க.)
54 comments:
மீ த 1st
படித்திட்டு பின்னூட்டம் வரும்
படம் அருமை புதியவரே
வலையுலகம் எளிதாக வேண்டுமா
கூகுளை நண்பனாக்கிகொள்
\\இந்த உலகத்தையே தன்னோட நடிப்பால சிரிக்க வச்ச சார்லி சாப்லின் சொல்லுவாராம் மழையில நனையிரதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் அப்பத் தான் நான் அழுவுரது யாருக்கும் தெரியாதுன்னு.\\
மிக அருமையான வரிகள்.
தான் அழுதாலும் பிறரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற நினைப்பு.
இந்த ஞாபகம் வந்தது
http://tamilfriendtamil.blogspot.com/2008/11/blog-post.html
\\ஒரு சின்னப் பையன் தன்னோட அம்மா கிட்ட போயி கேட்டானாம் அம்மா அம்மா... அப்பாவோட சம்பளம் எவ்வளவுமான்னு அதுக்கு அவங்க அம்மா சொன்னாங்களாம் ஒரு மணி நேரத்துக்கு இருபது டாலர்ன்னு. அந்நில இருந்து அந்தப் பையன் தனக்குக் கிடைகிற பாக்கெட் மணியெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு டாலர்ன்னு சேர்த்து இருபதாவது நாள் தன்னோட அப்பாக் கிட்ட போயி அவன் சேர்த்து வச்ச இருபது டாலரக் கொடுத்து அப்பா அப்பா இந்தாங்க இருபது டாலர் உங்களோட ஒரு மணி நேர சம்பளம். தயவு செஞ்சி இத வச்சுக்கிட்டு என் கூட ஒரு மணி நேரம் இருங்கப்பா. நீங்க இதுவரை பத்து நிமிசங்கோட என்னோட இருந்ததில்லை உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னானாம்.\\
அடடடா
கிளப்பிட்டிய (எங்கேயிருந்து ஹி ஹி)
\\ஒரு நாளைக்கு இருக்கிற இருபத்து நாலு மணி நேரத்துல மணிக்கு ஒரு நிமிசமா சேர்த்து இருபத்து நாலு நிமிசத்த ஒரு நாளைக்கு நாம நமக்கே நமக்குன்னு ஒதுக்கி அதுல இருபது நிமிசத்த நம்ம குடும்பத்தோட மகிழ்ச்சியா மனம் விட்டு பேசுனம்னாவே நாம அந்த நாள் முழுசும் மகிழ்ச்சியா இருந்த சந்தோசம் கிடைக்கும்ங்க. நீங்க வேண்ணா இன்னிக்கே இத முயற்சி செஞ்சி பாருங்க. உங்களுக்கே ஒரு மாற்றம் தெரியும் அது நிச்சயமா மகிழ்ச்சியான மாற்றமாத் தாங்க இருக்கும்.\\
அருமை புதியவரே.
Aahaa 1 st one missing..
ஜமால் முந்திகிட்டார்..
பதிவு நல்ல இருக்குங்க..
//ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரங் கூட பத்தலைன்னு சொல்லுரவங்க கூட இருக்குறாங்க.
//
சரியா சொன்னீங்க .. அதில ஒருத்தங்கல எனக்கு நல்லாவே தெரியும்..
\\Blogger PoornimaSaran said...
ஜமால் முந்திகிட்டார்..\\
ஹா ஹா ஹா
அடுத்தவாட்டி முயற்சியுங்கள்
//வாழ்க்கையில பிரச்சனை இல்லாதா மனிதனே இல்ல. பிரச்சனை இல்லாட்டி அவன் மனுசனே இல்லீங்க. //
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.. ஆனால் சிலர் எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ கஷ்டம்னு சொல்லி புலம்புவதை கேட்டிருக்கேன்..
அவங்க ஒண்ணு மட்டும் நல்லா புருஞ்சுக்கணும், புலம்புவதால் மட்டும் ஏதும் சரி ஆயிடாது.. அதை எப்படி சரி செய்யலாம்னு தன்னோட குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசணும்.
நல்ல முயற்சி...
நீங்க தேர்ந்தேடுத்த இந்த தலைப்பு... உங்கள் கட்டுரைக்கு மதிப்பை சேர்த்திருக்கு.
