Monday, January 5, 2009

இன்று எப்படியாவது தொட்டுவிட வேண்டும்…


அது ஒரு அதிகாலை
அதோ அந்த வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது
கைப்பிடியளவு சாம்பல்
சிறிது நேரத்தில்
அதிலிருந்து உயிர்த்தெழுகிறேன்
பிறகு மேலெழுந்து
பறக்கத் தொடங்குகிறேன்
இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான்
என்ற நம்பிக்கையில்
எப்படியேனும் தொட்டுவிட வேண்டும்
இந்தச் சூரியனை...
மேலே செல்லச் செல்ல
உடல் முழுதும் சூடாகிறது
இறகுகள் பற்றி எரியத் தொடங்குகின்றன
பறந்து கொண்டே இருக்கிறேன்
முழுதும் எரிந்ததும் சாம்பலாய் விழுகிறேன்
அந்த வெட்ட வெளியில்...
பகல் பறவை தன் தேடல் முடிந்து
அதன் கூடு திரும்புகிறது
இரவின் சிறகு விரியத் தொடங்கி
அதன் இரவுத் தேடல் ஆரம்பமாகிறது
அந்த இரவின் இருளோடு கைகோர்த்து
என் சாம்பலுக்குள் ஏதோ
ரசவாதம் நடக்கிறது
அடுத்த காலை
இதோ மீண்டும் சூரியன் வெளி வருகிறது
அதன் புறஊதாக் கதிர்கள்
ஓஸோன் மண்டலத்தால் புறம் தள்ளப் பட்டு
கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்புக் கதிர்கள்
எட்டு நிமிடத்தில் என்னை எட்டி விடுகின்றன
ஒளி என் மேல் பட்ட உடன்
நானொரு ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுகிறேன்
என் சாம்பலில் இருந்து...
பறக்கத் தொடங்குகிறேன்
சூரியனை இன்று எப்படியாவது
தொட்டுவிட வேண்டுமென்று
இது நெடு நாள் நடக்கும் போராட்டம்
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்...
?
தீர்மானமாய்
நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................



(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...?)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)

43 comments:

நட்புடன் ஜமால் said...

தொட்டாச்சா

நட்புடன் ஜமால் said...

\\நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................\\

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ...

நட்புடன் ஜமால் said...

\\ஒரு கற்பனை மட்டுமே.......\\

நம்பனுமா ...

ஹேமா said...

ஒரு தேடல்,விடாப்பிடியான முயற்சி.
கிடைக்காது என்று தெரிந்த பிறகும் அதன் உத்வேகம்.வாழ்வின் ஆதாரமே ஒரு மனிதன் தன்னில் வைக்கும் நம்பிகைதான்.கவிதை நம்பிக்கை
யோடு பறக்கிறது.அருமை புதியவன்.

ஹேமா said...

நம்பிக்கையோடுதான் தினம் தினம் உங்களைப் புதுப்பித்துக் கொண்டு புதியவனாக இருக்கிறீர்கள்.
தொடருங்கள்.

- இரவீ - said...

உங்களின் உறுதியான நம்பிக்கைக்கு அடிபணிந்து
தணிந்த சூரியன் ஒருநாள் தரையிறங்குவான்.

மிக அருமை புதியவன்.

வால்பையன் said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது!
கிடைக்காம இருக்கிறது கிடைக்காது!!

அப்துல்மாலிக் said...

ஃபீனிக்ஸ் பறவையாய் முயற்சி செய்து உங்கள் இலக்கை எட்டுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

ஆகா.. அருமை புதியவனே, இது முயற்சிக்கு வைக்கப்பட்ட மைல் கல்...

Divyapriya said...

pheonix பறவையை வைத்து எழுதிய விதம் மிக அருமை…கடைசி வரி வரை, எதோ தன்னம்பிக்கை கவிதைன்னே நினைச்சுட்டேன்…:)

நட்புடன் ஜமால் said...

\\பகல் பறவை தன் தேடல் முடிந்து
அதன் கூடு திரும்புகிறது
இரவின் சிறகு விரியத் தொடங்கி\\

அருமை.

து. பவனேஸ்வரி said...

//இது நெடு நாள் நடக்கும் போராட்டம்
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்...?
தீர்மானமாய்
நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................//

அருமையான வரிகள்... கடைசி வரிகளில் ஒருவித விரக்தி தெரிகிறது!

gayathri said...

மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்...?
தீர்மானமாய்
நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................//

muyarchi theruvenai akkum vedama muyarchitu iruka ok

தமிழ். சரவணன் said...

அருமையான கவிதை

Princess said...

ரொம்ப நல்லா இருக்கு! அருமை புதியவன்.

தமிழ் தோழி said...

உங்க கவிதை அருமை.

தமிழ் தோழி said...

