வெகு நாட்களாக
உன்னிடம் சொல்ல நினைத்து
உன்னைக் கண்டதும்
சொல் மறந்து
சொல்ல மறந்ததை
இன்றேனும் சொல்ல
நினைக்கிறேன்
மாலையில் மறக்காமல்
வந்துவிடு என்று
என் நட்பைத்
தன் கற்பைப் போல்
பாதுகாப்பவளிடம்
சொல்லி விட்டேன்
மாலையும் வந்தது
வரும் வழியில்
தொப்பளாய் நனைந்துவிட்டேன்
திடீர் மழையில்
எனக்காக காத்திருந்தாள்
அவளும் நனைந்திருந்தாள்
என்னைப் போலவே
ஆனால்,
அவள் கைகளில்
இரண்டு குடை
எனக்காக ஒன்று
புரிந்து கொண்டேன்
பிறகெப்படி நனைந்திருக்கிறாள்
குடையின்றி நனைந்து வரும்
எனைக் கண்டு அவளும்
குடை தவிர்த்திருக்கிறாள்
முன்னறிவிப்பின்றி வந்த மழை
அறிவிப்பு செய்தது
இது தான் காதல் என்று
இது வரை மண்ணில் பெய்த மழை
இப்பொழுது மனதிற்குள் பெய்கிறது
உலகின் முதல் காதல் தொடங்கி
பார்த்து வரும் மழையிடம்
கேட்டு விட்டேன்...
நட்ப்பில் இது எப்படி சாத்தியம்...?
அது மின்னலாய்ப் புன்னகைத்து
இடியெனச் சிரித்து சொன்னது
நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்...............................!
Friday, November 28, 2008
மழை அறிவிப்பு...
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
hey hey.....
me the 1st
//நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்.//
வார்த்தைகளை அழகா சேர்ததிருக்கீங்க.
//பிறகெப்படி நனைந்திருக்கிறாள்
குடையின்றி நனைந்து வரும்
எனைக் கண்டு அவளும்
குடை தவிர்த்திருக்கிறாள்
//
super
முந்திக்கிட்டீங்களா பூர்ணிமா சரண்
\\நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்..................\\
அழகாய் சொல்லிவிட்டு - கிறுக்குதனம் என்கிறாயே ...
\\மழை வரும் போலிருக்கிறது
மறக்காமல் குடை எடுத்துப்போ
பிறகு,
நீ நனையும் அழகைப் பார்த்து
மழைக்குக் காய்ச்சல்
வந்துவிடப் போகிறது...\\
ஏற்கனவே சொல்லியும் கேட்காம வந்துட்டாங்களா
Amazing lines :) romba nalla irukku kavithai...vazhththukkal :)
// PoornimaSaran said...
hey hey.....
me the 1st//
வாங்க பூர்ணிம சரண்
முதலாவதாக வந்துததற்கு நன்றி...
//PoornimaSaran said...
//நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்.//
வார்த்தைகளை அழகா சேர்ததிருக்கீங்க.
//பிறகெப்படி நனைந்திருக்கிறாள்
குடையின்றி நனைந்து வரும்
எனைக் கண்டு அவளும்
குடை தவிர்த்திருக்கிறாள்
//
super//
உங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கும் இப்புதியவனின் நன்றிகள்...
//அதிரை ஜமால் said...
முந்திக்கிட்டீங்களா பூர்ணிமா சரண்//
ஆமாம்... யு ஆர் ஜஸ்ட்டு மிஸ்ஸுடு...
\\நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்..................\\
அழகாய் சொல்லிவிட்டு - கிறுக்குதனம் என்கிறாயே ...//
ஆண் பெண் உறவில் நட்பையும் காதலயும் பிரித்தறிவது சற்று சிக்கலான விசயம். ஏனெனில், நட்ப்பிற்கும் காதலுக்கும் உள்ள தூரம் ஒரு நூலிடைவெளி தான். எப்போது வேண்டுமானாலும் இந்த இடைவெளி தாண்டப் பட்டு நட்புப் பூ காதலாக மலரலாம் அதற்கான வாய்புகள் அதிகம்...ஒரு வேளை இதை எனக்கு வார்த்தைகளில் சரியாகச் சொல்லாத் தெரியவில்லையோ என்னவோ...?
நன்றி ஜமால்...
//அதிரை ஜமால் said...
\\மழை வரும் போலிருக்கிறது
மறக்காமல் குடை எடுத்துப்போ
பிறகு,
நீ நனையும் அழகைப் பார்த்து
மழைக்குக் காய்ச்சல்
வந்துவிடப் போகிறது...\\
ஏற்கனவே சொல்லியும் கேட்காம வந்துட்டாங்களா//
ஆமாங்க...இந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் பிடிவாதம் அதிகம். சொல்லு கேட்காம மழையில நனைஞ்சதுல மழைக்கு நாலு நாளா சரியான காய்ச்சலாம், ஊர்ல நாலு நாளா மழை விடலயமே...?...கூடவே புயல வேற கூட்டிட்டு வந்திருச்சாம்...!
// Mathu said...
Amazing lines :) romba nalla irukku kavithai...vazhththukkal :)//
வாங்க மது
கவிதை வரிகள் நல்லா இருக்கா..!
வருகைக்கும் கவிதையை
ரசித்ததற்கும் நன்றி மது.
வணக்கம்,
கவிதை நன்று.
"நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்..!"
