Friday, February 27, 2009

என்னை கவர்ந்தவர்...எல்லோரையும் கவர்ந்தவர்...!?


என்னை கவர்ந்தவர் என்ற தொடர் பதிவில் என்னை இணைத்த ஜீவன் அண்ணா அவர்களுக்கு என் நன்றிகள்...பிடித்தவர் என்றால் எல்லோரையும் தான் பிடிக்கும். ஆனால், அனைவரையும் பட்டியலிட முடியாதே...அதனால் என்னை மிகவும் கவர்ந்தவர் என்று சொல்வதைவிட நான் பார்த்து அதிசயித்தவர் பலர். அதில் மிக முக்கியமான ஒருவர்...இயற்பெயர் “எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ”

இவரைப் பற்றி சில வரிகள்....

யூகொஸ்லாவியா நாட்டிலிருந்து
புறப்பட்டது ஓர் வெள்ளைப் புறா
கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்
தேசம் தாண்டி உலகுக்கெல்லாம்
அன்பென்ற ஒரே தேசியகீதம் பாடியவர்
பார்வையால் தொடுவதைக் கூட
நம்மில் பலர் அருவருக்கும்
தொழு நோயாளிகளை
தொட்டுத் தூக்கித் துடைத்தெடுத்து
அன்பும் ஆதரவும் காட்டியவர்
1979ம் ஆண்டு வரை சாதனையாளர்களை
பெருமைப் படுத்திக் கொண்டிருந்த
நோபல் பரிசு
இவருக்கு வழங்கப்பட்டதால்
தானும் பெருமைப்பட்டுக் கொண்டது
இவரிடம் ஒரு ஆயுதம் இருந்தது
மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை என்னும் ஆயுதம்
நிதி கேட்டு நீட்டிய கையில்
எச்சில் உமிழ்ந்தவனிடம்
“நீங்கள் அன்போடு அளித்ததை
நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்
இந்த ஆதரவற்றவர்களுக்காக உதவுங்கள்” என்று
மறு கையை மீண்டும் நீட்டியவர்
இவரைப் பிடிக்காது என்று
யாரும் சொல்லிடுவர்
என்று நான் நம்பவில்லை
அன்னையைப் பிடிக்காதவர்
அகிலத்தில் உண்டோ......?
அப்படியெனில்,
அன்னை தெரசாவைப் பிடிக்காதவரும்.........


இந்த தொடர் பதிவின் விதிமுறைப்படி யாராவது இரண்டு பேரை இணைக்க வேண்டுமாம்...எனவே நான் அழைக்க விரும்புவது...

சாரல் – பூர்ணிமா சரண்
என் உயிரே - அபுஅஃப்ஸர்


58 comments:

அ.மு.செய்யது said...

//கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்//

ஆஹா...

அ.மு.செய்யது said...

//நிதி கேட்டு நீட்டிய கையில்
எச்சில் உமிழ்ந்தவனிடம்
“நீங்கள் அன்போடு அளித்ததை
நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்
இந்த ஆதரவற்றவர்களுக்காக உதவுங்கள்” என்று
மறு கையை மீண்டும் நீட்டியவர்
//

நெகிழ வைத்த உருக்கமான நிகழ்வு....அதை கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.

அருமை புதியவன்.

அ.மு.செய்யது said...

//இவரிடம் ஒரு ஆயுதம் இருந்தது
மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை என்னும் ஆயுதம்//

கிடைத்தற்கரிய ஆயுதம்

ஆதவா said...

அன்னைத் தெரசா, யூகோஸ்லாவியா தானே??? (ஒருவேளை யூகோஸ், பிரியறதுக்கு முன்ன பிறந்தாரா?)

கருணை உள்ளம் கொண்ட ஒரு மாமனிதரை நினைவுபடுத்தினீங்க... எனக்குத் தெரிஞ்சு, அவர்தான் மனிதகுலத்தின் இறுதியாக இருந்த பெண் கடவுள்.. அதற்குப் பிறகு யாரும் வந்தாங்களான்னு தெரியலை...

நான் இருந்த காலத்தில் அவர் இருந்தார்... இது பெருமை.

நான் அவரை சந்திக்க நினைத்திருந்தேன்... ஆனால் நான் சிறுவனாக இருந்தபோதே இறந்துவிட்டார்... இது வருத்தம்...

