Friday, March 6, 2009

எனக்கானதொரு தேவதை...


ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...

வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்
நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட
கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…

தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்
விழிகள் நாணேற்றியதில்
அவளின் வெட்கம்
ஒடி ந்து...உ டை ந் த து...

சரியா..? தவறா...?
என்று சிந்திக்கும் முன்பே
ஆர்வமிகுதியில்
முடிந்தும் முடியாமல் போன
முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது

உதடுகள் உரசிக் கொண்டதில்
உதிரத்தொடங்கி இருந்தது
அவளின் தேவதைக் காண
அடையாளச் சிறகுகள்
காதலிப்பதற்கு எதற்கு சிறகுகள் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே
என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...
உணர்வுகள் உண்மையாயின்
நாளை முதல் வேலையாகப்
பறப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்
இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?


83 comments:

நட்புடன் ஜமால் said...

எனக்கும் தான்

எனக்கும் தான் ...

நட்புடன் ஜமால் said...

ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...\\

மிக அழகு

மில்கி வே!

நட்புடன் ஜமால் said...

கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…


அருமை

நட்புடன் ஜமால் said...

\\தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்
விழிகள் நாணேற்றியதில்
அவளின் வெட்கம்
ஒடி ந்து...உ டை ந் த து...\\


இருங்க இதனையே இரசிக்க சில மணி நேரம் தேவைபடுகிறது

மிச்சம் பிறகு ...

Muthusamy Palaniappan said...

நல்ல கனவு (கற்பனை)

அ.மு.செய்யது said...

//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...//

ஆஹா..பிரபஞ்சங்களைக் கடந்த ஒரு காதலியா..

Unknown said...

அழகு :)))

Natchathraa said...

//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை....//

அட நானிருக்கனே இந்த கவிதையில்...:-))

ஹ்ம்ம் தேவதையை பார்த்தாச்சா புதியவன்...

//நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…//

ஹ்ம்ம்ம் ரொம்ப உறுதியாத்தான் கட்டப்பட்டிருக்கு...

//தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்//

இப்படி தொலைதல்தான் காதலுக்கு அழகு...

//சரியா..? தவறா...?
என்று சிந்திக்கும் முன்பே
ஆர்வமிகுதியில்
முடிந்தும் முடியாமல் போன
முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது//

முத்தக்கவிஞர் வந்தாச்சு... ;-)

//என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...//

காதல் சிறகு இப்போதான் முளைக்கிறதா புதியவன்?? :)

//இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?//

ஹம்ம்ம் அழகான கனவு... கனவு மெய்ப்பட வாழ்த்துகள்....

அ.மு.செய்யது said...

//என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...//


புதியவனுக்கே உரிய டச்.....

ஹேமா said...

ஓ...புதியவன்,தேவதை வந்தாச்சா!உங்களுக்கும் சிறகு கொடுத்துக் கூட்டிட்டுப் போக!
அப்புறம் எங்களுக்கு...புதியவன்!

அ.மு.செய்யது said...

//மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?
//

வழக்கம் போல கவிதையின் கடைசியில் ஒரு டிவிஸ்ட்...

அசத்தல் புதியவன்...

அ.மு.செய்யது said...

//முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது//

ரசித்தேன் ...இந்த வரிகளை...

அ.மு.செய்யது said...

இதுவும் யூத்ஃபுல் விகடனில் வரும் என நினைக்கிறேன்.

ஹேமா said...

//தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்//

ரி...இப்போ மனசோடதான் இருக்கீங்களா...இல்லையா?

//என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...//

சிறகு முளைச்சுதா...இல்ல கனவு முடிய சிறகும் முறிஞ்சுபோச்சா?பறந்து போயிடுவீங்களா புதியவன்!

//இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?//

எப்பிடி உங்களுக்கு மட்டும் இப்பிடிக் கனவெல்லாம் வருது!எனக்கு வரமாட்டேங்குதே(கனவில ஒரு தேவன்!)

மொத்தத்தில் கனவோடு கவிதை புதியவனின் கைவண்ணத்தில் அருமை.

தமிழன்-கறுப்பி... said...

கனவெல்லாம் ஒரு மார்க்கமாத்தான் கிடக்கு...பத்திரம் தம்பி.. :)

தமிழன்-கறுப்பி... said...