அருமை. நட்புக்கும் காதலுக்கும் உள்ள வேற்றுமையை அழகாகக் கூறியிருக்கிறீர். முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
அட்டகாசம்...ஒவ்வொரு வரியும், அர்த்தத்துடன் கூடிய அழகு...
\\\\நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்..................\\
அழகாய் சொல்லிவிட்டு - கிறுக்குதனம் என்கிறாயே ...//
ஆண் பெண் உறவில் நட்பையும் காதலயும் பிரித்தறிவது சற்று சிக்கலான விசயம். ஏனெனில், நட்ப்பிற்கும் காதலுக்கும் உள்ள தூரம் ஒரு நூலிடைவெளி தான். எப்போது வேண்டுமானாலும் இந்த இடைவெளி தாண்டப் பட்டு நட்புப் பூ காதலாக மலரலாம் அதற்கான வாய்புகள் அதிகம்...ஒரு வேளை இதை எனக்கு வார்த்தைகளில் சரியாகச் சொல்லாத் தெரியவில்லையோ என்னவோ...?\\
அண்ணா உங்களுக்கு தெரியாததா
நீங்கள்ளாம் ... சரி விடுங்க
அப்புறம் நான் மொத்தம்ன்னு டைப் பன்னுவேன் அது முத்தம்னு வரும்
எதுங்கண்ணா ...
//நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்...............................!//
அழகான வரிகள் :))
//து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
கவிதை நன்று.
"நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்..!"
அருமை. நட்புக்கும் காதலுக்கும் உள்ள வேற்றுமையை அழகாகக் கூறியிருக்கிறீர். முயற்சி தொடர வாழ்த்துக்கள்.//
வாங்க து. பவனேஸ்வரி
உங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துக்களுக்கு மற்றுமொரு நன்றி மீண்டும் வருக.
// Divyapriya said...
அட்டகாசம்...ஒவ்வொரு வரியும், அர்த்தத்துடன் கூடிய அழகு...//
வாங்க திவ்யப் பிரியா
உங்கள் பின்னூட்டமும் அழகாகத் தான் இருக்கிறது நன்றி திவ்யப் பிரியா.
//அதிரை ஜமால் said...
அண்ணா உங்களுக்கு தெரியாததா
நீங்கள்ளாம் ... சரி விடுங்க
அப்புறம் நான் மொத்தம்ன்னு டைப் பன்னுவேன் அது முத்தம்னு வரும்
எதுங்கண்ணா ...//
//நீங்கள்ளாம் ... சரி விடுங்க //
நாங்கள்லாம் என்ன இதுல Phd அப்படின்னு சொல்ல வந்திங்கன்னா எங்களுக்கு நீங்க இதுல Class எடுத்தத சொல்ல வேண்டி வரும் ஆமா சொல்லிட்டேன்.
//அப்புறம் நான் மொத்தம்ன்னு டைப் பன்னுவேன் அது முத்தம்னு வரும்
எதுங்கண்ணா ...//
அப்புறமா...? எப்புறமும் நீங்க அதத் தானே டைப் பண்ணுறீங்க... என்னங்கண்ணா எனக்குத்தெரியாததா இது...?
//ஸ்ரீமதி said...
//நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்...............................!//
அழகான வரிகள் :))//
வாங்க ஸ்ரீமதி
உங்களுக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் மகிழ்ச்சியே...உங்கள் அழகான தருகைக்கு நன்றி ஸ்ரீமதி.
அழகு!அருமை!
அழகான அறிவிப்பு...
வாழ்த்துக்கள்.....
//ஜீவன் said...
அழகு!அருமை!//
வாங்க ஜீவன் அண்ணா
உங்கள் அழகான வருகைக்கும்
அருமையான தருகைக்கும் நன்றி...
//Karthik Krishna said...
அழகான அறிவிப்பு...
வாழ்த்துக்கள்.....//
வாங்க கார்த்திக் கிருஷ்ணா தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...
//நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்...............................!//
இந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு... ! ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.... :)
// நாணல் said...
//நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்...............................!//
இந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு... ! ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.... :)//
வாங்க நாணல்
உங்களுக்கு பிடிச்சிருக்கா நன்றி நாணல் உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு.
//இது போன்ற கிறுக்குத்தனம்.................//
இது போன்ற கிறுக்குத்தனம் தானே காதலில் வளர்ந்து வேரூன்ற உதவும்... :-))
//Natchathraa said...
//இது போன்ற கிறுக்குத்தனம்.................//
இது போன்ற கிறுக்குத்தனம் தானே காதலில் வளர்ந்து வேரூன்ற உதவும்... :-))//
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்...வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வித்தியாசமாகத் தோன்றலாம் ஆனால், காதலர்களுக்கு அது உன்னதமானதாக இருக்கும்...
நட்ப்பில் இது எப்படி சாத்தியம்...?
அது மின்னலாய்ப் புன்னகைத்து
இடியெனச் சிரித்து சொன்னது
நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்...............................!
superb...............
//sathya said...
நட்ப்பில் இது எப்படி சாத்தியம்...?
அது மின்னலாய்ப் புன்னகைத்து
இடியெனச் சிரித்து சொன்னது
நட்புக்குத் தெரியாது
குடையிருந்தும்
மழை நனையும்
இது போன்ற கிறுக்குத்தனம்...............................!
superb...............//
நன்றி சத்யா...
Post a Comment