Friday, March 13, 2009

மெல்லிய பூக்களிலெல்லாம்...


உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்
உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்

கடற்கரை மணற்பரப்பில்
உனக்காக நெடுநேரம் காத்திருக்கிறேன்
கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது

முதன் முதலாய்
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
அன்று கடல் அலையின் வேகம்
சற்று கூடித்தான் போயிருந்தது

அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக

உன் கூந்தலில் சூடிக்கொள்வதற்காக
கிள்ளியெடுக்கப் பட்ட
மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்

ஊடலென்பதே கூடாதென்றிருந்தேன்
காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?
ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்
நீ என்னிடம் கோபமாயிருக்கிறாய்
தொட்டாலே பார்வையால் சுட்டுவிடுகிறாய்
என்ன செய்வது...?

அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?
அள்ளியெடுத்துக் கொஞ்சத்தானே தோன்றும்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது...
முடிவில் யார் தான் வென்றது...?
வென்றது காதல்...
எப்படி...?
மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............


இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...

 

106 comments:

நட்புடன் ஜமால் said...

படமும்

வரிகளும்

கெஞ்சுகின்றன

என்னை

கொஞ்சென்று

Natchathraa said...

தலைப்பே கவிதையாத்தானிருக்கு புதியவன்.....

Natchathraa said...

//உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்//

இது ஓகே...

உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்//

ஆனால் இது வித்தியாசம்... ஹம்ம காதலி வியர்வை அவ்வளோ சக்தியா... ;-)


//கடற்கரை மணற்பரப்பில்
உனக்காக நெடுநேரம் காத்திருக்கிறேன்
கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது//

காத்திருத்தல் சுகம்...பிடித்தவர்களுக்காக மனதை படித்தவர்களுக்காக....


//அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன//

விட்டா சுனாமியே வந்திரும்போல...:-)


//நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக//

கண்களாலயே கொல்றீங்களோ... :-)

//மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்//

ச்ச்ச்சோ ச்சுவீட்ட்ட்ட் & க்யூட்ட்ட்ட்...

//ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்//

ஊடல் இல்லாம காதலில் சுவாரசியமில்லையே புதியவன்...
சிறு ஊடல் காதலை பலமடங்கு பலப்படுத்துமே....

//அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?//

எப்படியாவது ஒரு விதத்தில் முத்தம் வந்திருதே உங்க கவிதையில்...;-)

//அள்ளியெடுத்துக் கொஞ்சத்தானே தோன்றும்//

உண்மை உண்மை.... இந்த சுகத்துக்கு இணை வேறேதுவுமில்லை...

//மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............//

ஹப்பாடா ஒரு வழியா சமாதானம் செஞ்சுட்டீங்க....

வழக்கம் போல மிக மென்மையான காதல்...மனதை வருடிச்செல்லும் வார்த்தைகள்...லேசாப்பறக்குது மனசுன்னு பாடத்தோனுது..

படம் தேர்வு அருமை... முந்தைய ஒரு பதிவில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல் படம் தேர்வு செய்ய ஆரம்பிச்சுட்டீங்க போல...:-)

வாழ்த்துகள் புதியவன்...

Unknown said...

//உன் கூந்தலில் சூடிக்கொள்வதற்காக
கிள்ளியெடுக்கப் பட்ட
மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்//

மிக அழகு :))

ஆ.ஞானசேகரன் said...

//காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?//சிறப்பாக இருக்கு

அப்துல்மாலிக் said...

//உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்
உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்
//

ஆரம்பபே எப்போதும் போல் கலக்கல் புதியவன்

அப்துல்மாலிக் said...

//உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்//

உங்கள் கற்பனைக்கு அளவேயில்லை, நீர் "கற்பனைக்கரசன்" என்ற பட்டம் வழங்குகிறேன்

அப்துல்மாலிக் said...

//கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது
//

கோடானுகோடி ஆண்டுகளா வரவெயில்லையா, என்னா கொடுமைப்பா இது

அப்துல்மாலிக் said...

//முதன் முதலாய்
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
அன்று கடல் அலையின் வேகம்
சற்று கூடித்தான் போயிருந்தது//

ஆமாம் பெண்ணல்லவா அது மட்டும் விதிவிலக்கா என்னா?

அப்துல்மாலிக் said...

//அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக
//

ஹா என்னா ஒரு போராட்டம் அங்கே

அப்துல்மாலிக் said...

//ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்
நீ என்னிடம் கோபமாயிருக்கிறாய்
தொட்டாலே பார்வையால் சுட்டுவிடுகிறாய்
என்ன செய்வது...?
///

ஒஹ்ஹ் ஊடலா? அதன் விளைவுதான் இந்த கவிதையோ?

அப்துல்மாலிக் said...

//வென்றது காதல்...
எப்படி...?
மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............

///

அதுசரி சமாதானமும் செய்தாச்சா...

காதலுக்கு மயங்காதவர் யார்தான்

எப்போதும்போல் வரிகள் அழகு புதியவன்

வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

//உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்
உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்//

வழக்கம் போல ஆரம்ப வரிகள் புதியவன் எழுத்துக்களில் மின்னுகிறது.

அ.மு.செய்யது said...

//முதன் முதலாய்
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
அன்று கடல் அலையின் வேகம்
சற்று கூடித்தான் போயிருந்தது//

நீங்க தற்குறிப்பேற்ற அணியை விடவே மாட்டீர்களா..

உங்கள் ஒவ்வொரு கவிதையிலும் நான் வெகுவாக ரசிப்பது இதை தான்..

விடாதீர்கள்..

அ.மு.செய்யது said...

//ஊடலென்பதே கூடாதென்றிருந்தேன்
காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?
//

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

பெண்ணில் இருக்கு..இந்த பெண்ணில் இருக்கு..

அ.மு.செய்யது said...

//அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?//

ஒவ்வொரு பத்தியிலும் ஸ்கோர் பண்றீங்க...சேவாக் மாதிரி..

சில நேரங்களில் ரஹ்மான் மாதிரி..

அ.மு.செய்யது said...

Great touch புதியவன் !!!!!!!

ஆதவா said...

உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்


ஆஹா.... ஆரம்பமே அசத்தல்.... எப்படிங்க இப்படி??

உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்

அடடா.. இதுவல்லவோ கற்பனை!!! கற்பனைகளில் இவைகள் மிக உயர்ந்தவை... இதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கிறது?/?

ஆதவா said...

////கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது////

அட.... அதுக்காகத்தானா.... இக்கவிதையின் ஆரம்பம் கண்ட அதிசயம் இன்னும் விலகாமல் அப்படியே இருக்கிறது!!! அழகழகான குட்டி கவிதைகளை ஒன்றொடொன்று இணைத்தார் போல.....

ஆதவா said...

அடப்போங்க... இந்த வரிதான்னு இல்லாம எல்லாவரிகளும் அசத்தல்... எதை விட, எதைத் தொட???

அலைவேக நீட்சி
அவள் தொட எத்தனிக்கும் அலை
வெட்கத்தின் வண்ணம்
கன்னம் கடிக்கும் குழந்தை போல,...
தோற்றுப் போன ஊடல் என்று...

அணியணியாக அசத்தியிருக்கிறீர்கள்...

பிரமாதம்... வியப்பு இன்னும் அடங்கவில்லை

ஹேமா said...

புதியவன்,அத்தனை வரிகளுக்குமே முத்தம் கொடுகலாம் முத்துக்கள்.முத்தம் கொடுக்காவிட்டால் கவிதை வரிகள் என்மேல் ஊடல் கொள்ளும்.

ஹேமா said...

புதியவன்,முத்தத்தைப் பிழிந்தெடுத்து அதைத்தொட்டு வர்ணித்து கவியாய் காற்றில்விட உங்களுக்கு நிகர் நீங்களேதான்.

குடந்தை அன்புமணி said...

காதலில் ஊடல் என்பது பனிக்கட்டி போலத்தான்... அவளின் பார்வைபட்டதும் உருகிடாதோ! பாராட்டுகள்!

வேத்தியன் said...

நல்ல கவிதைங்க...

வேத்தியன் said...

உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்//

ஆரம்பமே அசத்தல்...

வேத்தியன் said...

அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன//

அருமை...

வேத்தியன் said...

என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்//

டச்சிங்...

வேத்தியன் said...

கடைசிப் பந்தி அழகுக்கெல்லாம் அழகு...
சூப்பர்...

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/03/10.html

நேரமிருந்தால் வந்து பார்க்கவும்...

நசரேயன் said...

//அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?
அள்ளியெடுத்துக் கொஞ்சத்தானே தோன்றும்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது...
முடிவில் யார் தான் வென்றது...?
வென்றது காதல்...
எப்படி...?
மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............//

ரசித்தேன்

Divyapriya said...

அழகான கற்பனை, அருமையான கவிதை...

RAMYA said...

படமும் உங்கள் கவிதை வரிகளும் அட அட அப்படியே தூக்கி எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டன புதியவன்.

உங்களின் எழுத்து நடை நாளுக்கு நாள் புது புது பரிணாமங்களுடன் திகைக்க வைக்கின்றது.

RAMYA said...

//உன் கூந்தலில் சூடிக்கொள்வதற்காக
கிள்ளியெடுக்கப் பட்ட
மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்
//

அட சூப்பர் இந்த வரிகளுக்கு உயிர் இருந்தாலும் அதுவும் உங்களை பாராட்டி இருக்குமே!!

அருமை அருமை புதியவன்.

RAMYA said...

//மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............
//

ம்ம்ம் அது எப்போதுமே அப்படிதானே!!!

RAMYA said...

//கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது
//


கடல் அதுதான் ஆர்பரித்துக் கொண்டு இருக்கின்றதே. அந்த ஆர்பரிப்பில் நம்
கதாநாயகியின் அழைப்பு மணி உங்கள் காதில் ஒலிக்க வில்லையோ என்று என் மனதில் ஒரு நெருடல் புதியவன்!!

நட்புடன் ஜமால் said...

கூடலின் பொறுட்டான ஊடலும்

ஊடலின் விலைவான கூடலும்

ம்ம்ம் ... அழகுதான்.

Anonymous said...

அப்படியே கடற்கரையில் உட்கார்ந்துட்டு ஒரு காதல் ஜோடியினை ரசித்துக்கொண்டிருப்பது போல் இருக்கிறது உங்களின் காதல் கவிதை..

வாழ்த்துக்கள் புதியவரே!

நானும் உங்களுக்கு புதியவனே!

அன்புடன்
ஷீ-நிசி

Muthusamy Palaniappan said...

கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது --- I loved it.

love and love only huh? romba over ah than poikittu irukku...

S.A. நவாஸுதீன் said...

காதல் ரசம் சொட்டுகிறது. மீண்டும் வருகிறேன்

வியா (Viyaa) said...

ஊடலென்பதே கூடாதென்றிருந்தேன்
காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?
ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்
நீ என்னிடம் கோபமாயிருக்கிறாய்
தொட்டாலே பார்வையால் சுட்டுவிடுகிறாய்
என்ன செய்வது...?


இந்த வரிகள் சூப்பர்..
உங்களது கற்பனை அழகு..
வாழ்த்துக்கள்

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_4390.html

நேரமிருந்தால் வந்து பார்க்கவும்...

Unknown said...

சூப்பர்.. கற்பனை ..

Poornima Saravana kumar said...

//அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக
//

அற்புதம் புதியவன்!

Poornima Saravana kumar said...

தலைப்பே கவி சொல்லுதே!!!

MaDhi said...

i envy ur writings!! Eppadi ungalala mattum ippadi ellam yosika mudiyudhu.. Kalakals!! :)

அ.மு.செய்யது said...

யாருப்பா அது அரைச‌த‌ம் போடாம‌ வுட்ட‌து ??

அ.மு.செய்யது said...

ச‌ரி நானே போட்டுக்கிறேன்.

அ.மு.செய்யது said...

நாப்ப‌த்தியெட்டு..

அ.மு.செய்யது said...

நாப்ப‌த்தியொன்ப‌து..

அ.மு.செய்யது said...

ஹைய்யா..மீத ஆஃப் ச‌த‌ம்.

gayathri said...

நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக//

ennamo nadakkuthu nadakkattum nadakkatum

Maddy said...

தோற்பதிலும் வெல்வதே காதல்ன்னு அழகா சொல்லி இருக்கீங்க!! அருமை

து. பவனேஸ்வரி said...

அனைத்து வரிகளும் அருமை... ஊடலும் கூடலும் இருந்தால்தானே காதல். அனுபவித்து எழுதினீர்களோ? இயல்பான எளிமையான அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

தோன்றியது செய்யவதே அழகு

அதையும் அழகாய் செய்வது மிக அழகு

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
படமும்

வரிகளும்

கெஞ்சுகின்றன

என்னை

கொஞ்சென்று//

வாங்க ஜமால்...வரிகள் கெஞ்சுதா...?

