உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது
அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்
உன் வீட்டிற்குத் தெரியாமல்
எனக்காக நீ மறைத்து
எடுத்து வந்திருந்த
வாழ்த்து அட்டை
காதலர்கள் பரிமாறிக் கொண்ட
முதல் பரிசுப் பொருள்
மலர்களாகத் தான்
இருக்க வேண்டும்
என்ற நம்பிக்கையில்
சற்று தள்ளியதொரு கடையில்
உனக்காக
நான் வாங்கிய
வேற்று தேசத்தில்
பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்
நான் கவனித்தேன்
காதலர்கள்
தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது
எப்படி காதலை சொல்லிக்கொள்வது
என்று தெரியாமல் அங்கு
அடர்ந்திருந்த மௌனங்கள்
அந்த இரண்டு நிமிட மௌனதில்
தொலைந்து போயிருந்தது
என் இரண்டு வருட ஆயுள்...
கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?
முத்தங்கள் என்ற பெயரில்
வெறும் சத்தங்களை மட்டுமே
பரிசளிக்க முடிந்த
சென்ற வருடம் போல்
இந்த வருடமும் முடியவில்லை
காதலர் தினத்தில்
உன்னை சேர்வதற்கு
ஆதலால்,
பதிவுத் தபாலில் பாசம்
பார்சலில் வந்திருக்கிறது
நம் வாழ்த்து அட்டைகளைத் தான்
சொன்னேன்
இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே ஆறுதல்
எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்
நீ அலைபேசியில் அனுப்பிய
இரண்டு குறுஞ்செய்திகள்
வாசித்துப் பார்த்தேன்
எனக்குத் தெரியும்
அவை காதலினால் வந்த
உன் கவிதையின் முயற்சி
உனது முதல் கவிதை
*“உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”
படித்ததும் நெகிழ்ந்தேன்...
உனது அடுத்த கவிதை
*“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”
படித்ததும் அழுதேன்...
அதுவரை கொட்டிய மழை சட்டென நின்றது...மெல்லத் தெளிந்திருந்தது வானம்...என் மனதும் தான்...
இதோ புறப்பட்டுவிட்டேன் இந்தக் காதலர் தினம் மட்டுமல்ல வரும் எந்தக் காதலர் தினமும் இனி உன்னோடு தான்...நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...
(பி.கு. * குறிப்பிட்ட இரண்டு கவிதைகளும் மேலே சொன்னது போல் எனக்குக் குறுஞ்செய்தியில் வந்தவையே..........)
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...
100 comments:
அழகிய கவிதை குறுந்தகவல் கவிதைகளும் அருமை
(பி.கு. * குறிப்பிட்ட இரண்டு கவிதைகளும் மேலே சொன்னது போல் எனக்குக் குறுஞ்செய்தியில் வந்தவையே..........)
REALLYYY?
That's so cute!
புதியவன் உங்கள் கவிதைகள் ரொம்ப நன்றாக இருக்கு....அதைவிட குறுஞ்செய்தியில் வந்தவை Very Nice. Lovely lines!
//நான் கவனித்தேன்
காதலர்கள்
தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது//
நல்லா இருக்குங்க
குறுந்தகவல் கவிதைகள் அருமை
ஒரு காதல் காவியத்தையே அடக்கி விட்டீர்களே!! அத்தனை அருமையாக இருக்கிறது புதியவன்.
என் மனதுக்குள் நானே சொல்லிக் கொண்டது போல இருக்கிறது இக்கவிதை... மறைந்து போன பழைய காதல் மீண்டும் ஒருமுறை என்னுள் எழுந்து என்னை நினைவு படுத்தியது..
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது
அருமையான சந்திப்பை அழகாக நாசூக்காக சொல்லு பாங்கு.. செவ்வரளி மரத்தை நான் பார்த்துக் கூட இருக்கமாட்டேன்.. ஆனால் அந்த காட்சியை கண்முன் காண்கிறேன்.
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்
அபாரம்... முற்றிலும் புதுமை.
உனக்காக
நான் வாங்கிய
வேற்று தேசத்தில்
பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்
இது காதலால் மட்டுமே சாத்தியம். நாம் உலாவுவது கூட வேற்று கிரகமாக இருக்கக்கூடும்..
*“உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”
படித்ததும் நெகிழ்ந்தேன்...
குறுஞ்செய்திக் கவிதை அழகு.. உண்மையிலே உங்களுக்கு வந்ததா?
