Friday, March 27, 2009

காதலுக்கு கொள்(கை)ளை அழகு...


தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்

துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...

காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்
தொட்டுக்கொள்வதில்லை
கட்டிக்கொள்வதுமில்லை
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை

நம் காதலில்
எனக்கிருந்த சில எதிர் பார்ப்புகளை
எதிர்கால ஆசைகளின்
சேமிப்பு வங்கியில்
பாதுகாத்து வைத்துவிட்டேன்
என்ன செய்வது....?
இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...

அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது

எத்தனையோ முறை
உன் கண்களைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே

காலம் காதலில் கரைந்து
இடைவெளி கொஞ்சமாய் குறைந்து
விதி முறைகள் மெல்லத் தளர்ந்ததில்

இப்போது...
நம் மூச்சுக் காற்றில்
முட்டி மோதிய உயிர்க் காற்று
மீண்டும் மீண்டும் முயன்று
முடியாமல் தோல்வியுற்று
அருகிலிருந்த மரத்தின்
இலைகளில் அமர்ந்து
களைத்துப் போய்
இளைப்பாறத் தொடங்கியது

இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...

விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............


168 comments:

நட்புடன் ஜமால் said...

மீறுதலே கொள்கை!

அழகுங்க ...

நட்புடன் ஜமால் said...

\\தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்\\

உங்க பக்கத்துல இருந்துமா!

நட்புடன் ஜமால் said...

\\உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு\\

அழகு ...

நட்புடன் ஜமால் said...

\\’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை\\

அப்பாடா

இந்த வார்த்தை பார்க்காமல்

தூக்கமே போச்சுப்பா

நட்புடன் ஜமால் said...

\\இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...\\


ஆஹா! ஆஹா!

வார்த்தை ஜாலங்கள் புரிந்து

இதயத்தில் கோலங்கள் வரையசெய்கின்றன

நட்புடன் ஜமால் said...

\காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது
\\

வெர்கம் அழகான அனிகலன்.

நட்புடன் ஜமால் said...

\\காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே\\

இதய வாசல் திறந்து
மின்னலாய் நீ உள்ளே நுழைந்தது
கண்கள் வழி
வெளிச்சமாய்
மின்னலாய்

நட்புடன் ஜமால் said...

\\விதி முறைகள் மெல்லத் தளர்ந்ததில்\\


ஹா ஹா

இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்லலை

மற்றவர்களுக்கு வழி விட்டு

ஒதுங்கி நிற்கிறேன் ...

ஆதவா said...

வந்தோமய்யா வந்தோம்....

rose said...

உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...


சொல்ல வார்த்தை இல்லை

rose said...

எத்தனையோ முறை
உன் கண்களைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே

ஏன்னா மொத்தமா எதிர் காலம் இருல போகுதே

Natchathraa said...

//தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்//

வழக்கம்போலவே அசத்தலான ஆரம்பம்... உங்க கற்பனைக்கு எல்லையே இல்லையா... வித்தியாசமான பார்வை உங்களோடது புதியவன்...

//துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்//

மறுபடியும் வித்தியாசமான ஒப்பீடு...

//உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...//

ரொம்ப சரி..ரொம்ப கஷ்ட படுத்திட்டாங்களோ...

//காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்//

விதிமுறைகள் இல்லா காதல் உண்டா...ஆரம்பத்துல எல்லாம் அப்படிதானே.. போக போக தளரும்...


//’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை//

முத்தக்கவி வித்தகருக்கே தடையா...
நோ இதெல்லாம் ஒத்துக்கமுடியாது...
அப்படித்தானே புதியவன்...

//இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...//

அழகான வரிகள்...

//காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது//

ஆமா ஆமா... அதுதானே கவர்ந்திழுக்கும் மந்திரம்....

//இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே//

காதலுக்கு அத்தனை சக்தி புதியவன்...

//இடைவெளி கொஞ்சமாய் குறைந்து
விதி முறைகள் மெல்லத் தளர்ந்ததில்//

தளர்ந்தாச்சா... இனி புதியவனுக்கு கொண்டாட்டம் தானே...

//இப்போது...
நம் மூச்சுக் காற்றில்
முட்டி மோதிய உயிர்க் காற்று
மீண்டும் மீண்டும் முயன்று
முடியாமல் தோல்வியுற்று
அருகிலிருந்த மரத்தின்
இலைகளில் அமர்ந்து
களைத்துப் போய்
இளைப்பாறத் தொடங்கியது//

எக்சலண்ட்.......

//இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...//

வரிகளிலேயே சொர்க்கம் தெரிகிறதே...ஹம்ம்ம்.....

//கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

ஹம்ம்ம்ம் அது சரி...

வழக்கம்போல ரொமாண்டிக் கவிதை...

கவிதைகளும் அருமை.. பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதிலளிப்பதும் அருமை...

என்ன மாதிரி கவிதை புரியாத தத்துப்பித்துக்கு பொறுமையா பதில் தரதும் அருமை.....

வாழ்த்துகள் புதியவன் மென்மேலும் பல படைப்புகள் தர....

rose said...

கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............


sssssssssssssssss

ஆதவா said...

அட,, அதுக்குள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

ஆரம்பமே அசத்தல் (இந்த வார்த்தை சலித்துவிட்டது...)

தொடக்கமே பிரமாதம் (எப்படி?)

தொட்டுக் கொண்டிருக்கும் வானம் என்பதே மிகச்சரியான சொற்பிரயோகம். வானம் என்பதற்கு எல்லை இல்லை. அது ஏதோ ஒன்றைத் தொடுவதற்காக விரிந்து கொண்டிருக்கிறது. ஆக, சரியான பதம் தான்.

மேகத்தை அலையாக்கி படகோட்டுகிறீர்கள். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.

எது சுலபம்?? தவமிருப்பதா காத்திருப்பதா.... அபாரம் புதியவன்.