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
// அப்ப அந்த ஒரு மணி நேரத்தோட மதிப்பு பத்து டாலரா ? இல்லா பத்தாயிரம் டாலரா ?//
நச் :))
// (ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என்னுடைய
ஒரு சிறிய முயற்சி பிழையிருப்பின் பொறுத்தருள்க.)//
ரொம்ப ரொம்ப அருமை…அழகான நடைல, ரொம்ப ஆழமான கருத்த, ஈஸியா சொல்லிட்டீங்க…வாழ்த்துக்கள்
நல்ல பதிவு புதியவன்.
//வாழ்க்கையில பிரச்சனை இல்லாதா மனிதனே இல்ல. பிரச்சனை இல்லாட்டி அவன் மனுசனே இல்லீங்க//
இதை சதா எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு புலம்பிட்டு இருக்கறவங்க எப்பதான் புரிஞ்சுக்க போறாங்களோ?
நச்சுன்னு சொல்லிட்டிங்க.
ஒரு பிரச்சினை வந்து அது முடிஞ்ச பிறகு வர்ற சந்தோசத்தை அனுபவிச்சு பார்த்தான் புரியும் :)
//தூங்குறதுக்கு மட்டுமே மூடுற நம்ம கண்களை முழிச்சுக்கிட்டு இருக்கும் போதே இமைய மட்டும் மூடியபடி மீதியிருக்கிற நாலு நிமிசமும் அமைதியா நம்மளோட சுவாசத்த மட்டும் கவனிச்சுப் பாருங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமாத் தாங்க இருக்கும் போகப் போக உங்களுக்கு அந்த நாளோட டென்சனெல்லாம் குறைஞ்சு இந்த இயந்திர வாழ்க்கை இயற்கையாகவே உங்கள் வசப்படும்ங்க............................//
நல்ல பயிற்சிதான். முயற்சி செஞ்சு பார்த்திடலாம் :)
அழகான நடை!
எளிய வார்த்தைப்பிரயோகம்!
தெளிவான கருத்துக்கள்!
மொத்தத்தில் Perfect!
-Mathu
//அதிரை ஜமால் said...
மீ த 1st
படித்திட்டு பின்னூட்டம் வரும்//
வரட்டும் வரட்டும் ... நன்றி ஜமால்.
//அதிரை ஜமால் said...
படம் அருமை புதியவரே
வலையுலகம் எளிதாக வேண்டுமா
கூகுளை நண்பனாக்கிகொள்//
கூகுள் ஆரம்பித்ததிலிருந்தே நமக்கு ஃபிரண்டு தாங்க...
//அதிரை ஜமால் said...
\\இந்த உலகத்தையே தன்னோட நடிப்பால சிரிக்க வச்ச சார்லி சாப்லின் சொல்லுவாராம் மழையில நனையிரதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் அப்பத் தான் நான் அழுவுரது யாருக்கும் தெரியாதுன்னு.\\
மிக அருமையான வரிகள்.
தான் அழுதாலும் பிறரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற நினைப்பு.
இந்த ஞாபகம் வந்தது
http://tamilfriendtamil.blogspot.com/2008/11/blog-post.html//
சரியாச் சொல்லியிருக்கிறீங்க.
//அதிரை ஜமால் said...
அடடடா
கிளப்பிட்டிய (எங்கேயிருந்து ஹி ஹி)//
அப்படியெல்லாம் கேக்கப்படாது.....
//அதிரை ஜமால் said...
\\ஒரு நாளைக்கு இருக்கிற இருபத்து நாலு மணி நேரத்துல மணிக்கு ஒரு நிமிசமா சேர்த்து இருபத்து நாலு நிமிசத்த ஒரு நாளைக்கு நாம நமக்கே நமக்குன்னு ஒதுக்கி அதுல இருபது நிமிசத்த நம்ம குடும்பத்தோட மகிழ்ச்சியா மனம் விட்டு பேசுனம்னாவே நாம அந்த நாள் முழுசும் மகிழ்ச்சியா இருந்த சந்தோசம் கிடைக்கும்ங்க. நீங்க வேண்ணா இன்னிக்கே இத முயற்சி செஞ்சி பாருங்க. உங்களுக்கே ஒரு மாற்றம் தெரியும் அது நிச்சயமா மகிழ்ச்சியான மாற்றமாத் தாங்க இருக்கும்.\\
அருமை புதியவரே.//
நன்றி ஜமால்....உங்கள் வருகைக்கும் குறும்பான சில அழகான பல தருகைகளுக்கும்..