வாழ்த்தும் நன்றியும் புதியவன்....

ஆ.ஞானசேகரன் said...

மனம் நெகிழ்ந்தது புதியவன்....பாராட்டுகள்

Anonymous said...

:)

Poornima Saravana kumar said...

//தேசம் தாண்டி உலகுக்கெல்லாம்
அன்பென்ற ஒரே தேசியகீதம் பாடியவர்
//

சரியா சொன்னீங்க புதியவன்!

அ.மு.செய்யது said...

புதியவன்,

நீங்கள் அல்பேனியா என்று குறிப்பிட்டதில் தவறொன்றுமில்லை.காரணம் அல்பேனியா, யூகொஸ்லாவியா வசமிருந்து விடுதலை பெற்ற நாடு தான்.சொல்லப் போனால்
அன்னை தெரசா பிறந்த இடத்தை சரியாக சொல்ல வேண்டுமானால் அது Republic of Macedonia.

( தற்போது யூகொஸ்லாவியா என்ற ஒரு நாடு மேப்பிலேயே இல்லை என்பது வேறு விஷயம் )

மாசிடோனியா நான்கு நாடுக‌ளால் சூழ‌ப்ப‌ட்ட‌ ஒரு நாடு ( அந்த‌ 4ல் அல்பேனியாவும் ஒன்று )

ஆனால் அன்னையின் அதிகாரப்பூர்வ தேசிய அடையாளம் 'அல்பேனியம்' என்பது தான்.

இப்படிக்கு,
கருத்து கந்த சாமி.

அ.மு.செய்யது said...

எந்த நாட்டில் பிறந்திருப்பினும் அவர் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தம்.

அ.மு.செய்யது said...

எங்க ஸ்கூல் சர்ச்சுக்கு அவங்க தான் திறப்பு விழா பண்ண வந்தாங்க..

நான் நேர்ல பாத்துர்கேன்.

தமிழ் அமுதன் said...

///யூகொஸ்லாவியா நாட்டிலிருந்து
புறப்பட்டது ஓர் வெள்ளைப் புறா
கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்///

அருமை....அருமை ..புதியவன்!!!

அப்துல்மாலிக் said...

நம்மளையும் மாட்டிவிட்டு விட்டீரா, இரண்டாவது நபரின் பிடியில் நான் இப்போது

அப்துல்மாலிக் said...

//இயற்பெயர் “எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ”
/

இவரைப்பற்றி விளக்கமாக எடுத்துரைத்ததுக்கு நன்றி

அப்துல்மாலிக் said...

என்னை கவர்ந்தவரில் உங்களை சந்திக்கிறேன் விரைவில்

நசரேயன் said...

//எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ//

பேரு வாயிலே நுழைய நாலு நாள் ஆகும் போலே, புது வீட்டுக்கு போய் இருக்கீங்க??

புதியவன் said...

// அ.மு.செய்யது said...
//கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்//

ஆஹா...
//

வாங்க செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//நிதி கேட்டு நீட்டிய கையில்
எச்சில் உமிழ்ந்தவனிடம்
“நீங்கள் அன்போடு அளித்ததை
நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்
இந்த ஆதரவற்றவர்களுக்காக உதவுங்கள்” என்று
மறு கையை மீண்டும் நீட்டியவர்
//

நெகிழ வைத்த உருக்கமான நிகழ்வு....அதை கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.

அருமை புதியவன்.
//

உண்மை தான் இந்த நிகழ்வைக் கேள்விப்பட்டதும் நெகிழந்தான் செய்தேன்...

புதியவன் said...

// அ.மு.செய்யது said...
//இவரிடம் ஒரு ஆயுதம் இருந்தது
மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை என்னும் ஆயுதம்//

கிடைத்தற்கரிய ஆயுதம்
//

அன்னையின் இந்த சகிப்புத்தன்மையே உலகின் இதயத்தையெல்லாம் வென்ற ஆயுதம்...

புதியவன் said...

//ஆதவா said...
அன்னைத் தெரசா, யூகோஸ்லாவியா தானே??? (ஒருவேளை யூகோஸ், பிரியறதுக்கு முன்ன பிறந்தாரா?)

