Wednesday, December 17, 2008

இது ஒரு ஊர்க் கோலம்…?


நான்கு வருட பட்டப் படிப்பு இரண்டு வருடம் அங்கேயே வேலை ஆக ஆறு வருட வெளி நாட்டு வாழ்க்கைக்குப் பின் என் சொந்த ஊர் வருகிறேன். அது இன்னும் இணையத்தால் இணைக்கப் படாததால். கூகிள் மேப்பில் தேடிக் கண்டறிய முடியாத எந்த ஒரு பிரபலமும் பிறக்காததால் பிரபல மடையாத ஒரு சிறிய ஊர்.

நான் வரும் பேருந்து ஊரின் எல்லைப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சியிலும் திரைப் படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்த பசுமை என் பார்வைப் பசியறிந்து பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த சில மணித்துளிகளில் நிறுத்தத்தில் குலுங்கி நிற்கிறது பேருந்து. நான் இறங்க வேண்டிய இடம் என்னை வரவேற்க குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள். அன்பான வரவேற்பு பாசமான விசாரிப்புகளுடன் வீட்டை அடைகிறேன். நான் ஊர் வந்த விசயம் அறிந்த உறவினர்கள் சம்பிரதாய முறைப்படி சந்தித்து நலம் விசாரித்து விட்டு செல்கின்றனர்.

வீட்டிற்குள் வந்த உடன் எனக்குள் ஒரு இனம் புரியாத வெறுமை. என் கண்கள் அனிச்சையாய் யாரையோ தேடுகின்றன. என் எண்ண ஓட்டம் ஆறு வருடங்கள் பின்னோக்கி செல்கின்றது. வீட்டில் அனைவரும் அவளைக் கேலியோடு கேட்க்கின்றனர். “ஏண்டி மாமா...மாமான்னு...அவனையே சுத்தி சுத்தி வர்ரியே. இப்ப உன் மாமந்தான் வெளி நாட்டுக்குப் படிக்கப் போறானே அங்க படிச்சிட்டு அங்கேயே வேலை பார்த்து அங்க உள்ள பொண்ணாப் பார்த்து கட்டிக்கிட்டு அங்கேயே இருந்துட்டானா என்ன செய்வே...??”...பட்டென பதில் வருகிறது அந்த பன்னிரண்டு வயது சிறுமியிடமிருந்து. “என் மாமா என்னத் தவிர வேறு யாரையும் மனசால கூட நினைக்காது. எவ்வளவு வருசமானாலும் நான் என் மாமாக்காக காத்திட்டு இருப்பேன்.”

ஆறு வருடங்களில் முதல் சில வருடங்களில் அதுவும் ஆறேழு முறை மட்டும் தான் அவளுடன் பேசியிருக்கிறேன். அதன் பிறகு அவள் ஆளாகிவிட்டாலாம். பேசுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பிறகு வெளி நாட்டு வாழ்க்கையின் பரபரப்பில் அவளைப் பற்றிய நினைவுகள் என் மூளையின் ஒரு மூலையில் தங்கிவிட்டன. இப்போது இங்கு வந்ததும் அவள் நினைவுகள் தவிர மற்ற அனைத்துமே நினைவிழந்து வருகிறது.

இதோ தேடிய விழிகளுக்கு விடை கிடைத்துவிட்டது. என் கண் எதிரில் பாவாடை தாவணி கட்டிய பாதரசம் போல் எதிலும் ஒட்டாமல் நான் இருந்த அறையின் கதவை ஒட்டி நிற்கிறாள்… அவள் அவளேதான். காலம் ஒரு சிறந்த சிற்பியாகத் தான் இருக்கவேண்டும் இல்லையெனில் ஆறு ஆண்டுகளில் இவ்வளவு அழகாக ஒரு சிற்பத்தை வேறு யாரால் வடித்திருக்க முடியும். என் காதுகள் கனத்துவிடக் கூடாது என்பதாலோ என்னவோ மிக மெல்லிய குரலில்...”நல்லபடியா வந்தீங்களா மாமா...??...என்னைய யாருன்னு தெரியுதா மாமா...??