// PoornimaSaran said...
பதிவு நல்ல இருக்குங்க..
//ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரங் கூட பத்தலைன்னு சொல்லுரவங்க கூட இருக்குறாங்க.
//
சரியா சொன்னீங்க .. அதில ஒருத்தங்கல எனக்கு நல்லாவே தெரியும்.//
வாங்க பூணிமா சரண்
யாருங்க அந்த ஒருத்தங்க ?
உங்கள் வருகைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் நன்றி பூர்ணிமா சரண்.
//PoornimaSaran said...
//வாழ்க்கையில பிரச்சனை இல்லாதா மனிதனே இல்ல. பிரச்சனை இல்லாட்டி அவன் மனுசனே இல்லீங்க. //
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.. ஆனால் சிலர் எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ கஷ்டம்னு சொல்லி புலம்புவதை கேட்டிருக்கேன்..
அவங்க ஒண்ணு மட்டும் நல்லா புருஞ்சுக்கணும், புலம்புவதால் மட்டும் ஏதும் சரி ஆயிடாது.. அதை எப்படி சரி செய்யலாம்னு தன்னோட குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசணும்.//
நீங்களும் சரியா சொல்லிட்டீங்க. குடும்பத்தோடு மனம் விட்டு பேசுனம்னாவே பாதிப் பிரச்சனை போய்டும் ....நன்றி பூர்ணிமா சரண்.
//அருள் said...
நல்ல முயற்சி...
நீங்க தேர்ந்தேடுத்த இந்த தலைப்பு... உங்கள் கட்டுரைக்கு மதிப்பை சேர்த்திருக்கு.
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.//
வாங்க அருள்
கட்டுரை நல்லா இருக்குன்னு நீங்களே சொல்லிட்டீங்க. அப்ப அது உண்மையாத் தான் இருக்கும்...நன்றி அருள்.
//Divyapriya said...
// அப்ப அந்த ஒரு மணி நேரத்தோட மதிப்பு பத்து டாலரா ? இல்லா பத்தாயிரம் டாலரா ?//
நச் :))
// (ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என்னுடைய
ஒரு சிறிய முயற்சி பிழையிருப்பின் பொறுத்தருள்க.)//
ரொம்ப ரொம்ப அருமை…அழகான நடைல, ரொம்ப ஆழமான கருத்த, ஈஸியா சொல்லிட்டீங்க…வாழ்த்துக்கள்//
வாங்க திவ்யப் பிரியா
உங்கள் வருகைக்கும் உற்சாகமான பின்னூட்டத்திற்கும் நன்றி.
கட்டுரை நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க கூடிய விரைவில் மற்றுமொரு கட்டுரை எழுத முயற்சி செய்கிறேன்.
உங்க வாழ்த்துக்களுக்கு மற்றுமொரு நன்றி...
// தாரணி பிரியா said...
நல்ல பதிவு புதியவன்.
//வாழ்க்கையில பிரச்சனை இல்லாதா மனிதனே இல்ல. பிரச்சனை இல்லாட்டி அவன் மனுசனே இல்லீங்க//
இதை சதா எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு புலம்பிட்டு இருக்கறவங்க எப்பதான் புரிஞ்சுக்க போறாங்களோ?
நச்சுன்னு சொல்லிட்டிங்க.
ஒரு பிரச்சினை வந்து அது முடிஞ்ச பிறகு வர்ற சந்தோசத்தை அனுபவிச்சு பார்த்தான் புரியும் :)//
உண்மை தாங்க இரவு பகல் இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை.
////தூங்குறதுக்கு மட்டுமே மூடுற நம்ம கண்களை முழிச்சுக்கிட்டு இருக்கும் போதே இமைய மட்டும் மூடியபடி மீதியிருக்கிற நாலு நிமிசமும் அமைதியா நம்மளோட சுவாசத்த மட்டும் கவனிச்சுப் பாருங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமாத் தாங்க இருக்கும் போகப் போக உங்களுக்கு அந்த நாளோட டென்சனெல்லாம் குறைஞ்சு இந்த இயந்திர வாழ்க்கை இயற்கையாகவே உங்கள் வசப்படும்ங்க............................//
நல்ல பயிற்சிதான். முயற்சி செஞ்சு பார்த்திடலாம் :)//
பயிற்சி செய்து பாருங்க கூடிய விரைவில் உங்கள் வாழ்க்கை உங்கள் வசப்படும்...வாழ்த்துக்கள்.