அப்ப அடுத்த கனவு எப்ப வரும்...?

அப்துல்மாலிக் said...

எனக்கான ஒரு தேவதை

ஆமாம் இருக்கட்டும் எப்போதுமே அந்த தேவைதை புதியவனுக்குதான்

அப்துல்மாலிக் said...

//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்//

என்ன ஒரு கற்பனை தல‌

அப்துல்மாலிக் said...

//நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...
//

ஆஹா நட்டத்திரத்தில் ஒரு தேவதையா..

அப்துல்மாலிக் said...

//வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்
நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட
கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…
//

கற்பணைக்கு எல்லை இல்லை என்பதை உங்கள் வரிகள் நிரூபிக்கிறது

அப்துல்மாலிக் said...

//அவளின் வெட்கம்
ஒடி ந்து...உ டை ந் த து...
//

ஹா மீண்டும் வெட்கம், அப்போ முத்தம் கண்டிப்பாய் இருக்கும்

அப்துல்மாலிக் said...

//சரியா..? தவறா...?
என்று சிந்திக்கும் முன்பே
ஆர்வமிகுதியில்
முடிந்தும் முடியாமல் போன
முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது
//

ஹா என்னா அவசரமையா அதுக்கு.. ஆமாம் தாமதமெல்லாம் தெரியாதுதான்

அப்துல்மாலிக் said...

//உதடுகள் உரசிக் கொண்டதில்
உதிரத்தொடங்கி இருந்தது
அவளின் தேவதைக் காண
அடையாளச் சிறகுகள்
காதலிப்பதற்கு எதற்கு சிறகுகள் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே
என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...
//

முத்தத்தின் பின் விளைவு இதுதானோ

அப்துல்மாலிக் said...

//மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?
//

கனவில்தான் கற்பனை மிகுதியோ

வாழ்த்துக்கள் புதியவன்

அருமையான வரிகள்

அப்துல்மாலிக் said...

இது கும்மியடிக்க வேண்டிய பதிவு இல்லே...

ஹி ஹி இருந்தாலும் பழக்க தோசம்

25 போட்டாச்சி

ஆ.ஞானசேகரன் said...

//பறப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்
இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?//
காதல் வேண்டும்
பழகிகொள்ள வேண்டும். அருமை புதியவன்

தமிழ் அமுதன் said...

ரசித்து அனுபவித்தேன்!
மறுபடி கனவு வரும்
அது எங்களுக்கு நல்ல
கவிதை விருந்தாகும்!!

நசரேயன் said...

மறுபடியும் கனவு வரும்

*இயற்கை ராஜி* said...

..தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்//

மிக அருமை

ஆதவா said...

வந்துட்டேன்..

ஆதவா said...

ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்


ஆரம்பமே அசத்தல்...

ஆதவா said...

வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்

தேவதைக்கான விவரிப்பு அருமை...

சிறகு முளைக்கும் ஒரு பிரமை போன்ற தோற்றம்.. அல்லது கவிதை. இல்லைய.... அப்படியெனில் ஒரு உணர்வு.. அழகான கற்பனைக் குவியலோடு ஒரு நல்ல கவிதை. ஒரு சில வரிகளில் சிலாகித்தேன்.

முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது

கலக்கல்..... இந்த வரிகள்.

தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?

வரவேண்டும்.... எனக்கும்....

வாழ்த்துகள் புதியவரே!

Divyapriya said...

கலக்கல் வரிகள்!!!

RAMYA said...

//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...
//

தேவதை பார்க்கவே வெளிச்சமாத்தான் தெரியறாங்க.

அழகு அழகு கொள்ளை அழகு

RAMYA said...

//
வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்
நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட
கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…
//

அருமையான எழுத்து நடை

கடல் அலை எண்ண அலை
இரண்டுக்கும் ஆழம் தெரியாது புதியவன்.

கண்டு பிடிக்கவும் முடியாது
அருமையோ அருமை !!

RAMYA said...

//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...
//

வானவீதியிலே ஒரு தேவதை உலா
தேவதையின் விழிகளிலே யார்?

புதியவன் தான் வேறு யார்??

RAMYA said...

//பறப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்
இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?
//

ம்ம்ம். வரும் அந்த தேவதை மறுபடியும் கனவில் வந்து உங்களை மற்றும் ஒரு கவிதை எழுத சொல்லும்.

