Saturday, November 15, 2008

என்று தணியும் உனக்கு…


சொந்த தேசம் விட்டு
இடம் பெயர்ந்து வரும்
என் தாய்த் தமிழினமே
நம்மைப் பெற்ற தாய்
வெவ்வேறு தான்,
ஆனால்
தமிழ்த் தாய் ஒருத்தி தானே
நீ என் தமிழ்த் தாயின்
தொப்புள் கொடி உறவல்லவா
நீயும் நானும் குடித்து வளர்ந்தது
தமிழ்ப் பால் தானே
உற்றாரையும் உறவினரையும்
சொந்த வீட்டையும்
பிறந்த நாட்டையும் விட்டு
எங்கெங்கோ செல்கின்றாய்
உயிரை மட்டும்
உடமையாகக் கொண்டு
உனக்கு ஏனிந்த அவல நிலை
தமிழினத்தில் பிறந்த
ஒரே காரணத்திற்காகவா ?
உண்ண உணவு உடுத்த உடை
இருக்க இடம்
உயிருக்குப் பாதுகாப்பு என்ற
அடிப்படைத் தேவைகளைக் கூட
கொடுக்க முடியாத நாடானது
கொடிய சிறைச் சாலையினும் கேடானது
சொந்த தேசத்திலேயே
அகதிகளைப் போல் வாழ்கிறாய்
உன் நாடே உனக்கு
சிறைச் சாலை யாகவல்லவா
இருக்கிறது
எத்தனை எத்தனை இன்னல்களை
அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்
ஏவுகணைத் தாக்கி
சிதறிய உடல்களும்
கண்ணி வெடியில்
சிக்கிச் சிதைந்த உறுப்புகளும்
பெண்கள் முதியவர்கள் குழந்தைகள்
என்று பச்சாதாபமில்லாமல்
உயிர் வாங்கும்
துப்பாக்கித் தோட்டாக்கள்
அவைகளுக்குத் தெரியுமா
உயிரின் மதிப்பு ?
இதைக் கேட்பதற்கே
எங்கள் உதிரம் உறைகிறது
நீ எப்படித் தான் உண்டு உறங்கி
உயிர் வாழ்கிறாயோ
உயிர் பயத்திலேயே
உறங்கிப் பழகிவிட்டாய் போலும்
காற்றையும் நெருப்பையும் வானையும்
ஆட்சி செய்ய முடியாத மனிதன்
தான் தொட முடிந்ததால்
நீரையும் நிலத்தையும்
பங்கு போட்டுக் கொள்கிறான்
ஜாதி மதம் இனம்
நிறம் மொழி நாடு என்று
பிரித்தறியும் மனித சமுதாயமே
நாம் அனைவருக்கும்
உயிர் ஒன்று தான் என்பதை
எப்போது தான்
உணர்ந்து கொள்வாயோ ?
ஆதி மனிதனைப்
பெற்றெடுத்த தேசமே
பாதித் தமிழனையாவது
உயிருடன் விட்டு வைப்பாயா ?
இல்லை,
மீதியின்றி வேரறுத்து விடுவாயா....?
என்று தணியும் உனக்கு
இந்தத் தமிழின
இரத்த தாகம்................


9 comments:

நட்புடன் ஜமால் said...

//பாதித் தமிழனையாவது
உயிருடன் விட்டு வைப்பாயா ?
இல்லை,
மீதியின்றி வேரறுத்து விடுவாயா....?
என்று தணியும் உனக்கு
இந்தத் தமிழின
இரத்த தாகம்................//

என்ன சொல்லறதுன்ன கூட தெரியலைங்க.

நம் சகோதர சகோதரிகளுக்காக.

பதிவர்களே - தமிழ் தாய் மக்களாம் ஈழத்தினர்க்காக - பதிவுகளை அதிகமாக்குங்கள்.

வெறும் மொளன அஞ்சலி செய்யச்சொல்லி பலர் இருக்கலாம்.

அவர்களுக்கான் பிரார்த்தனையை அதிகமாக்குங்கள்.

உயிரின் மதிப்பு அறியாத அந்த கொலை பாதகர்கள் நெஞ்சத்தை நெஞ்சத்தில் இருக்கும் வஞ்சத்தை போக்கிவிடு எங்கள் இறையே ...

Mathu said...

Very touching lines!

சிம்பா said...

வரிகள் மிகவும் உணர்வுபூர்வமா இருக்கு... அதிலும் பாதி தமிழன்...

கலக்குங்க...

அங்க உள்ள கலகக்காரர்கள நாடு கடத்தினா தமிழர்கள் நிச்சயமா நல்லா இருப்பாங்க..

Anonymous said...

:( என்னிம விடிவிற்கு அனைவரும் கரம் சேர்ப்போம்.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

புதியவரே!

தமிழர்களின் நிலை கண்டு எங்களின் உள்ளம் வடிக்கும் கண்ணீர் துளிகள் உங்களின் கவிதை வரிகளாயிருக்கின்றன. அதிலும் கீழ்க்கண்ட வரிகள்... ஆழமான வெளிப்பாடு!

:::
சொந்த வீட்டையும்
பிறந்த நாட்டையும் விட்டு
எங்கெங்கோ செல்கின்றாய்
உயிரை மட்டும்
உடமையாகக் கொண்டு
:::
உயிர் பயத்திலேயே
உறங்கிப் பழகிவிட்டாய் போலும்
:::

ப்ரதீபா said...

உணர்வூபூர்வமான வரிகள்:(

Poornima Saravana kumar said...

அவர்களின் வேதனைகளை வெறும் வார்த்தைகளாய் மட்டும் சொல்ல முடியாது..

Sakthidevi.I said...

unarvu poorvamana varigal...neenga indha maadhiri ezhuthuna nalla irukkumnu thonuchu..

ungala madhiri ezhuthum thiramai ullavanga than nam naatu natappugalaiyum, makkalukku solla vediya karuththukalaiyum unmaiya unarththa mudiyum...
cheers..keep it up...

Sakthidevi.I said...

unarvu poorvamana varigal...neenga indha maadhiri ezhuthuna nalla irukkumnu thonuchu..

ungala madhiri ezhuthum thiramai ullavanga than nam naatu natappugalaiyum, makkalukku solla vediya karuththukalaiyum unmaiya unarththa mudiyum...
cheers..keep it up...