அடுத்து, அந்த விதிமுறைகள்... இந்தியப் பெண்ணுக்குரிய கலாச்சார கட்டுப்பாடுகள்.. சிலதுகள் தறிகெட்டு கூடலுக்குள் திரிவதுமுண்டு! இங்கே கலாச்சார விதிமுறைகளோடு காதல் பயணிக்கிறது.

வெட்கமும் ஆடைதானே... பெண்களுக்கு.... அருமை புதியவன்.

///முட்டி மோதிய உயிர்க் காற்று////

முட்டு என்றாலும் மோது என்றாலும் ஒன்றுதானே. இங்கேயும் அபார சிந்தனை!! கவிதையில் எழுத்துக்கள் சிந்தணை (சிந்தி அணைக்கிறது)

-----------
முத்தம் என்பது காதலின் உச்ச அடையாளம், அன்பு பகிர்தலில் முத்தத்தைக் காட்டிலும் வேறெந்த அடையாளமும் இருப்பதாகத் தெரியவில்லை. காதலின் உன்னதம் முத்த எச்சிலில் அடங்கியிருக்கிறது. முத்தங்கள் வெறும் வரட்டு காமங்களாக இல்லாமல் பொங்கி நுரைந்து வழியும் காதலின் சின்னமாகக் குத்தப்படவேண்டும்.

இந்திய கலாச்சார பண்பாட்டு விதிமுறைகளுக்குள் முத்தம் அடங்கியிருக்கிறது.... பின்னர் (மணத்திற்குப் பின்), மொத்தமும் அடங்கியிருக்கிறது!

வாழ்த்துக்கள் புதியவன்.

அ.மு.செய்யது said...

நிச்சயமாக..காதலுக்கு சில விதிமுறைகள் இருக்க வேண்டும்.

விதிமுறைகள் இருந்தால் தானே மீற முடியும்.

மீறினால் தானே ஊடல்..ஊடலில்லையேல் ஏது சுவாரஸியம் ??

அ.மு.செய்யது said...

//தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்//

அழகு புதியவன்.


தொடாதே என்று சொன்னால் "தொடு" என்று பொருள்.

இதை உம்மால் புரிந்து கொள்ள முடியாதா ?

அ.மு.செய்யது said...

//துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...//

க‌டின‌ம் தான்..ஆனால் ப‌திலுக்காக‌ காத்திருப்ப‌தில் ஒரு இன‌ம்புரியாத‌ சுக‌ம்.

ப‌ட‌ப‌ட‌ப்பு..த‌விப்பு..உணர்த்திய‌ வித‌ம் அருமை புதிய‌வ‌ன் !!!

அ.மு.செய்யது said...

//’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை//

பேச்சுக்கு இட‌மில்லை..ஆனால் செய‌ல்ப‌டுத்துவ‌த‌ற்கு இட‌மா இல்லை ?

அ.மு.செய்யது said...

//இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...//

அச‌த்த‌ல்.

அ.மு.செய்யது said...

வ‌ழ‌க்க‌ம் போல‌ எதிர்பார்ப்புக‌ளை பொய்யாக்காம‌ல்

எழுதியிருக்கிறீர்க‌ள் புதிய‌வ‌ன்.

ந‌ன்றி !!!!!!

குடந்தை அன்புமணி said...

வார்த்தை ஜாலங்களில் வழிந்துகிடக்கிறது.... உங்கள் காதல்....

குடந்தை அன்புமணி said...

ஊடல்பொழுதுகளை கண்டீரோ நீங்கள்? வாருங்கள்... நம்ம கடைக்கு!

ரியாலியா said...

kathalukku\kollai\alagu\puthiyavaree\varikallo\manathai\kollaikonduvittathu''''''''''''''''''''''''''

Divyapriya said...

அழகோ அழகு :))

வால்பையன் said...

//காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது/

இதெல்லாம் நம்ப்வே முடியல!

அப்புறம், கவிதை மட்டும் தான் எழுதுறதுன்னு எதாவது கொள்கையா?

RAMYA said...

"காதலுக்கு கொள்(கை)ளை அழகு..."

தலைப்பே அழகை அள்ளிகிட்டு போகுதே !!

RAMYA said...

//
தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்
//

நல்ல ரசனை உங்களுக்கு.

ரசனை என்று எடுத்துக் கொண்டால் அது ரசனை மட்டுமே.

ஏக்கம் என்று எடுத்துக் கொண்டால் அங்கே காதல் மட்டுமே.

என்ன புதியவன் சரிதானே ??

RAMYA said...

//
துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...
//

ஒப்பிட்டு பார்க்கும் விதமே ஒரு தனி அழகைக் கொடுக்கின்றது.

அழகு அழகு !!

RAMYA said...

//
காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்
தொட்டுக்கொள்வதில்லை
கட்டிக்கொள்வதுமில்லை
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை
//

அருமையான விதி முறைகள் தானே??

மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
இப்படி ஒரு காதலி கிடைக்கப் பெற்றவர்கள்!!

RAMYA said...

//
நம் காதலில்
எனக்கிருந்த சில எதிர் பார்ப்புகளை
எதிர்கால ஆசைகளின்
சேமிப்பு வங்கியில்
பாதுகாத்து வைத்துவிட்டேன்
என்ன செய்வது....?
இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...
//

சேமிப்பு வங்கி
================
வார்த்தை அலங்காரங்களால்
எண்ணத்தோரணங்கள் கட்டி
வலம் வர விட்டிருக்கிறீர்கள் புதியவன்,

அருமை அருமையோ அருமை!!

RAMYA said...

//
அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது
//

இருக்கும் இருக்கும் :)

RAMYA said...

//
எத்தனையோ முறை
உன் கண்களைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே
//

என்ன அருமையான உதாரணம் !
மின்மினி பூச்சியின் உதாரணம்
புதியவன் நீங்கள் என்றுமே புதியவன் தான் எங்களுக்கு.

புதிது புதியதாய் எண்ண அலைகள்
உங்கள் வார்த்தைகளில் ரீங்காரமிட்டு ஆர்ப்பரிக்கின்றன ............

RAMYA said...