புதியவன் said...

//Natchathraa said...
தலைப்பே கவிதையாத்தானிருக்கு புதியவன்.....//

வாங்க நட்சத்திரா

கவிதையிலிருந்து ஒரு வரியைத் தான் கூடிய மட்டும் தலைப்பாக வைப்பது வழக்கமாகிவிட்டது...

புதியவன் said...

//Natchathraa said...
//உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்//

இது ஓகே...

///சரி...///

உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்//

ஆனால் இது வித்தியாசம்... ஹம்ம காதலி வியர்வை அவ்வளோ சக்தியா... ;-)

///காதலியின் ஒரு துளி வியர்வையைக் கண்டதும் நமக்கெதற்கு இந்த காதலர்களின் சாபம் என்று நினைத்து அவர்களுக்கு மேலும் தொந்தரவு கொடுக்காமல் மாலை சூரியன் மறையத் தொடங்கிவிடுகிறது...அதைத்தான் அப்படி சொன்னேன்///

//கடற்கரை மணற்பரப்பில்
உனக்காக நெடுநேரம் காத்திருக்கிறேன்
கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது//

காத்திருத்தல் சுகம்...பிடித்தவர்களுக்காக மனதை படித்தவர்களுக்காக....

///ம்...காதலில் காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்த்தை///

//அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன//

விட்டா சுனாமியே வந்திரும்போல...:-)

///ஹா...ஹா...ஹா///

//நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக//

கண்களாலயே கொல்றீங்களோ... :-)

///அது அப்படி இல்லை..ஆணோ பெண்ணோ யாராவது அவர்களை கூர்ந்து கவனிப்பதை உணர்ந்தால்...ஒரு விதமான குறுகுறுப்பை மனதில் உணர முடியும் அதைத்தான் அப்படி எழுதியிருக்கிறேன்///

//மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்//

ச்ச்ச்சோ ச்சுவீட்ட்ட்ட் & க்யூட்ட்ட்ட்...

///ரசிப்பிற்கு நன்றி...///

//ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்//

ஊடல் இல்லாம காதலில் சுவாரசியமில்லையே புதியவன்...
சிறு ஊடல் காதலை பலமடங்கு பலப்படுத்துமே....

///உண்மை தான்...///

//அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?//

எப்படியாவது ஒரு விதத்தில் முத்தம் வந்திருதே உங்க கவிதையில்...;-)

///தவிர்க்க முடிவதில்லை...///

//அள்ளியெடுத்துக் கொஞ்சத்தானே தோன்றும்//

உண்மை உண்மை.... இந்த சுகத்துக்கு இணை வேறேதுவுமில்லை...

///உண்மை தான்///

//மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............//

ஹப்பாடா ஒரு வழியா சமாதானம் செஞ்சுட்டீங்க....

///ம்... உண்மைக் காதலில் ஊடலுக்கு அற்ப ஆயுள் தானே///

வழக்கம் போல மிக மென்மையான காதல்...மனதை வருடிச்செல்லும் வார்த்தைகள்...லேசாப்பறக்குது மனசுன்னு பாடத்தோனுது..

படம் தேர்வு அருமை... முந்தைய ஒரு பதிவில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல் படம் தேர்வு செய்ய ஆரம்பிச்சுட்டீங்க போல...:-)

///ஆமாம்...நண்பர் செய்யது சொல்லியிருந்த கருத்து சரியெனப் பட்டது///

வாழ்த்துகள் புதியவன்...//

விரிவான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்சத்திரா...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
//உன் கூந்தலில் சூடிக்கொள்வதற்காக
கிள்ளியெடுக்கப் பட்ட
மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்//

மிக அழகு :))//

மிக்க நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
//காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?//சிறப்பாக இருக்கு//

தொடர் வருகைக்கு நன்றி ஆ.ஞானசேகரன்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்
உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்
//

ஆரம்பபே எப்போதும் போல் கலக்கல் புதியவன்//

வாங்க அபுஅஃப்ஸர்...உங்க வருகையும் கலக்கல் தான்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்//

உங்கள் கற்பனைக்கு அளவேயில்லை, நீர் "கற்பனைக்கரசன்" என்ற பட்டம் வழங்குகிறேன்//

ஹா...ஹா..இப்படி ஒரு பட்டமா...?...நன்றி...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது
//

