Tuesday, February 10, 2009

ஐந்து நிமிட ஆசையும்…வாழ்விழந்த வார்த்தைகளும்...ஐந்து வருடங்கள்
காதல் பேசியிருக்கிறோம்
இன்னும் சில மாதத்தில்
மணநாளும் வந்து விடும்
விரல்கள் தொட்டுக் கொள்வதைக் கூட
விதிவிலக்காக்கியவள் நீ
என் ஆசையை சொன்னால்
என்ன நினைப்பாயோ...?
இந்த ஐந்து நிமிட ஆசைக்காக
ஐந்து வருடக் காதலை ஏதும்
தவறாக நினைத்திடுவாயோ...?
திருமணத்திற்குப் பின்
நமக்குள் தினம் நடக்கப் போகும்
ஒரு அழகிய நிகழ்வு தானென்றாலும்
இப்போது இதற்கு சம்மதிப்பாயா...?
இது ஒன்றும் தவிர்க்க வேண்டிய
ஆசையில்லை என்றாலும்
தவிர்க்க முடியாததால் தவிக்கிறேன்
நெடுநாட்களாக அடங்காத ஆசையின்
அதீத வலியில் பெற்றெடுக்கப்பட்டது
இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?வாழ்விழந்த வார்த்தைகள்...

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர் பதிவில சாரல் பூர்ணிமா சரண் என்னை டேக் பண்ணி இருந்தாங்க ஏதோ என்னால் முடிந்த சில வார்த்தைகளை எழுதியிருக்கிறேன்...

க்குரோணி – 21870 தேர், 21870 யானை, 65610 குதிரை, 109350 காலாள் கொண்ட சேனை
தபத்திரம் – குடை
ம்மி - பத்து இலட்சத்து எழுபத்தையாயிரத்து இரு நூற்றில் ஒரு பங்கு
சானம் – வடகீழ்த்திசை
ள்ளி – வெங்காயம்
ர்ணநாபி – சிலந்தி
ரிமலர் – செந்தாமரை
காலி – சலவைத் தொழிலாளி
வண்ணம் – மருதாணி
கரம் – மயில்
தவனம் – கடல்
சித்தியம் – தகுதி

இந்த வார்த்தைகளை எல்லாம் நான் எங்கே இருந்து எடுத்தேன்...அப்படின்னு நீங்க சுலபமாக கண்டு பிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்......................


92 comments:

நட்புடன் ஜமால் said...

வந்துட்டேன்

அப்பாலிக்கா படிச்சிட்டு வாரேன்.

புதுகைத் தென்றல் said...

அருமையான கவிதை.

ஆதவா said...

நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேங்க.... கடைசியல மடி தானா???? :D

ஒரு கதையில்தான் திடீர் திருப்பம் நிறைந்த வார்த்தைகள் இருக்கும்.. ஆனால் கவிதையிலும் அப்படி கொண்டு வரலாம் என்றால் அது உங்க்ள் கவிதையாகத்தான் இருக்கும்..

எளிமையாக கொடுத்திருக்கிறீர்கள்.

இந்த ஐந்து நிமிட ஆசைக்காக
ஐந்து வருடக் காதலை ஏதும்
தவறாக நினைத்திடுவாயோ...?


இதிலதாங்க நான் வேற சங்கதின்னு நினைச்சேன்.. என்றாலும் அழகாக இருக்கிறது கவிதை....

இய‌ற்கை said...

arumai

து. பவனேஸ்வரி said...

என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன். நல்ல கவிதை... உங்களால் மட்டும்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.

ஆதவா said...

தமிழ் சொற்கள் பல எனக்கு பரிச்சயம் என்றாலும் (ஆமாம் ஆமாம்.... தமிழந்தானே!!!! (உண்மையில் எனக்கு ஐந்து வயது வரை தமிழ் தெரியாது.... தாய் மொழி தெலுகு) ) நீங்கள் சொன்னவை எல்லாம் ரொம்பவே புதியனவாக இருக்கின்றன...

