நம் நெருக்கம்
இன்னும் இன்னும் சுருக்கமான
அந்த வேளையில்
உடலின் ஒவ்வொரு அணுவிலும்
நியூட்ரான்கள் நடுநிலை வகிக்க
எலக்ட்ரானும் புரோட்டானும்
பிணைக்கப் பட்ட போது
மின்னூட்டம் பெறப்பட்ட
நரம்புகளின் வழியே
ஒளியூட்டப் பட்ட
விழிகளின் வெளிச்சத்தில்
இமைகள் இமைக்க
மறந்த நிலையில்
உன் வெட்கங்கள்
வேடிக்கை பார்க்க
அந்தத் தனிமையான நேரத்தில்
நம் முகம் வியர்க்க
உடல் நடுங்கியது
இதயம் வழக்கத்திற்கு
வேகமாய் துடித்தது
உன் நாணமும்
என் ஆசையும் போட்டி போட
உன் வளைக்கரம்
வலு விழந்து
மூச்சுக் காற்று
முகவரி தேடிய பொழுதில்
சுகமாய் நடந்தேறியது
இன்றும் மறக்க முடியவில்லை
அன்று நம்மையும் அறியாது
சத்த மில்லாமல்
நம் இதழ்கள்
பிரசவித்த முதல் முத்தம்...........
27 comments:
நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு
நான் தான் பஷ்ட்டு
மீதியெல்லாம் நெக்ஷ்ட்டு
கொஞ்சம் இடைவெளி இட்ட மாதிரி இருக்கு.
//நம் இதழ்கள்
சத்த மில்லாமல்
பிரசவித்த முதல் முத்தம்...........//
நல்லா எழுதுறீங்க - வாழ்த்துக்கள்
Superb lines Puthiyavan :)
Especially..
""உடலின் ஒவ்வொரு அணுவிலும்
நியூட்ரான்கள் நடுநிலை வகிக்க
எலக்ட்ரானும் புரோட்டானும்"" -different thinking!
keep up!
ஒரு முத்தம் கொடுக்குறதுகுள்ள, எலக்ட்ரானையும், ப்ரோட்டனையும் செத்து ஷாக் கொடுத்துருவிங்க போல
இப்படி எல்லாம் யோசிக்க எனக்கு வர மட்டேன்கிதே...
"அனுபவம் பேசும்"
அழகான வரிகள்...அருமை சகோ..
கலக்கலா இருக்குங்க உங்க கவிதை
//நம் இதழ்கள்
பிரசவித்த முதல் முத்தம்...........//
Gud twist.. twistu thaane?? ;))
arumaiyaana vaarthai thervu..
//கொஞ்சம் இடைவெளி இட்ட மாதிரி இருக்கு.
//
சத்த மில்லாமல்
நம் இதழ்கள்
பிரசவித்த முதல் முத்தம்...........//
நல்லா எழுதுறீங்க - வாழ்த்துக்கள்//
வாங்க ஜமால்
வொர்க்ல கொஞ்சம் பிஸியாகிட்டேன் அதான் ஒரு சின்னா இடை வெளி. நன்றி உங்க வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.
//Mathu said...
Superb lines Puthiyavan :)
Especially..
""உடலின் ஒவ்வொரு அணுவிலும்
நியூட்ரான்கள் நடுநிலை வகிக்க
எலக்ட்ரானும் புரோட்டானும்"" -different thinking!
keep up!//
வாங்க மது
உங்களுக்கு பிடிச்சிருக்கா ரெம்ப மகிழ்ச்சி.
நன்றி மது.
//வால்பையன் said...
ஒரு முத்தம் கொடுக்குறதுகுள்ள, எலக்ட்ரானையும், ப்ரோட்டனையும் செத்து ஷாக் கொடுத்துருவிங்க போல//
வாங்க வால்பையன்
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
முத்தம்ங்கிறதே ஒரு சுகமான ஷாக்தான் அப்பிடின்னு வெளியில பேசிக்கிறாங்க...
//அருள் said...
இப்படி எல்லாம் யோசிக்க எனக்கு வர மட்டேன்கிதே...
"அனுபவம் பேசும்"
அழகான வரிகள்...அருமை சகோ..//
வாங்க அருள்
கவிதை பிடிச்சிருக்கா நன்றி.
உண்மையிலேயே அனுபவம் தாங்க பேசுச்சி.
என் கற்பனையின் அனுபவம் பேசுச்சுங்கோ...
//குடுகுடுப்பை said...
கலக்கலா இருக்குங்க உங்க கவிதை//
வாங்க குடுகுடுப்பை
கலக்கலா இருக்கா... நன்றி உங்கள் வருகைக்கு.