நன்றி உங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும்.
// MathuKrishna said...
அழகான நடை!
எளிய வார்த்தைப்பிரயோகம்!
தெளிவான கருத்துக்கள்!
மொத்தத்தில் Perfect!
-Mathu//
வாங்க மது
உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
நன்றி மது.
///நாம பாசத்தக் காட்டாம அவங்க கிட்ட இருந்து மட்டும் எதிர் பார்க்கிறது எந்த விதத்துல நியாயம்னு தெரியலைங்க. இப்ப நாம பாச விதைய விதைச்சாத் தானங்க எதிர்காலத்துல அதனோட நிழல எதிர் பார்க்க முடியும்.
பாசமெல்லாம் இல்லாம இல்ல அவங்க சந்தோசமா இருக்கத்தான நாங்க நேரங்காலம் பார்க்காம உழைச்சிக்கிட்டு இருக்கிறோம் அப்படீன்னு சொல்றீங்களா. நீங்க நேரமில்லன்னு பாசத்த பூட்டி வச்சிருந்தா அவங்களுக்கு எப்படிங்க தெரியும் ?///
நல்ல சிந்தனை...நல்ல எழுத்து நடை..
வாழ்த்துக்கள்!
நச் !
நச் !
நச் !
நச் !!!
முதல் கட்டுரையிலையே கலக்கிடீங்க..புதியவன்!
ரொம்ப நல்ல பதிவு புதியவன்... :)) உங்க சொல்படி பார்த்தா நான் 24 மணிநேரமும் வீட்ல இருக்கேன்னு சொல்றேன்... ம்ம்ம்ம் கேட்டாதானே.. ;))))
கிளி ரொம்ப அழகா இருக்கு :))
//ஒரு சின்னப் பையன் தன்னோட அம்மா கிட்ட போயி கேட்டானாம் அம்மா அம்மா... அப்பாவோட சம்பளம் எவ்வளவுமான்னு அதுக்கு அவங்க அம்மா சொன்னாங்களாம் ஒரு மணி நேரத்துக்கு இருபது டாலர்ன்னு. அந்நில இருந்து அந்தப் பையன் தனக்குக் கிடைகிற பாக்கெட் மணியெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு டாலர்ன்னு சேர்த்து இருபதாவது நாள் தன்னோட அப்பாக் கிட்ட போயி அவன் சேர்த்து வச்ச இருபது டாலரக் கொடுத்து அப்பா அப்பா இந்தாங்க இருபது டாலர் உங்களோட ஒரு மணி நேர சம்பளம். தயவு செஞ்சி இத வச்சுக்கிட்டு என் கூட ஒரு மணி நேரம் இருங்கப்பா. நீங்க இதுவரை பத்து நிமிசங்கோட என்னோட இருந்ததில்லை உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னானாம்.//
உண்மை தான்.. பணம் தான் வாழ்க்கைன்னு ஆயிடிச்சு இப்பெல்லாம்.. பாசத்துக்கு எங்கங்க மதிப்பு?? :((
இந்த அவசர கதியான உலகத்துல அம்மா அப்பா அண்ணா ஃபிரெண்ட்ஸ் பிறந்தநாளுக்கெல்லாம் செல்போன்-ல ரிமைன்டரும்... குட் மார்னிங் சொல்ல டெம்ப்லேட்டும்ன்னு ஆகி போச்சு.. :(((
ஏதோ இனம் புரியாத வலி.. நான் சொல்லனும்ன்னு நினைச்சத, நீங்க எழுதிட்டீங்க.. ரொம்ப நல்லா இருக்கு.. :))
\\Blogger புதியவன் said...
//அதிரை ஜமால் said...
படம் அருமை புதியவரே
வலையுலகம் எளிதாக வேண்டுமா
கூகுளை நண்பனாக்கிகொள்//
கூகுள் ஆரம்பித்ததிலிருந்தே நமக்கு ஃபிரண்டு தாங்க...\\
உங்களுக்கு சொல்லலிங்கோ.
நீங்க எடுத்த படம் அருமை, இதைப்போல் வேண்டும் என்போர் கூகுளை நண்பனாக்கிக்க சொன்னமுங்கோ ...
// ஜீவன் said...
நல்ல சிந்தனை...நல்ல எழுத்து நடை..
