Tuesday, November 25, 2008

ஐன்ஸ்டைனின் காதல் சார்பியல் விதி...


நியூட்டனின் காதல் விதிகளை இங்க போய் படிங்க

நியூட்டனின் விதிகளை தனக்குப் புரியும் படி தன் கல்லூரிக் காதலனிடம்
விளக்கம் கேட்டுச் சென்ற காதலி மீண்டும் தன் காதலனிடம் வருகிறாள்.
அவங்க பேசிறதை கொஞ்சம் கவனிப்போமா...

”வாங்க மேடம் நியூட்டனோட மூன்றாவது விதியக் கேட்டு பயந்து ஓடின ஆள  இப்பத்தான் பார்க்க முடியுது. என்ன பயத்தில காய்ச்சல் எதுவும்  வந்திருச்சா... இப்ப மட்டும் எப்படி தைரியம் வந்துச்சி என் கிட்ட வர்றதுக்கு.”

”பயமா ? யாருக்கு நாங்கள்லாம் யாரு தெரியும்ல பின்லேடன் பிளாக்லயே  பின்னூட்டம் போட்ட ஆளுங்க தெரியுமா ?”

”ஓ...நீங்க தானா அது அவ்ளோ தைரியமா அந்த அனானிமஸ் கமெண்ட் போட்டது,  உன்னோட ஐபி அட்ரஸ தான் தேடிக்கிட்டு இருகிறதா செய்தி வந்துச்சு, கண்டு  பிடிச்சா அஞ்சு கிலோ ஆர்டிஎக்ஸ் பார்சல்ல வரும். வாங்கி பத்திரமா வச்சுக்க  நம்ம கல்யாணத்தில பட்டாசுக்கு பதிலா ஆர்டிஎக்ஸ வெடிச்சுக்கலாம்.”

”யேய்...சும்மா இருப்பா நீ வேற...நான் கேக்க வந்ததையே மறந்துடுவேன் போல  இருக்கு. நீ தான் நல்ல பையனாச்சே நீ வரம்பு மீற மாட்டேன்னு தான் எனக்குத்  தெரியுமே. அதனால தானே உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.”

”அம்மா தாயே ஐஸ் வச்சது போதும் ஏற்கனவே குளிர் தாங்க முடியல மொதல்ல  நீ வந்த விசயத்தச் சொல்லு.”

”அது ஒன்னு மில்ல கண்ணா இந்த ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட  எனக்கு புரியுற மாதிரி அந்நிக்கு நியூட்டன் விதிகள சொன்ன மாதிரி கொஞ்சம்  சொல்லித்தயேன்.”

”கொஞ்சவா இல்ல சொல்லவா ?”

”விளையாடாதப்பா எக்ஸாம் நெருங்க நெருங்க பயமா இருக்கு.
 யார் யாரோ எதை எதையோ கண்டு பிடுச்சிட்டு போயிடுராங்க அதயெல்லாம்  நாம படிக்க வேண்டியிருக்கு ...ம்ம்ம்...”

”சரி சரி உன்னோட புலம்பல நிறுத்திட்டு விசயத்துக்கு வா.”

”அதான் சொன்னேன்ல ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட எனக்குப் புரியுற  மாதிரி சொல்லித்தன்னு.”

”சரி.. இப்படி என் பக்கத்துல வந்து உட்காரு.”

”நோ...நோ...ஐயாவ பாத்தா ரொமான்ஸ் மூடுல இருக்குற மாதிரி தெரியுது.
 எதுக்கும் நான் கொஞ்சம் இடம் விட்டே இருக்குறேன். நீங்க பாடத்த ஆரம்பிங்க  சார்.”

”சரி கேட்டுக்க

 E = MC2 என்ற சமன்பாட்டில் (Theory of Relativity) மிகச் சிறிய துகள்களில் இருந்து  கூட பெரும் சக்தியைப் பெறலாம், அதேபோல மிகப் பெரிய சக்தியை சிறிய  துகள்களில் அடைக்கவும் முடியும். என்பதை E = MC2 என்ற சமன்பாட்டின் மூலம்  ஐன்ஸ்டின் விளங்கப்படுத்தினார்.

 இப்ப உனக்குப் புரியுற மாதிரி சொல்றேன்.

 உள்ளங்கை அளவுள்ள சிறிய இதயத்திலிருந்து தான் அளவிடமுடியாத  அளவுள்ள காதல் பிறக்குது. இதுவரை இது தான்னு யாரும் அளவு காண முடியாத  இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரந்து விரிந்துள்ள காதலை ஒரு சின்ன  மென்மையான மனசுக்குள்ள அடைச்சிட்றோமே. இதை உதாரணமாச்  சொல்லலாம்.”