கோடானுகோடி ஆண்டுகளா வரவெயில்லையா, என்னா கொடுமைப்பா இது//

அது அப்படி இல்லை அபுஅஃப்ஸர்...எத்தனையோ காதலர்களை பார்த்த கடல் இந்த காதலியின் வருகைக்காகவும் காத்திருந்தது...கோடான கோடி ஆண்டுகளில் இவள் இப்போது தான் முதன் முதலாய் தன் காதலனை கடற்கரையில் சந்திக்க வருகிறாள் என்பதற்காக அப்படி சொன்னேன்//

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//முதன் முதலாய்
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
அன்று கடல் அலையின் வேகம்
சற்று கூடித்தான் போயிருந்தது//

ஆமாம் பெண்ணல்லவா அது மட்டும் விதிவிலக்கா என்னா?//

ம்...பெண்ணென்றால் கடலும் காதல் கொள்ளத்தான் செய்யும்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக
//

ஹா என்னா ஒரு போராட்டம் அங்கே//

இதுவும் ஒரு வகையில் போராட்டம் தான்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்
நீ என்னிடம் கோபமாயிருக்கிறாய்
தொட்டாலே பார்வையால் சுட்டுவிடுகிறாய்
என்ன செய்வது...?
///

ஒஹ்ஹ் ஊடலா? அதன் விளைவுதான் இந்த கவிதையோ?//

கவிதைக்காக உருவாக்கப் பட்ட கற்பனையான ஊடல் இது...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//வென்றது காதல்...
எப்படி...?
மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............

///

அதுசரி சமாதானமும் செய்தாச்சா...

காதலுக்கு மயங்காதவர் யார்தான்

எப்போதும்போல் வரிகள் அழகு புதியவன்

வாழ்த்துக்கள்//

விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்
உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்//

வழக்கம் போல ஆரம்ப வரிகள் புதியவன் எழுத்துக்களில் மின்னுகிறது.//

வாங்க செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//முதன் முதலாய்
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
அன்று கடல் அலையின் வேகம்
சற்று கூடித்தான் போயிருந்தது//

நீங்க தற்குறிப்பேற்ற அணியை விடவே மாட்டீர்களா..

உங்கள் ஒவ்வொரு கவிதையிலும் நான் வெகுவாக ரசிப்பது இதை தான்..

விடாதீர்கள்..//

தற்குறிப்பேற்ற அணி என்னை அறியாமலேயே கவிதையில் கலந்து விடுகிறது...உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//ஊடலென்பதே கூடாதென்றிருந்தேன்
காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?
//

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

பெண்ணில் இருக்கு..இந்த பெண்ணில் இருக்கு..//

இவளும் ஒரு பெண் தானே...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?//

ஒவ்வொரு பத்தியிலும் ஸ்கோர் பண்றீங்க...சேவாக் மாதிரி..

சில நேரங்களில் ரஹ்மான் மாதிரி..//

விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
Great touch புதியவன் !!!!!!!//

நன்றி செய்யது...

புதியவன் said...

//ஆதவா said...
உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்


ஆஹா.... ஆரம்பமே அசத்தல்.... எப்படிங்க இப்படி??

உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்

அடடா.. இதுவல்லவோ கற்பனை!!! கற்பனைகளில் இவைகள் மிக உயர்ந்தவை... இதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கிறது?/?//

வாங்க ஆதவன்...கவிதையில் கற்பனையை கலப்பது சுவை கூட்டத் தானே...

புதியவன் said...

//ஆதவா said...
////கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது////

அட.... அதுக்காகத்தானா.... இக்கவிதையின் ஆரம்பம் கண்ட அதிசயம் இன்னும் விலகாமல் அப்படியே இருக்கிறது!!! அழகழகான குட்டி கவிதைகளை ஒன்றொடொன்று இணைத்தார் போல.....//

ஒரே இன்ஸ்ப்ரேசனில் உருவான கவிதைகளின் தொகுப்பு தான் ஆதவன் இது...

புதியவன் said...

//ஆதவா said...
அடப்போங்க... இந்த வரிதான்னு இல்லாம எல்லாவரிகளும் அசத்தல்... எதை விட, எதைத் தொட???