அவளிடம் சிறிது விளையாட நினைத்து “யாருன்னு சரியாத் தெரியலியே...ஆமா யாரு நீ...?” சட்டென அவள் முகம் முகில் மறைத்த நிலவை போல மங்கிப்போகிறது. இதற்கு மேல் விளையாடினால் அழுதுவிடுவாள் என்று நினைத்து “உன்னை எப்படி மறக்க முடியும்...ஏன் அறைக்கு வெளியே நிற்கிறே உள்ளே வா...” “இல்ல பரவாயில்ல மாமா நான் இங்கேயே இருக்கிறேன்.” “ஏன் மௌனமா இருக்கிறே ஏதாவது பேசு அப்பல்லாம்...அது என்ன மாமா...??...இது எப்படி மாமான்னு…? ? ஏதாவது கேட்டுக்கிட்டே இருப்பியே...இப்ப ஏன் பேசத் தெரியாத பொண்ணு மாதிரி அமைதியா இருக்கிறே...??...எதாவது பேசு...”

“ஏன் மாமா இவ்வளவு நாளா வெளி நாட்டுல இருந்தீங்களே என்னைய எப்பவாவது நினைச்சிருக்கீங்களா...??” “ம்ம்ம்...நினைச்சிருக்கேன்” “அங்க பொண்ணுங்கள்லாம் அழகா இருப்பாங்களாமே...?” “ஆமா இருப்பாங்க அதுக்கென்ன...?” “இல்ல அங்க பொண்ணுங்க ஆம்பளைங்கள தொட்டுப் பேசுவாங்களாமே...??” “இப்ப உனக்கு என்ன தெரியனும் சில நேரங்கள்ல மரியாதைக்காக சில பேர்ட்ட கை குலுக்க வேண்டியிருக்கும் அதுல ஆண் பெண் பாகுபாடெல்லாம் கிடையாது அங்க அது ஒரு நாகரீகத்தின் வெளிப்பாடு அவ்வளவு தான்.”

“சரி அதவிடு உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்னு நீ கேக்கவே இல்லையே...? உனக்குப் பிடிக்குமேன்னு நீ அப்ப கேட்ட பஞ்சுமிட்டாய் கலர்ல தாவணி...ஆனா... இப்ப பார்த்தா நீயே ஒரு தாவணி போட்ட பஞ்சுமிட்டாய் மாதிரித்தான் இருக்கிறே...?” என்று சொன்னதும் வெட்க்கத்தை மொத்த விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறது அவள் முகம்...”சரி...சரி..ஒன்னே ஒன்னு கொடுத்துட்டு உனக்கு வாங்கிட்டு வந்த எல்லாத்தையும் எடுத்துட்டுப்போ...” ”ம்ம்ம்...என்ன...??...என்ன...??...மாமா ஒன்னே ஒன்னு கொடுக்கனும்...?” “ஆமா...உனக்கு எத்தன வயசாகுது...??” “அடுத்த மாசத்தோட பதினெட்டு முடியப்போகுது அத எதுக்கு மாமா இப்ப கேக்குறீங்க...??” “ஏண்டி...ஒரு பதினெட்டு வயசுப்பொண்ணு கிட்ட அவளக் கட்டிக்கப் போறவன்... என்ன கடலை மிட்டாயா கேட்பான்...??

“வேறென்ன மாமா வேணும்...??” “ஒனக்கு உண்மையிலையே புரியலையா..?.?...இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா..?.?” “ஒங்களுக்காகத் தான் இத்தன வருசமா நான் காத்திட்டு இருந்தேன்...நான் ஏன் மாமா உங்ககிட்டே நடிக்கப்போறேன்...எனக்கு புரியுற மாதிரி என்ன வேணும்னு கொஞ்சம் சொல்லுகளேன்...?” “ஆங்...இப்ப இப்பத் தான் உனக்குப் புரிய ஆரம்பிச்சு இருக்கு...அந்த கொஞ்சம்ன்னு சொன்னியே அதே தான்...” “நான் சொன்னதுல என்ன மாமா இருக்கு...??” ”எனக்காகத் தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருக்கிறேன்னு சொன்னியே இதோ நானே வந்துட்டேன் ஒரே ஒரு முத்தம் கொடுத்துட்டு மொத்தமா நீ என்னையே எடுத்துக்கலாம்...” ”ச்ச்ச்சீசீய்ய்ய்... போங்க மாமா வெளி நாட்டுக்குப் போயி நீங்க ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க...அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்...” அப்போது அங்கு யாரோ வரும் சத்தம் கேட்டு...”மாமா யாரோ வர்ராங்க நான் அப்புறமா வர்றேன்...” என்று சொல்லி விட்டு ஓடி மறைந்து விட்டாள்.......(பி.கு. நண்பர்களின் உணர்வுகளை உணர்ந்து (என் உணர்வுகளையும் சேர்த்துத்தான்) கதையின் முடிவு மாற்றப் பட்டுள்ளது...எனவே கதையை மீண்டும் ஒரு முறை முதலில் இருந்து படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்...இது ஒரு கற்பனைக் கதை மட்டுமே...........)