தமிழர்கள்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள்..... ஒரு இடத்தில் நான் படித்தேன்.... எந்த மொழியை விடவும், தமிழ் மொழியில் எண்களின் எண்ணிக்கைக்கு ஒப்ப தமிழ்பெயர் உண்டாம்..... ம்ம்..... இப்போ தமிழன் படுகிற பாடு இருக்கே!!!! சொல்லி மாளாது..

Muthusamy said...

நன்றாக இருக்கிறது...நன்றி

Muthusamy said...
This comment has been removed by the author.
அபுஅஃப்ஸர் said...

ஐந்து நிமிட ஆசையா? இருங்க உள்ளேபோய்ட்டு வந்து...

அபுஅஃப்ஸர் said...

//ஐந்து வருடங்கள்
காதல் பேசியிருக்கிறோம்
//

5 வருஷம் போதுமா?
காதல் பேசுறதுக்கு

அபுஅஃப்ஸர் said...

//என் ஆசையை சொன்னாள்
என்ன நினைப்பாயோ...?//

5 வருஷம் காதல் செய்யுறீங்கல்லே... கேளுங்க கண்டிப்பா ஒத்துக்குவாங்க‌

அபுஅஃப்ஸர் said...

//நமக்குள் தினம் நடக்கப் போகும்
ஒரு அழகிய நிகழ்வு//

ம்ம் நடக்கட்டும் நல்லாதானிருக்கும்

அபுஅஃப்ஸர் said...

//ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?//

இதைதான் காதல் திருப்பம் என்று சொல்வார்களோ

அபுஅஃப்ஸர் said...

காதலியின் மடியில் சாய்வதற்கு கூட அனுமதி கேட்கும் ஒரே காதலன் நீர்தான்யா
காதலை போற்றும் புதியவனுக்கு என் வாழ்த்துக்கள்

விஜய் said...

அ முதல் ஔ’வன்னா வரை எழுத்துக்கு ஒரு வார்த்தை, நாம் உபயோகப் படுத்தாமல் விட்டுவிட்டோமா? அசத்த்றீங்க

smile said...

அடிமனதில் தோன்றிய
அழகிய நிகழ்வுக்கான
ஐந்து நிமிட ஆசை
அழகிய கவிதை

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

அபுஅஃப்ஸர் said...

//உள்ளி – வெங்காயம்//

மலையாளத்திலும் இதே தான் பேரு

என்னா புதியவன் நீங்க M.A. தமிழ் படிச்சீங்களா

Muthusamy said...

காதலும் காதலர்களும் இப்படி நீங்கள் சொல்வது போலிருந்தால் மிகவும் நல்லதாயிற்றே...இருந்திருந்தால் காதலைப் பற்றி ஒரு வேறு கருத்து இங்கெங்கும் எழுந்திருக்குமோ? பார்க்கலாம்..,

Natchathraa said...

Excellent Pudhiyavan...

//இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?//

ஹம்ம்ம்ம் காதலில் காதலன் காதலி மடியில் தலைசாய்வதும், காதலி காதலன் மார்பில் முகம் புதைத்துக் கொள்வதற்கும் ஈடு இணையில்லையே...

உங்கள் ஏக்கம் நியாயமானதுதான்...
கேட்டுப்பாருங்க நிச்சயம் கிடைக்கும்... :-) :-)

Natchathraa said...

அ முதல் ஔ வரை புதிய தமிழ் சொற்கள்.. கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி...

ஒரு சில வார்த்தைகள் முன்னமே தெரிந்தாலும் பல வார்த்தைகள் புதியன....

Poornima Saravana kumar said...

கவித கவித!!

Poornima Saravana kumar said...

தமிழ் சொற்கள் புதுசா இருக்கு.. எரிமலர் மட்டும் தான் தெரியும்..

(Viyaa) said...

இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?

அருமையான கவிதை.

ஹேமா said...

