Tuesday, January 13, 2009

தலைவன்…தலைவி...பிரிவு...இரு கடிதம்...


பிரிந்திருக்கும் காவியக் காதலர்களின் கடிதப் பரிமாற்றம் எப்படி இருந்திருக்கும்...?...ஒரு வேளை இப்படி இருந்திருக்குமோ...?


தலைவியின் கடிதம் :


பொருள் தேடிப் புலம் பெயர்ந்த
என் மன்னவனே
மூன்று திங்கள் முழுதாய் முடிந்துவிட்டது
பாதித் திங்கள் பழுதின்றிப் போய்விட்டது
ஐந்து திங்களானால் அனலாய்ப் போய்விடுவேன்
பகல் பொழுதினில் பாதகமில்லை
இரவு வந்துவிட்டால்
இணைந்திருந்த நினைவெல்லாம்
இன்னல் பல காட்டுகிறது
நாம் சேர்ந்திருந்த சோலையெல்லாம்
என் சேலை பார்த்து சிரிக்கின்றது
மன்னவனே உன் சுவாசமின்றி
இங்கு மலர்களிலும் வாசமில்லை
உடல் மெலிந்தேன்
முகம் பொலிவிழந்தேன்
உறங்கும் உணர்விழந்தேன்
உள்ளத்தின் பிரிவுப் பிணி
உடல் முழுதும் படர்ந்திட்டது
பிணி போக்க மருந்தாக
நீ
வரும்
காலம்
எப்போது............?


தலைவனின் பதில் கடிதம் :

கண் இமைக்குள் வாழ்பவளே
என் இதயத்தை ஆள்பவளே
காலக்கோள் காட்டிய திசையில்
கடல் கடந்து வந்து விட்டேன்
இன்னும் சில காலம்
இருக்கலாமென எண்ணியிருந்தேன்
உன் பிரிவின் பிணி போக்க
வரும் திங்கள் வந்திடுவேன்
பொலிவிழந்த உன் முகத்தில்
முழுமதியைக் காட்டிடுவேன்
நம் பிரிவு சேரும் அப்பொழுதில்
என் வலக்கரம்
உன் வளைக்கரம் பற்றும் போது
உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல
என் சுவாசச் சூட்டின் அலாவலில்
கரைந்து
மறையும்
உன்
பசலை.................(பி.கு. ச்சும்மா...மரபு எழுத்துக்களைக் கலந்து எழுதிப் பார்க்கலாமே
என்ற ஒரு சிறிய ஆசை...பிழையிருப்பின் எப்போதும் போல்
இப்போதும் பொறுத்தருள்க.............)

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

50 comments:

நட்புடன் ஜமால் said...

அழகான புகைப்படம்.

\\"தலைவன்…தலைவி...பிரிவு...இரு கடிதம்..."\\

தலைப்பு அழகு.

கருத்துக்கள் பின்னர் ...

அபுஅஃப்ஸர் said...

என்னத சொல்றது....
இது மரபுக்கவிதை இல்லே தோழரே...இயல்புக்கவிதை...
பிரிவு - துயரம் - காதல் ஒரு அழகான ஓவியம் உங்கள் வரிகளில்....

அபுஅஃப்ஸர் said...

//மன்னவனே உன் சுவாசமின்றி
இங்கு மலர்களிலும் வாசமில்லை//

உண்மையாகவா..?

அபுஅஃப்ஸர் said...

//உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல
என் சுவாசச் சூட்டின் அலாவலில்
கரைந்து
மறையும்
உன்
பசலை.................
//

சொல்றதுக்கு ஒன்னுமில்லை....

அபுஅஃப்ஸர் said...

//நீ
வரும்
காலம்
எப்போது............?////

அதான் எப்போதுனு தெரியலே??????

" உழவன் " " Uzhavan " said...

//என் சுவாசச் சூட்டின் அலாவலில்
கரைந்து
மறையும்
உன்
பசலை//
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

ஹேமா said...

//மூன்று திங்கள் முழுதாய் முடிந்துவிட்டது
பாதித் திங்கள் பழுதின்றிப் போய்விட்டது
ஐந்து திங்களானால் அனலாய்ப் போய்விடுவேன்//

மிகவும் ரசித்த வரிகள்.அருமை.

ஹேமா said...

புதியவன்,சாண்டில்யன் கதை படித்த பிரமை.ஒட்டியாணம் தளர்ந்து,
வளையல் கழன்று என்று நல்லாயிருக்கு.அருமையான கற்பனை.இனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

நல்லா வந்துருக்கு!
அப்படியே ஒரு சரித்திர கதையை அவுத்து விடுங்க!

அனுஜன்யா said...

நல்லா இருக்கு. வித்தியாசமான முயற்சி.

அனுஜன்யா

நசரேயன் said...

கலக்கல், ரெம்ப நல்லா இருக்கு

PoornimaSaran said...

பிரிவைப் பற்றி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க!!

Divyapriya said...