”வாவ்...எப்படிப்பா உன்னால அறிவியலக்கூட காதலோட ஒப்பிட்டு சொல்ல  முடியுது.”

”ஏன் சொல்ல மாட்டே...பக்கத்துல வர்றதுக்கே யோசிக்கிற உன்ன மாதிரி  பொண்ணக் காதலிச்சா காதலயும் அறிவியல் மாதிரி புத்தகத்துல படிச்சு தான்  தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. ஆனா, இந்த அறிவியல் இருக்கே காதலக் கூட  எதிர் பாலின ஈர்ப்பினால் ஏற்படும் ஒரு உணர்வுகளின் ரசாயன மாற்றம்னு தான்  சொல்லுது. சரி விசயத்துக்கு வர்றேன் கவனி.

 ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒருவரின் கடிகாரம் சாதாரணமாக இருக்கும்  ஒருவரின் கடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்று தெரிவிக்கின்றன.  இதன் காரணமாக தூரமும் பாதிக்கப்படும் . ஒளியின் வேகத்துக்கு ஈடு  கொடுக்கும்  வகையில் ஒரு காரை ஒருவர் ஒட்டிச் சென்றால், அவர் செல்லும்  தூரம்  குறைவாக இருப்பதாக சாதாரணமாக இருப்பவருக்குப் படும். ஆனால் கார்  ஒட்டிச் செல்பவர் தூரம் அதிகமாக இருப்பதாகவே உணருவார். முரண்பாடுகள்  போல தோன்றினாலும் இதுதான் உண்மை.

 காதலன் தன் காதலிக்காவோ அல்லது காதலி தன் காதலனுக்காகவோ
 காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகத் தெரியும்.
 அவர்கள் சேர்ந்திருக்கும் நேரம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அது  அவர்களுக்குப் போதாது அவையெல்லாம் காதலர்க்கு நொடிப் பொழுதாகவே  தோன்றும். இந்த விநோதமான காலத் தோற்றத்தை தான் ஐன்ஸ்டைன்  தன்னுடைய சார்பியால் தத்துவத்தில சொன்னாரு.

 ”காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்…
  வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்…”


 அப்படின்னு நம்ம கவிஞர் வைரமுத்து இத தன்னோட கவிதைல அழகாச்  சொல்லியிருக்கிறாரு.”

”கவிஞர் வைரமுத்துவும் ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட  படிச்சிருப்பாரோ ?”

”அத அவர் கிட்ட தான் கேக்கனும்...பாடத்த கவனி.

 மேலும்,

 E = MC2 என்ற சமன்பாடுதான் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள்  உருவாக்கப்படுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

 எப்படின்னா

 இவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த காதலை தன்னுள் அடக்கி வச்சிருக்கிற மனசு  அந்தக் காதல் சூழ்நிலையின் சூழ்ச்சியால தோல்வியடைய நேர்ந்ததுன்னா  காதலர்கள் தங்களை அழிச்சிக்கவும் தயங்க மாட்டாங்க. லேசான வெட்டுக்க  காயாத்துக்கு கூட பயப்படுற வங்க காதல்ல தோல்வின்னதும் அவங்களுக்குள்ள  ஏற்படுகிற வெறுமை தற்கொலை செஞ்சுக்கிற அளவுக்கு அவங்களுக்கு  உத்வேகத்தக் கொடுக்கிறத உதாரணமாச் சொல்லலாம்.”

”என்னப்பா இப்படில்லாம் சொல்லி பயமுறுத்துறே ?”

”ஹேய்.... என்ன ஃபீல் பண்ணுறியா ?...ச்சும்மா ஒரு உதாரணத்துக்குத் தானே  சொன்னேன்.

 கடைசியா ஐன்ஸ்டைன் தன்னோட சார்பியல் தத்துவத்துல என்ன  சொல்றார்ன்னா

 சார்பியில் தத்துவம் காரணமாக மிக மிக மோசமான ஒரு ஆயுதம்  உருவாக்கப்பட்ட போதிலும், அத்தத்துவும் தான் நவீன இயற்பியலின்  துவக்கத்துக்கு அடித்தளமாக உள்ளது. அதுதான் நமது நவீன சமூதாய வாழ்வை  சாத்தியமடையச் செய்துள்ளது.

