Wednesday, January 28, 2009
உன் காதலினால்...சில நினைவுகள்...
வேலை நிமித்தமாக ஒரு மாத காலம் வெளியூர் செல்கிறேன். நம் திருமணத்திற்குப் பின் நாம் சந்திக்கும் முதல் பிரிவு அது. நான் புறப்படும் போது கட்டி அணைத்து நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் பயணக்களைப்பில் முகம் கழுவிய போதும் கலையாமல் இன்னும் அப்படியே இருக்கிறது. இதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன் உணர்ந்ததில்லை. இப்போது தான் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு. உன் காதலின் கட்டுப்பாட்டில் கடந்து சென்ற அந்த அழகான நாட்களின் நினைவுகள் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய் என் மனக் கண்ணாடியில் பிரதி பலிக்கின்றன.
மணமான முதல் நாள் நான் உன் விரல் தொட்ட போது ஏற்பட்ட திடீர் ஸ்பரிசத்தில் உன் உடல் நடுங்கிய அந்த அழகிய நிமிடங்கள். முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம். இப்படி நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.
கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை. வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில். எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.
அந்த மழைக்கால மாலைப் பொழுதில் மயில்தோகை நிறத்தில் புடவை அணிந்து நீ நடந்து வந்த அழகைப் பார்த்திருந்தால் மயில்கள் மயங்கித்தான் போயிருக்கும். சூடான தேனீர் கோப்பையுடன் இனிப்பான பலகாரத்தட்டுகளுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டி விட்டுப் பின் கடைசியாய் நீ கொடுத்த முத்தம் அந்த மழை நேரக் குளிருக்கு சூடான தேனீரை விட சூடாகத்தான் இருந்தது. அதன் பிறகு உன் முத்தத்தின் தித்திப்பில் இனிப்பான பலகாரம் இனிப்பின்றிப் போனது ஒன்றும் ஆச்சர்யமில்லை.
நினைவலைகள் நீண்டு கொண்டே போகின்றன நிலவொளியின் எதிர்த் திசையில் நிழல்கள் நீள்வது போல்.
கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...இது போன்ற இனியொரு பிரிவுப் பயணத்தை தவிர்த்திட வேண்டும். முன்னைக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன் உன்னைப் பார்ப்பதற்கு...எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................
Subscribe to:
Post Comments (Atom)
86 comments:
உன் இடுப்பில்
என்னை முடிந்து கொள்வாயா
என்று கேட்டேன்
ஏன் இப்படி வெட்கப்படுகிறாய்
\\மணமான முதல் நாள் நான் உன் விரல் தொட்ட போது ஏற்பட்ட திடீர் ஸ்பரிசத்தில் உன் உடல் நடுங்கிய அந்த அழகிய நிமிடங்கள். முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம். இப்படி நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.\\
அப்பு அருமை.
(ஹேமாவுக்கு உடம்பு சரியில்லையாம் - இல்லாங்காட்டு வந்து 99.99% போட்டுட்டு போய்டுவாங்க.)
\\கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு\\
இது வேற தெரியுமா உங்களுக்கு
அப்ப நீங்க நம்ம ஜாதி.
\\நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை\\
அதென்னவோ இப்பையும் தடுமாற்றம் தாங்க ...
\\வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்\\
ஆஹா நல்ல interpreter போல ...
\\என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டி விட்டுப் பின் கடைசியாய் நீ கொடுத்த முத்தம் அந்த மழை நேரக் குளிருக்கு சூடான தேனீரை விட சூடாகத்தான் இருந்தது.\\
அட அட அடா ...
\\முன்னைக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன் உன்னைப் பார்ப்பதற்கு...எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று...\\
அட ஆமான் இல்லை.
மறந்தே போச்சு.
நானும் இத புனைவுன்னே நினைச்சி படிச்சிட்டனா - இந்த வரிகள் பார்த்தவுடன் தான்
இது 99.99% கற்பனைன்னு ஞாபகம் வந்தது.