என்ன புதியவன்,tow in one !நாம் முதல்ல நினைச்சேன் பி.குன்னு.
அப்புறம்தான் புரிஞ்சுக்கிட்டேன்.
வழக்கொழிந்த சொற்கள்.இந்தச் சொற்கள் எல்லாம் அகராதியில் இருந்தாலும், தினசரிப் பாவிப்புக்கு இருந்ததா?உள்ளி-வெண்காயம் மட்டும்தான் தெரிஞ்சதா இருக்கு.

நாங்கள் உள்ளி என்றால் பூண்டு சொல்லுவோம்.வெண்காயம் வெங்காயம்தான்.

ஹேமா said...

சரி...இனிக் கவிதைக்கு வருவோம்.பாருங்க பூர்ணி கவிதை... கவிதைன்னு கூவிக் கூவி விக்கிறாங்கப்பா.

கொஞ்சம்வெட்கமாயிருக்கிற கவிதையா இருக்கு.அதுக்கு பின்னூட்டம் சொல்லணும்.

ஹேமா said...

புதியவன் கேட்டுப் பாருங்க.ஒண்ணும் நினைக்க மாட்டாங்க.5 வருஷம் உங்களைப் புரிஞ்சிக்கிட்டவங்கதானே.இல்லாட்டி இன்னும் கொஞ்ச நாள்தானே.
பொறுத்துக்கோங்க.

ஹேமா said...

புதியவன்,ஆனால் இந்தமுறை கவிதைல ஒரு சோர்வு தெரியுது.என்னமோ இல்ல மாதிரி....என்னன்னு தெரில!

Natchathraa said...

//புதியவன்,ஆனால் இந்தமுறை கவிதைல ஒரு சோர்வு தெரியுது.என்னமோ இல்ல மாதிரி....என்னன்னு தெரில!//

அதேதான்.... என்னமோ மிஸ்ஸிங்....உண்மையிலேயே ரொம்ப சோகத்துல இருக்கீங்களோ???

ஜீவன் said...

புதியவனுக்கு ஊட்டுல சொல்லி பொண்ணு பாக்க சொல்லணும்!

விலாசம் குடுங்க தம்பி!

///என் ஆசையை சொன்னாள்//

''ல்''

நசரேயன் said...

மடியிலே இடம் கிடைச்சதா?

வழக்கு ஒழிந்த சொற்கள் அருமை

Divyapriya said...

கவிதை வழக்கம் போல அருமை :)
வழக்கொழிந்த வார்த்தைகள் எல்லாம் எப்பவோ படிச்ச மாதிரி இருக்கு ;)

Muthusamy said...

You were able to manage for five years and why not a few months huh?

Tamil words are really nice..

Thank You!!

sollarasan said...

மிக அருமையான கவிதை

MaDhi said...

//இது ஒன்றும் தவிர்க்க வேண்டிய
ஆசையில்லை என்றாலும்
தவிர்க்க முடியாததால் தவிக்கிறேன்//

love cant be expressed better!! Man ur writings r such a masterpiece.. Gr8 work :)

TKB காந்தி said...

அழகான பேராசை :) நல்லாயிருக்கு கவிதை :)

நட்புடன் ஜமால் said...

\\நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?\\

மிக அருமை புதியவரே ...

thevanmayam said...

இருந்தால்...
Tuesday, February 10, 2009
ஐந்து நிமிட ஆசையும்…வாழ்விழந்த வார்த்தைகளும்...


ஐந்து வருடங்கள்
காதல் பேசியிருக்கிறோம்
இன்னும் சில மாதத்தில்
மணநாளும் வந்து விடும்
விரல்கள் தொட்டுக் கொள்வதைக் கூட
விதிவிலக்காக்கியவள் நீ
என் ஆசையை சொன்னால்
என்ன நினைப்பாயோ...?
இந்த ஐந்து நிமிட ஆசைக்காக
ஐந்து வருடக் காதலை ஏதும்
தவறாக நினைத்திடுவாயோ...?
திருமணத்திற்குப் பின்///


இதிலதாங்க நான் வேற சங்கதின்னு நினைச்சேன்.. என்றாலும் அழகாக இருக்கிறது கவிதை..