 அப்படின்னு சொன்னார்.

 என்ன தான் காதலர்கள் பலர் தங்கள் காதல் நிறை வேறாமல் உடல் அழித்து  உயிர் சேர்வோம் என்று உயிரை மாய்த்துக் கொண்டிருந்த போதிலும் இப்போதும்  காதலர்கள் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறாங்க. இன்றைக்கும் காதல் தான்  உலகத்த வாழவைத்துக் கொண்டிருக்கிறது அப்படின்னு கூட சொல்லலாம்.

 ஏன் நம்மாளோட காதலயும் கூட இதுல சேத்துக்கலாம்.

 என்ன புரிஞ்சுதா ஐன்ஸ்டைனின் காதல் சார்பியல்.”

”ம்ம்ம்.நல்லாவே புரிஞ்சுது”

”சரி........இப்போ எனக்கு குருதட்சணையா நீ என்ன தரப்போறே ?”

”குரு......தட்சணையா என்ன எதிர் பார்ப்பாருன்னு எங்களுக்குத் தெரியும்
 அதல்லாம் கொடுக்க வேண்டிய நேரத்துல தானா கொடுக்கப் படும் இப்ப நான்  கெளம்பறேன்... வர்ட்டா....கண்ணா.”

”வந்த வேளை முடிஞ்ச ஒடனே எஸ்க்கேப்பாய்டிவிங்களே...ம்ம்ம்...நமக்கு  இப்போதைக்கு கொடுத்துவச்சது அவ்வளவு தான் என்ன பண்றது...ம்ம்ம்.......”


“கணினியுகக் காதலியே

 உனது அழகிய விரல்களால்

 எனது கம்ப்யூட்டர் கீபோர்டை

 கொஞ்சம் கொஞ்சி விட்டுச் செல்  
 
 பாவம்,

 உன் விரல்களிட்ட

 முத்தத்தையாவது

 என் இதழ்கள் சந்திக்கட்டும்....”
( விதிகள் தொடரும் )

(விஞ்ஞான விதிகளை எளிய தமிழில் கதை வடிவில் சொல்ல ஒரு சிறிய
முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை பிழையிருப்பின் பொறுத்தருள்க)52 comments:

அதிரை ஜமால் said...

me the ஃப்ஸ்ட்

படித்துவிட்டு பின்னோட்டமிடுகிறேன்

அருள் said...

பின்னுறிக புதியவன்....
விஞ்ஞான விதிகளை எளிய நடையில் இவ்வளவு பக்குவமாய் எடுத்து சொல்ல முடியும்னு... நிருபிச்சிடிக.

நீங்க சொன்ன இந்த விளக்கம் என்னக்கே புரிஞ்சதுனா... கண்டிபா மத்தவக்களுக்கு புரியும்.

நீங்க சொன்னது போல.. அபபவே வாத்தியாரு சொல்லி குடுத்திருந்தாருனா... கொஞ்சம் நல்லா படிச்சிருக்கலாம்னு தோனுது.

அதிரை ஜமால் said...

\\”கொஞ்சவா இல்ல சொல்லவா ?”\\ போட்டு தாக்கு

அதிரை ஜமால் said...

எங்க பூர்ணிமா சரணக்கானோம்.

வாங்க வாங்க - இங்க ஒன்னும் தெரியாத புள்ளை ஒன்னு என்னமோ சொல்லியிருக்கு

அதிரை ஜமால் said...

\\உள்ளங்கை அளவுள்ள சிறிய இதயத்திலிருந்து தான் அளவிடமுடியாத அளவுள்ள காதல் பிறக்குது. இதுவரை இது தான்னு யாரும் அளவு காண முடியாத இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரந்து விரிந்துள்ள காதலை ஒரு சின்ன மென்மையான மனசுக்குள்ள அடைச்சிட்றோமே. இதை உதாரணமாச் சொல்லலாம்.”\\

கிலப்பள்ஸ்

வால்பையன் said...

இதை காதல் பதிவுன்னு புரிஞ்சிகிறதா
இல்லை இயற்பியல் பதிவுன்னு நினச்சிகிறதா?
எது எப்படியோ சொன்ன விதம் நல்லாத் தான் இருக்கு

அதிரை ஜமால் said...

\\”ஏன் சொல்ல மாட்டே...பக்கத்துல வர்றதுக்கே யோசிக்கிற உன்ன மாதிரி பொண்ணக் காதலிச்சா காதலயும் அறிவியல் மாதிரி புத்தகத்துல படிச்சு தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. \\

மெய்யாலுமா

அதிரை ஜமால் said...