உன் காதலினால்.. சில நினைவுகள்
என்னா நினைவு அது, இருங்க புதியவன் பார்த்துட்டு வாரேன்
//நம் திருமணத்திற்குப் பின் நாம் சந்திக்கும் முதல் பிரிவு அது//
ரொம்ப கஷ்டம்.. அனுபவம்பா
//இப்போது தான் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு//
நிஜமாலுமே.. உண்மையுலும் உண்மை
அந்த மழைக்கால மாலைப் பொழுதில் மயில்தோகை நிறத்தில் புடவை அணிந்து நீ நடந்து வந்த அழகைப் பார்த்திருந்தால் மயில்கள் மயங்கித்தான் போயிருக்கும். சூடான தேனீர் கோப்பையுடன் இனிப்பான பலகாரத்தட்டுகளுமாய் என் ///
நல்ல வர்ணனை!!!
ஜமால்
என்ன எல்லாம்
கலக்குறாங்க..
ஒரே field ல.
பிரிவ ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க புதியவன்... :)) இது தற்காலிகமானதுதான் இனி இப்படி ஒரு பிரிவு இருந்தாலும் அதை அழகா எதிர்கொள்ளனும்ன்னு தோண வெச்சிருக்கீங்க.. :)) ரொம்ப சூப்பர்.. :))
//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்.//
:))
//முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம்.//
"வெட்கம்" மறுபடியும் ஒரு காவியம்
இதுதான் உங்களோட மூலக்கருவா
உங்க அவங்க நல்லா வெட்கப்படுவாங்களோ??
//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்//
இதன் அர்த்தம் இப்போதான் தெரியுமா?
உஙகளுக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாம போச்சே..
//முன்னைக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன் உன்னைப் பார்ப்பதற்கு...எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................//
ஆவல் அதிகமாக தான் காதலும் அதிகமா இருக்கும்...
ஒன்றும் மட்டும் மிஸ் ஆகிட்டது புதியவனே......
உங்களுக்கு அதிகம் பிடித்த வரிகள்..
"பின் குறிப்பு..... இது முற்றிலும் கற்பனை என்று"
// உன் காதலின் கட்டுப்பாட்டில் கடந்து சென்ற அந்த அழகான நாட்களின் நினைவுகள் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய் என் மனக் கண்ணாடியில் பிரதி பலிக்கின்றன.//
புதியவன் style !!!!!!!!!
//அந்த மழைக்கால மாலைப் பொழுதில் மயில்தோகை நிறத்தில் புடவை அணிந்து நீ நடந்து வந்த அழகைப் பார்த்திருந்தால் மயில்கள் மயங்கித்தான் போயிருக்கும்//
வர்ணனை !!!!! பதிவு முழுவதும் தொய்வில்லாமல் ..சலிப்பு தட்டாமல் பயணிக்கிறது..
எப்படி தான் மெயின்டெய்ன் பன்றீங்களோ !!!
//கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை//
உலகத்துலயே கொஞ்சம் புரிஞ்சுக்றதுக்கு கஷ்டமான லேங்குவேஜ் இதாங்க..அருமை..
//கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை//
உலகத்துலயே கொஞ்சம் புரிஞ்சுக்றதுக்கு கஷ்டமான லேங்குவேஜ் இதாங்க..அருமை..
//முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம்.//
என்னத்த சொல்ல..அனுபவிச்சு பாத்தவங்களுக்கு தான் தெரியும்.
//கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...//
கிறங்கடிக்க வைக்கிறது.....
கலக்கல்:))
பத்து ச....வி புக் படிச்சா மாதிரி ஒரே கிக்கா......!
தயவு செஞ்சு இத compliment ஆ எடுத்துக்கோங்க பாஸ்
hi puthiyavarae neengal yeluthiya un kadalinal sila ninavugal varigalai padittavudan yen idaiyattil yen tirumanattirkku piragu yennavarai pirintha nyabaham yennai ungal kavithaiyaal adiga maagirathu.....ok bye
//நினைவலைகள் நீண்டு கொண்டே போகின்றன நிலவொளியின் எதிர்த் திசையில் நிழல்கள் நீள்வது போல்.//
அருமை…:)))
மிக அழகான உணர்வுகள் மேலும் அழகான
வரிகளில் மலர்ந்திருக்கிறது புதியவன்...!!!
ரசித்துப்படித்தேன்... அருமை..!!!
:))
//முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம்.//
//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்.//
:)))))
மலரினும் மெல்லிய உணர்வுகளை
அதனினும் அழகாக உணர்தியிருக்கிறீர்கள்...!!!