அருமையோ அருமை...வழக்கம் போல இல்ல, வழக்கத்த விட அருமை...அற்புதம்...

//என் வலக்கரம்
உன் வளைக்கரம் பற்றும் போது
உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல//

ஒன்னும் சொல்றதுக்கில்ல...கொன்னுட்டீங்க...

தமிழன்-கறுப்பி... said...

இன்னும் எழுதலாம் நீங்கள்...

ஸ்ரீமதி said...

Super.. :))))))

து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
கவிதை மிகவும் இயல்பாக உள்ளது. படிக்க இதமாக உள்ளது. அருமை... வாழ்த்துக்கள்..

Mathu said...

Very nice. வரிகள் ரொம்ப அழகா உணர்வுபூர்வமா இருக்கு :)

RAMASUBRAMANIA SHARMA said...

"Nalla than irukku"...kavitha...kavitha...good

RAMASUBRAMANIA SHARMA said...

asdfgf:lkmnbj

SUREஷ் said...

கல்யாணம் ஆகிற வரைமட்டுமே இது சாத்தியம்

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
அழகான புகைப்படம்.

\\"தலைவன்…தலைவி...பிரிவு...இரு கடிதம்..."\\

தலைப்பு அழகு.

கருத்துக்கள் பின்னர் ...//

நன்றி ஜமால்

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
என்னத சொல்றது....
இது மரபுக்கவிதை இல்லே தோழரே...இயல்புக்கவிதை...
பிரிவு - துயரம் - காதல் ஒரு அழகான ஓவியம் உங்கள் வரிகளில்....//

இது மரபுக்கவிதை இல்லை நண்பரே
மரபு எழுத்துக்கள் கலந்த ஒரு முயற்சி...

நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//மன்னவனே உன் சுவாசமின்றி
இங்கு மலர்களிலும் வாசமில்லை//

உண்மையாகவா..?//

உண்மையே தான்...
மணம் மிகுந்த மலர்களும்
பிரிவில் மணமின்றியே போகும்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல
என் சுவாசச் சூட்டின் அலாவலில்
கரைந்து
மறையும்
உன்
பசலை.................
//

சொல்றதுக்கு ஒன்னுமில்லை....//

இப்படிச் சொன்னா எப்படி...?

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//நீ
வரும்
காலம்
எப்போது............?////

அதான் எப்போதுனு தெரியலே??????//

இது உங்களுக்கும் தெரியலியா...?

புதியவன் said...

//" உழவன் " " Uzhavan " said...
//என் சுவாசச் சூட்டின் அலாவலில்
கரைந்து
மறையும்
உன்
பசலை//
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்//

முதல் வருகைக்கு நன்றி உழவன்...
கட்டாயம் உங்கள் வலைப்பூ வருகிறேன்...

புதியவன் said...

//ஹேமா said...
//மூன்று திங்கள் முழுதாய் முடிந்துவிட்டது
பாதித் திங்கள் பழுதின்றிப் போய்விட்டது
ஐந்து திங்களானால் அனலாய்ப் போய்விடுவேன்//

மிகவும் ரசித்த வரிகள்.அருமை.//

ரசிப்பிற்கு நன்றி ஹேமா...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன்,சாண்டில்யன் கதை படித்த பிரமை.ஒட்டியாணம் தளர்ந்து,
வளையல் கழன்று என்று நல்லாயிருக்கு.அருமையான கற்பனை.இனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.//

நன்றி ஹேமா...உங்களுக்கும் இனிய தமிழர்
திருநாள் வாழ்த்துக்கள்...

புதியவன் said...

//வால்பையன் said...
நல்லா வந்துருக்கு!
அப்படியே ஒரு சரித்திர கதையை அவுத்து விடுங்க!//

நன்றி வால்பையன்
சரித்திரக் கதை...?...முயற்சி செய்கிறேன்..

புதியவன் said...

//அனுஜன்யா said...
நல்லா இருக்கு. வித்தியாசமான முயற்சி.

அனுஜன்யா//

நன்றி அனுஜன்யா...

புதியவன் said...

//நசரேயன் said...
கலக்கல், ரெம்ப நல்லா இருக்கு//

நன்றி நசரேயன்...

புதியவன் said...

//PoornimaSaran said...
பிரிவைப் பற்றி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க!!//

ரொம்ப நன்றி பூர்ணிமா சரண்...

புதியவன் said...

//Divyapriya said...
அருமையோ அருமை...வழக்கம் போல இல்ல, வழக்கத்த விட அருமை...அற்புதம்...

//என் வலக்கரம்
உன் வளைக்கரம் பற்றும் போது
உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல//

ஒன்னும் சொல்றதுக்கில்ல...கொன்னுட்டீங்க...//

ரொம்ப நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//தமிழன்-கறுப்பி... said...
இன்னும் எழுதலாம் நீங்கள்...//

நன்றி தமிழன்...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
Super.. :))))))//

நன்றி ஸ்ரீமதி...