\\ஏன் நம்மாளோட காதலயும் கூட இதுல சேத்துக்கலாம்.\\

சந்துல சிந்து பாடரதுன்னா இதானோ

அருள் said...

// உள்ளங்கை அளவுள்ள சிறிய இதயத்திலிருந்து தான் அளவிடமுடியாத அளவுள்ள காதல் பிறக்குது. இதுவரை இது தான்னு யாரும் அளவு காண முடியாத இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரந்து விரிந்துள்ள காதலை ஒரு சின்ன மென்மையான மனசுக்குள்ள அடைச்சிட்றோமே. இதை உதாரணமாச் சொல்லலாம்.”//

// ”ஏன் சொல்ல மாட்டே...பக்கத்துல வர்றதுக்கே யோசிக்கிற உன்ன மாதிரி பொண்ணக் காதலிச்சா காதலயும் அறிவியல் மாதிரி புத்தகத்துல படிச்சு தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. ஆனா, இந்த அறிவியல் இருக்கே காதலக் கூட எதிர் பாலின ஈர்ப்பினால் ஏற்படும் ஒரு உணர்வுகளின் ரசாயன மாற்றம்னு தான் சொல்லுது. சரி விசயத்துக்கு வர்றேன் கவனி.//


ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையே இப்படி அறிவியல் கலந்த சம்பாஷனைகள் உங்கள் முயற்சிக்கு அழகு சேர்த்திருக்கு.

இவை எல்லாத்துக்கும் மேலாக... காதலன் தன் உணர்வுகளை ஐன்ஸ்டைன் சார்பியல் தத்துவத்தில் வெளிப்படுத்திய விதம் அருமை.

அதிரை ஜமால் said...

\\”சரி........இப்போ எனக்கு குருதட்சணையா நீ என்ன தரப்போறே ?”\\

அதானே இன்னும் கானுமேன்னு பார்த்தேன்

அருள் said...

// “கணினியுகக் காதலியே
உனது அழகிய விரல்களால்
எனது கம்ப்யூட்டர் கீபோர்டை
கொஞ்சம் கொஞ்சி விட்டுச் செல் ....
பாவம்,
உன் விரல்களிட்ட
முத்தத்தையாவது
என் இதழ்கள் சந்திக்கட்டும்....”//


கொஞ்சம் முத்தின மாதிரி தான் தெரியுது... எதுக்கும் பாத்து ஜாக்கறதயா இருங்க.

அதிரை ஜமால் said...

\\ “கணினியுகக் காதலியே
உனது அழகிய விரல்களால்
எனது கம்ப்யூட்டர் கீபோர்டை
கொஞ்சம் கொஞ்சி விட்டுச் செல் ....
பாவம்,
உன் விரல்களிட்ட
முத்தத்தையாவது
என் இதழ்கள் சந்திக்கட்டும்....”

முத்தம் என்ற வார்த்தை இல்லையென்றால் நமது புதியவருக்கு தூக்கம் வராது

ஸ்ரீமதி said...

அழகா இருக்கு :))

PoornimaSaran said...

:)

நானும் ஜஸ்ட் ஸ்மைல் உடன் போய்டலாம்னு பார்த்தா, முடியலையே:)

PoornimaSaran said...

// அதிரை ஜமால் said...
எங்க பூர்ணிமா சரணக்கானோம்.

வாங்க வாங்க - இங்க ஒன்னும் தெரியாத புள்ளை ஒன்னு என்னமோ சொல்லியிருக்கு

//

வந்துட்டேன்

PoornimaSaran said...

ம்ம்ம் அப்புறம் உங்க கற்பனை அனுபவம் எவ்ளோ தூரத்தில் இருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

PoornimaSaran said...

//காதல் சூழ்நிலையின் சூழ்ச்சியால தோல்வியடைய நேர்ந்ததுன்னா காதலர்கள் தங்களை அழிச்சிக்கவும் தயங்க மாட்டாங்க. லேசான வெட்டுக்க காயாத்துக்கு கூட பயப்படுற வங்க காதல்ல தோல்வின்னதும் அவங்களுக்குள்ள ஏற்படுகிற வெறுமை தற்கொலை செஞ்சுக்கிற அளவுக்கு அவங்களுக்கு உத்வேகத்தக் கொடுக்கிறத//

சரியா சொல்லி இருக்கீங்க புதியவன்..
கோழையையும் தைரியம் உள்ளவர்களாய் மாற்றுவது காதலே!!