நட்புடன் ஜமால் said...

இம்மி
ஈசானம்

இவை இரண்டு மட்டுமே பரிச்சியம்.

அ முதுல் ஒள

வரை

சொன்ன விதம் அழகு புதியவரே.

thevanmayam said...

நல்ல கவிதை!
10.30 மணிக்கு வலைச்சரம் வரவும்
தேவா.//
உங்கள் பின்னூட்டமே எனக்கு மின்னூட்டம்..

புதியவன் said...

// நட்புடன் ஜமால் said...
வந்துட்டேன்

அப்பாலிக்கா படிச்சிட்டு வாரேன்.//

வாங்க ஜமால்...

புதியவன் said...

//புதுகைத் தென்றல் said...
அருமையான கவிதை.//

மிக்க நன்றி புதுகைத் தென்றல்...

புதியவன் said...

//ஆதவா said...
நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேங்க.... கடைசியல மடி தானா???? :D

ஒரு கதையில்தான் திடீர் திருப்பம் நிறைந்த வார்த்தைகள் இருக்கும்.. ஆனால் கவிதையிலும் அப்படி கொண்டு வரலாம் என்றால் அது உங்க்ள் கவிதையாகத்தான் இருக்கும்..

எளிமையாக கொடுத்திருக்கிறீர்கள்.

இந்த ஐந்து நிமிட ஆசைக்காக
ஐந்து வருடக் காதலை ஏதும்
தவறாக நினைத்திடுவாயோ...?

இதிலதாங்க நான் வேற சங்கதின்னு நினைச்சேன்.. என்றாலும் அழகாக இருக்கிறது கவிதை....//

விரிவான கருத்திற்கு நன்றி ஆதவன்...

புதியவன் said...

//இய‌ற்கை said...
arumai//

முதல் வருகைக்கு நன்றி இயற்கை...

புதியவன் said...

//து. பவனேஸ்வரி said...
என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன். நல்ல கவிதை... உங்களால் மட்டும்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.//

நன்றி து. பவனேஸ்வரி...

புதியவன் said...

//ஆதவா said...
தமிழ் சொற்கள் பல எனக்கு பரிச்சயம் என்றாலும் (ஆமாம் ஆமாம்.... தமிழந்தானே!!!! (உண்மையில் எனக்கு ஐந்து வயது வரை தமிழ் தெரியாது.... தாய் மொழி தெலுகு) ) நீங்கள் சொன்னவை எல்லாம் ரொம்பவே புதியனவாக இருக்கின்றன...

தாய் மொழி தெலுகு...?...உங்க தமிழ் புலமை ஆச்சர்யமான ஆனால் மகிழ்ச்சியான விசயம் ஆதவன்...

தமிழர்கள்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள்..... ஒரு இடத்தில் நான் படித்தேன்.... எந்த மொழியை விடவும், தமிழ் மொழியில் எண்களின் எண்ணிக்கைக்கு ஒப்ப தமிழ்பெயர் உண்டாம்..... ம்ம்..... இப்போ தமிழன் படுகிற பாடு இருக்கே!!!! சொல்லி மாளாது..//

தமிழுக்கும் தமிழனுக்கும் என்றும் அழிவில்லை ஆதவன்...

புதியவன் said...

//Muthusamy said...
நன்றாக இருக்கிறது...நன்றி//

மிக்க நன்றி முத்துசாமி...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
ஐந்து நிமிட ஆசையா? இருங்க உள்ளேபோய்ட்டு வந்து...//

வாங்க அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//ஐந்து வருடங்கள்
காதல் பேசியிருக்கிறோம்
//

5 வருஷம் போதுமா?
காதல் பேசுறதுக்கு//

போதாது தான் என்ன செய்யலாம்...?

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//என் ஆசையை சொன்னாள்
என்ன நினைப்பாயோ...?//

5 வருஷம் காதல் செய்யுறீங்கல்லே... கேளுங்க கண்டிப்பா ஒத்துக்குவாங்க‌//

அப்படின்னா சொல்லுறீங்க...?