38 comments:

அதிரை ஜமால் said...

ஆஹா அஸினு

அதிரை ஜமால் said...

எங்கே கஸினு

அதிரை ஜமால் said...

\\"இது ஒரு ஊர்க் கோலம்…?"\\

எந்த ஊர் கோலம்

அதிரை ஜமால் said...

\\நான்கு வருட பட்டப் படிப்பு இரண்டு வருடம் அங்கேயே வேலை ஆக ஆறு வருட வெளி நாட்டு வாழ்க்கைக்குப் பின் என் சொந்த ஊர் வருகிறேன். அது இன்னும் இணையத்தால் இணைக்கப் படாததால். கூகிள் மேப்பில் தேடிக் கண்டறிய முடியாத எந்த ஒரு பிரபலமும் பிறக்காததால் பிரபல மடையாத ஒரு சிறிய ஊர்.\\

நீங்க இருந்துமா

அதிரை ஜமால் said...

\\படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்த பசுமை என் பார்வைப் பசியறிந்து பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கிறது\\

ஜூப்பரு

அதிரை ஜமால் said...

\ஆறு வருடங்களில் முதல் சில வருடங்களில் அதுவும் ஆறேழு முறை மட்டும் தான் அவளுடன் பேசியிருக்கிறேன். \\

ஒரு நாளைக்கா

ஒரு மனிக்கா

அதிரை ஜமால் said...

\\அதன் பிறகு அவள் ஆளாகிவிட்டாலாம்.\\

நான் ஆள் ... தாம ...


அதுவா ...

அதிரை ஜமால் said...

\\இதோ தேடிய விழிகளுக்கு விடை கிடைத்துவிட்டது. என் கண் எதிரில் பாவாடை தாவணி கட்டிய பாதரசம் போல் எதிலும் ஒட்டாமல் நான் இருந்த அறையின் கதவை ஒட்டி நிற்கிறாள்\\

ரொமாண்டிக்

அதிரை ஜமால் said...

\\அவள் முகம் முகில் மறைத்த நிலவை போல மங்கிப்போகிறது. \\

கவிதை கவிதை

அதிரை ஜமால் said...

\\உனக்குப் பிடிக்குமேன்னு நீ அப்ப கேட்ட பஞ்சுமிட்டாய் கலர்ல தாவணி...ஆனா... இப்ப பார்த்தா நீயே ஒரு தாவணி போட்ட பஞ்சுமிட்டாய் மாதிரித்தான் இருக்கிறே.\\

அட்றா அட்றா

அதிரை ஜமால் said...

\\(பி.கு. ச்ச்சும்ம்மா ஒரு கதை சொல்லலாமேன்னு...சரியா வரலைன்ன சொல்லிடுங்க...இந்த மாதிரி கதை சொல்லுரத நிறுத்திடலாம்...........)\\

நீ அடிச்சி ஆடுப்பா

நல்லாயிருக்கு முடிவைத்தவிர

கலங்கவச்சிட்டியே ...

Chuttiarun said...

thanks for your support..

thamizhstudio.com

விஜய் said...

ரொம்ப இயல்பான கதை. அதுவும் கிராமத்துப் பெண்களின் நாணத்தை வர்ணிக்கும் வரிகள் அழகோ அழகு.
அதற்கு தோதாக அசினின் நாணம் கலந்த புகைப்படம் இன்னும் அழகு :-)

ஜீவன் said...

//காலம் ஒரு சிறந்த சிற்பியாகத் தான் இருக்கவேண்டும்//

அருமை!!

// இப்ப பார்த்தா நீயே ஒரு தாவணி போட்ட பஞ்சுமிட்டாய் மாதிரித்தான் இருக்கிறே...?” ///

கலக்கல்!

கதையோட முடிவு எனக்கு புடிக்கல!

முடிவ மாத்துங்க! முடிவ மாத்துங்க!

அதிரை ஜமால் said...

\\Blogger ஜீவன் said...

//காலம் ஒரு சிறந்த சிற்பியாகத் தான் இருக்கவேண்டும்//

அருமை!!

// இப்ப பார்த்தா நீயே ஒரு தாவணி போட்ட பஞ்சுமிட்டாய் மாதிரித்தான் இருக்கிறே...?” ///

கலக்கல்!

கதையோட முடிவு எனக்கு புடிக்கல!

முடிவ மாத்துங்க! முடிவ மாத்துங்க!\\

ஆமா நாட்டாமை தீர்ப்ப மாத்து

anbudan vaalu said...