கருணை உள்ளம் கொண்ட ஒரு மாமனிதரை நினைவுபடுத்தினீங்க... எனக்குத் தெரிஞ்சு, அவர்தான் மனிதகுலத்தின் இறுதியாக இருந்த பெண் கடவுள்.. அதற்குப் பிறகு யாரும் வந்தாங்களான்னு தெரியலை...

நான் இருந்த காலத்தில் அவர் இருந்தார்... இது பெருமை.

நான் அவரை சந்திக்க நினைத்திருந்தேன்... ஆனால் நான் சிறுவனாக இருந்தபோதே இறந்துவிட்டார்... இது வருத்தம்...

வாழ்த்தும் நன்றியும் புதியவன்....
//

அன்னை பிறந்தது மாசிடேனியக் குடியரசில் இது மேற்கு அல்பேனியாவையும் சேர்த்து நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு குடியரசாக இருந்தது...இப்போது அவையெல்லாம் பிரிந்துவிட்டன...குழப்பம் வேண்டாம் என்பதற்காக யூகோஸ்லாவியா என்றே எழுதிவிட்டேன்...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஆதவன்...

புதியவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
மனம் நெகிழ்ந்தது புதியவன்....பாராட்டுகள்
//

மிக்க நன்றி திரு.ஆ.ஞானசேகரன்...

புதியவன் said...

//Thooya said...
:)
//

நன்றி தூயா...

புதியவன் said...

// Poornima Saravana kumar said...
//தேசம் தாண்டி உலகுக்கெல்லாம்
அன்பென்ற ஒரே தேசியகீதம் பாடியவர்
//

சரியா சொன்னீங்க புதியவன்!
//

நன்றி பூர்ணிமா சரண்...உங்களையும் இந்தத் தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன்...

புதியவன் said...

// அ.மு.செய்யது said...
புதியவன்,

நீங்கள் அல்பேனியா என்று குறிப்பிட்டதில் தவறொன்றுமில்லை.காரணம் அல்பேனியா, யூகொஸ்லாவியா வசமிருந்து விடுதலை பெற்ற நாடு தான்.சொல்லப் போனால்
அன்னை தெரசா பிறந்த இடத்தை சரியாக சொல்ல வேண்டுமானால் அது Republic of Macedonia.

( தற்போது யூகொஸ்லாவியா என்ற ஒரு நாடு மேப்பிலேயே இல்லை என்பது வேறு விஷயம் )

மாசிடோனியா நான்கு நாடுக‌ளால் சூழ‌ப்ப‌ட்ட‌ ஒரு நாடு ( அந்த‌ 4ல் அல்பேனியாவும் ஒன்று )

ஆனால் அன்னையின் அதிகாரப்பூர்வ தேசிய அடையாளம் 'அல்பேனியம்' என்பது தான்.

இப்படிக்கு,
கருத்து கந்த சாமி.
//

விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி செய்யது...குழப்பம் வேண்டாம் என்பதற்காக யூகோஸ்லாவியா என்றே எழுதிவிட்டேன்...ஆமாம், யாரது கருத்து கந்தசாமி...?

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
எந்த நாட்டில் பிறந்திருப்பினும் அவர் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தம்.
//

மிகச்சரி அன்னை நம் அனைவர் உள்ளத்திற்கும் சொந்தக்காரர் தான்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
எங்க ஸ்கூல் சர்ச்சுக்கு அவங்க தான் திறப்பு விழா பண்ண வந்தாங்க..

நான் நேர்ல பாத்துர்கேன்.
//

ஆஹா...உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா...மகிழ்ச்சி...உங்கள் விரிவான தெளிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி செய்யது...

புதியவன் said...

//ஜீவன் said...
///யூகொஸ்லாவியா நாட்டிலிருந்து
புறப்பட்டது ஓர் வெள்ளைப் புறா
கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்///

அருமை....அருமை ..புதியவன்!!!
//

மிக்க நன்றி ஜீவன் அண்ணா...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
நம்மளையும் மாட்டிவிட்டு விட்டீரா, இரண்டாவது நபரின் பிடியில் நான் இப்போது
//

நம்ம நட்புடன் ஜமாலைத்தான் இணைக்கலாம் என்றிருந்தேன் அவரை ஏற்கனவே இரண்டு பேர் இணைத்து விட்டார்கள்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//இயற்பெயர் “எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ”
/

இவரைப்பற்றி விளக்கமாக எடுத்துரைத்ததுக்கு நன்றி
//

நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
என்னை கவர்ந்தவரில் உங்களை சந்திக்கிறேன் விரைவில்
//

சந்திப்போம் அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//நசரேயன் said...
//எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ//

பேரு வாயிலே நுழைய நாலு நாள் ஆகும் போலே, புது வீட்டுக்கு போய் இருக்கீங்க??
//

புது வீடா...?ம்ம்ம்...புரிந்தது...நன்றி நசரேயன்...