RAMYA said...

//
”அதான் சொன்னேன்ல ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட எனக்குப் புரியுற மாதிரி சொல்லித்தன்னு.”
//

காதலை ஒரு துள்ளலோட அள்ளலா சொல்லி இருக்கேங்க. சரியான காதல்...... என்ன எழுதலாம், ஜெமினிகணேசன் நீங்கள். ரொம்பத்தான்..........

அதிரை ஜமால் said...

\\ PoornimaSaran said...
ம்ம்ம் அப்புறம் உங்க கற்பனை அனுபவம் எவ்ளோ தூரத்தில் இருக்குனு தெரிஞ்சுக்கலாமா?\\

எவ்வளவு கேட்டாலும்
எப்படி கேட்டாலும்
சொல்ல மாட்டாரே, சொல்லவே மாட்டார்.

அது நேற்றைய அனுபவம்,
இன்று மீண்டும் நான் புதியவன்,
அதால ஒன்னும் தெரியாதுன்னு சாதிப்பாரு.

புதியவன் said...

// அதிரை ஜமால் said...
me the ஃப்ஸ்ட்

படித்துவிட்டு பின்னோட்டமிடுகிறேன்//

Yes you are the ஃபஸ்ட்

நன்றி ஜமல்

புதியவன் said...

//அருள் said...
பின்னுறிக புதியவன்....
விஞ்ஞான விதிகளை எளிய நடையில் இவ்வளவு பக்குவமாய் எடுத்து சொல்ல முடியும்னு... நிருபிச்சிடிக.

நீங்க சொன்ன இந்த விளக்கம் என்னக்கே புரிஞ்சதுனா... கண்டிபா மத்தவக்களுக்கு புரியும்.

நீங்க சொன்னது போல.. அபபவே வாத்தியாரு சொல்லி குடுத்திருந்தாருனா... கொஞ்சம் நல்லா படிச்சிருக்கலாம்னு தோனுது.//

வாங்க அருள்

உங்களுக்கு புரிஞ்சதா ரொம்ப மகிழ்ச்சிங்க.
எனக்கும் எங்க வாத்தியாரு இப்படியெல்லாம் சொல்லித்தர்லீங்க. நன்றி அருள்.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\”கொஞ்சவா இல்ல சொல்லவா ?”\\ போட்டு தாக்கு//

தாக்கிட்டுத்தானே இருக்கிறோம்.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
எங்க பூர்ணிமா சரணக்கானோம்.

வாங்க வாங்க - இங்க ஒன்னும் தெரியாத புள்ளை ஒன்னு என்னமோ சொல்லியிருக்கு//

என்ன சப்போர்ட்டுக்கு ஆள் சேர்க்கிற மாதிரித் தெரியுது ?

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\உள்ளங்கை அளவுள்ள சிறிய இதயத்திலிருந்து தான் அளவிடமுடியாத அளவுள்ள காதல் பிறக்குது. இதுவரை இது தான்னு யாரும் அளவு காண முடியாத இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரந்து விரிந்துள்ள காதலை ஒரு சின்ன மென்மையான மனசுக்குள்ள அடைச்சிட்றோமே. இதை உதாரணமாச் சொல்லலாம்.”\\

கிலப்பள்ஸ்//

ம்ம்ம்...நல்லா கைதட்டுங்க தட்டுற சத்தம் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்குக் கேக்கணும்...

புதியவன் said...

//வால்பையன் said...
இதை காதல் பதிவுன்னு புரிஞ்சிகிறதா
இல்லை இயற்பியல் பதிவுன்னு நினச்சிகிறதா?
எது எப்படியோ சொன்ன விதம் நல்லாத் தான் இருக்கு//

வாங்க வால்பையன்

அறிவியல் விதிகளைச் சுலபமப் புரிஞ்சுக்கிறதுக்கு ஏதோ நம்மளால முடிந்தது. நன்றிங்க வால்பையன்.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\”ஏன் சொல்ல மாட்டே...பக்கத்துல வர்றதுக்கே யோசிக்கிற உன்ன மாதிரி பொண்ணக் காதலிச்சா காதலயும் அறிவியல் மாதிரி புத்தகத்துல படிச்சு தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. \\

மெய்யாலுமா//

உங்களுக்குத் தெரியாததா ?