Natchathraa said...

படம் ரொம்ப அழகாயிருக்கு புதியவன்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களுக்கான தேவதை

என் மனதையும் கொள்ளையடிக்கிறாள்

anujanya said...

நல்லா இருக்கு புதியவன்.

அனுஜன்யா

gayathri said...

உதடுகள் உரசிக் கொண்டதில்
உதிரத்தொடங்கி இருந்தது
அவளின் தேவதைக் காண
அடையாளச் சிறகுகள்

supper pa

குடுகுடுப்பை said...

மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?

அதுக்குதானே வெயிட்டிங்

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
எனக்கும் தான்

எனக்கும் தான் ...//

வாங்க ஜமால்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...\\

மிக அழகு

மில்கி வே!//

ம்ம்ம்.மில்கி வே அழகு தான்..

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…


அருமை//

ரசிப்பிற்கு நன்றி...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்
விழிகள் நாணேற்றியதில்
அவளின் வெட்கம்
ஒடி ந்து...உ டை ந் த து...\\


இருங்க இதனையே இரசிக்க சில மணி நேரம் தேவைபடுகிறது

மிச்சம் பிறகு ...//

ம்ம்ம்.பொறுமையா வாங்க...நன்றி ஜமால்...

புதியவன் said...

//Muthusamy said...
நல்ல கனவு (கற்பனை)//

நன்றி முத்து சாமி...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...//

ஆஹா..பிரபஞ்சங்களைக் கடந்த ஒரு காதலியா..//

வாங்க செய்யது...இவள் பால்வெளி கடந்த ஒரு காதலி...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
அழகு :)))//

நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//Natchathraa said...
//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை....//

//அட நானிருக்கனே இந்த கவிதையில்...:-))//

அட...ஆமால்ல...

//ஹ்ம்ம் தேவதையை பார்த்தாச்சா புதியவன்...//

ம்ம்ம்...பார்த்த மாதிரித்தான் இருக்கு...

//நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…//

//ஹ்ம்ம்ம் ரொம்ப உறுதியாத்தான் கட்டப்பட்டிருக்கு...//

ஆமாம்...ரொம்ப ரொம்ப உறுதியா...

//தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்//

//இப்படி தொலைதல்தான் காதலுக்கு அழகு...//

ம்ம்ம்...ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க...

//சரியா..? தவறா...?
என்று சிந்திக்கும் முன்பே
ஆர்வமிகுதியில்
முடிந்தும் முடியாமல் போன
முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது//

//முத்தக்கவிஞர் வந்தாச்சு... ;-)//

எங்கே...?

//என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...//

//காதல் சிறகு இப்போதான் முளைக்கிறதா புதியவன்?? :)//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்...

//இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?//

//ஹம்ம்ம் அழகான கனவு... கனவு மெய்ப்பட வாழ்த்துகள்....//

வருகைக்கும்...விரிவான...குறும்பான கருத்துக்களுக்கும்...வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி நட்சத்திரா...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...//


புதியவனுக்கே உரிய டச்.....//

என்னுடய எழுத்துக்களை உற்று கவனிக்கிறீர்கள் என்று தெரிகிறது...மகிழ்ச்சி செய்யது...

புதியவன் said...

//ஹேமா said...
ஓ...புதியவன்,தேவதை வந்தாச்சா!உங்களுக்கும் சிறகு கொடுத்துக் கூட்டிட்டுப் போக!
அப்புறம் எங்களுக்கு...புதியவன்!//

வாங்க ஹேமா

நான் எங்கேயும் போகப் போறதில்ல...வேணும்னா தேவதைய இங்க கூட்டிட்டு வந்திடலாம்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?
//

வழக்கம் போல கவிதையின் கடைசியில் ஒரு டிவிஸ்ட்...

அசத்தல் புதியவன்...//

மிக்க நன்றி செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது//

ரசித்தேன் ...இந்த வரிகளை...//

நீங்கள் இந்த வரிகளை ரசிப்பீர்கள் என்று நான் நினத்தேன்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
இதுவும் யூத்ஃபுல் விகடனில் வரும் என நினைக்கிறேன்.//

வந்தால் மகிழ்ச்சியே...நன்றி செய்யது...

புதியவன் said...