Natchathraa said...

//"என்னை கவர்ந்தவர்...எல்லோரையும் கவர்ந்தவர்...!?"//

மிகச்சரியா சொன்னீங்க புதியவன்...
எனக்கும் மிகவும் பிடிக்கும்...

//இயற்பெயர் “எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ"//

இந்த அன்னையின் மேல் உள்ள ஈர்ப்பால் என் சித்தி மகளுக்கு "ஆக்னஸ்" என்ற பெயர்தான் வைக்கணும்னு அடம் பிடிச்சு வச்சுட்டேன்... :)

அன்னையினைப்போல் இன்னொரு பிறப்பு சாத்தியமேயில்லை...அவருக்கு நிகர் அவர் மட்டுமே...

அன்னையின் போதனைகள் பல எனக்கு வாழ்வின் எடுத்துக்காட்டுகளாய் அமைந்திருக்கிறது...

//நிதி கேட்டு நீட்டிய கையில்
எச்சில் உமிழ்ந்தவனிடம்
“நீங்கள் அன்போடு அளித்ததை
நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்
இந்த ஆதரவற்றவர்களுக்காக உதவுங்கள்” என்று
மறு கையை மீண்டும் நீட்டியவர்//

She is such a lovable sweet heart....

நான் மிகவும் அதிகமாக விரும்பும் ஒருவரைப்பற்றி கவிதையாக பதிவிட்டமைக்கு நன்றி புதியவன்...

வியா (Viyaa) said...

அருமை புதியவன்.

நட்புடன் ஜமால் said...

தலைப்பு அருமை.

நட்புடன் ஜமால் said...

அன்னை தெரசா தான் நானும் எழுத நினைத்திருந்தேன் ...

ஆனால் இவ்வளவு அழகா ...

கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்

நட்புடன் ஜமால் said...

\\“நீங்கள் அன்போடு அளித்ததை
நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்
இந்த ஆதரவற்றவர்களுக்காக உதவுங்கள்” என்று
மறு கையை மீண்டும் நீட்டியவர்\\

மிகவும் இரசனையோடு சொல்லியிருக்கீங்க புதியவரே ...

வேத்தியன் said...

அருமை...
ரொம்ப நல்ல செலக்ஷன்...
அப்பிடியே நம்ம பக்கத்துக்கு வந்து இதயும் பாருங்களேன்...

http://jsprasu.blogspot.com/2009/02/blog-post_21.html

Rajalakshmi Pakkirisamy said...

nice

தேவன் மாயம் said...

உலகின் தாய்!!!

தேவன் மாயம் said...

தேசம் தாண்டி உலகுக்கெல்லாம்
அன்பென்ற ஒரே தேசியகீதம் பாடியவர்///
அருமை!!!

தேவன் மாயம் said...

பார்வையால் தொடுவதைக் கூட
நம்மில் பலர் அருவருக்கும்
தொழு நோயாளிகளை
தொட்டுத் தூக்கித் துடைத்தெடுத்து
அன்பும் ஆதரவும் காட்டியவர்//

இன்றைக்கும் அவரை விஞ்சவில்லை எவரும்!!

தேவன் மாயம் said...

1979ம் ஆண்டு வரை சாதனையாளர்களை
பெருமைப் படுத்திக் கொண்டிருந்த
நோபல் பரிசு
இவருக்கு வழங்கப்பட்டதால்
தானும் பெருமைப்பட்டுக் கொண்டது//

நொபெல் அம்மா பக்கத்தில்கூட வரமுடியாது!!!

புதியவன் said...

//Natchathraa said...

நான் மிகவும் அதிகமாக விரும்பும் ஒருவரைப்பற்றி கவிதையாக பதிவிட்டமைக்கு நன்றி புதியவன்...//

வருகைக்கும் விரிவான தருகைக்கும் மிக்க நன்றி நட்சத்திரா...