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\ஏன் நம்மாளோட காதலயும் கூட இதுல சேத்துக்கலாம்.\\

சந்துல சிந்து பாடரதுன்னா இதானோ//

இதுவும் உங்களுக்குத் தெரிஞ்சது தானே ?

புதியவன் said...

//அருள் said...
ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையே இப்படி அறிவியல் கலந்த சம்பாஷனைகள் உங்கள் முயற்சிக்கு அழகு சேர்த்திருக்கு.

இவை எல்லாத்துக்கும் மேலாக... காதலன் தன் உணர்வுகளை ஐன்ஸ்டைன் சார்பியல் தத்துவத்தில் வெளிப்படுத்திய விதம் அருமை.//

நன்றி அருள் எல்லாம் உங்கள மாதிரி நண்பர்களின் ஊக்கம் தான் என்னை இப்படியெல்லாம் எழுத்தத் தூண்டுகிறது.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\”சரி........இப்போ எனக்கு குருதட்சணையா நீ என்ன தரப்போறே ?”\\

அதானே இன்னும் கானுமேன்னு பார்த்தேன்//

நீங்க இதத்தான் எதிர் பார்ப்பீங்கன்னு எனக்குத் தெரியுமே...

புதியவன் said...

// அருள் said...
// “கணினியுகக் காதலியே
உனது அழகிய விரல்களால்
எனது கம்ப்யூட்டர் கீபோர்டை
கொஞ்சம் கொஞ்சி விட்டுச் செல் ....
பாவம்,
உன் விரல்களிட்ட
முத்தத்தையாவது
என் இதழ்கள் சந்திக்கட்டும்....”//


கொஞ்சம் முத்தின மாதிரி தான் தெரியுது... எதுக்கும் பாத்து ஜாக்கறதயா இருங்க.//

நீங்க சொன்ன அட்வைச அந்தக் காதலன்கிட்ட சொல்லிட்டேன் அருள். அவர் தெளிவாத்தான் இருக்கிறாரம், அப்பத்தானே அடுத்தவங்களக் குழப்ப முடியும். அடுத்த ஒரு விதில உங்கள சந்திக்கிறதா சொல்லச் சொன்னாருங்க அத நான் சொல்லிட்டேன்...நன்றி அருள்

புதியவன் said...

அதிரை ஜமால் said...
//\\ “கணினியுகக் காதலியே
உனது அழகிய விரல்களால்
எனது கம்ப்யூட்டர் கீபோர்டை
கொஞ்சம் கொஞ்சி விட்டுச் செல் ....
பாவம்,
உன் விரல்களிட்ட
முத்தத்தையாவது
என் இதழ்கள் சந்திக்கட்டும்....”

முத்தம் என்ற வார்த்தை இல்லையென்றால் நமது புதியவருக்கு தூக்கம் வராது//

இந்த வார்தையக் கேக்காம உங்களுக்கு முழிப்பே வர்றதில்லைன்னுல நான் கேள்விப்பட்டேன்...?

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
அழகா இருக்கு :))//

வாங்க ஸ்ரீமதி

அழகா இருக்குன்னு சொல்லிட்டுப் போய்ட்டிங்க எதுன்னு சொல்லலியே. இந்தப் பதிவின் படங்களா ?, கதையா ? இல்ல கடைசியா நான் கிறுக்கினதா ?
எதை நான் பதிலா எடுத்துக்கிறது ? வருகைக்கு நன்றி ஸ்ரீமதி.

புதியவன் said...

// PoornimaSaran said...
:)

நானும் ஜஸ்ட் ஸ்மைல் உடன் போய்டலாம்னு பார்த்தா, முடியலையே:)//

அது எப்படிங்க முடியும் ?

புதியவன் said...

//PoornimaSaran said...
// அதிரை ஜமால் said...
எங்க பூர்ணிமா சரணக்கானோம்.

வாங்க வாங்க - இங்க ஒன்னும் தெரியாத புள்ளை ஒன்னு என்னமோ சொல்லியிருக்கு

//

வந்துட்டேன்//

வாங்க வாங்க உங்களுக்காகத் தான் வெயிட்டிங்...

புதியவன் said...

// PoornimaSaran said...
ம்ம்ம் அப்புறம் உங்க கற்பனை அனுபவம் எவ்ளோ தூரத்தில் இருக்குனு தெரிஞ்சுக்கலாமா?//

ம்ம்ம்...தெரிஞ்சுக்கோங்க தெரிஞ்சுக்கோங்க..நல்லாத் தெரிஞ்சுக்கோங்க.

புதியவன் said...

// PoornimaSaran said...

