Monday, February 2, 2009

இன்றும் தொடர்கிறது…


நமக்கான தனிமையின் எல்லைகள்
வரையறுக்கப் பட்டிருக்கவில்லை
என்ற போதிலும்
எனக்கான அவளைப் பற்றியும்
உனக்கான அவனைப் பற்றியும்
இரண்டங்குல இடைவெளியில்
பேசிக் கொண்ட ரகசியங்கள்
நமக்கான உறவில்
எந்த ஒரு மாற்றத்தையும்
ஏற்படுத்தி இருக்கவில்லை
இவன் தான் உனக்கான அவன் என்று
நீ அவனுடைய புகைப்படம் காட்டி
உனக்கு பிடித்திருக்கிறதா...?
என்று கேட்க்கும் வரை
அதன் பிறகு
நமக்கான இடைவெளி அகண்டது
அந்த அகண்ட வெளி முழுதும்
அர்த்த மற்ற எண்ணங்கள்
ஆக்கிரமித்துக் கொண்டன
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சொல்ல வந்து சிதறுண்டன சொற்கள்
கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................


53 comments:

அப்துல்மாலிக் said...

//எனக்கான அவளைப் பற்றியும்
உனக்கான அவனைப் பற்றியும்
இரண்டங்குல இடைவெளியில்
பேசிக் கொண்ட ரகசியங்கள்//

என்னாவா இருக்கும்
யோசித்திக்கிட்டிருக்கிறேன்

அப்துல்மாலிக் said...

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//

காதலுக்கு முன் நட்புதானே

அப்துல்மாலிக் said...

நல்ல வரிகள் புதியவன்.. வாழ்த்துக்கள்

Poornima Saravana kumar said...

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு..........//


அழகா சொல்லி இருக்கீங்க புதியவன்.. ஆமாம் ஏன் இந்த கால தாமதம்??

நட்புடன் ஜமால் said...

இன்னுமாஆஆஆஆஆஆஆஅ

நட்புடன் ஜமால் said...

\\PoornimaSaran said...

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு..........//


அழகா சொல்லி இருக்கீங்க புதியவன்.. ஆமாம் ஏன் இந்த கால தாமதம்??\\

ஆமாம் ஏன்ப்பா ...

நட்புடன் ஜமால் said...

\\கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...\\

இது அவங்களா ...

Divyapriya said...

//இவன் தான் உனக்கான அவன் என்று
நீ அவனுடைய புகைப்படம் காட்டி
உனக்கு பிடித்திருக்கிறதா...?
என்று கேட்க்கும் வரை//

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//


ச்சே, என்ன ஒரு யதார்த்தமான கவிதை....அருமை, அருமை...

ஹேமா said...

புதியவன்,ஒரே.....குழப்பமா இருக்கு.கொஞ்சம் பொறுங்க.
இன்னும் 4-5 தரம் வாசிச்சிட்டு வரேன்.எதுக்கும் ஓட்டுப் போட்டு வைக்கிறேன்.

ஹேமா said...

புரிஞ்சுபோச்சு.காதலும் நட்பும் குழம்பிக் கிடக்கு.அதுதானே!

//இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//

வரிகள் அழகு.

Muthusamy Palaniappan said...

நல்லா இருக்கு

Anonymous said...

//எனக்கான அவளைப் பற்றியும்
உனக்கான அவனைப் பற்றியும்
இரண்டங்குல இடைவெளியில்
பேசிக் கொண்ட ரகசியங்கள்//
nice

Vijay said...

கொடிது கொடிது, தன் காதலி தன்னிடம் இவன் என் காதலன் எனக் காட்டுவது.

மேலும் காதலாக்கிக் கொள்ள வேண்டும் என்று உண்டாகும் நட்பு போலி நட்பாகும். உண்மையான நட்பு காதலாக மாறாதிருந்தாலும், நட்பில் பிழை இருக்காது. இது என் தாழ்மையான கருத்து.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நல்லா இருக்கு புதியவன்

Mathu said...

புரிது...ஆனா புரியல....
கவிதை நல்லா இருக்கு புதியவன். :)

sa said...

அருமையான பதிவு.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

boopathiraja said...

இதயத்தை தொடும் - இலக்கணப் பிழை வரிகள்

இப்படிக்கு - பூபதிராஜா

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

ஆதவா said...