" வாணம் உன் வசப்படும்...நீ யார் வசப்படாமலும் இருந்தால்...."

i liked this a lot.....

PoornimaSaran said...

கலக்கல் கதை.. இது உங்க உண்மைக் கதைனு என்கிட்டே சொன்னத நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் மாட்டேன் மாட்டேன் மாட்டவே மாட்டேன்....

ஹேமா said...

எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் இருந்து யோசிக்கிறீங்களோ!எனக்கு இப்பிடியெல்லாம் யோசிக்க வரமாட்டேங்குதே!

அதிரை ஜமால் said...

\\Blogger PoornimaSaran said...

கலக்கல் கதை.. இது உங்க உண்மைக் கதைனு என்கிட்டே சொன்னத நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் மாட்டேன் மாட்டேன் மாட்டவே மாட்டேன்....\\

அப்படியா

தமிழ் தோழி said...

என்ன அன்னாத்த பிசின்னா பிடிக்குமோ.....

Divyapriya said...

// இப்போது இங்கு வந்ததும் அவள் நினைவுகள் தவிர மற்ற அனைத்துமே நினைவிழந்து வருகிறது.//// பாதரசம் போல் எதிலும் ஒட்டாமல் நான் இருந்த அறையின் கதவை ஒட்டி நிற்கிறாள்…//// வெட்க்கத்தை மொத்த விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறது அவள் முகம்//

அட அட அட...கலக்கலான வரிகள்...

கடைசி பாராவ தவிர கதை சூப்பர் :)

இப்படிக்கு: சோக முடிவுகள் எதிர்ப்போர் சங்கம் ;)

ஸ்ரீமதி said...

சாரி புதியவன் நீங்க இத எந்த நோக்கத்துல எழுதினீங்கன்னு தெரியல.. ஆனா நான் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா படிச்சிகிட்டே வந்து கடைசில அழுதுட்டேன்.. :((

ஸ்ரீமதி said...

ரொம்ப டச்சிங் :)

ஸ்ரீமதி said...

ஆனாலும்.. ஒரு அத்த பொண்ணுக்கு, அதுவும் உங்களுக்கு பிடிச்ச பொண்ணுக்கு.. கல்யாணம் ஆச்சா இல்லையான்னு கூடவா தெரியாது?? இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. கால சுத்தி சுத்தி வரும்போது கண்டுக்கமாட்டீங்க.. போனதுக்கப்பறம் பொலம்ப வேண்டியது.. :))))))

ஸ்ரீமதி said...

இது உண்மை கதை இல்லையே?? அப்படி இருந்தா உங்க மேல கோவம் தான் வரும்.. அதான் கேட்டேன்.. :))))))))

அதிரை ஜமால் said...

\\ஒரே ஒரு முத்தம் கொடுத்துட்டு மொத்தமா நீ என்னையே எடுத்துக்கலாம்\\

start panitarupa start panitaru

அதிரை ஜமால் said...

\\நண்பர்களின் உணர்வுகளை உணர்ந்து (என் உணர்வுகளையும் சேர்த்துத்தான்) கதையின் முடிவு மாற்றப் பட்டுள்ளது.\\

எங்களின் (தங்களின்) உணர்வை மதித்தற்கு நன்றிங்கோ

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\ஒரே ஒரு முத்தம் கொடுத்துட்டு மொத்தமா நீ என்னையே எடுத்துக்கலாம்\\

start panitarupa start panitaru//

வாங்க ஜமால்

இந்த முடிவு உங்களுக்கு புடிச்சிருக்கும்னு நெனைக்கிறேன்...?...ஏன்னா எனக்கும் இது தான் புடிச்சிருக்கு...நேற்று நான் எழுதியது எனக்குப் பிடிக்காமலேயே நான் எழுதினது...இப்பத்தான் எனக்கும் ஏதோ ஒரு வலி குறைஞ்ச மாதிரி இருக்கு...

புதியவன் said...

// அதிரை ஜமால் said...
\\நண்பர்களின் உணர்வுகளை உணர்ந்து (என் உணர்வுகளையும் சேர்த்துத்தான்) கதையின் முடிவு மாற்றப் பட்டுள்ளது.\\

எங்களின் (தங்களின்) உணர்வை மதித்தற்கு நன்றிங்கோ//

நானும் உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேனுங்கோ...

தமிழ் தோழி said...

நல்ல பதிவு. உங்க கதை ரொம்ப அருமை. சோகம் இல்லாம சந்தோஷமா முடிச்சிருக்கீங்க.
எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.