மிகவும் ரசித்தேன்...
இனிய பல படைப்புகளை அளிக்கும்
புதியவனின் பசலை வாழ்க...!! :))))
அத்துனையும் அழகு
நிழலின் அருமை வெயிலில் தெரியும்,மணைவியின் அருமை பிரிவில் தெரியும்.மிக அழகாக சொல்லிருக்கீங்க.
பிரிவு தரும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் , உணர்வுபூர்வமான மிக அழகான பதிவு:))
கவிதையா? கட்டுரையா ?? என விவரிக்க இயலாவண்ணம் , வரிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு;))
Simply Superbbbbb:))
\\வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்.\\
மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டின இவ்வரிகள், அவ்ளோ க்யூட் :))
ரொம்ப நல்லா எழுதிருக்கிறீங்க புதியவன்,
தொடர்ந்து பல அழகிய படைப்புகள் படைக்க, என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :))
ரொம்ப உணர்பூர்வமான அன்பை,..காதலை,..பிரிவுத் துயரை சொல்லும் அழகான படைப்பு...சரி இன்னொரு முறை போய் படிச்சிட்டு வாரேன்..
புதியவன்,சுகமாகி வந்தாச்சு.அட...என்ன புதியவன் பாருங்க 99.99% போடலன்னு ஜமாலுக்கு ரொம்ப வருத்தம்.அடுத்த தடவை போடுங்க.
உங்கள் பதிவை விடப் படத்தை மிகவும் ரசித்தேன்.நானும் எடுத்துக்கொண்டேன்.எவ்வளவு இயல்பாய் பெண்ணின் இயற்கையை இறைவன் இச்சிறு வயதிலேயே கொடுக்கிறானே!வெட்கம் பிடுங்கித் தின்பதாய் சொல்வது இப்படித்தானோ!
புதியவன்,அழகான கற்பனை.படத்திற்கும் பதிவிற்கும் நல்லபொருத்தம்.காதலும் பிரிவும் ஏக்கமும் பதிவு முழுதும் கொட்டிக் கிடக்கு.
//நட்புடன் ஜமால் said...
உன் இடுப்பில்
என்னை முடிந்து கொள்வாயா
என்று கேட்டேன்
ஏன் இப்படி வெட்கப்படுகிறாய்//
வாங்க ஜமால் நீங்க சொன்னது கூட அழகா இருக்கு...
//நட்புடன் ஜமால் said...
\\மணமான முதல் நாள் நான் உன் விரல் தொட்ட போது ஏற்பட்ட திடீர் ஸ்பரிசத்தில் உன் உடல் நடுங்கிய அந்த அழகிய நிமிடங்கள். முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம். இப்படி நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.\\
அப்பு அருமை.
(ஹேமாவுக்கு உடம்பு சரியில்லையாம் - இல்லாங்காட்டு வந்து 99.99% போட்டுட்டு போய்டுவாங்க.)//
இதுக்கு டிஸ்கி எழுத தோணல அதான் லேபில் புனைவுன்னு போட்டுட்டேனே...
//நட்புடன் ஜமால் said...
\\கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு\\
இது வேற தெரியுமா உங்களுக்கு
அப்ப நீங்க நம்ம ஜாதி.//
ஆமாங்கோ...ஆமாங்கோ...
//நட்புடன் ஜமால் said...
\\நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை\\
அதென்னவோ இப்பையும் தடுமாற்றம் தாங்க ...//
நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்...
// நட்புடன் ஜமால் said...
\\வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்\\
ஆஹா நல்ல interpreter போல ...//
இது வித்தியாசமான interpreter சில நேரங்களில் சில அர்த்தங்கள்...
// நட்புடன் ஜமால் said...
\\என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டி விட்டுப் பின் கடைசியாய் நீ கொடுத்த முத்தம் அந்த மழை நேரக் குளிருக்கு சூடான தேனீரை விட சூடாகத்தான் இருந்தது.\\
அட அட அடா ...//
என்ன ஜமால் ஊர் ஞாபகம் வந்திடுச்சா...?
//நட்புடன் ஜமால் said...
\\முன்னைக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன் உன்னைப் பார்ப்பதற்கு...எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று...\\
அட ஆமான் இல்லை.
மறந்தே போச்சு.