*“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”
படித்ததும் அழுதேன்...
அபாரம்./ இதை எழுதியவருக்கு என் பாராட்டுக்கள். காதல் எங்கெல்லாம் வெறுமை இருக்கிறதோ, அங்கெல்லாம் நிரம்பிக் கொள்கிறது.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...
காதல் தின வாழ்த்துக்கள் நண்பரே! இன்று மட்டுமல்ல, என்றென்றும் காதலுடன் வாழ்க!!!!
அன்புடன்
ஆதவன்
Hi
உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.
உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
hi puthiyavaraeeeeeee......காதல் தின வாழ்த்துக்கள் அழகிய கவிதை அத்தனை அருமையாக இருக்கிறது,so Very Nice. Lovely lines!
கவிதை அழகு..அத்துனையும் உணர்வுகள்...காதல் வாழ்க
and am little confused about
இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே is it "ஆருதல்" or "ஆறுதல்"?
Thank You,
யாரு sms அனுப்ச்சா? அத சொல்லயே ;)
கவிதை அருமை...
கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?///
மௌனம் பேசவில்லையா?
நீங்கள் மட்டுமல்ல...
காதலும் கொடுத்து வைத்ததுதான்...
உங்களை போல் காதலை காதல் செய்பவர்கள் இருப்பதால்...
காதலும் காதல் செய்யலாம் இனி...
அருமையான அனுபவம்...
அனுபவம் கவிதையாகும் போது...
சொல்லவா வேண்டும்...
வாழ்த்துக்கள்...
//அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது//
செவ்வளிமரத்தை பார்த்ரிராத எனக்கு வரிகளில் புரியவைத்துவிட்டீர்
//காதலர்கள் பரிமாறிக் கொண்ட
முதல் பரிசுப் பொருள்
மலர்களாகத் தான்
இருக்க வேண்டும்//
உண்மை அதுவே ஆயிரம் கவிதை சொல்லும்
//காதலர்கள்
தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது//
ஹா ரசித்த வரி
//நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?//
அதுவும் சரிதான்..
//முத்தங்கள் என்ற பெயரில்
வெறும் சத்தங்களை மட்டுமே
பரிசளிக்க முடிந்த
சென்ற வருடம் போல்
இந்த வருடமும் முடியவில்லை
காதலர் தினத்தில்
உன்னை சேர்வதற்கு//
அங்கேயும் அதேதானா? ம்ம்ம்ம் அப்போதானே கவிதை பிறக்கும்
//உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”
படித்ததும் நெகிழ்ந்தேன்...///
நானும் நெகிழ்ந்தேன்
//இதோ புறப்பட்டுவிட்டேன் இந்தக் காதலர் தினம் மட்டுமல்ல வரும் எந்தக் காதலர் தினமும் இனி உன்னோடு தான்...நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
அப்படியே ஆகட்டும்.. இனிவரும் காதலர்தினங்களில் ஒன்றாகவே இருக்க
என் வாழ்த்துக்கள்
//அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்//
அழகு......
கவிதையினை (சு)வாசிச்சுட்டேன்... விரிவான பின்னூட்டம் விரைவில் போடுறேன்... இப்போ கொஞ்சம் வேலையிருக்கு....
புதியவன்,இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
எப்போதும்போல பி.கு.
இந்தப் பெரி.....ய கவிதை குருந்தகவலிலா!
//இதோ புறப்பட்டுவிட்டேன் இந்தக் காதலர் தினம் மட்டுமல்ல வரும் எந்தக் காதலர் தினமும் இனி உன்னோடு தான்...நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
ஒ..குறுந்தகவலில் அவங்க அனுப்பினாங்களா!
அன்பின் பெருமிதம் உங்களுக்கு.
புதியவன்,எந்த வரிகளில் காதல் இல்லை.அத்தனை வரிகளிலும் காதல் ததும்பி நிற்கிறதே.
மௌனத்துள் உணர்ந்த காதலைச் சொல் எடுத்து எழுதிவிட்டீர்கள்.
அருமை.
புதியவன் அவர்களே...உங்களுக்கு எனது இனிய அன்பர் தின நல்வாழ்த்துக்கள்...
உங்கள் காதல் வெற்றிபெற வாழ்த்துக்கள்...குறுஞ்செய்திகளாக வந்த கவிதைகள் அழகு..