அலைவேக நீட்சி
அவள் தொட எத்தனிக்கும் அலை
வெட்கத்தின் வண்ணம்
கன்னம் கடிக்கும் குழந்தை போல,...
தோற்றுப் போன ஊடல் என்று...

அணியணியாக அசத்தியிருக்கிறீர்கள்...

பிரமாதம்... வியப்பு இன்னும் அடங்கவில்லை//

விரிவான அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஆதவன்...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன்,அத்தனை வரிகளுக்குமே முத்தம் கொடுகலாம் முத்துக்கள்.முத்தம் கொடுக்காவிட்டால் கவிதை வரிகள் என்மேல் ஊடல் கொள்ளும்.//

வாங்க ஹேமா
கவிதை வரிகளும் ஊடல் கொள்ளுமா...?...ம்...நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன்,முத்தத்தைப் பிழிந்தெடுத்து அதைத்தொட்டு வர்ணித்து கவியாய் காற்றில்விட உங்களுக்கு நிகர் நீங்களேதான்.//

அழகிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஹேமா...

புதியவன் said...

//குடந்தைஅன்புமணி said...
காதலில் ஊடல் என்பது பனிக்கட்டி போலத்தான்... அவளின் பார்வைபட்டதும் உருகிடாதோ! பாராட்டுகள்//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி அன்புமணி...

புதியவன் said...

//வேத்தியன் said...
நல்ல கவிதைங்க...//

வாங்க வேத்தியன்...

புதியவன் said...

//வேத்தியன் said...
உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்//

ஆரம்பமே அசத்தல்...//

உங்கள் வருகையும் அசத்தல் தான்...

புதியவன் said...

//வேத்தியன் said...
அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன//

அருமை...//

நன்றி...

புதியவன் said...

//வேத்தியன் said...
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்//

டச்சிங்...//

நன்றி...

புதியவன் said...

//வேத்தியன் said...
கடைசிப் பந்தி அழகுக்கெல்லாம் அழகு...
சூப்பர்...//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வேத்தியன்...

புதியவன் said...

//நசரேயன் said...
//அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?
அள்ளியெடுத்துக் கொஞ்சத்தானே தோன்றும்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது...
முடிவில் யார் தான் வென்றது...?
வென்றது காதல்...
எப்படி...?
மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............//

ரசித்தேன்//

ரசிப்பிற்கு மிக்க நன்றி நசரேயன்...

புதியவன் said...

//Divyapriya said...
அழகான கற்பனை, அருமையான கவிதை...//

மிக்க நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//RAMYA said...
படமும் உங்கள் கவிதை வரிகளும் அட அட அப்படியே தூக்கி எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டன புதியவன்.

உங்களின் எழுத்து நடை நாளுக்கு நாள் புது புது பரிணாமங்களுடன் திகைக்க வைக்கின்றது.//

வாங்க ரம்யா
திகைக்க வைக்கின்றதா...?

புதியவன் said...

//RAMYA said...
//உன் கூந்தலில் சூடிக்கொள்வதற்காக
கிள்ளியெடுக்கப் பட்ட
மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்
//

அட சூப்பர் இந்த வரிகளுக்கு உயிர் இருந்தாலும் அதுவும் உங்களை பாராட்டி இருக்குமே!!

அருமை அருமை புதியவன்.//

நன்றி ரம்யா...

புதியவன் said...

//RAMYA said...
//மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............
//

ம்ம்ம் அது எப்போதுமே அப்படிதானே!!!//

ம்...அப்படித்தான் ரம்யா...

புதியவன் said...

//RAMYA said...
//கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது
//


கடல் அதுதான் ஆர்பரித்துக் கொண்டு இருக்கின்றதே. அந்த ஆர்பரிப்பில் நம்
கதாநாயகியின் அழைப்பு மணி உங்கள் காதில் ஒலிக்க வில்லையோ என்று என் மனதில் ஒரு நெருடல் புதியவன்!!//

அப்படி இல்லை ரம்யா...கடலும் அவளைப் பார்ப்பதற்காக காத்திருப்பதாக சொன்னேன்...

வருகைக்கும் அழகிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரம்யா...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
கூடலின் பொறுட்டான ஊடலும்

ஊடலின் விலைவான கூடலும்

ம்ம்ம் ... அழகுதான்.//

உங்களுக்குத் தெரியாததா ஜமால்...

புதியவன் said...