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//நமக்குள் தினம் நடக்கப் போகும்
ஒரு அழகிய நிகழ்வு//

ம்ம் நடக்கட்டும் நல்லாதானிருக்கும்//

அனுபவமா அபுஅஃப்ஸர்...?

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?//

இதைதான் காதல் திருப்பம் என்று சொல்வார்களோ//

சரியா கண்டு பிடிச்சுட்டீங்களே...

புதியவன் said...

// அபுஅஃப்ஸர் said...
காதலியின் மடியில் சாய்வதற்கு கூட அனுமதி கேட்கும் ஒரே காதலன் நீர்தான்யா
காதலை போற்றும் புதியவனுக்கு என் வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//விஜய் said...
அ முதல் ஔ’வன்னா வரை எழுத்துக்கு ஒரு வார்த்தை, நாம் உபயோகப் படுத்தாமல் விட்டுவிட்டோமா? அசத்த்றீங்க//

மிக்க நன்றி விஜய்...

புதியவன் said...

//smile said...
அடிமனதில் தோன்றிய
அழகிய நிகழ்வுக்கான
ஐந்து நிமிட ஆசை
அழகிய கவிதை//

நன்றி ஸ்மைல்...

புதியவன் said...

//புதியவன் said...
//அபுஅஃப்ஸர் said...
//உள்ளி – வெங்காயம்//

மலையாளத்திலும் இதே தான் பேரு

என்னா புதியவன் நீங்க M.A. தமிழ் படிச்சீங்களா//

இல்லை அபுஅஃப்ஸர் தமிழ் பள்ளியில் படித்ததோடு சரி...

புதியவன் said...

//Muthusamy said...
காதலும் காதலர்களும் இப்படி நீங்கள் சொல்வது போலிருந்தால் மிகவும் நல்லதாயிற்றே...இருந்திருந்தால் காதலைப் பற்றி ஒரு வேறு கருத்து இங்கெங்கும் எழுந்திருக்குமோ? பார்க்கலாம்..,//

காதல் என்றும் அப்படியே தான் இருக்கிறது சில காதலர்கள் தான்...!?..கருத்திற்கு நன்றி முத்துசாமி...

புதியவன் said...

// Natchathraa said...
Excellent Pudhiyavan...

//இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?//

ஹம்ம்ம்ம் காதலில் காதலன் காதலி மடியில் தலைசாய்வதும், காதலி காதலன் மார்பில் முகம் புதைத்துக் கொள்வதற்கும் ஈடு இணையில்லையே...

உங்கள் ஏக்கம் நியாயமானதுதான்...
கேட்டுப்பாருங்க நிச்சயம் கிடைக்கும்... :-) :-)//

நிச்சயம் கிடைக்குமா...?...உங்கள் நம்பிக்கை வார்த்தைகளுக்கு நன்றி நட்சத்ரா...கவிதையின் நாயகனிடம் இதை சொல்லி விடுகிறேன்...

புதியவன் said...

//Natchathraa said...
அ முதல் ஔ வரை புதிய தமிழ் சொற்கள்.. கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி...

ஒரு சில வார்த்தைகள் முன்னமே தெரிந்தாலும் பல வார்த்தைகள் புதியன....//

மிக்க நன்றி நட்சத்ரா...

புதியவன் said...

//Poornima Saravana kumar said...
கவித கவித!!//

அதே தான்...

புதியவன் said...

//Poornima Saravana kumar said...
தமிழ் சொற்கள் புதுசா இருக்கு.. எரிமலர் மட்டும் தான் தெரியும்..//

இது புதிய சொற்கள் இல்லைங்க பழைய சொற்கள்...நன்றி பூர்ணிமா சரண்...

புதியவன் said...

// (Viyaa) said...
இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?

அருமையான கவிதை.//

மிக்க நன்றி வியா...

புதியவன் said...