//ஹேமா said...
//தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்//

//சரி...இப்போ மனசோடதான் இருக்கீங்களா...இல்லையா?//

ம்ம்ம்...சரியா தெரியவில்லை...

//என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...//

//சிறகு முளைச்சுதா...இல்ல கனவு முடிய சிறகும் முறிஞ்சுபோச்சா?பறந்து போயிடுவீங்களா புதியவன்!//

கற்பனைச் சிறகு இன்னும் அப்படியே தான் இருக்கு...ஆமா, பறந்து போகத்தான் இந்த தேவதை...காதல்...கனவு..எல்லாம்...

//இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?//

//எப்பிடி உங்களுக்கு மட்டும் இப்பிடிக் கனவெல்லாம் வருது!எனக்கு வரமாட்டேங்குதே(கனவில ஒரு தேவன்!)//

தேவன்...?...ஓஓஓ...அவரா...?...கொஞ்சம் பிஸியா இருக்கிறதா கேள்வி...விரைவில் வருவார்...

//மொத்தத்தில் கனவோடு கவிதை புதியவனின் கைவண்ணத்தில் அருமை.//

அழகான குறும்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஹேமா...

புதியவன் said...

//தமிழன்-கறுப்பி... said...
கனவெல்லாம் ஒரு மார்க்கமாத்தான் கிடக்கு...பத்திரம் தம்பி.. :)//

வாங்க தமிழன்

தேவதை கனவுன்னா அப்படித்தானே...இது உங்களுக்கு தெரியாததா...?

புதியவன் said...

//தமிழன்-கறுப்பி... said...
அப்ப அடுத்த கனவு எப்ப வரும்...?//

விரைவில் வரும் என்று நினைக்கிறேன்...நன்றி தமிழன்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
எனக்கான ஒரு தேவதை

ஆமாம் இருக்கட்டும் எப்போதுமே அந்த தேவைதை புதியவனுக்குதான்//

வாங்க அபுஅஃப்ஸர்

வரும் போதே நல்ல வார்த்தையோடு வருகிறீர்கள்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்//

என்ன ஒரு கற்பனை தல‌//

ஆமா, ஒளியின் வேகத்தை இப்போதைக்கு கற்பனையில் மட்டும் தான் விஞ்ச முடியும்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...
//

ஆஹா நட்டத்திரத்தில் ஒரு தேவதையா..//

ம்ம்ம்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்
நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட
கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…
//

கற்பணைக்கு எல்லை இல்லை என்பதை உங்கள் வரிகள் நிரூபிக்கிறது//

உண்மை தான் கற்பனைக்கு ஏது எல்லை...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//அவளின் வெட்கம்
ஒடி ந்து...உ டை ந் த து...
//

ஹா மீண்டும் வெட்கம், அப்போ முத்தம் கண்டிப்பாய் இருக்கும்//

அபுஅஃப்ஸர்...உங்கள் யூகம் சரி தான்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//சரியா..? தவறா...?
என்று சிந்திக்கும் முன்பே
ஆர்வமிகுதியில்
முடிந்தும் முடியாமல் போன
முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது
//

ஹா என்னா அவசரமையா அதுக்கு.. ஆமாம் தாமதமெல்லாம் தெரியாதுதான்//

அபுஅஃப்ஸருக்கு ரொம்ப அனுபவமோ...?

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உதடுகள் உரசிக் கொண்டதில்
உதிரத்தொடங்கி இருந்தது
அவளின் தேவதைக் காண
அடையாளச் சிறகுகள்
காதலிப்பதற்கு எதற்கு சிறகுகள் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே
என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...
//

முத்தத்தின் பின் விளைவு இதுதானோ//

ஆமாம்...பின் விளைவு தான்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?
//

கனவில்தான் கற்பனை மிகுதியோ

வாழ்த்துக்கள் புதியவன்

அருமையான வரிகள்//

வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
//பறப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்
இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?//

காதல் வேண்டும்
பழகிகொள்ள வேண்டும். அருமை புதியவன்//

வருகைக்கும் அருமையான தருகைக்கும்...நன்றி திரு ஞானசேகரன்...

புதியவன் said...

//ஜீவன் said...
ரசித்து அனுபவித்தேன்!
மறுபடி கனவு வரும்
அது எங்களுக்கு நல்ல
கவிதை விருந்தாகும்!!//

ஜீவன் அண்ணா உங்களுக்கு இந்தக் கவிதை பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி...நன்றி அண்ணா...