”பசலை” இந்த வார்த்தையை நினைவு
படுத்தியதற்கு மீண்டும் ஒரு நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
கவிதை மிகவும் இயல்பாக உள்ளது. படிக்க இதமாக உள்ளது. அருமை... வாழ்த்துக்கள்.//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி து. பவனேஸ்வரி...

புதியவன் said...

//Mathu said...
Very nice. வரிகள் ரொம்ப அழகா உணர்வுபூர்வமா இருக்கு :)//

நன்றி மது...

புதியவன் said...

//RAMASUBRAMANIA SHARMA said...
"Nalla than irukku"...kavitha...kavitha...good//

நன்றி ராம சுப்ரமணிய சர்மா...

புதியவன் said...

//RAMASUBRAMANIA SHARMA said...
asdfgf:lkmnbj//

இது என்ன இங்க வந்து டைப்பிங் பழகுறீங்களா...?

குடுகுடுப்பை said...

(பி.கு. ச்சும்மா...மரபு எழுத்துக்களைக் கலந்து எழுதிப் பார்க்கலாமே
என்ற ஒரு சிறிய ஆசை...பிழையிருப்பின் எப்போதும் போல்
இப்போதும் பொறுத்தருள்க.............)//

பொறுத்துக்கொள்கிறேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதியவன் said...

//SUREஷ் said...
கல்யாணம் ஆகிற வரைமட்டுமே இது சாத்தியம்//

என்ன SUREஷ் அப்படி சொல்லிட்டீங்க எப்படி
இருந்தாலும் பிரிவு பிரிவு தானே...

புதியவன் said...

//குடுகுடுப்பை said...
(பி.கு. ச்சும்மா...மரபு எழுத்துக்களைக் கலந்து எழுதிப் பார்க்கலாமே
என்ற ஒரு சிறிய ஆசை...பிழையிருப்பின் எப்போதும் போல்
இப்போதும் பொறுத்தருள்க.............)//

பொறுத்துக்கொள்கிறேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

உங்கள் பொறுமைக்கு நன்றி குடுகுடுப்பை...

" உழவன் " " Uzhavan " said...

"புத்தகம்" கவிதைக்கு தாங்கள் அளித்த பாராட்டுக்கு மிக்க நன்றி !

உழவன்

" உழவன் " " Uzhavan " said...

"புத்தகம்" கவிதைக்கு தாங்கள் அளித்த பாராட்டுக்கு மிக்க நன்றி !

உழவன்

ஆதவா said...

மரபு வார்த்தைகளை ஆங்காங்கே தெளித்திருந்தாலும் மரபுக் கவிதையாகவில்லை.. புதுக்கவிதைதான்..

கடிதம் - பதில்கடிதம் போன்ற வித்தியாச முயற்சிகளுக்கு என் பாராட்டுக்கள்.

////உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல///

அழகு உவமை.. இதைப் போன்றே எனது ஒரு கவிதையிலும்,

விழியிசைவிடுக்கிள் நசிந்தன கனவுகள் என்று ஒரு பதம் உபயோகித்திருப்பேன்..

அன்புடன்
ஆதவன்

புதியவன் said...

//ஆதவா said...
மரபு வார்த்தைகளை ஆங்காங்கே தெளித்திருந்தாலும் மரபுக் கவிதையாகவில்லை.. புதுக்கவிதைதான்..

கடிதம் - பதில்கடிதம் போன்ற வித்தியாச முயற்சிகளுக்கு என் பாராட்டுக்கள்.

////உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல///

அழகு உவமை.. இதைப் போன்றே எனது ஒரு கவிதையிலும்,

விழியிசைவிடுக்கிள் நசிந்தன கனவுகள் என்று ஒரு பதம் உபயோகித்திருப்பேன்..

அன்புடன்
ஆதவன்//

மிக்க நன்றி ஆதவன்...இது மரபு எழுத்துக்களை கலந்து ஒரு சிறிய முயற்சி அவ்வளவே...

sathya said...

tamil book la kaaviyathula padichurukkom..pasala noi paththi...but azhagana onnu athu..good one friend...

புதியவன் said...

//sathya said...
tamil book la kaaviyathula padichurukkom..pasala noi paththi...but azhagana onnu athu..good one friend...//

காவியத்தில படிச்ச அதே பசலை தான்...காதல் நோய் என்று கூட சொல்வார்கள்...காதலில் இந்த பசலையும் அழகு தான்...

sakthi said...

hello anna intha kavithai evlo nalla erukku
ithu kuda poi antha mokkai ya compare pannitengaley

புதியவன் said...

// sakthi said...
hello anna intha kavithai evlo nalla erukku
ithu kuda poi antha mokkai ya compare pannitengaley
//

என்ன சக்தி இப்படி சொல்லிட்டீங்க உங்க கவிதையும் அழகு தான் சக்தி...

என்னுடைய பழைய கவிதையை படித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி சக்தி...