//ஹேமா said...
என்ன புதியவன்,tow in one !நாம் முதல்ல நினைச்சேன் பி.குன்னு.
அப்புறம்தான் புரிஞ்சுக்கிட்டேன்.
வழக்கொழிந்த சொற்கள்.இந்தச் சொற்கள் எல்லாம் அகராதியில் இருந்தாலும், தினசரிப் பாவிப்புக்கு இருந்ததா?உள்ளி-வெண்காயம் மட்டும்தான் தெரிஞ்சதா இருக்கு.

நாங்கள் உள்ளி என்றால் பூண்டு சொல்லுவோம்.வெண்காயம் வெங்காயம்தான்.//

ஹேமா...எப்பவுமே பி.கு. நினைப்பு தானே...?
தினசரிப் பாவிப்புக்கு இருந்தத சொற்கள் தான் இவையனைத்தும்...ஆனால் இப்போது இல்லை...சங்க காலத்தில்...

புதியவன் said...

//ஹேமா said...
சரி...இனிக் கவிதைக்கு வருவோம்.பாருங்க பூர்ணி கவிதை... கவிதைன்னு கூவிக் கூவி விக்கிறாங்கப்பா.

கொஞ்சம் வெட்கமாயிருக்கிற கவிதையா இருக்கு.அதுக்கு பின்னூட்டம் சொல்லணும்.//

வெட்கமா இருக்கா...?...அப்படி எதுவும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலியே...

புதியவன் said...

புதியவன் said...
//ஹேமா said...
புதியவன் கேட்டுப் பாருங்க.ஒண்ணும் நினைக்க மாட்டாங்க.5 வருஷம் உங்களைப் புரிஞ்சிக்கிட்டவங்கதானே.இல்லாட்டி இன்னும் கொஞ்ச நாள்தானே.
பொறுத்துக்கோங்க.//

பொறுமையோட இருக்கச் சொல்றீங்க...ம்ம்ம்...சரி...சொல்லி விடுகிறேன்...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன்,ஆனால் இந்தமுறை கவிதைல ஒரு சோர்வு தெரியுது.என்னமோ இல்ல மாதிரி....என்னன்னு தெரில!//

அது என்னான்னு எனக்குத் தெரியும்...ஆனா, அத எப்படி சொல்லுரதுன்னு தான் தெரியல...

புதியவன் said...

//Natchathraa said...
//புதியவன்,ஆனால் இந்தமுறை கவிதைல ஒரு சோர்வு தெரியுது.என்னமோ இல்ல மாதிரி....என்னன்னு தெரில!//

அதேதான்.... என்னமோ மிஸ்ஸிங்....உண்மையிலேயே ரொம்ப சோகத்துல இருக்கீங்களோ???//

என்ன மிஸ்ஸிங்னு தெரியுது ஆனா, எப்படி சொல்வதென்று தெரியவில்லை...
மற்றபடி சோகமெல்லாம் இல்லை...எனக்கு சோகம் சொல்லவும் தெரியாது...நன்றி நட்சத்ரா...

புதியவன் said...

//ஜீவன் said...
புதியவனுக்கு ஊட்டுல சொல்லி பொண்ணு பாக்க சொல்லணும்!

விலாசம் குடுங்க தம்பி!

எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசிக்கலாம் வீட்டுக்கெல்லாம் வேண்டாம் அண்ணா...

///என் ஆசையை சொன்னாள்//

''ல்''//

திருத்திவிட்டேன்...நன்றி ஜீவன் அண்ணா...

புதியவன் said...

//நசரேயன் said...
மடியிலே இடம் கிடைச்சதா?

வழக்கு ஒழிந்த சொற்கள் அருமை//

அனேகமா கிடைச்சிருக்கும்னு தான் நினைக்கிறேன்...நன்றி நசரேயன்...

புதியவன் said...