//
இப்போது...
நம் மூச்சுக் காற்றில்
முட்டி மோதிய உயிர்க் காற்று
மீண்டும் மீண்டும் முயன்று
முடியாமல் தோல்வியுற்று
அருகிலிருந்த மரத்தின்
இலைகளில் அமர்ந்து
களைத்துப் போய்
இளைப்பாறத் தொடங்கியது
//

கலக்கல் எழுத்து நடை !!

RAMYA said...

//
விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............
//

கொள்கைகள் ஜெயிப்பது நல்லா இருக்குமே !!

Unknown said...

//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

வெகு அழகு :)))))))

gayathri said...

’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை\\

enku thenji neraya lovela ippadi thanga irukanga

gayathri said...

விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//
sariya sonnega

அப்துல்மாலிக் said...

மீண்டும் மீண்டும் காதல் வெட்கம் முத்தம் வாழ்த்துக்கள் புதியவன்

அப்துல்மாலிக் said...

//தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்//


சரியான வார்த்தைகளின் ஆரம்பம்

தொடக்கூடிய தூரத்திலிருந்தும் தொடமுடியவில்லை????

அப்துல்மாலிக் said...

//துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...//

கற்பனையாய் சொல்லப்பட்ட மேகத்தில்கூட படகுஓட்டிவிடலாம்.. ஆனால் காதலை சொல்வதில் உள்ள் தயக்கம்...??? ஆகா அருமை புதியவன்

அப்துல்மாலிக் said...

//காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்
தொட்டுக்கொள்வதில்லை
கட்டிக்கொள்வதுமில்லை
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை
//

ஹூம் ஹூம் தமிழ் பெண்ணல்லாவா, புதிய புதிய கட்டளை

அப்துல்மாலிக் said...

//நம் காதலில்
எனக்கிருந்த சில எதிர் பார்ப்புகளை
எதிர்கால ஆசைகளின்
சேமிப்பு வங்கியில்
பாதுகாத்து வைத்துவிட்டேன்
என்ன செய்வது....? //

ஏக்கம்.. நல்ல உவமானம்

அப்துல்மாலிக் said...

//மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே/

காதல் கொண்டவரின் வெளிப்பாடு அழகு

அப்துல்மாலிக் said...

//இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...//

ம்ம்ம் ஹூம்

அப்துல்மாலிக் said...

//கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............

//

விதிமுறை என்பது காதலுக்கு இல்லை புதியவன்

அருமையா சொன்னீங்க‌

ஒவொன்றும் அழகு, கற்பனை திறனை என்னவென்று சொல்லி பாராட்டுவேன்

வாழ்த்த வார்த்தையில்லை

இருந்தாலும் நானும் கூவிக்கிறேன்

வாழ்த்துக்கள் ரொம்ப அருமை

- இரவீ - said...

ஒவொரு வரியும் கவிதையாய் ...

உங்க கவிதையும் கொள்ளை அழகு .

நாமக்கல் சிபி said...

கவிதை கொள்ளை அழகு!

Poornima Saravana kumar said...

காதலுக்கு கொள்(கை)ளை அழகு...
//

உண்மை தான் புதியவரே!!

Poornima Saravana kumar said...

அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
//

ஆஹா!!

Poornima Saravana kumar said...

விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

அழகா சொல்லிட்டீங்க:)

ஹேமா said...

புதியவன் காதல்-முத்தம் உங்கள் கவிதைகளுக்கு ஈடே இல்லை.
ஆதவா அருமையா விமர்சனம் தந்திருக்கிறார்.அவ்வளவு அற்புதம்.
முத்தத்திற்காய் காத்திருக்கும் காதலன்,நாணம் போர்த்தி வரும் காதலி,களைத்து இளைப்பாறும் முத்தம்...

//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு........//

முடித்த விதம் கவிதைக்கு மகுடமாய்.அருமை அருமை அருமை.

sakthi said...

\\தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்\\

superb

sakthi said...

\\இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...\\

appadiya

sakthi said...

topic is so nice

sakthi said...

அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
//

so cute lines

தமிழ் அமுதன் said...

//அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது//

.........super

யாழிபாபா said...

kollai azhagu ungal kavithai

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நசரேயன் said...

காதல் துள்ளி விளையாடுது கவிதையிலே

ஆ.ஞானசேகரன் said...

///தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்///


அய்யோ! கொள்ளை அழகு புதியவன்

S.A. நவாஸுதீன் said...

உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...

அசத்தல் புதியவன்

S.A. நவாஸுதீன் said...

\காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது

இது என்னவோ நிஜம்

S.A. நவாஸுதீன் said...

விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............

கொள்ளை அழகு

*இயற்கை ராஜி* said...

அழகுங்க ...

தேவன் மாயம் said...

துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட.../

சரளமான வரிகள்!!

தேவன் மாயம் said...

காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது///

பிரமாதம்!!!

Anonymous said...

//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

பின்னிட்டிங்க போங்க...
காதலுக்கே என் வாழ்வில் இடம் இல்லைனு சொல்லிகிட்டு இருக்கும் யாரவது இதைப் படித்தால் கொள்கை மாரிடும் கண்டிப்பா....

MaDhi said...

என்ன சொல்லி பாராட்டுறதுன்னு தெரியாம வார்த்தைகளைத் தேடி கொண்டிருக்கிறேன் !!
உங்க கவிதையை படிக்கும் போதெல்லாம் இப்படியெல்லாம் காதலிக்க பசங்க இருக்காங்களான்னு பரீட்சித்து பார்க்க ஆவல் கூடுதுங்க!! காதலிக்கணும்னு ஆசையா கூட இருக்கு :)

Suresh said...

//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

அருமையா எழுதி கவுத்து புடிங்க நண்பா :-) என்ன வரிகள் ஒன்னு ஒன்னு ஒரு வைர மின்னல்கள் :-) தொடர்ந்து எழுதுங்க .. எப்போதும் ஒரு அத்துமிறல் :-) ஒரு அழகு தான்

kuma36 said...

///தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்///

இரசித்தேன்.

Divya said...

வழக்கம்போல் கவிதை அழகோ அழகு!!