சரியா சொல்லி இருக்கீங்க புதியவன்..
கோழையையும் தைரியம் உள்ளவர்களாய் மாற்றுவது காதலே!!//

நீங்களும் சரியாத் தான் சொல்றீங்க

நன்றி பூர்ணிமா சரண்.

அதிரை ஜமால் said...

\\ புதியவன் said...
//அதிரை ஜமால் said...
எங்க பூர்ணிமா சரணக்கானோம்.

வாங்க வாங்க - இங்க ஒன்னும் தெரியாத புள்ளை ஒன்னு என்னமோ சொல்லியிருக்கு//

என்ன சப்போர்ட்டுக்கு ஆள் சேர்க்கிற மாதிரித் தெரியுது ?\\

நாங்க கூட்டம் சேர்கிறது கிடையாதுங்க
இது தானா சேர்ந்த கூட்டம்.

(யாருப்பா அங்க நம்ம குசேலர் டைலாக் அடிக்கறது)

ஒன்னு சொல்ல விட மாட்டாங்கலே

புதியவன் said...

//RAMYA said...
//
”அதான் சொன்னேன்ல ஐன்ஸ்டைனோட சார்பியல் கோட்பாட்ட எனக்குப் புரியுற மாதிரி சொல்லித்தன்னு.”
//

காதலை ஒரு துள்ளலோட அள்ளலா சொல்லி இருக்கேங்க. சரியான காதல்...... என்ன எழுதலாம், ஜெமினிகணேசன் நீங்கள். ரொம்பத்தான்..........//

வாங்க ரம்யா

துள்ளலோட அள்ளலா சொல்லி இருக்கேனா ?
ஜெமினிகணேசன்லாம் பெரிய ஆளுங்க அவர் எங்க தாத்தா மாதிரி அவரையெல்லாம் கம்பேர் பண்ணாதீங்க அவரு கோச்சிக்க போறாரு...நன்றி ரம்யா. வருகைக்கும் குறும்பான தருகைக்கும்.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...
ம்ம்ம் அப்புறம் உங்க கற்பனை அனுபவம் எவ்ளோ தூரத்தில் இருக்குனு தெரிஞ்சுக்கலாமா?\\

எவ்வளவு கேட்டாலும்
எப்படி கேட்டாலும்
சொல்ல மாட்டாரே, சொல்லவே மாட்டார்.

அது நேற்றைய அனுபவம்,
இன்று மீண்டும் நான் புதியவன்,
அதால ஒன்னும் தெரியாதுன்னு சாதிப்பாரு.//

அப்பாடா கேள்வியையும் கேட்டு பதிலையும் அவரே சொல்லிட்டார் நமக்கு பதில் சொல்ற வேளை மிச்சம்...

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
\\ புதியவன் said...
//அதிரை ஜமால் said...
எங்க பூர்ணிமா சரணக்கானோம்.

வாங்க வாங்க - இங்க ஒன்னும் தெரியாத புள்ளை ஒன்னு என்னமோ சொல்லியிருக்கு//

என்ன சப்போர்ட்டுக்கு ஆள் சேர்க்கிற மாதிரித் தெரியுது ?\\

நாங்க கூட்டம் சேர்கிறது கிடையாதுங்க
இது தானா சேர்ந்த கூட்டம்.

(யாருப்பா அங்க நம்ம குசேலர் டைலாக் அடிக்கறது)

ஒன்னு சொல்ல விட மாட்டாங்கலே//

நீங்க ஒன்னு சொன்னா நூறு சொன்ன மாதிரிங்க அதான் எதிரொலிக்குது...

ஸ்ரீமதி said...

//புதியவன் said...
//ஸ்ரீமதி said...
அழகா இருக்கு :))//

வாங்க ஸ்ரீமதி

அழகா இருக்குன்னு சொல்லிட்டுப் போய்ட்டிங்க எதுன்னு சொல்லலியே. இந்தப் பதிவின் படங்களா ?, கதையா ? இல்ல கடைசியா நான் கிறுக்கினதா ?
எதை நான் பதிலா எடுத்துக்கிறது ? வருகைக்கு நன்றி ஸ்ரீமதி.//

:)))))) எல்லாமே தான் அழகா இருக்கு... ஏன் நீங்க இப்படி எடுத்துக்கக்கூடாது?? :))))

புதியவன் said...

//ஸ்ரீமதி said...

:)))))) எல்லாமே தான் அழகா இருக்கு... ஏன் நீங்க இப்படி எடுத்துக்கக்கூடாது?? :))))//

நன்றி ஸ்ரீமதி.