நானும் இத புனைவுன்னே நினைச்சி படிச்சிட்டனா - இந்த வரிகள் பார்த்தவுடன் தான்
இது 99.99% கற்பனைன்னு ஞாபகம் வந்தது.//
மிக்க நன்றி ஜமால் உங்கள் குறும்பான கரும்பான பின்னூட்டங்களுக்கு...
//அபுஅஃப்ஸர் said...
உன் காதலினால்.. சில நினைவுகள்
என்னா நினைவு அது, இருங்க புதியவன் பார்த்துட்டு வாரேன்//
வாங்க அபுஅஃப்ஸர்...
//அபுஅஃப்ஸர் said...
//நம் திருமணத்திற்குப் பின் நாம் சந்திக்கும் முதல் பிரிவு அது//
ரொம்ப கஷ்டம்.. அனுபவம்பா//
உண்மை ரொம்ப கஷ்டம் தான்...
//அபுஅஃப்ஸர் said...
//இப்போது தான் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு//
நிஜமாலுமே.. உண்மையுலும் உண்மை//
ரொம்ப அனுபவம் போல...
// thevanmayam said...
அந்த மழைக்கால மாலைப் பொழுதில் மயில்தோகை நிறத்தில் புடவை அணிந்து நீ நடந்து வந்த அழகைப் பார்த்திருந்தால் மயில்கள் மயங்கித்தான் போயிருக்கும். சூடான தேனீர் கோப்பையுடன் இனிப்பான பலகாரத்தட்டுகளுமாய் என் ///
நல்ல வர்ணனை!!!
ஜமால்
என்ன எல்லாம்
கலக்குறாங்க..
ஒரே field ல.//
வாங்க தேவா நீங்களும் கவித்தேநீர்ல கலக்குறீங்களே...நன்றி தேவா...
//ஸ்ரீமதி said...
பிரிவ ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க புதியவன்... :)) இது தற்காலிகமானதுதான் இனி இப்படி ஒரு பிரிவு இருந்தாலும் அதை அழகா எதிர்கொள்ளனும்ன்னு தோண வெச்சிருக்கீங்க.. :)) ரொம்ப சூப்பர்.. :))
//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்.//
:))//
பிரிவு எப்பவுமே தற்காலிகமானது தான் பிரிவைத் தவிர்ப்பதற்கான வழிகள் எல்லோரிடமும் இருக்கத் தான் செய்கின்றன
முயன்றால் பிரிவுத்துயரை குறைத்து விடலாம்...மிக்க நன்றி ஸ்ரீமதி...
//அபுஅஃப்ஸர் said...
//முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம்.//
"வெட்கம்" மறுபடியும் ஒரு காவியம்
இதுதான் உங்களோட மூலக்கருவா
உங்க அவங்க நல்லா வெட்கப்படுவாங்களோ??//
என்ன அபுஅஃப்ஸர் பெண்ணின் வெட்கம் அழகானது தானே...ஆமா எவங்க...?
//அபுஅஃப்ஸர் said...
//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்//
இதன் அர்த்தம் இப்போதான் தெரியுமா?
உஙகளுக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாம போச்சே..//
உங்களுக்குத் தெரியும் அப்படின்னு எனக்கும் தெரியாம போச்சே...
////அபுஅஃப்ஸர் said...
//முன்னைக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன் உன்னைப் பார்ப்பதற்கு...எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................//
ஆவல் அதிகமாக தான் காதலும் அதிகமா இருக்கும்...
ஒன்றும் மட்டும் மிஸ் ஆகிட்டது புதியவனே......
உங்களுக்கு அதிகம் பிடித்த வரிகள்..
"பின் குறிப்பு..... இது முற்றிலும் கற்பனை என்று"//
பின் குறிப்பு போட மிஸ்ஸாயிடுச்சு... ஆனா , லேபில்ல புனைவுன்னு போட்டுட்டேன் பார்க்கலியா...?...நன்றி அபுஅஃப்ஸர்...
//அ.மு.செய்யது said...
// உன் காதலின் கட்டுப்பாட்டில் கடந்து சென்ற அந்த அழகான நாட்களின் நினைவுகள் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய் என் மனக் கண்ணாடியில் பிரதி பலிக்கின்றன.//
புதியவன் style !!!!!!!!!//
வாங்க செய்யது...
//அ.மு.செய்யது said...