\\விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............\\

முடிவு வரிகள்........நச்சுன்னு இருக்கு:))

சூப்பர்ப் கவிதை புதியவன்!!

Anonymous said...

மிக அழகான கவிதை.
பதுமையின் உலகத்துக்கு வந்தமைக்கு நன்றி.

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
மீறுதலே கொள்கை!

அழகுங்க ...//

வாங்க ஜமால்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்\\

உங்க பக்கத்துல இருந்துமா!//

ம்...ஆமாங்க...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு\\

அழகு ...//

ரசிப்பிற்கு நன்றி...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை\\

அப்பாடா

இந்த வார்த்தை பார்க்காமல்

தூக்கமே போச்சுப்பா//

ஹா...ஹா...இப்ப நல்லா தூக்கம் வருமே ஜமால்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...\\


ஆஹா! ஆஹா!

வார்த்தை ஜாலங்கள் புரிந்து

இதயத்தில் கோலங்கள் வரையசெய்கின்றன//

எத்தன புள்ளிக் கோலம்னு சொல்லலையே...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது
\\

வெட்கம் அழகான அணிகலன்.//

உண்மையிலேயே அழகான அணிகலன் தான்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே\\

இதய வாசல் திறந்து
மின்னலாய் நீ உள்ளே நுழைந்தது
கண்கள் வழி
வெளிச்சமாய்
மின்னலாய்//

பின்னூட்டமே கவிதையாய்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\விதி முறைகள் மெல்லத் தளர்ந்ததில்\\


ஹா ஹா

இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்லலை

மற்றவர்களுக்கு வழி விட்டு

ஒதுங்கி நிற்கிறேன் ...//

மிக்க நன்றி ஜமால்...

புதியவன் said...

//ஆதவா said...
வந்தோமய்யா வந்தோம்....//

வாங்க ஆதவன்...

புதியவன் said...

//rose said...
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...


சொல்ல வார்த்தை இல்லை//

ஏதாவது சொல்லுங்க ரோஸ்...

புதியவன் said...

//rose said...
எத்தனையோ முறை
உன் கண்களைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே

ஏன்னா மொத்தமா எதிர் காலம் இருல போகுதே//

இருளான எதிர் காலத்திலும் ஒளிவிடும் விளக்காய் காதல் இருக்கும் அப்படித்தானே ரோஸ் சொல்ல வர்றீங்க...

புதியவன் said...

Natchathraa said...
//தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்//

வழக்கம்போலவே அசத்தலான ஆரம்பம்... உங்க கற்பனைக்கு எல்லையே இல்லையா... வித்தியாசமான பார்வை உங்களோடது புதியவன்...

///கற்பனைக்கு ஏது எல்லை...?...ஒளியின் வேகத்தை மிஞ்ச கற்பனையால் மட்டுமே சாத்தியம்///

//துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்//

மறுபடியும் வித்தியாசமான ஒப்பீடு...

///நன்றி...///

//உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...//

ரொம்ப சரி..ரொம்ப கஷ்ட படுத்திட்டாங்களோ...

///ம்...கொஞ்சம் ரொம்பவே...///

//காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்//

விதிமுறைகள் இல்லா காதல் உண்டா...ஆரம்பத்துல எல்லாம் அப்படிதானே.. போக போக தளரும்...

///நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...///

//’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை//

முத்தக்கவி வித்தகருக்கே தடையா...
நோ இதெல்லாம் ஒத்துக்கமுடியாது...
அப்படித்தானே புதியவன்...

///ஹா...ஹா...ஹா...இப்படியெல்லாம் கேட்டா என்ன பதில் சொல்வது...?///

//இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...//

அழகான வரிகள்...

///ரசிப்பிற்கு நன்றி...///

//காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது//

ஆமா ஆமா... அதுதானே கவர்ந்திழுக்கும் மந்திரம்....

///உண்மை தான்...///

//இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே//

காதலுக்கு அத்தனை சக்தி புதியவன்...

///அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க...///

//இடைவெளி கொஞ்சமாய் குறைந்து
விதி முறைகள் மெல்லத் தளர்ந்ததில்//

தளர்ந்தாச்சா... இனி புதியவனுக்கு கொண்டாட்டம் தானே...

///விதி முறைகள் தளர்ந்தால் தானே காதல் வேகமாய் வளரும்...///

//இப்போது...
நம் மூச்சுக் காற்றில்
முட்டி மோதிய உயிர்க் காற்று
மீண்டும் மீண்டும் முயன்று
முடியாமல் தோல்வியுற்று
அருகிலிருந்த மரத்தின்
இலைகளில் அமர்ந்து
களைத்துப் போய்
இளைப்பாறத் தொடங்கியது//

எக்சலண்ட்.......

///நன்றி...///

//இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...//

வரிகளிலேயே சொர்க்கம் தெரிகிறதே...ஹம்ம்ம்.....

///அப்படியா...நன்றி...///

//கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

ஹம்ம்ம்ம் அது சரி...

வழக்கம்போல ரொமாண்டிக் கவிதை...

கவிதைகளும் அருமை.. பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதிலளிப்பதும் அருமை...

///நான் எந்தப் பதிவில் பின்னூட்டமிட்டாலும் அதற்கான பதிலை எதிர் பார்ப்பேன்...அதனால் தான் என் பதிவில் நம் நண்பர்களின் பின்னுட்டங்களுக்கும் பதில் சொல்லி வருகிறேன்...///

என்ன மாதிரி கவிதை புரியாத தத்துப்பித்துக்கு பொறுமையா பதில் தரதும் அருமை.....

///உங்களுக்கு கவிதை புரியாதா...?... என்னால இதெல்லாம் நம்ப முடியாது...நான் தான் உங்கள் நட்புக் கவிதைகளைப் படித்திருக்கிறேனே...///

வாழ்த்துகள் புதியவன் மென்மேலும் பல படைப்புகள் தர....

வருகை தந்து விரிவான பின்னூட்டம் அளித்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்சத்திரா...

புதியவன் said...