Divyapriya said...

அழகான விளக்கம் :))

PoornimaSaran said...

// புதியவன் said...
//அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...
ம்ம்ம் அப்புறம் உங்க கற்பனை அனுபவம் எவ்ளோ தூரத்தில் இருக்குனு தெரிஞ்சுக்கலாமா?\\

எவ்வளவு கேட்டாலும்
எப்படி கேட்டாலும்
சொல்ல மாட்டாரே, சொல்லவே மாட்டார்.

அது நேற்றைய அனுபவம்,
இன்று மீண்டும் நான் புதியவன்,
அதால ஒன்னும் தெரியாதுன்னு சாதிப்பாரு.//

அப்பாடா கேள்வியையும் கேட்டு பதிலையும் அவரே சொல்லிட்டார் நமக்கு பதில் சொல்ற வேளை மிச்சம்...

//

நல்லா சமாளிக்கறீங்க... ஜாமால் இதை கொஞ்சம் கவனீங்க..

புதியவன் said...

//PoornimaSaran said...
// புதியவன் said...
//அதிரை ஜமால் said...
\\ PoornimaSaran said...
ம்ம்ம் அப்புறம் உங்க கற்பனை அனுபவம் எவ்ளோ தூரத்தில் இருக்குனு தெரிஞ்சுக்கலாமா?\\

எவ்வளவு கேட்டாலும்
எப்படி கேட்டாலும்
சொல்ல மாட்டாரே, சொல்லவே மாட்டார்.

அது நேற்றைய அனுபவம்,
இன்று மீண்டும் நான் புதியவன்,
அதால ஒன்னும் தெரியாதுன்னு சாதிப்பாரு.//

அப்பாடா கேள்வியையும் கேட்டு பதிலையும் அவரே சொல்லிட்டார் நமக்கு பதில் சொல்ற வேளை மிச்சம்...

//

நல்லா சமாளிக்கறீங்க... ஜாமால் இதை கொஞ்சம் கவனீங்க..//

இன்னும் இந்த பஞ்சாயத்து முடியலையா...?

புதியவன் said...

//Divyapriya said...
அழகான விளக்கம் :))//

வாங்க திவ்யப் பிரியா

உங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும் நன்றி.

Natchathraa said...

ஹைய்ய்யோடா... 12 வருஷத்துக்கு முன்னால நீங்க எனக்கு physics டீச்சராயிருந்திற்கக்கூடாதா... 100% ஸ்கோர் பண்ணிருப்பனே....ஹி ஹி ஹி....

புதியவன் said...

//Natchathraa said...
ஹைய்ய்யோடா... 12 வருஷத்துக்கு முன்னால நீங்க எனக்கு physics டீச்சராயிருந்திற்கக்கூடாதா... 100% ஸ்கோர் பண்ணிருப்பனே....ஹி ஹி ஹி....//

12 வருசத்துக்கு முன்னால நானும் ஸ்டூடண்டு தான்...அதனால நீங்க 100% வாங்காம போனதுக்கு நான் காரணமில்லீங்கோ...குறும்பான தருகைக்கு நன்றி நட்சத்ரா...

sathya said...

remba nalla irukku..that two persons conversations are really good... neenga nalla kadhaiyum ezhuthureenga....

insteen kadhal vithiya sorry,saarbiyal vihiya sonna vidham azhaga irukku.....:-)

congrats..........

(thanks for remembering of insteen saarbiyal vithi)

புதியவன் said...

//sathya said...
remba nalla irukku..that two persons conversations are really good... neenga nalla kadhaiyum ezhuthureenga....

insteen kadhal vithiya sorry,saarbiyal vihiya sonna vidham azhaga irukku.....:-)

congrats..........

(thanks for remembering of insteen saarbiyal vithi)//

எனக்கு ஃபிசிக்ஸ்ல கொஞ்சம் ஆர்வம் அதிகம் அதான் கதை சொன்ன மாதிரியும் இருக்கும் மெசேஜ் சொன்னமாதிரியும் இருக்குமென்று ஒரு சிறிய முயற்சி...

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சத்யா...

sathya said...

physics nalla irukkum....hmm innum neraiya message sollunga...kettukirom...:-)

புதியவன் said...

//sathya said...
physics nalla irukkum....hmm innum neraiya message sollunga...kettukirom...:-)//

நிச்சயம் சொல்கிறேன்...நன்றி சத்யா...