Friday, October 31, 2008

தாய்மை என்பது...




மூன்றெழுத்தில் ஒரு பிரபஞ்சம்
முதுமையில்லா ஒரு முழுமை
தன்னலமில்லாத் திருஉளம்

பத்துத் திங்கள் பத்தியமிருந்து
பிரசவம் என்னும் மறுபிறப்பெடுத்து
ஈன்ற உந்தன் புன்னகை கண்டு
தான் பெற்ற இன்னல்
உன் கண்ணில் மறக்கும்
உன்னத உறவே தாய்மை !

உதிரத்தை உணவாக்கி
மனமகிழ உனக்களித்து
உன் மழலைச் சொல் கேட்டு
தன் துயரம் தான் மறந்து


நீ உறங்கும் வேளையிலே
தாலாட்டித் தொட்டிலிட்டு
தன் உறக்கம் தான் மறக்கும்
தியாகத் திரு உருவே தாய்மை !!

உலகமெலம் ஒன்றாகி
உன்னைக் குற்றம் சாட்டினாலும்
குற்றத்தின் தண்டனையாய்
தூக்கு மேடை ஏற்றினாலும்
ஒரு உள்ளம் வாதடும்
உனக்காகப் போராடும்
அது தாய்மை என்னும்
திரு உள்ளம் !!!


பார் முழுதும் பாவங்கள்
பெருகிய பின்னாலும்
பூமி பிழைத்திருக்கும்
காரணம் என்னவென்றால்
தாய்மை இருப்பதினால்
தரணி இன்னும் அழியவில்லை !?

தாய்மை எனும் தூய்மையின் மேல்
இறைவனுக்கும் இரக்கம் உண்டு,
தாய்மை உள்ள வரை
தரணி பிழைத்திருக்கும்
தரணி உள்ள வரை
தாய்மையும் நிலைத்திருக்கும்....


Thursday, October 30, 2008

என் முதல் பதிவு


என் வலைப்பக்க முதல் பதிவாக உங்க நேரத்த வீணாக்காம ஒரு ரெம்பச் சின்ன காதல் கதை.

ஒரு வரம்பு மீராத இளம் காதலர்கள்.

காதலிக்கு கவிதை என்றால் உயிர். ஆனால் காதலனோ 

நம்மள மாதிரி சுட்டுப் போட்டாலும் கவிதை வராது

காதலனுக்கு ரெம்ப நாளா ஒரு ஆசை, . காதலிகிட்டே ஒன்னு கேக்கணும்னு. ஆனா அவகிட்ட எப்படி கேக்கிறதுன்னு அவனுக்கு தயக்கம்.

ஒரு நாள் யாருக்கும் தெரியாம ரகசியமா ஒரு காகிதத்துல அவனோட ஆசைய ஆறே வரிகள்ல எழுதி. அவனோட காதலி தனியா இருக்கிறப்ப

அவ கிட்ட கொடுக்கிறான். அத படிச்சிட்டு அவ என்ன பண்ணினாங்கிறத எல்லாம்

நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க.

ஆனால்,

அந்த காதலன் யாருக்குந்தெரியாம ரகசியமா எழுதின காகிதத்தோட ஒரு நகல் (Copy) மட்டும் என் கிட்ட இருக்கு அது உங்களுக்காக இதோ...

 

முத்தமெனும் பூவெடுத்து

முள்ளுகளை சிக்கெடுத்து

அத்தனையும் சரம் தொடுத்து

மொத்தமுமாய் உனக்களித்து

முத்தம் பெற ஆசையடி

உன் இதழ் முத்தம் பெற ஆசையடி....