//rose said...
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............


sssssssssssssssss//

நீங்களே அழுத்தமா எஸ்ன்னு சொல்லிட்டீங்களே...மிக்க நன்றி ரோஸ்...

புதியவன் said...

// ஆதவா said...
அட,, அதுக்குள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

ஆரம்பமே அசத்தல் (இந்த வார்த்தை சலித்துவிட்டது...)

தொடக்கமே பிரமாதம் (எப்படி?)

///ரொம்ப நல்ல இருக்கு...///

தொட்டுக் கொண்டிருக்கும் வானம் என்பதே மிகச்சரியான சொற்பிரயோகம். வானம் என்பதற்கு எல்லை இல்லை. அது ஏதோ ஒன்றைத் தொடுவதற்காக விரிந்து கொண்டிருக்கிறது. ஆக, சரியான பதம் தான்.

///உண்மை தான் ஆதவன்...வானம் என்பது எல்லைகள் இல்லாத ஒன்று தான்...///

மேகத்தை அலையாக்கி படகோட்டுகிறீர்கள். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.

எது சுலபம்?? தவமிருப்பதா காத்திருப்பதா.... அபாரம் புதியவன்.

///பதிலுக்காக காத்திருப்பதைவிட தவமிருப்பது சுலபம் இல்லையா ஆதவன்...///

அடுத்து, அந்த விதிமுறைகள்... இந்தியப் பெண்ணுக்குரிய கலாச்சார கட்டுப்பாடுகள்.. சிலதுகள் தறிகெட்டு கூடலுக்குள் திரிவதுமுண்டு! இங்கே கலாச்சார விதிமுறைகளோடு காதல் பயணிக்கிறது.

///காதலில் இந்த விதிமுறைகள் மிக அவசியமான ஒன்று என்றாலும் கொஞ்சமாய் தளர்வதில் தவறொன்றும் இல்லை...அதாவது கொஞ்சமாய்...///

வெட்கமும் ஆடைதானே... பெண்களுக்கு.... அருமை புதியவன்.

///நன்றி...///

///முட்டி மோதிய உயிர்க் காற்று////

முட்டு என்றாலும் மோது என்றாலும் ஒன்றுதானே. இங்கேயும் அபார சிந்தனை!! கவிதையில் எழுத்துக்கள் சிந்தணை (சிந்தி அணைக்கிறது)

-----------
முத்தம் என்பது காதலின் உச்ச அடையாளம், அன்பு பகிர்தலில் முத்தத்தைக் காட்டிலும் வேறெந்த அடையாளமும் இருப்பதாகத் தெரியவில்லை. காதலின் உன்னதம் முத்த எச்சிலில் அடங்கியிருக்கிறது. முத்தங்கள் வெறும் வரட்டு காமங்களாக இல்லாமல் பொங்கி நுரைந்து வழியும் காதலின் சின்னமாகக் குத்தப்படவேண்டும்.

///காதல், அன்பு, பாசம் இதை தெரிவிக்க முத்தம் ஒரு சிறந்த பரிமாற்றம் தான்...///

இந்திய கலாச்சார பண்பாட்டு விதிமுறைகளுக்குள் முத்தம் அடங்கியிருக்கிறது.... பின்னர் (மணத்திற்குப் பின்), மொத்தமும் அடங்கியிருக்கிறது!

வாழ்த்துக்கள் புதியவன்.//

தெளிவான விரிவான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஆதவன்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
நிச்சயமாக..காதலுக்கு சில விதிமுறைகள் இருக்க வேண்டும்.

விதிமுறைகள் இருந்தால் தானே மீற முடியும்.

மீறினால் தானே ஊடல்..ஊடலில்லையேல் ஏது சுவாரஸியம் ??//

வாங்க செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்//

அழகு புதியவன்.


தொடாதே என்று சொன்னால் "தொடு" என்று பொருள்.

இதை உம்மால் புரிந்து கொள்ள முடியாதா ?//

ஹா...ஹா...இனிமேல் புரிந்து கொள்கிறேன்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...//

க‌டின‌ம் தான்..ஆனால் ப‌திலுக்காக‌ காத்திருப்ப‌தில் ஒரு இன‌ம்புரியாத‌ சுக‌ம்.

ப‌ட‌ப‌ட‌ப்பு..த‌விப்பு..உணர்த்திய‌ வித‌ம் அருமை புதிய‌வ‌ன் !!!//

உணர்வுகளை உணர்ந்து கொண்டதற்கு நன்றி...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை//

பேச்சுக்கு இட‌மில்லை..ஆனால் செய‌ல்ப‌டுத்துவ‌த‌ற்கு இட‌மா இல்லை ?//

ஓ...இதுல அப்படி வேறு அர்த்தம் இருக்கா...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...//

அச‌த்த‌ல்//

ரசிப்பிற்கு நன்றி...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
வ‌ழ‌க்க‌ம் போல‌ எதிர்பார்ப்புக‌ளை பொய்யாக்காம‌ல்

எழுதியிருக்கிறீர்க‌ள் புதிய‌வ‌ன்.

ந‌ன்றி !!!!!!//

விரிவான குறும்பான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி செய்யது...

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது எப்டி தல இருக்கீங்க, ரொம்ப நாலா உங்க பதிவ காணோமே

புதியவன் said...

//குடந்தைஅன்புமணி said...
வார்த்தை ஜாலங்களில் வழிந்துகிடக்கிறது.... உங்கள் காதல்....//

மிக்க நன்றி அன்புமணி...

புதியவன் said...

//ரியாலியா said...
kathalukku\kollai\alagu\puthiyavaree\varikallo\manathai\kollaikonduvittathu''''''''''''''''''''''''''//

வருகைக்கும் அழகிய தருகைக்கும் மிக்க நன்றி ரியாலியா...

புதியவன் said...

//Divyapriya said...
அழகோ அழகு :))//

ரசிப்பிற்கு மிக்க நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//வால்பையன் said...
//காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது/

இதெல்லாம் நம்ப்வே முடியல!