//அந்த மழைக்கால மாலைப் பொழுதில் மயில்தோகை நிறத்தில் புடவை அணிந்து நீ நடந்து வந்த அழகைப் பார்த்திருந்தால் மயில்கள் மயங்கித்தான் போயிருக்கும்//
வர்ணனை !!!!! பதிவு முழுவதும் தொய்வில்லாமல் ..சலிப்பு தட்டாமல் பயணிக்கிறது..
எப்படி தான் மெயின்டெய்ன் பன்றீங்களோ !!!//
உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது செய்யது...
//அ.மு.செய்யது said...
//கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை//
உலகத்துலயே கொஞ்சம் புரிஞ்சுக்றதுக்கு கஷ்டமான லேங்குவேஜ் இதாங்க..அருமை..//
கொஞ்சம் ரொம்பவே கஷ்டமான மொழி தான்...
//அ.மு.செய்யது said...
//முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம்.//
என்னத்த சொல்ல..அனுபவிச்சு பாத்தவங்களுக்கு தான் தெரியும்.//
உண்மை தான் செய்யது அனுபவிச்சு பாத்தவங்களுக்கு தான் தெரியும்...
//அ.மு.செய்யது said...
//கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...//
கிறங்கடிக்க வைக்கிறது.....//
மிக்க நன்றி செய்யது விரிவான அழகான பின்னூட்டங்களுக்கு...
//PoornimaSaran said...
கலக்கல்:))//
நன்றி பூர்ணிமா சரண்...
//Raj said...
பத்து ச....வி புக் படிச்சா மாதிரி ஒரே கிக்கா......!
தயவு செஞ்சு இத compliment ஆ எடுத்துக்கோங்க பாஸ்//
என்னது கிக்கா இருக்கா...ஹா...ஹா...ஹா...
Compliment Accepted...
நன்றி ராஜ்...
//aliya said...
hi puthiyavarae neengal yeluthiya un kadalinal sila ninavugal varigalai padittavudan yen idaiyattil yen tirumanattirkku piragu yennavarai pirintha nyabaham yennai ungal kavithaiyaal adiga maagirathu.....ok bye//
வாங்க ஆலியா
நினைவுகள் சுகம் தானே...?... நினைவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்...நன்றி வருகைக்கும் அழகிய தருகைக்கும்...
//Divyapriya said...
//நினைவலைகள் நீண்டு கொண்டே போகின்றன நிலவொளியின் எதிர்த் திசையில் நிழல்கள் நீள்வது போல்.//
அருமை…:)))
//
நன்றி திவ்யப்பிரியா...யாரும் சொல்லாத வரிகளை ரசித்து சுட்டிக் காட்டுவது உங்களின் தனித் தன்மை...மீண்டும் நன்றி...
//நவீன் ப்ரகாஷ் said...
மிக அழகான உணர்வுகள் மேலும் அழகான
வரிகளில் மலர்ந்திருக்கிறது புதியவன்...!!!
ரசித்துப்படித்தேன்... அருமை..!!!
:))//
வாங்க கவிஞரே
தங்களுடைய வருகையும் தருகையும் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...
//நவீன் ப்ரகாஷ் said...
//முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம்.//
//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்.//
:)))))
மலரினும் மெல்லிய உணர்வுகளை
அதனினும் அழகாக உணர்தியிருக்கிறீர்கள்...!!!
மிகவும் ரசித்தேன்...
இனிய பல படைப்புகளை அளிக்கும்
புதியவனின் பசலை வாழ்க...!! :))))//
வரிகளை ரசித்து குறிப்பிட்டு அழகிய வார்த்தைகளால் வாழ்த்து சொன்ன
கவிஞருக்கு நன்றிகள்...
//Muthusamy said...
அத்துனையும் அழகு//
மிக்க நன்றி முத்துசாமி...மீண்டும் வாருங்கள்...
//sollarasan said...
நிழலின் அருமை வெயிலில் தெரியும்,மணைவியின் அருமை பிரிவில் தெரியும்.மிக அழகாக சொல்லிருக்கீங்க.//
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீகள் சொல்லரசன்
வெயிலில் தான் நிழலின் அருமை தெரியும் பிரிவின் போது தான் காதலின் தாக்கம் கூடுதலாகத் தெரியும்...
//Divya said...