//ஷீ-நிசி said...
அப்படியே கடற்கரையில் உட்கார்ந்துட்டு ஒரு காதல் ஜோடியினை ரசித்துக்கொண்டிருப்பது போல் இருக்கிறது உங்களின் காதல் கவிதை..

வாழ்த்துக்கள் புதியவரே!

நானும் உங்களுக்கு புதியவனே!

அன்புடன்
ஷீ-நிசி//

உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி ஷீ-நிசி...

புதியவன் said...

//Muthusamy said...
கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது --- I loved it.

love and love only huh? romba over ah than poikittu irukku...//

ஹா...ஹா...ஹா...ரொம்ப ஓவரா போகுதா...?...வருகைக்கு ரொம்ப நன்றி முத்துசாமி...

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
காதல் ரசம் சொட்டுகிறது. மீண்டும் வருகிறேன்//

வருகைக்கு நன்றி நவாஸுதீன்...

புதியவன் said...

//வியா (Viyaa) said...
ஊடலென்பதே கூடாதென்றிருந்தேன்
காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?
ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்
நீ என்னிடம் கோபமாயிருக்கிறாய்
தொட்டாலே பார்வையால் சுட்டுவிடுகிறாய்
என்ன செய்வது...?


இந்த வரிகள் சூப்பர்..
உங்களது கற்பனை அழகு..
வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வியா...

புதியவன் said...

//karpaka said...
சூப்பர்.. கற்பனை ..//

முதல் வருகைக்கு மிக்க நன்றி கற்பகா...

புதியவன் said...

//Poornima Saravana kumar said...
//அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக
//

அற்புதம் புதியவன்!//

நன்றி பூர்ணிமா சரண்...

புதியவன் said...

//Poornima Saravana kumar said...
தலைப்பே கவி சொல்லுதே!!!//

எப்போதும் போல் கவிதையிலிருந்து ஒரு வரி தானே தலைப்பு...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
யாருப்பா அது அரைச‌த‌ம் போடாம‌ வுட்ட‌து ??//

அது உங்களுக்காக விட்டுட்டு போய்ட்டாங்க செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
ஹைய்யா..மீத ஆஃப் ச‌த‌ம்.//

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் செய்யது...

புதியவன் said...

//MaDhi said...
i envy ur writings!! Eppadi ungalala mattum ippadi ellam yosika mudiyudhu.. Kalakals!! :)//

ஹா...ஹா...ஹா...என் எழுத்துக்களின் மேல் பொறாமையா...?...வருகைக்கு நன்றி மதி...

புதியவன் said...

//gayathri said...
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக//

ennamo nadakkuthu nadakkattum nadakkatum//

என்ன நடக்குது...?...நன்றி காயத்ரி...

புதியவன் said...

//Maddy said...
தோற்பதிலும் வெல்வதே காதல்ன்னு அழகா சொல்லி இருக்கீங்க!! அருமை//

சரியா புரிஞ்சிருக்கீங்க நன்றி மேடி...

புதியவன் said...

//து. பவனேஸ்வரி said...
அனைத்து வரிகளும் அருமை... ஊடலும் கூடலும் இருந்தால்தானே காதல். அனுபவித்து எழுதினீர்களோ? இயல்பான எளிமையான அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள்...//

எல்லாம் கற்பனையின் அனுபவம் தான்...வருகைக்கும் அழகிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி பவனேஸ்வரி...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
தோன்றியது செய்யவதே அழகு

அதையும் அழகாய் செய்வது மிக அழகு//

ஜமால்...நான் சொல்ல்வது சரிதான் என்று சரியாகச் சொல்லி விட்டீர்கள்...சுற்றிச் சுற்றி வந்து சூறாவளியாய் கருத்துக்கள் சொன்னதற்கு மிக்க நன்றி ஜமால்...

Anonymous said...

nithamum nithiraiai kollum sathamillatha manthiram enthira vazhakaiel satru vilaga intha thanthirama? arputhaam

Anonymous said...

nithamum nithiraiai kollum sathamillatha manthiram enthira vazhakaiel satru vilaga intha thanthirama? arputhaam

புதியவன் said...

// தமிழரசி said...
nithamum nithiraiai kollum sathamillatha manthiram enthira vazhakaiel satru vilaga intha thanthirama? arputhaam//

முதல் வருகைக்கும் கவிதையான தருகைக்கும் மிக்க நன்றி தமிழரசி...