///சொன்னா நம்புங்க நண்பரே...///

அப்புறம், கவிதை மட்டும் தான் எழுதுறதுன்னு எதாவது கொள்கையா?//

கொள்கை இல்லை...கவிதை தவிர மற்ற நல்ல பதிவுகளுக்குத் தான் நீங்கள் இருக்கிறீர்களே என்று தான்...நன்றி வால் பையன்...

புதியவன் said...

//RAMYA said...
"காதலுக்கு கொள்(கை)ளை அழகு..."

தலைப்பே அழகை அள்ளிகிட்டு போகுதே !!//

வாங்க ரம்யா...

S.A. நவாஸுதீன் said...

நான் செஞ்சுரி போட்டுக்கிறேன் கண்ணுகளா

S.A. நவாஸுதீன் said...

நான் செஞ்சுரி போட்டுக்கிறேன் கண்ணுகளா

புதியவன் said...

//RAMYA said...
//
தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்
//

நல்ல ரசனை உங்களுக்கு.

ரசனை என்று எடுத்துக் கொண்டால் அது ரசனை மட்டுமே.

ஏக்கம் என்று எடுத்துக் கொண்டால் அங்கே காதல் மட்டுமே.

என்ன புதியவன் சரிதானே ??//

நீங்க என்ன தவறாகவே சொல்லிவிடப் போகிறீர்கள்...சரி தான் ரம்யா...

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
நான் செஞ்சுரி போட்டுக்கிறேன் கண்ணுகளா//

செஞ்சுரி போட்டதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நவாஸூதீன்...

புதியவன் said...

//RAMYA said...
//
துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...
//

ஒப்பிட்டு பார்க்கும் விதமே ஒரு தனி அழகைக் கொடுக்கின்றது.

அழகு அழகு !!//

ரசிப்பிற்கு நன்றி ரம்யா...

புதியவன் said...

//RAMYA said...
//
காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்
தொட்டுக்கொள்வதில்லை
கட்டிக்கொள்வதுமில்லை
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை
//

அருமையான விதி முறைகள் தானே??

மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
இப்படி ஒரு காதலி கிடைக்கப் பெற்றவர்கள்!!//

உண்மை தான் இப்படி ஒரு காதலி கிடைக்கப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்...

புதியவன் said...

//RAMYA said...
//
நம் காதலில்
எனக்கிருந்த சில எதிர் பார்ப்புகளை
எதிர்கால ஆசைகளின்
சேமிப்பு வங்கியில்
பாதுகாத்து வைத்துவிட்டேன்
என்ன செய்வது....?
இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...
//

சேமிப்பு வங்கி
================
வார்த்தை அலங்காரங்களால்
எண்ணத்தோரணங்கள் கட்டி
வலம் வர விட்டிருக்கிறீர்கள் புதியவன்,

அருமை அருமையோ அருமை!!//

உங்கள் ரசிப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது ரம்யா...

புதியவன் said...

// RAMYA said...
//
அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது
//

இருக்கும் இருக்கும் :)//

இருக்கும் தானே...?

புதியவன் said...

//RAMYA said...
//
எத்தனையோ முறை
உன் கண்களைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே
//

என்ன அருமையான உதாரணம் !
மின்மினி பூச்சியின் உதாரணம்
புதியவன் நீங்கள் என்றுமே புதியவன் தான் எங்களுக்கு.

புதிது புதியதாய் எண்ண அலைகள்
உங்கள் வார்த்தைகளில் ரீங்காரமிட்டு ஆர்ப்பரிக்கின்றன ............//

உவமையை ரசித்தமைக்கு நன்றி...

புதியவன் said...

//RAMYA said...
//
இப்போது...
நம் மூச்சுக் காற்றில்
முட்டி மோதிய உயிர்க் காற்று
மீண்டும் மீண்டும் முயன்று
முடியாமல் தோல்வியுற்று
அருகிலிருந்த மரத்தின்
இலைகளில் அமர்ந்து
களைத்துப் போய்
இளைப்பாறத் தொடங்கியது
//

கலக்கல் எழுத்து நடை !!//

நன்றி...

புதியவன் said...

//RAMYA said...
//
விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............
//

கொள்கைகள் ஜெயிப்பது நல்லா இருக்குமே !!//

காதலின் கொள்கைகளில் இந்த விதிமுறைகள் சற்று முரண் படுவது இயல்பு...

வருகைக்கும் அழகான பின்னுட்டங்களுக்கும் மிக்க நன்றி ரம்யா...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

வெகு அழகு :)))))))//

ரசிப்பிற்கு மிக்க நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//gayathri said...
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை\\

enku thenji neraya lovela ippadi thanga irukanga//

அப்படியா காயத்ரி...?

புதியவன் said...

//gayathri said...
விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//
sariya sonnega//

புரிதலுக்கு மிக்க நன்றி காயத்ரி...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
மீண்டும் மீண்டும் காதல் வெட்கம் முத்தம் வாழ்த்துக்கள் புதியவன்//

வாழ்த்துக்களோடு வருகிறீர்கள் அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்//


சரியான வார்த்தைகளின் ஆரம்பம்

தொடக்கூடிய தூரத்திலிருந்தும் தொடமுடியவில்லை????//

காதலின் தொடக்க நிலை பொதுவாக இப்படித் தான் இல்லையா அபுஅஃப்ஸர்...?

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...//

கற்பனையாய் சொல்லப்பட்ட மேகத்தில்கூட படகுஓட்டிவிடலாம்.. ஆனால் காதலை சொல்வதில் உள்ள் தயக்கம்...??? ஆகா அருமை புதியவன்//

ரசிப்பிற்கு நன்றி...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்
தொட்டுக்கொள்வதில்லை
கட்டிக்கொள்வதுமில்லை
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை
//

ஹூம் ஹூம் தமிழ் பெண்ணல்லாவா, புதிய புதிய கட்டளை//

உங்களுக்குத் தெரியாத கட்டளைகளா இதெல்லாம்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//நம் காதலில்
எனக்கிருந்த சில எதிர் பார்ப்புகளை
எதிர்கால ஆசைகளின்
சேமிப்பு வங்கியில்
பாதுகாத்து வைத்துவிட்டேன்
என்ன செய்வது....? //

ஏக்கம்.. நல்ல உவமானம்//

உவமையை ரசித்ததற்கு நன்றி...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே/

காதல் கொண்டவரின் வெளிப்பாடு அழகு//

நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...//

ம்ம்ம் ஹூம்//

ம்...அதே தான்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............