பிரிவு தரும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் , உணர்வுபூர்வமான மிக அழகான பதிவு:))
கவிதையா? கட்டுரையா ?? என விவரிக்க இயலாவண்ணம் , வரிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு;))
Simply Superbbbbb:))//
வாங்க திவ்யா
இது கவிதையா...?...கட்டுரையா...?...என்று என்னாலும் இனம் காண முடியவில்லை...
மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன்...
ரசித்தமைக்கு நன்றி...
//Divya said...
\\வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்.\\
மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டின இவ்வரிகள், அவ்ளோ க்யூட் :))//
இந்த வரிகள் எழுதும் போதே எனக்கும் பிடித்து விட்டது உங்களுக்கும் பிடித்தது எனக்கு மகிழ்ச்சியே...
//Divya said...
ரொம்ப நல்லா எழுதிருக்கிறீங்க புதியவன்,
தொடர்ந்து பல அழகிய படைப்புகள் படைக்க, என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :))//
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி திவ்யா...
//ஸாவரியா said...
ரொம்ப உணர்பூர்வமான அன்பை,..காதலை,..பிரிவுத் துயரை சொல்லும் அழகான படைப்பு...சரி இன்னொரு முறை போய் படிச்சிட்டு வாரேன்..//
இன்னொரு முறை படிக்கும் அளவுக்கு உங்களுக்கு பிடித்திருக்கிறதா...?...எனக்கு மகிழ்ச்சி உங்களுக்கு என் நன்றி...
//ஹேமா said...
புதியவன்,சுகமாகி வந்தாச்சு.அட...என்ன புதியவன் பாருங்க 99.99% போடலன்னு ஜமாலுக்கு ரொம்ப வருத்தம்.அடுத்த தடவை போடுங்க.//
வாங்க ஹேமா நீங்க சுகமாகி வந்தது மகிழ்ச்சி...
ஜமாலுக்கு வருத்தமா...அடுத்த முறை 99.99% போட முயற்சி செய்கிறேன்...
//ஹேமா said...
உங்கள் பதிவை விடப் படத்தை மிகவும் ரசித்தேன்.நானும் எடுத்துக்கொண்டேன்.எவ்வளவு இயல்பாய் பெண்ணின் இயற்கையை இறைவன் இச்சிறு வயதிலேயே கொடுக்கிறானே!வெட்கம் பிடுங்கித் தின்பதாய் சொல்வது இப்படித்தானோ!//
அந்தப் படம் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது இது நான் இணையத்தில் தேடி எடுக்கவில்லை நண்பர் ஒருவர் கொடுத்தது...இது உங்களுக்கும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்...
//ஹேமா said...
புதியவன்,அழகான கற்பனை.படத்திற்கும் பதிவிற்கும் நல்லபொருத்தம்.காதலும் பிரிவும் ஏக்கமும் பதிவு முழுதும் கொட்டிக் கிடக்கு.//
ஆகா...ஹேமாவிற்கு இது கற்பனை என்று தெரிந்துவிட்டதா...?...மிக்க நன்றி ஹேமா...
\\ஹேமா said...
புதியவன்,சுகமாகி வந்தாச்சு.அட...என்ன புதியவன் பாருங்க 99.99% போடலன்னு ஜமாலுக்கு ரொம்ப வருத்தம்.அடுத்த தடவை போடுங்க.\\
என்ன ஹேமா - நம்ம இரண்டு பேருக்குமே வருத்தம் தானே.
\\புதியவன் said...
//அபுஅஃப்ஸர் said...
//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்//
இதன் அர்த்தம் இப்போதான் தெரியுமா?
உஙகளுக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாம போச்சே..//
உங்களுக்குத் தெரியும் அப்படின்னு எனக்கும் தெரியாம போச்சே...\\
உங்க இரண்டு பேருக்கும் தெரியும்ன்னு எனக்கு தெரியும்.
//நட்புடன் ஜமால் said...
\\புதியவன் said...
//அபுஅஃப்ஸர் said...
//வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில்//
இதன் அர்த்தம் இப்போதான் தெரியுமா?
உஙகளுக்கு தெரியாது என்பது எனக்கு தெரியாம போச்சே..//
உங்களுக்குத் தெரியும் அப்படின்னு எனக்கும் தெரியாம போச்சே...\\
உங்க இரண்டு பேருக்கும் தெரியும்ன்னு எனக்கு தெரியும்.//
உங்களுக்கும் தெரியும்னு எங்களுக்கும் தெரியும் ஜமால்...