“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”
எனக்குள்ளும் கண்ணீர் வருகிறது இக்கவிதையை வாசித்தால்...
ஒரு வார கால்ம் எனக்கு வலச்சரத்தில் ஆதரவு அளித்தத்ற்கு நன்றி
தேவா..
superb:)
//நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
கலக்கல் ஃபினிஷிங் டச்... ரசித்துப் படித்தேன் ...
அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
ரொம்ப நல்ல உருவகிச்சிருகீங்க.
மொத்தக் கவிதையும் அருமை.
குறுந்தகவலின் இரண்டாவது கவிதை மிகவும் நெகிழ்ச்சி
//உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது//
மலரின் வாசமும், வட்டமிடும் வண்டும்... அழகான ஆரம்பம்..
//அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்//
காதல் பயிரை என்ன அழகா பார்வை நீர் பாய்த்து வளர்க்குறீங்க ;-)
//வேற்று தேசத்தில்
பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்//
Classic...
//கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?//
ஆயிரம் அர்த்தங்கள் தருமே மௌனம்...உண்மை காதலுக்கு வார்த்தைகள் அவசியப்படுமா...??
//ஆதலால்,
பதிவுத் தபாலில் பாசம்
பார்சலில் வந்திருக்கிறது
நம் வாழ்த்து அட்டைகளைத் தான்
சொன்னேன்//
பிரிவின் தவிப்பையும் அழகாக சொல்லிருக்கீங்க புதியவன்...
//*“உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”//
உண்மைதான் படித்ததும் ஒரு நெகிழ்ச்சியிருக்கத்தான் செய்யுது....
//*“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”//
உங்களுக்கு இந்த கவிதையினை அனுப்பியவர்களுக்கு வாழ்த்துகள்...
ரொம்பவும் அருமையாயிருக்கு....
//நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
Fantastic Lines...
Hope you had a very pleasant Valentine's Day... Belated wishes to you... :-)
அட போங்கப்பா...
முதல் சந்திப்பு பற்றி நான் எழுதலாம்னு நினைச்சிட்ருந்தேன்...விட மாட்டீங்களே !!
//காதலர்கள் பரிமாறிக் கொண்ட
முதல் பரிசுப் பொருள்
மலர்களாகத் தான்
இருக்க வேண்டும்
//
உண்மை.
//தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது//
தற்குறிப்பேற்ற அணி...
கலக்குறீங்க புதியவன்.
//கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?//
அங்க தான் நிக்குறார் புதியவன்...
பல நாட்களாக முயற்சி செய்கிறேன்.
உங்களுடைய வலைப்பூவை பின் தொடர முடியவில்லை.
செக் பண்ணுங்க..இல்ல போஸ்ட் போட்டா எனக்கு மெயில் பண்ணுங்க...
Excellent... :))
//நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
Ultiamte...
எந்த வரியைக் குறிப்பிட்டு எப்படி வாழ்த்துவது? அனைத்துமே அருமையாக இருக்கின்றதே? உங்கள் காதலிக்குக் கவிதையையே பரிசாகக் கொடுக்கலாமே?
\\வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?\\
விழிகளின் பரிபாஷையை
எம்மொழியில் எழுதுவது?
\\எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்\\
எத்தனை முறை படித்தாலும்
முதன்முதலாகப் படிப்பதுபோல் உள்ளதடி!!
\\(பி.கு. * குறிப்பிட்ட இரண்டு கவிதைகளும் மேலே சொன்னது போல் எனக்குக் குறுஞ்செய்தியில் வந்தவையே..........)\\
அப்படியா?? Interesting. நமக்கெல்லாம் யாரும் இந்த மாதிரி குறுஞ்செய்தி அனுப்பறது இல்லீங்க. :(
ஹம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டனே புதியவன்...
வழக்கம் போலவே படம் அழகாயிருக்கு...ரசித்தேன்...
"அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது"
காதல் பூ பூத்துவிட்டது ......
உங்க காதல் வண்டுக்கு கூட தெரியுதே ......
இது நிச்சயம் மனிதர் உணர்த்து கொள்ளும் காதல் தானுங்க .....
"உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்"
ரொம்ப பீல் பண்ணி எழுதிருக்கிங்க
"பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்"
காதலி இருக்கும் போதே சைட் ஆஹ்
"பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது"
கர்வம் இல்லைங்க ......