புதியவன் said...

//(Viyaa) said...
அருமை புதியவன்.//

நன்றி வியா...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
தலைப்பு அருமை.//

வாங்க ஜமால்...

புதியவன் said...

// நட்புடன் ஜமால் said...
அன்னை தெரசா தான் நானும் எழுத நினைத்திருந்தேன் ...

ஆனால் இவ்வளவு அழகா ...//

அன்னையைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே இருக்கலாமே...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\“நீங்கள் அன்போடு அளித்ததை
நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்
இந்த ஆதரவற்றவர்களுக்காக உதவுங்கள்” என்று
மறு கையை மீண்டும் நீட்டியவர்\\

மிகவும் இரசனையோடு சொல்லியிருக்கீங்க புதியவரே ...//

மிக்க நன்றி ஜமால்...

புதியவன் said...

//வேத்தியன் said...
அருமை...
ரொம்ப நல்ல செலக்ஷன்...
அப்பிடியே நம்ம பக்கத்துக்கு வந்து இதயும் பாருங்களேன்...

http://jsprasu.blogspot.com/2009/02/blog-post_21.html//

நிச்சயம் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன் வேத்தியன்...நன்றி...

புதியவன் said...

// இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
nice//

நன்றி இராஜலெட்சுமி பக்கிரிசாமி...

புதியவன் said...

//thevanmayam said...
உலகின் தாய்!!!//

வாங்க தேவா...

புதியவன் said...

//thevanmayam said...
தேசம் தாண்டி உலகுக்கெல்லாம்
அன்பென்ற ஒரே தேசியகீதம் பாடியவர்///
அருமை!!!//

உண்மை தானே தேவா...?

புதியவன் said...

//thevanmayam said...
பார்வையால் தொடுவதைக் கூட
நம்மில் பலர் அருவருக்கும்
தொழு நோயாளிகளை
தொட்டுத் தூக்கித் துடைத்தெடுத்து
அன்பும் ஆதரவும் காட்டியவர்//

இன்றைக்கும் அவரை விஞ்சவில்லை எவரும்!!//

அன்னைக்கு நிகர் அன்னையே...

புதியவன் said...

//thevanmayam said...
1979ம் ஆண்டு வரை சாதனையாளர்களை
பெருமைப் படுத்திக் கொண்டிருந்த
நோபல் பரிசு
இவருக்கு வழங்கப்பட்டதால்
தானும் பெருமைப்பட்டுக் கொண்டது//

நொபெல் அம்மா பக்கத்தில்கூட வரமுடியாது!!!//

உண்மை தான்... நன்றி தேவா...

RAMYA said...

//கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்
//

சூப்பர் புதியவன் என்னோட inspiration இவங்கதான்
அவர்கள் ஒரு கடல், அதில் ஒரு பெருங்காயமாக இருக்கத்தான் எனக்கு ஆசை புதியவன்!!!

RAMYA said...

மற்றவர்களுக்கு உதவுவதற்காக கை நீட்டவும் தயங்காத தெய்வம்!!!

RAMYA said...

எதையும் பார்த்து அருவருப்படையாத
இவர்களின் சகிப்புத்தன்மை எனக்கு
மிகவும் பிடித்த ஒன்று புதியவன்.

புதியவன் said...

//RAMYA said...
//கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்
//

சூப்பர் புதியவன் என்னோட inspiration இவங்கதான்
அவர்கள் ஒரு கடல், அதில் ஒரு பெருங்காயமாக இருக்கத்தான் எனக்கு ஆசை புதியவன்!!!//

வாங்க ரம்யா

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அன்னை ஒரு அன்புக் கடல் தான்...

புதியவன் said...

//RAMYA said...
மற்றவர்களுக்கு உதவுவதற்காக கை நீட்டவும் தயங்காத தெய்வம்!!!//

சகிப்புத்தன்மையில் அவரைப் போன்ற ஒரு வரை பார்ப்பது மிகவும் அரிது...

புதியவன் said...

//RAMYA said...
எதையும் பார்த்து அருவருப்படையாத
இவர்களின் சகிப்புத்தன்மை எனக்கு
மிகவும் பிடித்த ஒன்று புதியவன்.//

அன்னையின் சகிப்புத்தன்மை எனக்கும் மிகவும் பிடிக்கும்...வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரம்யா...