எத்தனை இரவுகள் நனைந்திருப்பாய்
எத்தனை பகல்களில் உலர்ந்திருப்பாய்
உலர்ந்து போன உன்னில்
உறைந்து போயிருக்கும்
என்னின் சோகங்களை
சோகங்களின் ஈரங்களை
ஈரங்களால் கரைந்து போயிருக்கும்
என் வாழ்வின் வசந்தங்களை
எப்படிப் புரியவைப்பேன் அவளுக்கு
என்னை சந்தேகித்திருந்தால்
ஒரு வேளை சகித்திருப்பேன்
என் அன்பையல்லவா சந்தேகித்துவிட்டால்
பொறுக்க முடியவில்லை என்னால்
ஆண்கள் அழுவது அவமானம்
என்று சொல்லும் நானே அழுதிருக்கிறேன்
அழும் என் கண்களே
கரைந்து போகும் அளவிற்கு
நான் அழுததற்குக் கூட சாட்சி கேட்டால்
என்ன செய்வேன் ?
நான் அழுத கண்ணீரை
’தலைணையே’
உனையன்றி யாரறிவார்....!
Friday, November 7, 2008
உனையன்றி யாரறிவார் ?
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//என்னை சந்தேகித்திருந்தால்
ஒரு வேளை சகித்திருப்பேன்
என் அன்பையல்லவா சந்தேகித்துவிட்டால் //
//நான் அழுததற்குக் கூட சாட்சி கேட்டால்
என்ன செய்வேன் ?//
ஒவ்வொரு வார்த்தைகளையும் அனுபவித்து எழுதி இருக்கீங்க.
Really amazing..
Keep it up..
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்...
எனக்கும் இந்த அனுபவம் உண்டு.
எனக்கு அழ மட்டும் தான் தெரிந்தது
நீ எழுதி விட்டாய் எனக்குமாய் சேர்த்து.
//என் பதிவுகள்/en pathivugal said...
//என்னை சந்தேகித்திருந்தால்
ஒரு வேளை சகித்திருப்பேன்
என் அன்பையல்லவா சந்தேகித்துவிட்டால் //
//நான் அழுததற்குக் கூட சாட்சி கேட்டால்
என்ன செய்வேன் ?//
ஒவ்வொரு வார்த்தைகளையும் அனுபவித்து எழுதி இருக்கீங்க.
Really amazing..
Keep it up..//
வாங்க பூர்ணிமா சரண்
உங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி.
//அதிரை ஜமால் said...
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்...
எனக்கும் இந்த அனுபவம் உண்டு.
எனக்கு அழ மட்டும் தான் தெரிந்தது
நீ எழுதி விட்டாய் எனக்குமாய் சேர்த்து.//
வாங்க அதிரை ஜமால்
உங்களுக்கு இப்படி ஒரு அனுபவமா ?
இது உங்களுக்காக எழுதியதாகவே எண்ணிக் கொள்ளுங்களேன். எனக்கு இந்த அனுபவம் என் கற்பனையில் மட்டுமே !?. வருகைக்கு மிக்க நன்றி.
Nice
//ஸ்ரீமதி said...
Nice//
வாங்க ஸ்ரீமதி தங்கள் ரசிப்பிற்கு நன்றி.
//’தலைணையே’
உனையன்றி யாரறிவார்....!//
சில தருணங்களில் தலையணைதான் உற்றத்துணை... கண்ணீரை துடைக்கும் நல்ல தோழமை...
அழகாச்சொல்லிருக்கீங்க புதியவன்...
//Natchathraa said...
//’தலைணையே’
உனையன்றி யாரறிவார்....!//
சில தருணங்களில் தலையணைதான் உற்றத்துணை... கண்ணீரை துடைக்கும் நல்ல தோழமை...
அழகாச்சொல்லிருக்கீங்க புதியவன்...//
மிக்க நன்றி நட்சத்ரா...
நான் அழுததற்குக் கூட சாட்சி கேட்டால்
என்ன செய்வேன் ?
நான் அழுத கண்ணீரை
’தலைணையே’
உனையன்றி யாரறிவார்....!
simply superb..
//sathya said...
நான் அழுததற்குக் கூட சாட்சி கேட்டால்
என்ன செய்வேன் ?
நான் அழுத கண்ணீரை
’தலைணையே’
உனையன்றி யாரறிவார்....!
simply superb..//
நன்றி சத்யா...
Post a Comment