ஒருவரின் சோகத்தை மற்றொருவர் வாங்கி கொள்ள்கிறார்கள்
அருமை ..
நல்ல இருக்கு கவிதைகள்
//இவன் said...
அழகிய கவிதை குறுந்தகவல் கவிதைகளும் அருமை//
மிக்க நன்றி இவன்...
//Mathu said...
(பி.கு. * குறிப்பிட்ட இரண்டு கவிதைகளும் மேலே சொன்னது போல் எனக்குக் குறுஞ்செய்தியில் வந்தவையே..........)
REALLYYY?
That's so cute!//
உண்மை தான் மது...
// Mathu said...
புதியவன் உங்கள் கவிதைகள் ரொம்ப நன்றாக இருக்கு....அதைவிட குறுஞ்செய்தியில் வந்தவை Very Nice. Lovely lines!//
நன்றி மது...
//smile said...
//நான் கவனித்தேன்
காதலர்கள்
தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது//
நல்லா இருக்குங்க
குறுந்தகவல் கவிதைகள் அருமை//
மிக்க நன்றி ஸ்மைல்...
//ஆதவா said...
அபாரம்./ இதை எழுதியவருக்கு என் பாராட்டுக்கள். காதல் எங்கெல்லாம் வெறுமை இருக்கிறதோ, அங்கெல்லாம் நிரம்பிக் கொள்கிறது.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...
காதல் தின வாழ்த்துக்கள் நண்பரே! இன்று மட்டுமல்ல, என்றென்றும் காதலுடன் வாழ்க!!!!
அன்புடன்
ஆதவன்//
விரிவான பின்னுட்டத்திற்கும் வாழ்த்துக்களும் மிக்க நன்றி ஆதவன்...
//aliya said...
hi puthiyavaraeeeeeee......காதல் தின வாழ்த்துக்கள் அழகிய கவிதை அத்தனை அருமையாக இருக்கிறது,so Very Nice. Lovely lines!//
வருகைக்கு...மிக்க நன்றி ஆலியா...
//Muthusamy said...
கவிதை அழகு..அத்துனையும் உணர்வுகள்...காதல் வாழ்க
and am little confused about
இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே is it "ஆருதல்" or "ஆறுதல்"?
Thank You,//
’ஆறுதல்’ என்பது தான் சரியானது...நன்றி முத்துசாமி...
//Divyapriya said...
யாரு sms அனுப்ச்சா? அத சொல்லயே ;)
கவிதை அருமை...//
SMS அனுப்சது யா.......ரு...?
அவங்க ரொம்ப தூரத்துல இருக்கிற ரொம்ப நெருங்கின சொந்தம்...நன்றி திவ்யப்பிரியா...
// thevanmayam said...
கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?///
மௌனம் பேசவில்லையா?//
மௌனம் பேசியதைத் தானே எழுதியிருக்கிறேன்...நன்றி தேவா...
//"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...
நீங்கள் மட்டுமல்ல...
காதலும் கொடுத்து வைத்ததுதான்...
உங்களை போல் காதலை காதல் செய்பவர்கள் இருப்பதால்...
காதலும் காதல் செய்யலாம் இனி...
அருமையான அனுபவம்...
அனுபவம் கவிதையாகும் போது...
சொல்லவா வேண்டும்...
வாழ்த்துக்கள்...//
முதல் வருகைக்கும் அழகிய தருகைக்கும் மிக்க நன்றி மகேந்திரன்...
//அபுஅஃப்ஸர் said...
//அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது//
செவ்வளிமரத்தை பார்த்ரிராத எனக்கு வரிகளில் புரியவைத்துவிட்டீர்/
காதலுக்கான ஒரு சூழலை சொல்வதற்காகவே இந்த வரிகள்...
//அபுஅஃப்ஸர் said...
//காதலர்கள் பரிமாறிக் கொண்ட
முதல் பரிசுப் பொருள்
மலர்களாகத் தான்
இருக்க வேண்டும்//
உண்மை அதுவே ஆயிரம் கவிதை சொல்லும்//
ஆமாம்...காதலர்கள் பரிமாறிக் கொண்ட முதல் பரிசுப் பொருள் மலர்கள் தான் அபுஅஃப்ஸர்...
//அபுஅஃப்ஸர் said...
//காதலர்கள்
தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது//
ஹா ரசித்த வரி//
நன்றி...
//அபுஅஃப்ஸர் said...
//நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?//
அதுவும் சரிதான்..//
ம்ம்ம்...உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்று நினன்க்க்கிறேன்...
//அபுஅஃப்ஸர் said...
//முத்தங்கள் என்ற பெயரில்
வெறும் சத்தங்களை மட்டுமே
பரிசளிக்க முடிந்த
சென்ற வருடம் போல்
இந்த வருடமும் முடியவில்லை
காதலர் தினத்தில்
உன்னை சேர்வதற்கு//
அங்கேயும் அதேதானா? ம்ம்ம்ம் அப்போதானே கவிதை பிறக்கும்//
உண்மை தான் அபுஅஃப்ஸர்...பிரிவில் தான் அதிகமானோர் கவிதை புனைகின்றனர்...
//அபுஅஃப்ஸர் said...
//உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”
படித்ததும் நெகிழ்ந்தேன்...///
நானும் நெகிழ்ந்தேன்//
நன்றி அபுஅஃப்ஸர்...
//அபுஅஃப்ஸர் said...
//இதோ புறப்பட்டுவிட்டேன் இந்தக் காதலர் தினம் மட்டுமல்ல வரும் எந்தக் காதலர் தினமும் இனி உன்னோடு தான்...நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
அப்படியே ஆகட்டும்.. இனிவரும் காதலர்தினங்களில் ஒன்றாகவே இருக்க
என் வாழ்த்துக்கள்//
விரிவான பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...
//ஜீவன் said...
//அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்//
அழகு......//
மிக்க நன்றி ஜீவன் அண்ணா...
//Natchathraa said...
கவிதையினை (சு)வாசிச்சுட்டேன்... விரிவான பின்னூட்டம் விரைவில் போடுறேன்... இப்போ கொஞ்சம் வேலையிருக்கு....//
கவிதையை (சு)வாசித்ததற்கு...நன்றி நட்சத்திரா...
//ஹேமா said...
புதியவன்,இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
எப்போதும்போல பி.கு.
இந்தப் பெரி.....ய கவிதை குருந்தகவலிலா!//
வாங்க ஹேமா...பெரிய கவிதை இல்லை...* குறிப்ப்பிட்ட இரண்டு சிறிய கவிதைகள் குறுந்தகவலில் வந்தவை...
// ஹேமா said...
//இதோ புறப்பட்டுவிட்டேன் இந்தக் காதலர் தினம் மட்டுமல்ல வரும் எந்தக் காதலர் தினமும் இனி உன்னோடு தான்...நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
ஒ..குறுந்தகவலில் அவங்க அனுப்பினாங்களா!
அன்பின் பெருமிதம் உங்களுக்கு.//
காதலில் தான் ஒரு பெண்ணால் அதிகம் நேசிக்கப்படுகிறோம் எனும் போது காதல் பெருமிதம் கொள்ளத்தான் செய்கிறது...
//ஹேமா said...
புதியவன்,எந்த வரிகளில் காதல் இல்லை.அத்தனை வரிகளிலும் காதல் ததும்பி நிற்கிறதே.
மௌனத்துள் உணர்ந்த காதலைச் சொல் எடுத்து எழுதிவிட்டீர்கள்.
அருமை.//
விரிவான பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி ஹேமா...
// Monolisaa said...
புதியவன் அவர்களே...உங்களுக்கு எனது இனிய அன்பர் தின நல்வாழ்த்துக்கள்...
உங்கள் காதல் வெற்றிபெற வாழ்த்துக்கள்...குறுஞ்செய்திகளாக வந்த கவிதைகள் அழகு..
“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”
எனக்குள்ளும் கண்ணீர் வருகிறது இக்கவிதையை வாசித்தால்...//
வருகைதந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி மோனலிசா...
//Poornima Saravana kumar said...
superb:)//
மிக்க நன்றி பூர்ணிமா சரண்...
//ஜி said...
//நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
கலக்கல் ஃபினிஷிங் டச்... ரசித்துப் படித்தேன் ...//
வாங்க ஜி நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது...நன்றி ஜி...
//அமிர்தவர்ஷினி அம்மா said...
அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
ரொம்ப நல்ல உருவகிச்சிருகீங்க.
மொத்தக் கவிதையும் அருமை.
குறுந்தகவலின் இரண்டாவது கவிதை மிகவும் நெகிழ்ச்சி//
மிக்க நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...
// Natchathraa said...
//உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது//
மலரின் வாசமும், வட்டமிடும் வண்டும்... அழகான ஆரம்பம்..
மலர்களுக்கு காதலில் இன்றியமையாத இடமுண்டு அதனால் தான்...
//அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்//
காதல் பயிரை என்ன அழகா பார்வை நீர் பாய்த்து வளர்க்குறீங்க ;-)
எப்படியாவது காதல் வளர வேண்டுமென்று தான்
//வேற்று தேசத்தில்
பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்//
Classic...
நன்றி...
//கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?//
ஆயிரம் அர்த்தங்கள் தருமே மௌனம்...உண்மை காதலுக்கு வார்த்தைகள் அவசியப்படுமா...??
வார்த்தைகள் அவசியமில்லை என்று தான் அனுபவப் பட்டவர்கள் சொல்கிறார்கள்...
//ஆதலால்,
பதிவுத் தபாலில் பாசம்
பார்சலில் வந்திருக்கிறது
நம் வாழ்த்து அட்டைகளைத் தான்
சொன்னேன்//
பிரிவின் தவிப்பையும் அழகாக சொல்லிருக்கீங்க புதியவன்...
உண்மை தான் பிரிந்திருப்பவரின் மனநிலையில் இருந்து எழுதியது தான் இந்த வரிகள்...
//*“உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”//
உண்மைதான் படித்ததும் ஒரு நெகிழ்ச்சியிருக்கத்தான் செய்யுது....
ம்ம்ம்.இதைத்தான் நானும் உணர்ந்தேன்...
//*“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”//
உங்களுக்கு இந்த கவிதையினை அனுப்பியவர்களுக்கு வாழ்த்துகள்...
ரொம்பவும் அருமையாயிருக்கு....
உங்களுடைய வாழ்த்துகளை சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டேன்...
//நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
Fantastic Lines...
Hope you had a very pleasant Valentine's Day... Belated wishes to you... :-)//
விரிவான அழகான பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்சத்திரா...
//அ.மு.செய்யது said...
அட போங்கப்பா...
முதல் சந்திப்பு பற்றி நான் எழுதலாம்னு நினைச்சிட்ருந்தேன்...விட மாட்டீங்களே !!//
அதனாலென்ன...நீங்களும் ஒரு பதிவு எழுதுங்க செய்யது...
// அ.மு.செய்யது said...
//காதலர்கள் பரிமாறிக் கொண்ட
முதல் பரிசுப் பொருள்
மலர்களாகத் தான்
இருக்க வேண்டும்
//
உண்மை.//
அதே தான்...
//அ.மு.செய்யது said...
//தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது//
தற்குறிப்பேற்ற அணி...
கலக்குறீங்க புதியவன்//
மிகச் சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள்...இது தற்குறிப்பேற்ற அணி தான்...
// அ.மு.செய்யது said...
//கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?//
அங்க தான் நிக்குறார் புதியவன்...//
மிக்க நன்றி செய்யது...
//அ.மு.செய்யது said...
பல நாட்களாக முயற்சி செய்கிறேன்.
உங்களுடைய வலைப்பூவை பின் தொடர முடியவில்லை.
செக் பண்ணுங்க..இல்ல போஸ்ட் போட்டா எனக்கு மெயில் பண்ணுங்க...//
என்ன பிரச்சனை என்று தெரியவில்லை செய்யது... பதிவு போட்டால் கட்டாயம் உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன்...நன்றி செய்யது...
//ஸ்ரீமதி said...
Excellent... :))
//நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...//
Ultimate...//
மிக்க நன்றி ஸ்ரீமதி...
//து. பவனேஸ்வரி said...
எந்த வரியைக் குறிப்பிட்டு எப்படி வாழ்த்துவது? அனைத்துமே அருமையாக இருக்கின்றதே? உங்கள் காதலிக்குக் கவிதையையே பரிசாகக் கொடுக்கலாமே?//
கவிதைக்கு கவிதையையே பரிசாகக் கொடுக்கலாம் என்கிறீர்கள்...நன்றி பவனேஸ்வரி...
//விஜய் said...
\\வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?\\
விழிகளின் பரிபாஷையை
எம்மொழியில் எழுதுவது?
அது தெரியாமல் தான் தமிழில் எழுதிவிட்டேன்...
\\எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்\\
எத்தனை முறை படித்தாலும்
முதன்முதலாகப் படிப்பதுபோல் உள்ளதடி!!