வாழ்த்துக்கள்!//
வாங்க ஜீவன் அண்ணா
உங்கள் வருகைக்கும் மேலான வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி அண்ணா.
//ஸாவரியா said...
நச் !
நச் !
நச் !
நச் !!!
முதல் கட்டுரையிலையே கலக்கிடீங்க..புதியவன்!//
வாங்க ஸாவரியா
உங்க பின்னூட்டம் கூட நச்சுன்னு அழகாயிருக்கு. நன்றி ஸாவரியா.
// ஸ்ரீமதி said...
//ரொம்ப நல்ல பதிவு புதியவன்... :)) உங்க சொல்படி பார்த்தா நான் 24 மணிநேரமும் வீட்ல இருக்கேன்னு சொல்றேன்... ம்ம்ம்ம் கேட்டாதானே.. ;))))//
யாருங்க கேட்க மாட்டேன்றாங்க...?
//கிளி ரொம்ப அழகா இருக்கு :))//
ஆமாங்க, எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது.
//உண்மை தான்.. பணம் தான் வாழ்க்கைன்னு ஆயிடிச்சு இப்பெல்லாம்.. பாசத்துக்கு எங்கங்க மதிப்பு?? :((//
பாசத்துக்கு என்னிக்குமே மதிப்பு இருக்குங்க ஸ்ரீமதி, பணம் என்ற திரை அத மறைச்சு கிட்டு இருக்கு. பணத்திரை கிழிக்கப்படும் போது நிச்சயம் பாசம் புரிந்து கொள்ளப் படும் என்பது என்னோட நம்பிக்கைங்க.
//இந்த அவசர கதியான உலகத்துல அம்மா அப்பா அண்ணா ஃபிரெண்ட்ஸ் பிறந்தநாளுக்கெல்லாம் செல்போன்-ல ரிமைன்டரும்... குட் மார்னிங் சொல்ல டெம்ப்லேட்டும்ன்னு ஆகி போச்சு.. :(((//
உண்மை தாங்க கடிதமும் வாழ்த்து அட்டைகளும் வழக்கழிந்து வர்றத நாம பாத்துக்கிட்டுத் தானே இருக்கிறோம்.
கடிதமோ வாழ்த்து அட்டைகளோ கொடுக்கிற ஒரு ஸ்பரிச உணர்வ ஈ-மெயிலும் எஸ்எம்எஸும் கொடுக்கிறதில்லைங்க.
கடிதம் எழுதுவதும் வாழ்த்து அட்டை அனுப்புவதையும் நான் இன்னிக்கும் விடல ஏன்னா ? அந்த ஸ்பரிசம் எனக்கு எப்பவுமே பிடிக்கும்.
//ஸ்ரீமதி said...
ஏதோ இனம் புரியாத வலி.. நான் சொல்லனும்ன்னு நினைச்சத, நீங்க எழுதிட்டீங்க.. ரொம்ப நல்லா இருக்கு.. :))//
நன்றி ஸ்ரீமதி உங்கள் விரிவான அழகான பின்னுட்டத்திற்கும் வருகைக்கும்....
// அதிரை ஜமால் said...
\\Blogger புதியவன் said...
//அதிரை ஜமால் said...
படம் அருமை புதியவரே
வலையுலகம் எளிதாக வேண்டுமா
கூகுளை நண்பனாக்கிகொள்//
கூகுள் ஆரம்பித்ததிலிருந்தே நமக்கு ஃபிரண்டு தாங்க...\\
உங்களுக்கு சொல்லலிங்கோ.
நீங்க எடுத்த படம் அருமை, இதைப்போல் வேண்டும் என்போர் கூகுளை நண்பனாக்கிக்க சொன்னமுங்கோ ...//
ஆமாங்கோ... ஆமாங்கோ...நம்ம ஃபிரண்டு எல்லோருக்கும் ஃபிரண்டு தானுங்கோ...
நன்றி ஜமால்...
ஏதோ ஒரு கமெண்ட டெலீட் பண்ண மாதிரி இருக்கே....?
//புதியவன் said...
// ஸ்ரீமதி said...
//ரொம்ப நல்ல பதிவு புதியவன்... :)) உங்க சொல்படி பார்த்தா நான் 24 மணிநேரமும் வீட்ல இருக்கேன்னு சொல்றேன்... ம்ம்ம்ம் கேட்டாதானே.. ;))))//
யாருங்க கேட்க மாட்டேன்றாங்க...?//
அம்மா,அப்பா தான்... வேற யார்?? :((
//புதியவன் said...