//ஜி said...
//நம் இதழ்கள்
பிரசவித்த முதல் முத்தம்...........//
Gud twist.. twistu thaane?? ;))
arumaiyaana vaarthai thervu..//
வாங்க ஜி
முதல் முறையா என் வலைத்தளம் வந்தமைக்கு நன்றி.
உண்மையிலேயே இது ட்விஸ்டு தான் ஜி...நன்றி
//இமைகள் இமைக்க
மறந்த நிலையில்
உன் வெட்கங்கள்
வேடிக்கை பார்க்க//
wav! beautiful lines..
நல்லா இருக்கு புதியவன். பின்னூட்டங்களில் நம்ம பெருந்தலைகளும் தெரிகிறார்கள். வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.
அனுஜன்யா
// PoornimaSaran said...
//இமைகள் இமைக்க
மறந்த நிலையில்
உன் வெட்கங்கள்
வேடிக்கை பார்க்க//
wav! beautiful lines..//
வாங்க பூர்ணிமா சரண்
உங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கு நன்றி.
//அனுஜன்யா said...
நல்லா இருக்கு புதியவன். பின்னூட்டங்களில் நம்ம பெருந்தலைகளும் தெரிகிறார்கள். வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.
அனுஜன்யா//
வாங்க அனுஜன்யா
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இப்புதியவனின் நன்றிகள்
காலேஜ்ல உங்க மேஜர் என்ன பிசிக்ஸா?? ;)))))ரொம்ப நல்லாயிருக்கு கவிதை.. :))))))
ரொம்ப scientificaa இருக்கே ;)
வரிகள் ஒவ்வொன்றும் நன்று:-)
//ஸ்ரீமதி said...
காலேஜ்ல உங்க மேஜர் என்ன பிசிக்ஸா?? ;)))))ரொம்ப நல்லாயிருக்கு கவிதை.. :))))))//
வாங்க ஸ்ரீமதி
எனக்கு மேஜர் பிசிக்ஸ் இல்லீங்க ஆனா பிசிக்ஸ்ல கொஞ்சம் ஈடுபாடு அவ்வளவு தான்.
தங்கள் வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி ஸ்ரீமதி.
//Divyapriya said...
ரொம்ப scientificaa இருக்கே ;)//
வாங்க Divyapriya
கவிதை scientificaa இருக்கா ? ...நன்றி.
//ப்ரதீபா said...
வரிகள் ஒவ்வொன்றும் நன்று:-)//
வாங்க ப்ரதீபா
உங்கள் வருகைக்கும் ரசிப்பிற்க்கும் இப்புதியவனின் நன்றிகள்.
வணக்கம்,
முத்தம் தருவதற்குள் இவ்வளவு உணர்ச்சி அலைகளா?
// து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
முத்தம் தருவதற்குள் இவ்வளவு உணர்ச்சி அலைகளா?//
முதல் முத்தம் ஒருத்தருடைய வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. அதன் பிறகு அவர்களுக்கு எத்தனையோ அனுபவங்கள் வந்து போனாலும் அந்த முதல் முத்தம் அவர் நெஞ்சத்தில் முத்திரையாய் பதிந்திருக்கும். அப்படின்னு அனுபவப்பட்டவர்கள் சொல்லியிருக்காங்க....
நன்றி து. பவனேஸ்வரி.
உடலின் ஒவ்வொரு அணுவிலும்
நியூட்ரான்கள் நடுநிலை வகிக்க
எலக்ட்ரானும் புரோட்டானும்
பிணைக்கப் பட்ட போது
மின்னூட்டம் பெறப்பட்ட
நரம்புகளின் வழியே
ஒளியூட்டப் பட்ட
விழிகளின் வெளிச்சத்தில்
இமைகள் இமைக்க
மறந்த நிலையில்
உன் வெட்கங்கள்
வேடிக்கை பார்க்க
uvamai nalla irukku...
//sathya said...
உடலின் ஒவ்வொரு அணுவிலும்
நியூட்ரான்கள் நடுநிலை வகிக்க
எலக்ட்ரானும் புரோட்டானும்
பிணைக்கப் பட்ட போது
மின்னூட்டம் பெறப்பட்ட
நரம்புகளின் வழியே
ஒளியூட்டப் பட்ட
விழிகளின் வெளிச்சத்தில்
இமைகள் இமைக்க
மறந்த நிலையில்
உன் வெட்கங்கள்
வேடிக்கை பார்க்க
uvamai nalla irukku...//
உவமையை ரசித்ததற்கு மிக்க நன்றி சத்யா...
Post a Comment