ஜமால்,ம்ம்ம்....நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்ப வருத்தம் புதியவன் 99.99% கற்பனைன்னு போடலைன்னு.ஆனால் உண்மையை அவர் எப்பிடி கற்பனைன்னு எழுதுவார்?
//ஹேமா said...
ஜமால்,ம்ம்ம்....நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்ப வருத்தம் புதியவன் 99.99% கற்பனைன்னு போடலைன்னு.ஆனால் உண்மையை அவர் எப்பிடி கற்பனைன்னு எழுதுவார்?//
ஹேமா லேபில்ல புனைவுன்னு போட்டிருக்கேன் அது 100%க்கு சமம் நீங்க வேணும்னா 0.01% குறைச்சு 99.99% வச்சுக்கோங்க...
:-)0
புதியவன் முதல் பிரிவை மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்...நிரந்தர பிரிவின் வலியை பற்றி என்ன சொல்வீர்கள் ???
//MayVee said...
:-)0//
நன்றி MayVee...
// Monolisaa said...
புதியவன் முதல் பிரிவை மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்...நிரந்தர பிரிவின் வலியை பற்றி என்ன சொல்வீர்கள் ???//
நிரந்தர பிரிவின் வலியை சொல்ல யாரும் நிரந்தரமாய் இருப்பதில்லை மோனலிசா...இருந்தால் தானே அதைப் பற்றி சொல்வதற்கு...நன்றி மோனலிசா...
இது என்ன முதல் பிரிவா??? ஆஹா... அதுகூட ஒரு சுகம் தானே???
ஒரு கவிதையைப் போன்றே நடை இருக்கிறது.
ஆனால் கொஞ்சம் வளர்த்தி நீட்டியிருக்கலாமோ??
//ஆதவா said...
இது என்ன முதல் பிரிவா??? ஆஹா... அதுகூட ஒரு சுகம் தானே???
ஒரு கவிதையைப் போன்றே நடை இருக்கிறது.
ஆனால் கொஞ்சம் வளர்த்தி நீட்டியிருக்கலாமோ??//
பிரிவும் சுகம் தான் பிரியமானவர்களின் நினைவோடிருந்தால்...சில நேரங்களில் நேரமின்மை காரணமாக குறைவாக எழுதவேண்டியுள்ளது...நன்றி ஆதவன்
புதியவன் உங்களோட ஒவ்வொரு எழுத்திலும் காதல் நிரம்பி வழியுது...
படிக்கும் போது எக்கசக்கமா பட்டாம்பூச்சி பறக்குது.....
//கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...//
ரியலி சூப்பர்ப்ப்ப்....
//எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................//
இந்த வரிகள் சொல்லுது இருவருக்குமிடையே எத்தனை அழகான காதல் இருக்கிறதுன்னு....
வாழ்த்துகள்.....
//Natchathraa said...
புதியவன் உங்களோட ஒவ்வொரு எழுத்திலும் காதல் நிரம்பி வழியுது...
படிக்கும் போது எக்கசக்கமா பட்டாம்பூச்சி பறக்குது.....
பட்டாம்பூச்சி பறக்குதா...?...சில மென்மையான நினைவுகள் இப்படித்தான் மென்மையான பட்டாம்பூச்சியாய் மனதிற்குள் சிறகடிக்கும்...
//கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...//
ரியலி சூப்பர்ப்ப்ப்....
நன்றி...
//எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................//
இந்த வரிகள் சொல்லுது இருவருக்குமிடையே எத்தனை அழகான காதல் இருக்கிறதுன்னு....
வாழ்த்துகள்.....//
வருகைக்கும் அழகிய கருத்துக்களுக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்சத்ரா...
ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க புதியவன். உங்க கவிதைகள் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டன. மேலும் மேலும் புதுமைகள் படைக்க என் வாழ்த்துக்கள்
//மோனிபுவன் அம்மா said...
ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க புதியவன். உங்க கவிதைகள் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டன. மேலும் மேலும் புதுமைகள் படைக்க என் வாழ்த்துக்கள்//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மோனிபுவன் அம்மா...
Post a Comment