//Divyapriya said...
கவிதை வழக்கம் போல அருமை :)
வழக்கொழிந்த வார்த்தைகள் எல்லாம் எப்பவோ படிச்ச மாதிரி இருக்கு ;)//

அனைத்தும் முன்பு வழக்கத்தில் இருந்த வார்த்தைகள் தான்...நன்றி திவ்யப்பிரியா...

Natchathraa said...

//என்ன மிஸ்ஸிங்னு தெரியுது ஆனா, எப்படி சொல்வதென்று தெரியவில்லை//

வழக்கத்துக்கு மாறா முத்தத்துக்கு பதிலா மடி கேட்டுட்டமேன்னு வருத்தமா புதியவன்.... :-))

சோகமெல்லாம் இல்லை...எனக்கு சோகம் சொல்லவும் தெரியாது...//

மிக்க மகிழ்ச்சி.... என்றென்றும் இந்த மகிழ்ச்சி உங்களோடு நிலைத்திருக்க வாழ்த்துகள் புதியவன்..

புதியவன் said...

//Muthusamy said...
You were able to manage for five years and why not a few months huh?

Tamil words are really nice..

Thank You!!//

பொறுமையா இருக்கச் சொல்றீங்க...?...நன்றி முத்துசாமி

புதியவன் said...

// MaDhi said...
//இது ஒன்றும் தவிர்க்க வேண்டிய
ஆசையில்லை என்றாலும்
தவிர்க்க முடியாததால் தவிக்கிறேன்//

love cant be expressed better!! Man ur writings r such a masterpiece.. Gr8 work :)//

முதல் வருகைக்கு நன்றி மதி...

புதியவன் said...

//TKB காந்தி said...
அழகான பேராசை :) நல்லாயிருக்கு கவிதை :)//

மிக்க நன்றி காந்தி...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?\\

மிக அருமை புதியவரே ...//

ரசிப்பிற்கு நன்றி ஜமால்...

புதியவன் said...

//thevanmayam said...
இதிலதாங்க நான் வேற சங்கதின்னு நினைச்சேன்.. என்றாலும் அழகாக இருக்கிறது கவிதை..//

நன்றி தேவா...

புதியவன் said...

புதியவன் said...
// Natchathraa said...
//என்ன மிஸ்ஸிங்னு தெரியுது ஆனா, எப்படி சொல்வதென்று தெரியவில்லை//

வழக்கத்துக்கு மாறா முத்தத்துக்கு பதிலா மடி கேட்டுட்டமேன்னு வருத்தமா புதியவன்.... :-))

அப்படிக் கூட இருக்கலாம்...ஆனா வருத்தம் இல்லை...எப்படியும் கிடைக்கும்னு நம்பிக்கை தான்... இது போன்ற சின்னச்சின்ன எதிர்பர்ர்ப்புகள் தானே காதலுக்கு அழகு...

சோகமெல்லாம் இல்லை...எனக்கு சோகம் சொல்லவும் தெரியாது...//

மிக்க மகிழ்ச்சி.... என்றென்றும் இந்த மகிழ்ச்சி உங்களோடு நிலைத்திருக்க வாழ்த்துகள் புதியவன்..//

வாழ்த்துக்களுக்கு நன்றி நட்சத்ரா...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
இம்மி
ஈசானம்

இவை இரண்டு மட்டுமே பரிச்சியம்.

அ முதுல் ஒள

வரை

சொன்ன விதம் அழகு புதியவரே.//

நன்றி ஜமால்...நீங்களும் இதற்கு ஒரு பதிவு போட வேண்டி இருக்கு...நினைவிருக்கட்டும்...

Natchathraa said...

//இது போன்ற சின்னச்சின்ன எதிர்பர்ர்ப்புகள் தானே காதலுக்கு அழகு...//

100% உண்மை... எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறட்டும்....

அன்புடன்

நட்சத்திரா

ஸ்ரீமதி said...

மிக நன்று புதியவன் கவிதையும், புதிய வார்த்தைகளும் :)))))

ஸாவரியா said...

////இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?//

நிஜமா...??? நான் நம்ப மாட்டேன்... ;-)))

நான் கூட முத்தம் எதுவும் கேட்கப் போறீங்க்களோ நினைச்சேன்...கடைசில பாருங்க அவங்க கல்யாணத்துக்கப்பறம் கேட்கப் போறாங்க.."இந்த 5 வருஷத்துல ஐந்தே நிமிடங்கள் கண் மூடி தலைசாய மடி கூடவா உங்களுக்கு கேட்கத் தோணலன்னு":)))

இம்மி, ஈசானம் - எங்க வீட்ல அம்மா சொல்லி கேட்டுருக்கேன்.
உள்ளி - நாகர்கோவில் பக்கம் அப்படி தான் வெங்காயத்தை சொல்றாங்க...நான் அது ஏதோ வட சொல்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்

மற்றதெல்லாம் செய்யுள் பார்த்த ஞாபகம்...அழகான தொகுப்பு.

கலக்குறீங்க புதியவன்

தாரணி பிரியா said...

கவிதை அருமை :)அசத்தறீங்க

புதியவன் said...

//Natchathraa said...
//இது போன்ற சின்னச்சின்ன எதிர்பர்ர்ப்புகள் தானே காதலுக்கு அழகு...//

100% உண்மை... எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறட்டும்....

அன்புடன்

நட்சத்திரா//

உங்கள் அன்புக்கு மீண்டும் ஒரு நன்றி நட்சத்திரா...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
மிக நன்று புதியவன் கவிதையும், புதிய வார்த்தைகளும் :)))))//

புதிய வார்த்தைகள்...!?...நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//ஸாவரியா said...
////இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?//

நிஜமா...??? நான் நம்ப மாட்டேன்... ;-)))

ஐயோ...சொன்னா நம்புங்க ஃப்ளீஸ்...

நான் கூட முத்தம் எதுவும் கேட்கப் போறீங்க்களோ நினைச்சேன்...கடைசில பாருங்க அவங்க கல்யாணத்துக்கப்பறம் கேட்கப் போறாங்க.."இந்த 5 வருஷத்துல ஐந்தே நிமிடங்கள் கண் மூடி தலைசாய மடி கூடவா உங்களுக்கு கேட்கத் தோணலன்னு":)))

அப்படியா...பொண்ணுங்களை புரிந்து கொள்வது கொஞ்சம் ரொம்பவே கஷ்டம் தான் போலிருக்கு...ஆனா, எனக்கு அந்த கஷ்டம் இல்லப்பா...

இம்மி, ஈசானம் - எங்க வீட்ல அம்மா சொல்லி கேட்டுருக்கேன்.
உள்ளி - நாகர்கோவில் பக்கம் அப்படி தான் வெங்காயத்தை சொல்றாங்க...நான் அது ஏதோ வட சொல்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்

உள்ளி - தமிழ் வார்த்தை தான் மலையாளத்திலும் இதே தான்னு நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார்...

மற்றதெல்லாம் செய்யுள் பார்த்த ஞாபகம்...அழகான தொகுப்பு.

கலக்குறீங்க புதியவன்//

விரிவான குறும்பான தருகைக்கு நன்றி ஸாவரியா...

புதியவன் said...

//தாரணி பிரியா said...
கவிதை அருமை :)அசத்தறீங்க//

மிக்க நன்றி தாரணி பிரியா...

வேத்தியன் said...

கவிதை அருமைங்க...
வாழ்த்துகள்...

Mathu said...

அருமையான கவிதை :))

புதியவன் said...

//வேத்தியன் said...
கவிதை அருமைங்க...
வாழ்த்துகள்...//

முதல் வருகைக்கு நன்றி வேத்தியன்...

புதியவன் said...

//Mathu said...
அருமையான கவிதை :))//

மிக்க நன்றி மது...

Anonymous said...

உங்கள் கவிதைகள் அருமை.

புதியவன் said...

//SHAFIUDEEN said...
உங்கள் கவிதைகள் அருமை.//

முதல் வருகைக்கு நன்றி ஷஃபியுதீன்...