இதுவும் நல்லாத்தான் இருக்கு...
\\(பி.கு. * குறிப்பிட்ட இரண்டு கவிதைகளும் மேலே சொன்னது போல் எனக்குக் குறுஞ்செய்தியில் வந்தவையே..........)\\
அப்படியா?? Interesting. நமக்கெல்லாம் யாரும் இந்த மாதிரி குறுஞ்செய்தி அனுப்பறது இல்லீங்க. :(//
இதுகெல்லாம் கவலைப் படாதீங்க விஜய்...நன்றி...
//Natchathraa said...
ஹம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டனே புதியவன்...
வழக்கம் போலவே படம் அழகாயிருக்கு...ரசித்தேன்..//
படத்தை ரசித்தமைக்கு நன்றி நட்சத்திரா...உங்கள் அடுத்த பதிவு எப்போது...?
//MayVee said...
"அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது"
காதல் பூ பூத்துவிட்டது ......
உங்க காதல் வண்டுக்கு கூட தெரியுதே ......
இது நிச்சயம் மனிதர் உணர்த்து கொள்ளும் காதல் தானுங்க .....
ஆமாங்க...இது மனிதக் காதல் தானுங்க...
"உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்"
ரொம்ப பீல் பண்ணி எழுதிருக்கிங்க
ஃபீல் பண்ணினத் தானே எழுத முடியும்...
"பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்"
காதலி இருக்கும் போதே சைட் ஆஹ்
இல்லை...ஒரு அடையாளத்திற்காக சொன்னது...
"பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது"
கர்வம் இல்லைங்க ......
ஒருவரின் சோகத்தை மற்றொருவர் வாங்கி கொள்கிறார்கள்//
ஆஹா...உங்களுக்கு இதில் ரொம்ப அனுபவம் இருக்கு போல...
//MayVee said...
அருமை ..
நல்ல இருக்கு கவிதைகள்//
குறும்பான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி MayVee...
//படத்தை ரசித்தமைக்கு நன்றி நட்சத்திரா...உங்கள் அடுத்த பதிவு எப்போது...?//
நான் இப்போதான் கவிதை எழுதவே கத்துக்கிறேன் புதியவன்.... நல்ல ரசிக்க மட்டுமே தெரியும்....என்னைக்காவது தீடிர்ன்னு தோணும் அப்போ ஏதாச்சும் கிறுக்குவேன்....அவ்வளோதான்...
இப்போ கொஞ்சம் நேரம் கிடைக்குறதில்ல....
SMS...Very touching..
Kavithai...Speechless
Congratulations and have a wonderful valentines day all your life :))
//
இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே ஆறுதல்
எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்
//
அருமையான வரிகள் புதியவன்
நன்றாக ரசித்தேன்.
//
அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்
உன் வீட்டிற்குத் தெரியாமல்
எனக்காக நீ மறைத்து
எடுத்து வந்திருந்த
வாழ்த்து அட்டை//
அருமை அருமை
மறைத்து வைத்ததுதான்
கொடுக்க முடியும்.
உண்மை இங்கே ஊஞ்சலாடுது!!!
குறுந்தகவல் கவிதைகள் அருமை
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்!!!
தாமதத்திற்கு மன்னிக்கவும்!!
//ஸாவரியா said...
SMS...Very touching..
Kavithai...Speechless
Congratulations and have a wonderful valentines day all your life :))//
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஸாவரியா...
//RAMYA said...
//
இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே ஆறுதல்
எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்
//
அருமையான வரிகள் புதியவன்
நன்றாக ரசித்தேன்.//
வாங்க ரம்யா
உங்கள் ரசிப்பிற்கு நன்றி...
//RAMYA said...
//
அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்
உன் வீட்டிற்குத் தெரியாமல்
எனக்காக நீ மறைத்து
எடுத்து வந்திருந்த
வாழ்த்து அட்டை//
அருமை அருமை
மறைத்து வைத்ததுதான்
கொடுக்க முடியும்.
உண்மை இங்கே ஊஞ்சலாடுது!!!//
உண்மை ஊஞ்சலாடுதா...?...காதலில் இந்த கள்ளத் தனமும் அழகு தான்...
// RAMYA said...
குறுந்தகவல் கவிதைகள் அருமை
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்!!!
தாமதத்திற்கு மன்னிக்கவும்!!//
கவிதகளை ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ரம்யா...
உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
KANDIPA MUTHAL SANTHIPU MUTHAL MUTHAM MUTHAL KATHAL ANUPAVAM YARALAUM MARKKA MUDIYATHULA
இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே ஆறுதல்
எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்
NALLAIRUKUGA புதியவன்
1)
NODI KANAKKIL MOUNAM
NINIDA KANAKKIL SIRIPPU
MANI KANAKKIL ARATTAI
KAALAM THORUM INBAM
ITHU ELLAM UNNUDAM MATTUME
2)
NEE EM MEEDHU KOBAMAGA IRNTHALUM, ENAKU INBAMAE....
YEEN ENDRAL SANTHOSAYHIL IRUPATHAI VIDA KOBATHIL NEE ENNAI ADIGAMAGA NINAIPAI....
3)
NEE VIRUMBUM ONDRU UNAKKU KIDAIKLAMAL POGALAM,
VITTUVIDU UNNODU IRUKKUM "BAKKKIYAM" ADHARKKU ILLAI EANDRU
ITHUVUM ENAKU VANTHA குறுந்தகவல் THAN EPPADI IRUKU PA
உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது///
முதல் சந்திப்பு அருமை!!
எப்படி காதலை சொல்லிக்கொள்வது
என்று தெரியாமல் அங்கு
அடர்ந்திருந்த மௌனங்கள்
அந்த இரண்டு நிமிட மௌனதில்
தொலைந்து போயிருந்தது
என் இரண்டு வருட ஆயுள்//
அடடா! அழகு!!
//gayathri said...
உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
KANDIPA MUTHAL SANTHIPU MUTHAL MUTHAM MUTHAL KATHAL ANUPAVAM YARALAUM MARKKA MUDIYATHULA//
வாங்க காயத்ரி
கண்டிப்பா முதல்ல நடக்கும் எந்த நிகழ்வும் மறக்க முடியாதது தான்...
//gayathri said...
இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே ஆறுதல்
எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்
NALLAIRUKUGA புதியவன்/
நன்றி காயத்ரி...
//gayathri said...
1)
NODI KANAKKIL MOUNAM
NINIDA KANAKKIL SIRIPPU
MANI KANAKKIL ARATTAI
KAALAM THORUM INBAM
ITHU ELLAM UNNUDAM MATTUME
2)
NEE EM MEEDHU KOBAMAGA IRNTHALUM, ENAKU INBAMAE....
YEEN ENDRAL SANTHOSAYHIL IRUPATHAI VIDA KOBATHIL NEE ENNAI ADIGAMAGA NINAIPAI....
3)
NEE VIRUMBUM ONDRU UNAKKU KIDAIKLAMAL POGALAM,
VITTUVIDU UNNODU IRUKKUM "BAKKKIYAM" ADHARKKU ILLAI EANDRU
ITHUVUM ENAKU VANTHA குறுந்தகவல் THAN EPPADI IRUKU PA//
ரொம்ப நல்லா இருக்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி காயத்ரி...
//thevanmayam said...
உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது///
முதல் சந்திப்பு அருமை!!//
நன்றி தேவா...
//thevanmayam said...
எப்படி காதலை சொல்லிக்கொள்வது
என்று தெரியாமல் அங்கு
அடர்ந்திருந்த மௌனங்கள்
அந்த இரண்டு நிமிட மௌனதில்
தொலைந்து போயிருந்தது
என் இரண்டு வருட ஆயுள்//
அடடா! அழகு!!//
அப்படியா...நன்றி...
அடுத்த கவிதை எப்போ ???
nalla irukku unga ella kavidhaiyum.....ovvoru kavidhaikkum nalla irukku,nalla irukku nu comment poda than kastama irukku.....nalla feel panni ezhuthureenga..annai therasa kavidhai maadhiri innum neraiya podhu nalam,and yezhai makkal pathtiyum ezhuthunga.....all poems r really so good...
//sathya said...
nalla irukku unga ella kavidhaiyum.....ovvoru kavidhaikkum nalla irukku,nalla irukku nu comment poda than kastama irukku.....nalla feel panni ezhuthureenga..annai therasa kavidhai maadhiri innum neraiya podhu nalam,and yezhai makkal pathtiyum ezhuthunga.....all poems r really so good...//
உங்கள் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி...தொடர்ந்து வருகைதாருங்கள் சத்யா...
Post a Comment