உலகிலேயே கொடுமையான விஷயம், காதலனிடமே இன்னொரு காதலனைக் காண்பிப்பது... கவிதையின் இறுதி வரிகள் பிரமாதம்...

/////இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு////

சில நேரங்களில் இலக்கணப் பிழைகூட வாழ்க்கைக்கு உசிதமாக இருக்கும்...

வாழ்த்துக்கள்.

gayathri said...

நல்ல வரிகள் புதியவன்.. வாழ்த்துக்கள்

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//எனக்கான அவளைப் பற்றியும்
உனக்கான அவனைப் பற்றியும்
இரண்டங்குல இடைவெளியில்
பேசிக் கொண்ட ரகசியங்கள்//

என்னாவா இருக்கும்
யோசித்திக்கிட்டிருக்கிறேன்//

யோசிச்சீங்களே ஏதாவது கிடைத்ததா அபுஅஃப்ஸர்...?

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//

காதலுக்கு முன் நட்புதானே//

அனுபவப்பட்டவங்க சொல்லுரீங்க அப்ப...அப்படித்தான் இருக்கும் போல...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
நல்ல வரிகள் புதியவன்.. வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//PoornimaSaran said...
//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு..........//


அழகா சொல்லி இருக்கீங்க புதியவன்.. ஆமாம் ஏன் இந்த கால தாமதம்??//

ஃப்ளைட் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு அதான் இந்த கால தாமதம்...நன்றி பூர்ணிமா சரண்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
இன்னுமாஆஆஆஆஆஆஆஅ//

இன்னும் நிறைய இருக்கு...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\PoornimaSaran said...

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு..........//


அழகா சொல்லி இருக்கீங்க புதியவன்.. ஆமாம் ஏன் இந்த கால தாமதம்??\\

ஆமாம் ஏன்ப்பா ...//

பூர்ணிமா சரண் கிட்ட பதில் சொல்லிட்டேன் அவங்க கிட்ட கேட்டுக்கோங்க...

புதியவன் said...

// நட்புடன் ஜமால் said...
\\கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...\\

இது அவங்களா ...//

எப்பிடி கண்டு பிடிச்சீங்க...ஆமா எவங்க...?

புதியவன் said...

//Divyapriya said...
//இவன் தான் உனக்கான அவன் என்று
நீ அவனுடைய புகைப்படம் காட்டி
உனக்கு பிடித்திருக்கிறதா...?
என்று கேட்க்கும் வரை//

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//


ச்சே, என்ன ஒரு யதார்த்தமான கவிதை....அருமை, அருமை...//

ரொம்ப நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன்,ஒரே.....குழப்பமா இருக்கு.கொஞ்சம் பொறுங்க.
இன்னும் 4-5 தரம் வாசிச்சிட்டு வரேன்.எதுக்கும் ஓட்டுப் போட்டு வைக்கிறேன்.//

என்ன குழப்பம் ஹேமா...?

புதியவன் said...

//ஹேமா said...
புரிஞ்சுபோச்சு.காதலும் நட்பும் குழம்பிக் கிடக்கு.அதுதானே!

//இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//

வரிகள் அழகு.//

அதேதான்...அப்பா...குழப்பம் தீர்ந்துடுச்சா...நன்றி ஹேமா...

புதியவன் said...

//Muthusamy said...
நல்லா இருக்கு//

மிக்க நன்றி முத்துசாமி...

புதியவன் said...

//கவின் said...
//எனக்கான அவளைப் பற்றியும்
உனக்கான அவனைப் பற்றியும்
இரண்டங்குல இடைவெளியில்
பேசிக் கொண்ட ரகசியங்கள்//
nice//

நன்றி கவின்...

புதியவன் said...

//விஜய் said...
கொடிது கொடிது, தன் காதலி தன்னிடம் இவன் என் காதலன் எனக் காட்டுவது.

மேலும் காதலாக்கிக் கொள்ள வேண்டும் என்று உண்டாகும் நட்பு போலி நட்பாகும். உண்மையான நட்பு காதலாக மாறாதிருந்தாலும், நட்பில் பிழை இருக்காது. இது என் தாழ்மையான கருத்து.//

வாங்க விஜய்

புகைப்படத்தை காட்டும் வரை அவள் மேல் அவனுக்கு உள்ளது காதல் என்று அவன் உணர்ந்திருக்கவில்லை அதனால் தான் ”கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது” என்று எழுதியிருக்கிறேன்...நன்றி விஜய்...