// ஸ்ரீமதி said...//உண்மை தான்.. பணம் தான் வாழ்க்கைன்னு ஆயிடிச்சு இப்பெல்லாம்.. பாசத்துக்கு எங்கங்க மதிப்பு?? :((//
பாசத்துக்கு என்னிக்குமே மதிப்பு இருக்குங்க ஸ்ரீமதி, பணம் என்ற திரை அத மறைச்சு கிட்டு இருக்கு. பணத்திரை கிழிக்கப்படும் போது நிச்சயம் பாசம் புரிந்து கொள்ளப் படும் என்பது என்னோட நம்பிக்கைங்க.//
உண்மைதான் புதியவன்.. ஆனா இனிமேலும் இந்த பண மோகம் போகும்ன்னு எனக்குத் தோனல.. இருக்க இருக்க கூடிகிட்டே தான் போகுது.. :((
//ஸ்ரீமதி said...
//புதியவன் said...
// ஸ்ரீமதி said...//உண்மை தான்.. பணம் தான் வாழ்க்கைன்னு ஆயிடிச்சு இப்பெல்லாம்.. பாசத்துக்கு எங்கங்க மதிப்பு?? :((//
பாசத்துக்கு என்னிக்குமே மதிப்பு இருக்குங்க ஸ்ரீமதி, பணம் என்ற திரை அத மறைச்சு கிட்டு இருக்கு. பணத்திரை கிழிக்கப்படும் போது நிச்சயம் பாசம் புரிந்து கொள்ளப் படும் என்பது என்னோட நம்பிக்கைங்க.//
உண்மைதான் புதியவன்.. ஆனா இனிமேலும் இந்த பண மோகம் போகும்ன்னு எனக்குத் தோனல.. இருக்க இருக்க கூடிகிட்டே தான் போகுது.. :((//
பணமோகம் கூடிக்கிட்டேபோறச்ச பாசமும் கூடிக்கிட்டே தாங்க போகும். பணமெல்லாம் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே உலகத்துல பாசம் இருக்குதுங்க ஸ்ரீமதி. பணத்த மட்டுமே வச்சுண்டு நிம்மதியா யாரும் வாழ்ந்திட முடியாதுங்க...பணம் வாழ்க்கையின் ஒரு தேவை மட்டுமே அதுவே வாழ்க்கையில்லைங்க
உங்களுக்குத்தெரியாது இல்ல நான் மேலே சொன்னது...நன்றி ஸ்ரீமதி...
//ஸ்ரீமதி said...
//புதியவன் said...
// ஸ்ரீமதி said...
//ரொம்ப நல்ல பதிவு புதியவன்... :)) உங்க சொல்படி பார்த்தா நான் 24 மணிநேரமும் வீட்ல இருக்கேன்னு சொல்றேன்... ம்ம்ம்ம் கேட்டாதானே.. ;))))//
யாருங்க கேட்க மாட்டேன்றாங்க...?//
அம்மா,அப்பா தான்... வேற யார்?? :((//
அம்மா, அப்பா சொன்னா சரியாத் தாங்க இருக்கும்...
\\Blogger ஸாவரியா said...
நச் !
நச் !
நச் !
நச் !!!
முதல் கட்டுரையிலையே கலக்கிடீங்க..புதியவன்!\\
எனக்கு
இச்
இச்
இச்
இச்
காதுல விழுகுது
உண்மையிலேயே நல்லா எழுதி இருக்கீங்க.
Very inspirational!
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :)))
// அதிரை ஜமால் said...
எனக்கு
இச்
இச்
இச்
இச்
காதுல விழுகுது//
யாருப்பா அது...நம்ம அதிரை ஜமாலுக்கு ஊர் ஞாபகம் வந்துருச்சு உடனே ஒரு ஒன்வே டிக்கெட் எடுத்து அவர இந்தியாவுக்கு பார்சல் பண்ணுங்கப்பா...
// Mathu said...
உண்மையிலேயே நல்லா எழுதி இருக்கீங்க.
Very inspirational!
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :)))//
வாங்க மது
கவிதையில்லாமல் ஏதாவது எழுத நினைச்சேன். ஒரு கட்டுரை எழுத தோணுச்சு எழுதிட்டேன். நல்லா இருக்குன்னு சொல்லிருக்கீங்க நன்றி மது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மற்றுமொரு நன்றி.