ஸ்ரீமதி said...

:)))))))

Karthik Krishna said...

//“சரி அதவிடு உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்னு நீ கேக்கவே இல்லையே...? உனக்குப் பிடிக்குமேன்னு நீ அப்ப கேட்ட பஞ்சுமிட்டாய் கலர்ல தாவணி...ஆனா... இப்ப பார்த்தா நீயே ஒரு தாவணி போட்ட பஞ்சுமிட்டாய் மாதிரித்தான் இருக்கிறே...?” //
ம்ம்ம்

நல்ல இருக்கு...

gayathri said...

kathai nalla iruku pa.

ok intha kathi pazaya mudivu naan padikala .
antha modivu link kodukka mudiuma

புதியவன் said...

// gayathri said...
kathai nalla iruku pa.

ok intha kathi pazaya mudivu naan padikala .
antha modivu link kodukka mudiuma//

கதையை படித்ததற்கு நன்றி காயத்ரி...
பழைய முடிவு ஒரு சோக முடிவு...
அதைப் படித்து உங்களை அழ வைக்க
நான் விரும்பவில்லை...நன்றி காயத்ரி...

Natchathraa said...

//கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சியிலும் திரைப் படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்த பசுமை என் பார்வைப் பசியறிந்து பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கிறது. //

எழுத்துக்களில் பசுமை....

//“என் மாமா என்னத் தவிர வேறு யாரையும் மனசால கூட நினைக்காது. எவ்வளவு வருசமானாலும் நான் என் மாமாக்காக காத்திட்டு இருப்பேன்.”//

வெள்ளந்திதனத்தின் உச்சக்கட்டம்....

//என் கண் எதிரில் பாவாடை தாவணி கட்டிய பாதரசம் போல் எதிலும் ஒட்டாமல் நான் இருந்த அறையின் கதவை ஒட்டி நிற்கிறாள்… //

வித்தயாசமான ஒப்பீடு...

//“ஏண்டி...ஒரு பதினெட்டு வயசுப்பொண்ணு கிட்ட அவளக் கட்டிக்கப் போறவன்... என்ன கடலை மிட்டாயா கேட்பான்...??”//

அல்டிமேட்....

//”எனக்காகத் தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருக்கிறேன்னு சொன்னியே இதோ நானே வந்துட்டேன் ஒரே ஒரு முத்தம் கொடுத்துட்டு மொத்தமா நீ என்னையே எடுத்துக்கலாம்...” ”ச்ச்ச்சீசீய்ய்ய்... போங்க மாமா வெளி நாட்டுக்குப் போயி நீங்க ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க...அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்...” //

very romantic ending pudiyavan....

புதியவன் said...

//Natchathraa said...
//கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சியிலும் திரைப் படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்த பசுமை என் பார்வைப் பசியறிந்து பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கிறது. //

எழுத்துக்களில் பசுமை....

//“என் மாமா என்னத் தவிர வேறு யாரையும் மனசால கூட நினைக்காது. எவ்வளவு வருசமானாலும் நான் என் மாமாக்காக காத்திட்டு இருப்பேன்.”//

வெள்ளந்திதனத்தின் உச்சக்கட்டம்....

//என் கண் எதிரில் பாவாடை தாவணி கட்டிய பாதரசம் போல் எதிலும் ஒட்டாமல் நான் இருந்த அறையின் கதவை ஒட்டி நிற்கிறாள்… //

வித்தயாசமான ஒப்பீடு...

//“ஏண்டி...ஒரு பதினெட்டு வயசுப்பொண்ணு கிட்ட அவளக் கட்டிக்கப் போறவன்... என்ன கடலை மிட்டாயா கேட்பான்...??”//

அல்டிமேட்....

//”எனக்காகத் தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருக்கிறேன்னு சொன்னியே இதோ நானே வந்துட்டேன் ஒரே ஒரு முத்தம் கொடுத்துட்டு மொத்தமா நீ என்னையே எடுத்துக்கலாம்...” ”ச்ச்ச்சீசீய்ய்ய்... போங்க மாமா வெளி நாட்டுக்குப் போயி நீங்க ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க...அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்...” //

very romantic ending pudiyavan....//

அங்கம் அங்கமாக கதையை ரசித்து கருத்து சொன்னதற்கு...மிக்க நன்றி நட்சத்ரா...

sathya said...

nalla oor kolam.........

புதியவன் said...

//sathya said...
nalla oor kolam.........//

கதையை படித்து கருத்திட்டதற்கு நன்றி சத்யா...