புதியவன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
ரொம்ப நல்லா இருக்கு புதியவன்//

மிக்க நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...

புதியவன் said...

//Mathu said...
புரியுது...ஆனா புரியல....
கவிதை நல்லா இருக்கு புதியவன். :)//

முதல்ல புரிஞ்சதுல மது...அப்ப சரி இரண்டாவது புரியலைன்னா பரவாயில்லை...நன்றி மது...

புதியவன் said...

// viji said...
அருமையான பதிவு.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php/

சேர்ந்துவிட்டேன் நன்றி விஜி...

புதியவன் said...

//Boopathi Raja said...
இதயத்தை தொடும் - இலக்கணப் பிழை வரிகள்

இப்படிக்கு - பூபதிராஜா//

முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி பூபதி ராஜா...

புதியவன் said...

//ஆதவா said...
உலகிலேயே கொடுமையான விஷயம், காதலனிடமே இன்னொரு காதலனைக் காண்பிப்பது... கவிதையின் இறுதி வரிகள் பிரமாதம்...

/////இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு////

சில நேரங்களில் இலக்கணப் பிழைகூட வாழ்க்கைக்கு உசிதமாக இருக்கும்...

வாழ்த்துக்கள்.//


கவிதையை சரியாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி ஆதவன்...

புதியவன் said...

//gayathri said...
நல்ல வரிகள் புதியவன்.. வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி காயத்ரி...

Natchathraa said...

அழகான கவிதை...

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு..................//

இப்படித்தான் பல காதல் நட்பாகவே தொடருகிறது... சில பாதியிலேயே வலியுடன் முடிகிறது.....

புதியவன் said...

//Natchathraa said...
அழகான கவிதை...

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு..................//

இப்படித்தான் பல காதல் நட்பாகவே தொடருகிறது... சில பாதியிலேயே வலியுடன் முடிகிறது.....//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சொல்லாத எத்தனையோ காதல்கள் ஒருவித வலியோடுதான் நட்பாகத் தொடர்கின்றன...மிக்க நன்றி நட்சத்ரா...

Unknown said...

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//

அருமை :))

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//

அருமை :))//

மிக்க நன்றி ஸ்ரீமதி...

Mohan R said...

'நீ அவனுடைய புகைப்படம் காட்டி
உனக்கு பிடித்திருக்கிறதா...?
என்று கேட்க்கும் வரை
அதன் பிறகு
நமக்கான இடைவெளி அகண்டது'

'கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................'

அழகிய வரிகள் ஒரே feelingsa போச்சு

MSK / Saravana said...

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//

அட்டகாசம் புதியவன்.. :)

புதியவன் said...

//இவன் said...
'நீ அவனுடைய புகைப்படம் காட்டி
உனக்கு பிடித்திருக்கிறதா...?
என்று கேட்க்கும் வரை
அதன் பிறகு
நமக்கான இடைவெளி அகண்டது'

'கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................'

அழகிய வரிகள் ஒரே feelingsa போச்சு//

முதல் வருகைக்கும் அழகிய தருகைக்கும் நன்றி இவன்...

புதியவன் said...

//Saravana Kumar MSK said...
//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................//

அட்டகாசம் புதியவன்.. :)//

மிக்க நன்றி சரவணன்...

anujanya said...

நல்லா இருக்கு.

அனுஜன்யா

புதியவன் said...

//அனுஜன்யா said...
நல்லா இருக்கு.

அனுஜன்யா//

மிக்க நன்றி அனுஜன்யா...

Princess said...

EXCELLENT!

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு..........//


எவ்வளவு சரியாய் எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க....ரொம்ப அருமையான வார்ததை தேர்வு

புதியவன் said...

//ஸாவரியா said...
EXCELLENT!

//கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு..........//


எவ்வளவு சரியாய் எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க....ரொம்ப அருமையான வார்ததை தேர்வு//

மிக்க நன்றி ஸாவரியா...

Sakthidevi.I said...

unmaiyana karuththu indha kavidhai....good one..

புதியவன் said...

//sathya said...
unmaiyana karuththu indha kavidhai....good one..//

சில காதல்கள் இப்படித் தான் சொல்லப் படாமல் இலக்கணம் தவறிய நட்பாக தொடர்கிறது...கருத்திற்கு நன்றி சத்யா...