\\Blogger புதியவன் said...
// அதிரை ஜமால் said...
எனக்கு
இச்
இச்
இச்
இச்
காதுல விழுகுது//
யாருப்பா அது...நம்ம அதிரை ஜமாலுக்கு ஊர் ஞாபகம் வந்துருச்சு உடனே ஒரு ஒன்வே டிக்கெட் எடுத்து அவர இந்தியாவுக்கு பார்சல் பண்ணுங்கப்பா...\\
நல்லாயிருப்பீங்க அதச்செய்ங்க முதல்ல
நல்ல கட்டுரை. உங்கள் எண்ணங்களை தொடர்ந்து வரையுங்கள்.
// காரூரன் said...
நல்ல கட்டுரை. உங்கள் எண்ணங்களை தொடர்ந்து வரையுங்கள்.//
வாங்க காரூரன்
முதல் வருகைக்கும் உங்கள் தருகைக்கும் நன்றி...மீண்டும் வருக...
குடும்பத்தோடயிருக்க கிளிப்படம் ரொம்ப அழகு.. சரியான தேர்வு...
//(ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என்னுடைய
ஒரு சிறிய முயற்சி பிழையிருப்பின் பொறுத்தருள்க.)//
முதல் கட்டுரையா?? நம்பமுடியல புதியவன்...
//எத்தனையோ முறை பூக்களப் பார்க்குறோம் நிலாவப் பார்க்குறோம் மழை பெய்யும் போதோ இல்ல வெயிலுக்காகவோ மரநிழல்ல ஒதுங்குறோம் என்னிக்காவது அந்த பூக்களையோ நிலாவையோ மழையையோ இல்ல அந்த மரத்தையோ ரசிச்சிருகிறோமான்னா நம்ம நிறையப் பேரோட பதில் இல்லைன்னு தாங்க இருக்கும்.//
நானிருக்கேன் ரசிச்சுருக்கேன்னு சொல்லுறதுக்கு... தூக்கத்தைக்கூட ரசிச்சு தூங்குற ஆளுங்க நானு....
//ஒரு நாளைக்கு இருக்கிற இருபத்து நாலு மணி நேரத்துல மணிக்கு ஒரு நிமிசமா சேர்த்து இருபத்து நாலு நிமிசத்த ஒரு நாளைக்கு நாம நமக்கே நமக்குன்னு ஒதுக்கி அதுல இருபது நிமிசத்த நம்ம குடும்பத்தோட மகிழ்ச்சியா மனம் விட்டு பேசுனம்னாவே நாம அந்த நாள் முழுசும் மகிழ்ச்சியா இருந்த சந்தோசம் கிடைக்கும்ங்க.//
நல்ல யோசனைங்க...
//இந்த இயந்திர வாழ்க்கை இயற்கையாகவே உங்கள் வசப்படும்ங்க.....//
இந்நேரத்துக்கு உங்களுக்கு வசப்பட்டிருக்கனுமே... வசப்பட்டிருக்கும்னு நம்புறேன்....
//Natchathraa said...
குடும்பத்தோடயிருக்க கிளிப்படம் ரொம்ப அழகு.. சரியான தேர்வு...
படத்தை குறிப்பிட்டது மகிழ்ச்சி...
//(ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என்னுடைய
ஒரு சிறிய முயற்சி பிழையிருப்பின் பொறுத்தருள்க.)//
முதல் கட்டுரையா?? நம்பமுடியல புதியவன்...
உண்மைதாங்க...வலைப்பூவில் இது தான் என் முதல் கட்டுரை முயற்சி...
//எத்தனையோ முறை பூக்களப் பார்க்குறோம் நிலாவப் பார்க்குறோம் மழை பெய்யும் போதோ இல்ல வெயிலுக்காகவோ மரநிழல்ல ஒதுங்குறோம் என்னிக்காவது அந்த பூக்களையோ நிலாவையோ மழையையோ இல்ல அந்த மரத்தையோ ரசிச்சிருகிறோமான்னா நம்ம நிறையப் பேரோட பதில் இல்லைன்னு தாங்க இருக்கும்.//
நானிருக்கேன் ரசிச்சுருக்கேன்னு சொல்லுறதுக்கு... தூக்கத்தைக்கூட ரசிச்சு தூங்குற ஆளுங்க நானு....
