Monday, November 10, 2008

பேசியிருக்கலாம்...


கல்லூரியில் ஒரு சந்தர்ப்பத்தில் 
எப்போதோ சந்தித்தோம் 
புன்னகையில் அறிமுகமாகி 
நாட்கணக்கில் நாட்டு நடப்பு பேசி 
நட்பாகி இருந்தோம்  

மணிக்கொரு தடவை ஒரு Sorry யோ அல்லது 
ஒரு Thanks ஸோ சொல்லிக் கொள்வோம் 
ஏன் சொல்கிறோம் என்று தெரியமலேயே
சில நிமிடத்திற்கொரு முறை ஒரு சிரிப்போ 
அல்லது ஒரு பொய்க் கோபமோ 
நம்மில் சாதாரணமாக வந்து செல்லும்

காரணம் ஏதுமின்றி சில நேரம் 
கண்ணீர் கசியும் 
நம் தணிமையில் சில வேளை 
பிரிந்திருக்க மனது சொல்லும் 
முயற்சி செய்வோம் முடியாமல் 
மனது தோற்கும் 
முகம் பார்க்கவும் குரல் கேட்கவும் 
தவியாய் தவிக்கும் மனது...

எத்தனையோ ஏகந்த வேளையில் 
தனிமையில் இருந்திருக்கிறோம் 
தவிப்பை உணர்ந்ததில்லை 
நிரந்தரமாய் பிரியப்போகிறோம்  
என்ற போதுதான் 
இரும்புக் கரம் கொண்டு 
இதயம் பிழியப்பட்ட ரண வேதனை

முன்னமே பேசியிருக்கலாம் 
பேச வேண்டிய வார்த்தைகளை 
தொண்டைக் குழி வரை வந்து 
சொல்ல முடியாமல் போராடியிருக்கிறோம்...

முன்னைக்காட்டிலும் 
முனைப்பாய் இருக்கிறேன் 
உன்னைப் பார்ப்பதற்கு...
அப்போது மட்டும் ஏன் சொல்ல முடியாமல் போனது ? 
இப்போது கூட முடியுமோ என்னவோ ...!

10 comments:

நட்புடன் ஜமால் said...

முடியாது ராசா முடியாது ...
முடியவே முடியாது.

இப்பொழுது பார்த்தால் சொல்ல முடியுமோ முடியதோ,

இதை மறக்க மட்டும் முடியவே முடியாது.

Divya said...

மனதில் தோன்றியதை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.......ரொம்ப அழகா இருக்கு உணர்வுகளை வெளிப்படித்திருக்கும் விதம், பாராட்டுக்கள்!!!


ஆங்கில வார்த்தைகள் கலவாமல் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!!!

தொடர்ந்து எழுதுங்கள்:))

வாழ்த்துக்கள்!!

புதியவன் said...

/மனதில் தோன்றியதை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.......ரொம்ப அழகா இருக்கு உணர்வுகளை வெளிப்படித்திருக்கும் விதம், பாராட்டுக்கள்!!!


ஆங்கில வார்த்தைகள் கலவாமல் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!!!

தொடர்ந்து எழுதுங்கள்:))

வாழ்த்துக்கள்!!//

வாங்க திவ்யா
உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, இனி வரும் பதிவுகளில் ஆங்கில வார்த்தைகள் கலவாமல் பார்த்துக்கொள்கிறேன்.
உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் இப்புதியவனின் நன்றிகள்.

புதியவன் said...

//அதிரை ஜமால் said...
முடியாது ராசா முடியாது ...
முடியவே முடியாது.

இப்பொழுது பார்த்தால் சொல்ல முடியுமோ முடியதோ,

இதை மறக்க மட்டும் முடியவே முடியாது.//

வாங்க ஜமால்
நீங்க அனுபவத்தில சொல்றீங்க நீங்க சொன்ன தப்பாவா இருக்கப் போகுது
நன்றி உங்கள் வருகைக்கும் தருகைக்கும்

Poornima Saravana kumar said...

// அப்போது மட்டும் ஏன் சொல்ல முடியாமல் போனது ?

இப்போது கூட முடியுமோ என்னவோ ...! //

// அதிரை ஜமால் said...
முடியாது ராசா முடியாது ...
முடியவே முடியாது.

இப்பொழுது பார்த்தால் சொல்ல முடியுமோ முடியதோ,

இதை மறக்க மட்டும் முடியவே முடியாது.//

கண்டிப்பாங்க புதியவன். இதை இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதுமே சொல்லவும், மறக்கவும் முடியாது..


" மனதில் ஆறா வடுக்களாய்
அந்த நினைவுகள்,
வந்து வந்து செல்லும்
காதோடு கிசுகிசுக்கும்
உன் குரலோடு! "

புதியவன் said...

//கண்டிப்பாங்க புதியவன். இதை இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதுமே சொல்லவும், மறக்கவும் முடியாது..


" மனதில் ஆறா வடுக்களாய்
அந்த நினைவுகள்,
வந்து வந்து செல்லும்
காதோடு கிசுகிசுக்கும்
உன் குரலோடு! "//

வாங்க பூர்ணிமா சரண்

உண்மை தாங்க அந்த நினைவுகள் ஆறா வடுக்கள் தான். நன்றி , உங்கள் வருகைக்கும் கவிதையான தருகைக்கும்

Unknown said...

அச்சோ பாவம் நீங்களாவது சொல்லிருக்கலாம்...

புதியவன் said...

//அச்சோ பாவம் நீங்களாவது சொல்லிருக்கலாம்...//

ஆமாங்க சொல்லியிருக்கலாம்....?
நன்றி உங்கள் வருகைக்கும் குறும்பான தருகைக்கும்.

Sakthidevi.I said...

சில நிமிடத்திற்கொரு முறை ஒரு சிரிப்போ
அல்லது ஒரு பொய்க் கோபமோ
நம்மில் சாதாரணமாக வந்து செல்லும்

unmaiyana varigal..
indha kavidhai ellarin kalloori paruvathtirkum miga poruththamaga amaiyum...

good one..

புதியவன் said...

//sathya said...
சில நிமிடத்திற்கொரு முறை ஒரு சிரிப்போ
அல்லது ஒரு பொய்க் கோபமோ
நம்மில் சாதாரணமாக வந்து செல்லும்

unmaiyana varigal..
indha kavidhai ellarin kalloori paruvathtirkum miga poruththamaga amaiyum...

good one..//

கல்லூரிப் பருவத்தின் நினைவுகளில் எழுதியது தான் இது...ஆனால் கற்பனை மட்டுமே...