//

விதிமுறை என்பது காதலுக்கு இல்லை புதியவன்

அருமையா சொன்னீங்க‌

ஒவொன்றும் அழகு, கற்பனை திறனை என்னவென்று சொல்லி பாராட்டுவேன்

வாழ்த்த வார்த்தையில்லை

இருந்தாலும் நானும் கூவிக்கிறேன்

வாழ்த்துக்கள் ரொம்ப அருமை//

விரிவான தருகைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//Ravee (இரவீ ) said...
ஒவொரு வரியும் கவிதையாய் ...

உங்க கவிதையும் கொள்ளை அழகு .//

கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி இரவீ...

புதியவன் said...

//நாமக்கல் சிபி said...
கவிதை கொள்ளை அழகு!//

முதல் வருகைக்கு மிக்க நன்றி நாமக்கல் சிபி...

புதியவன் said...

// Poornima Saravana kumar said...
காதலுக்கு கொள்(கை)ளை அழகு...
//

உண்மை தான் புதியவரே!!//

வாங்க பூர்ணிமா சரண்...

புதியவன் said...

//Poornima Saravana kumar said...
அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
//

ஆஹா!!//

நன்றி...

புதியவன் said...

//Poornima Saravana kumar said...
விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

அழகா சொல்லிட்டீங்க:)//

அழகிய புரிதலுக்கு மிக்க நன்றி பூர்ணிமா சரண்...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன் காதல்-முத்தம் உங்கள் கவிதைகளுக்கு ஈடே இல்லை.
ஆதவா அருமையா விமர்சனம் தந்திருக்கிறார்.அவ்வளவு அற்புதம்.
முத்தத்திற்காய் காத்திருக்கும் காதலன்,நாணம் போர்த்தி வரும் காதலி,களைத்து இளைப்பாறும் முத்தம்...

//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு........//

முடித்த விதம் கவிதைக்கு மகுடமாய்.அருமை அருமை அருமை.//

அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஹேமா...

புதியவன் said...

// sakthi said...
\\தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்\\

superb//

வாங்க சக்தி...

புதியவன் said...

//sakthi said...
\\இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...\\

appadiya//

ம்...அப்படித்தான்...

புதியவன் said...

//sakthi said...
topic is so nice//

நன்றி...

S.A. நவாஸுதீன் said...

ஒவ்வொருவரின் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் மிக அழகாய் பதில் கூறும் உங்கள் பாங்கும் உங்கள் பதிவு போலவே மிக பிடித்து இருக்கிறது புதியவன்

புதியவன் said...

//sakthi said...
அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
//

so cute lines//

ரசிப்பிற்கு மிக்க நன்றி சக்தி...

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
ஒவ்வொருவரின் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் மிக அழகாய் பதில் கூறும் உங்கள் பாங்கும் உங்கள் பதிவு போலவே மிக பிடித்து இருக்கிறது புதியவன்//

நண்பர்களின் பின்னூட்டத்திற்கு பதில் அளிப்பதும் ஒரு சுகமான அனுபவம் தான் இல்லையா நவாஸூதீன்...?

புதியவன் said...

//ஜீவன் said...
//அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது//

.........super//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜீவன் அண்ணா...

புதியவன் said...

//தமிழ்குறிஞ்சி said...
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//

தமிழ் குறிஞ்சி இணைய இதழ் நிர்வாகத்திற்கு எனது நன்றிகள்...

புதியவன் said...

//நசரேயன் said...
காதல் துள்ளி விளையாடுது கவிதையிலே//

காதல் என்ற வார்த்தையை கேட்டாலே மனதில் ஒரு துள்ளல் வரத்தான் செய்யும் இல்லையா நசரேயன்...?

புதியவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
///தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்///


அய்யோ! கொள்ளை அழகு புதியவன்//

ரசிப்பிற்கு மிக்க நன்றி ஞானசேகரன்...

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...

அசத்தல் புதியவன்//

உங்கள் வருகையும் கூட அசத்தல் தான் நாவஸூதீன்...

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
\காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது

இது என்னவோ நிஜம்//

நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லையா...?

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............

கொள்ளை அழகு//

அழகிய பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நவாஸுதீன்...

புதியவன் said...

//இய‌ற்கை said...
அழகுங்க ...
//

மிக்க நன்றி இயற்கை...

புதியவன் said...

//thevanmayam said...
துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட.../

சரளமான வரிகள்!!//

வாங்க டாக்டர் தேவா...

புதியவன் said...

//thevanmayam said...
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது///

பிரமாதம்!!!//

ரசிப்பிற்கு மிக்க நன்றி தேவா...

புதியவன் said...

//K.USHA said...
//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

பின்னிட்டிங்க போங்க...
காதலுக்கே என் வாழ்வில் இடம் இல்லைனு சொல்லிகிட்டு இருக்கும் யாரவது இதைப் படித்தால் கொள்கை மாரிடும் கண்டிப்பா....//

ஹா...ஹா...கவிதையை படித்தால் கொள்கை மாறிவிடுமா...முதல் வரிகைக்கு மிக்க நன்றி உஷா...

உங்கள் புரொஃபைலில் உள்ள குழந்தை படம் வெகு அழகு...

புதியவன் said...

//MaDhi said...
என்ன சொல்லி பாராட்டுறதுன்னு தெரியாம வார்த்தைகளைத் தேடி கொண்டிருக்கிறேன் !!
உங்க கவிதையை படிக்கும் போதெல்லாம் இப்படியெல்லாம் காதலிக்க பசங்க இருக்காங்களான்னு பரீட்சித்து பார்க்க ஆவல் கூடுதுங்க!! காதலிக்கணும்னு ஆசையா கூட இருக்கு :)//

காதலில் பரீட்சித்துப் பார்க்க முடியாது மதி...ஏனெனில் அந்த பரீட்சையில் நிச்சயம் வெற்றி பெறுவது காதலாகத் தான் இருக்கும்...