புதியவன் said...

//நசரேயன் said...
மறுபடியும் கனவு வரும்//

கனவு வரட்டும்...நன்றி நசரேயன்...

புதியவன் said...

//Iyarkai said...
..தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்//

மிக அருமை//

மிக்க நன்றி இயற்கை...

புதியவன் said...

//ஆதவா said...
வந்துட்டேன்..//

வாங்க ஆதவன்...

புதியவன் said...

//ஆதவா said...
ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்

ஆரம்பமே அசத்தல்...//

நன்றி ஆதவன்...

புதியவன் said...

//ஆதவா said...
வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்

தேவதைக்கான விவரிப்பு அருமை...

சிறகு முளைக்கும் ஒரு பிரமை போன்ற தோற்றம்.. அல்லது கவிதை. இல்லைய.... அப்படியெனில் ஒரு உணர்வு.. அழகான கற்பனைக் குவியலோடு ஒரு நல்ல கவிதை. ஒரு சில வரிகளில் சிலாகித்தேன்.

முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது

கலக்கல்..... இந்த வரிகள்.

தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?

வரவேண்டும்.... எனக்கும்....

வாழ்த்துகள் புதியவரே! //

உங்கள் ரசிப்பு எனக்குப் பிடித்தமான ஒன்று...அழகான விரிவான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஆதவன்...உங்களுக்கும் தேவதை கனவு வர வாழ்த்துக்கள்...

புதியவன் said...

//Divyapriya said...
கலக்கல் வரிகள்!!!//

மிக்க நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//RAMYA said...
//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...
//

தேவதை பார்க்கவே வெளிச்சமாத்தான் தெரியறாங்க.

அழகு அழகு கொள்ளை அழகு//

வாங்க ரம்யா

உங்கள் வருகையே அழகாகத் தான் இருக்கு...

புதியவன் said...

// RAMYA said...
//
வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்
நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட
கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…
//

அருமையான எழுத்து நடை

கடல் அலை எண்ண அலை
இரண்டுக்கும் ஆழம் தெரியாது புதியவன்.

கண்டு பிடிக்கவும் முடியாது
அருமையோ அருமை !!//

கடல் அலை எண்ண அலை
இரண்டுக்கும் ஆழம் காண முடியாது தான்...

புதியவன் said...

//RAMYA said...
//ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...
//

வானவீதியிலே ஒரு தேவதை உலா
தேவதையின் விழிகளிலே யார்?

புதியவன் தான் வேறு யார்??//

தேவதையின் விழிகளில் நானா...?...இது கூட நல்லா இருக்கே ரம்யா...

புதியவன் said...

//RAMYA said...
//பறப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்
இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?
//

ம்ம்ம். வரும் அந்த தேவதை மறுபடியும் கனவில் வந்து உங்களை மற்றும் ஒரு கவிதை எழுத சொல்லும்.//

ம்ம்ம்...தேவதை வந்தால் கவிதையும் தானே வந்து விடும் என்கிறீர்கள்...விரிவான அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரம்யா...

புதியவன் said...

//Natchathraa said...
படம் ரொம்ப அழகாயிருக்கு புதியவன்...//

படத்தைப் பற்றிக் குறிப்பிட்டது மகிழ்ச்சியளிக்கிறது நன்றி நட்சத்திரா...

புதியவன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்களுக்கான தேவதை

என் மனதையும் கொள்ளையடிக்கிறாள்//

தேவதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...

புதியவன் said...

//அனுஜன்யா said...
நல்லா இருக்கு புதியவன்.

அனுஜன்யா//

வருகைக்கு மிக்க நன்றி அனுஜன்யா...

புதியவன் said...

//gayathri said...
உதடுகள் உரசிக் கொண்டதில்
உதிரத்தொடங்கி இருந்தது
அவளின் தேவதைக் காண
அடையாளச் சிறகுகள்

supper pa//

ரசிப்பிற்கு நன்றி காயத்ரி...

Prabhu said...

தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்
விழிகள் நாணேற்றியதில்
அவளின் வெட்கம்
ஒடி ந்து...உ டை ந் த து.

Enna sindhanai!, ithu varai naan kadandhiraadha oru paritchayam!!.