தூக்கத்தைக்கூட ரசிச்சு தூங்குற ஆளா நீங்க...?...உங்க ரசிப்புத் தன்மை என்னை மெய்சிலிர்க்க வைக்குது...இது மாதிரி ரசிக்க ஆரம்பிச்சாவே வாழ்க்கை அர்த்தப்பட்ட விடும்...
//ஒரு நாளைக்கு இருக்கிற இருபத்து நாலு மணி நேரத்துல மணிக்கு ஒரு நிமிசமா சேர்த்து இருபத்து நாலு நிமிசத்த ஒரு நாளைக்கு நாம நமக்கே நமக்குன்னு ஒதுக்கி அதுல இருபது நிமிசத்த நம்ம குடும்பத்தோட மகிழ்ச்சியா மனம் விட்டு பேசுனம்னாவே நாம அந்த நாள் முழுசும் மகிழ்ச்சியா இருந்த சந்தோசம் கிடைக்கும்ங்க.//
நல்ல யோசனைங்க...
நன்றி...
//இந்த இயந்திர வாழ்க்கை இயற்கையாகவே உங்கள் வசப்படும்ங்க.....//
இந்நேரத்துக்கு உங்களுக்கு வசப்பட்டிருக்கனுமே... வசப்பட்டிருக்கும்னு நம்புறேன்....//
என் வசம் வாழ்க்கையும் வாழ்க்கையின் வசம் நானும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் அழகாக...விரிவான கருத்திற்கு நன்றி நட்சத்ரா...
best one.....
yes changes may not be changes...
indha iyandhara vaazhkaiyila naama anboda irukkurathum,prachanaiya thalaiyila thookki vachulirathum namma kaiyil la than irukku....
medidation a kooda last a solliteenga...
very good....nalla katturai..
neraiya katturai ezhutha vaazhthtukkal...
cute family picture also so good...
all pictures what have u selected are really very matching and beautiful....
our all happiness only depends upon our attitudes only...
family a virumburavan eppodhum nalla iruppan...
life always depends upon multiple choices...so we have to choose correct one... :-)
//sathya said...
cute family picture also so good...
all pictures what have u selected are really very matching and beautiful....
our all happiness only depends upon our attitudes only...
family a virumburavan eppodhum nalla iruppan...
life always depends upon multiple choices...so we have to choose correct one... :-)//
படத்தை குறிப்பிட்டது மகிழ்ச்சி
படங்கள் எல்லாம் Googleல தான் தேடி எடுக்கிறேன்...
உண்மை தான் குடும்பத்தை நேசிப்பவர்கள் என்று சந்தோசமாகத்தான் இருப்பார்கள்...
வாழ்க்கையில் சரியான வழியை தேர்ந்தெடுப்பது நம் கையில் தான் இருக்கிறது என்று சரியாக சொல்லியிருக்கிறீர்கள்...நன்றி சத்யா
\ஒரு சின்னப் பையன் தன்னோட அம்மா கிட்ட போயி கேட்டானாம் அம்மா அம்மா... அப்பாவோட சம்பளம் எவ்வளவுமான்னு அதுக்கு அவங்க அம்மா சொன்னாங்களாம் ஒரு மணி நேரத்துக்கு இருபது டாலர்ன்னு. அந்நில இருந்து அந்தப் பையன் தனக்குக் கிடைகிற பாக்கெட் மணியெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு டாலர்ன்னு சேர்த்து இருபதாவது நாள் தன்னோட அப்பாக் கிட்ட போயி அவன் சேர்த்து வச்ச இருபது டாலரக் கொடுத்து அப்பா அப்பா இந்தாங்க இருபது டாலர் உங்களோட ஒரு மணி நேர சம்பளம். தயவு செஞ்சி இத வச்சுக்கிட்டு என் கூட ஒரு மணி நேரம் இருங்கப்பா. நீங்க இதுவரை பத்து நிமிசங்கோட என்னோட இருந்ததில்லை உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னானாம்.\\
அவனுக்கு கிடைத்த அந்த ஒரு டாலரும் அவன் அப்பாவின் உழைப்பு தான் என்பதை நாம் மறக்க லாகாது . உலகத்தையும் ,வானத்தையும் ரசிக்கவேண்டியதுதான் அதற்காக பசியுடன் இருக்கமுடியாதே ஓடும் உலகத்துடன் நாமும் ஓடித்தான் ஆகவேண்டும்
Post a Comment