உங்கள் ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்...அழகான விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி மதி...

புதியவன் said...

//Suresh said...
//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

அருமையா எழுதி கவுத்து புடிங்க நண்பா :-) என்ன வரிகள் ஒன்னு ஒன்னு ஒரு வைர மின்னல்கள் :-) தொடர்ந்து எழுதுங்க .. எப்போதும் ஒரு அத்துமிறல் :-) ஒரு அழகு தான்//

ஹா...ஹா...கவுத்துட்டேனா...?...யாரை...?

உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்...மிக்க நன்றி சுரேஷ்...

புதியவன் said...

//கலை - இராகலை said...
///தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்///

இரசித்தேன்.//

முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கலை-இராகலை...

உங்க பேர் வித்தியாசமா இருக்கு...அருமை...

புதியவன் said...

//Divya said...
வழக்கம்போல் கவிதை அழகோ அழகு!!

\\விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............\\

முடிவு வரிகள்........நச்சுன்னு இருக்கு:))

சூப்பர்ப் கவிதை புதியவன்!!//

கதாசிரியையின் வருகை எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான்...

கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி திவ்யா...

புதியவன் said...

//பதுமை said...
மிக அழகான கவிதை.
பதுமையின் உலகத்துக்கு வந்தமைக்கு நன்றி.//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பதுமை...

S.A. நவாஸுதீன் said...

150 not out

Suresh said...

புதியவா உங்களின் பிண்ணோட்த்தை என்னோட புதிய பதிவில் ... பதிவு செய்திருக்கிறேன் ..

//நண்பர் புதியவன் சொன்னதை மேற்க்கோளிட்டு காட்ட விரும்பிகிறேன்

“ஆதவன்... நந்தவனத்தில் காற்று வாங்க வந்து பல மலர்களின் வாசம் நுகர்ந்த அனுபவத்தை உணர முடிகிறது... மேலும் அறிமுக மில்லாத நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதற்கும் ஒரு வாய்ப்பு...நன்றி ஆதவன்...”

குடுகுடுப்பை said...

விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

விதிமுறை மீறியபின் எழுதிய போல உள்ளது,

புதியவன் said...

//குடுகுடுப்பை said...
விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

விதிமுறை மீறியபின் எழுதிய போல உள்ளது,//

அண்ணே...ஏனிந்த கொலைவெறி...?
நன்றி குடுகுடுப்பை...

Sakthidevi.I said...

really u r writting natural feelings.... this poem is very nice...keep it up...ur slang is so good..

புதியவன் said...

//sathya said...
really u r writting natural feelings.... this poem is very nice...keep it up...ur slang is so good..//

வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி சத்யா...

Suresh said...

மச்சான் இதுக்கும் வோட்டு போட்டாச்சு

Bhushavali said...

//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

அற்புதம்...

புரியாததால் பத்து முறை படித்தல் ஒரு வகை.... புரிந்தும் பத்து முறை படித்தல்...??? அது - கட்டிப்போட்டு வைத்த உங்கள் வார்த்தைகளின் அழகு...

Bhushavali said...

//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

அற்புதம்...

புரியாததால் பத்து முறை படித்தல் ஒரு வகை.... புரிந்தும் பத்து முறை படித்தல்...??? அது - கட்டிப்போட்டு வைத்த உங்கள் வார்த்தைகளின் அழகு...

Sheeba said...

தங்களின் கவிதை தொகுப்புகள் அனைத்தும் அருமையிலும் அருமை நண்பரே, தொடரட்டும் உங்கள் கவி பணி!

புதியவன் said...

//Mitr - Friend said...
//விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............//

அற்புதம்...

புரியாததால் பத்து முறை படித்தல் ஒரு வகை.... புரிந்தும் பத்து முறை படித்தல்...??? அது - கட்டிப்போட்டு வைத்த உங்கள் வார்த்தைகளின் அழகு...//

முதல் வருகைக்கும் அழகிய ரசிப்பிற்கும் மிக்க நன்றி Mitr - Friend...

புதியவன் said...

//Sheeba said...
தங்களின் கவிதை தொகுப்புகள் அனைத்தும் அருமையிலும் அருமை நண்பரே, தொடரட்டும் உங்கள் கவி பணி!//

வருகைக்கும் கவிதயை ரசித்தமைக்கும்
அழகிய தருகைக்கும் மிக்க நன்றி ஷீபா...

Raj said...

Kavidhai really superb pudhiyavan..

மென்மேலும் வ‌ளர‌ வாழ்த்துக்கள்.

புதியவன் said...

//Raj said...
Kavidhai really superb pudhiyavan..

மென்மேலும் வ‌ளர‌ வாழ்த்துக்கள்.//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜ்...

Sakthidevi.I said...

kaadhalukku kollai azhagu..
thangaludaiya indha kavidhai migavum azhagu..

புதியவன் said...

//sathya said...
kaadhalukku kollai azhagu..
thangaludaiya indha kavidhai migavum azhagu..//

அழகிய வருகை...அழகிய தருகை...மிக்க நன்றி சத்யா...

Nava said...

Actually..!!! ijus njyed ur kavithai..!!! u r awesome..!!! really too good..!!! may ur wrkk goes around d world..!!! gud luk...!!!

புதியவன் said...

//Nava said...
Actually..!!! ijus njyed ur kavithai..!!! u r awesome..!!! really too good..!!! may ur wrkk goes around d world..!!! gud luk...!!!//

என் கவிதைகள் உங்களை சந்தோசப் படுத்தினால் எனக்கும் மகிழ்ச்சியே...முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி Nava...

ramgoby said...

realy enjoy this..i am ramesh from tirupur

புதியவன் said...

//ram_goby said...
realy enjoy this..i am ramesh from tirupur/

முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமேஷ்...