அது ஒரு அதிகாலை
அதோ அந்த வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது
கைப்பிடியளவு சாம்பல்
சிறிது நேரத்தில்
அதிலிருந்து உயிர்த்தெழுகிறேன்
பிறகு மேலெழுந்து
பறக்கத் தொடங்குகிறேன்
இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான்
என்ற நம்பிக்கையில்
எப்படியேனும் தொட்டுவிட வேண்டும்
இந்தச் சூரியனை...
மேலே செல்லச் செல்ல
உடல் முழுதும் சூடாகிறது
இறகுகள் பற்றி எரியத் தொடங்குகின்றன
பறந்து கொண்டே இருக்கிறேன்
முழுதும் எரிந்ததும் சாம்பலாய் விழுகிறேன்
அந்த வெட்ட வெளியில்///

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது

Muniappan Pakkangal said...

A beautiful kavithai.

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
தொட்டாச்சா//

முயற்சி தொடர்கிறது...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................\\

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ...//

வேற எப்படி சொல்லுரதாம்...?

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\ஒரு கற்பனை மட்டுமே.......\\

நம்பனுமா ...//

நம்புங்கள்...

புதியவன் said...

//ஹேமா said...
ஒரு தேடல்,விடாப்பிடியான முயற்சி.
கிடைக்காது என்று தெரிந்த பிறகும் அதன் உத்வேகம்.வாழ்வின் ஆதாரமே ஒரு மனிதன் தன்னில் வைக்கும் நம்பிகைதான்.கவிதை நம்பிக்கையோடு பறக்கிறது.அருமை புதியவன்.//

வரிகளின் மிகச் சரியான புரிதலுடன்
உங்கள் பின்னுட்டம் நன்றி ஹேமா...

புதியவன் said...

//ஹேமா said...
நம்பிக்கையோடுதான் தினம் தினம் உங்களைப் புதுப்பித்துக் கொண்டு புதியவனாக இருக்கிறீர்கள்.
தொடருங்கள்.//

நன்றி...

புதியவன் said...

//Ravee (இரவீ ) said...
உங்களின் உறுதியான நம்பிக்கைக்கு அடிபணிந்து
தணிந்த சூரியன் ஒருநாள் தரையிறங்குவான்.

மிக அருமை புதியவன்.//

உற்சாகமான கருத்து நன்றி இரவீ...

புதியவன் said...

//வால்பையன் said...
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது!
கிடைக்காம இருக்கிறது கிடைக்காது!!//

சரியாகச் சொன்னீர்கள் நன்றி வால் பையன்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
ஃபீனிக்ஸ் பறவையாய் முயற்சி செய்து உங்கள் இலக்கை எட்டுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

ஆகா.. அருமை புதியவனே, இது முயற்சிக்கு வைக்கப்பட்ட மைல் கல்...//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//Divyapriya said...
pheonix பறவையை வைத்து எழுதிய விதம் மிக அருமை…கடைசி வரி வரை, எதோ தன்னம்பிக்கை கவிதைன்னே நினைச்சுட்டேன்…:)//

இது தன்னையும் மீறிய நம்பிக்கை
காதலில் மட்டுமே இது சாத்தியம்...
நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

// நட்புடன் ஜமால் said...
\\பகல் பறவை தன் தேடல் முடிந்து
அதன் கூடு திரும்புகிறது
இரவின் சிறகு விரியத் தொடங்கி\\

அருமை.//

நன்றி ஜமால்...

புதியவன் said...

//து. பவனேஸ்வரி said...
//இது நெடு நாள் நடக்கும் போராட்டம்
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்...?
தீர்மானமாய்
நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................//

அருமையான வரிகள்... கடைசி வரிகளில் ஒருவித விரக்தி தெரிகிறது!//

நன்றி து. பவனேஸ்வரி...

புதியவன் said...

// gayathri said...
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்...?
தீர்மானமாய்
நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................//

muyarchi theruvenai akkum vedama muyarchitu iruka ok//

OK...நன்றி காயத்ரி...

புதியவன் said...

//தமிழ். சரவணன் said...
அருமையான கவிதை//

முதல் வருகைக்கு நன்றி தமிழ்.சரவணன்...

புதியவன் said...

//ஸாவரியா said...
ரொம்ப நல்லா இருக்கு! அருமை புதியவன்.//

ரொம்ப நன்றி ஸாவரியா...

புதியவன் said...

//தமிழ் தோழி said...
உங்க கவிதை அருமை.//

மிக்க நன்றி...

புதியவன் said...

//தமிழ் தோழி said...
அது ஒரு அதிகாலை
அதோ அந்த வெட்ட வெளியில்
கொட்டிக் கிடக்கிறது
கைப்பிடியளவு சாம்பல்
சிறிது நேரத்தில்
அதிலிருந்து உயிர்த்தெழுகிறேன்
பிறகு மேலெழுந்து
பறக்கத் தொடங்குகிறேன்
இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான்
என்ற நம்பிக்கையில்
எப்படியேனும் தொட்டுவிட வேண்டும்
இந்தச் சூரியனை...
மேலே செல்லச் செல்ல
உடல் முழுதும் சூடாகிறது
இறகுகள் பற்றி எரியத் தொடங்குகின்றன
பறந்து கொண்டே இருக்கிறேன்
முழுதும் எரிந்ததும் சாம்பலாய் விழுகிறேன்
அந்த வெட்ட வெளியில்///

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது//

தங்கள் ரசிப்பிற்கு நன்றி தமிழ் தோழி...

புதியவன் said...

// Muniappan Pakkangal said...
A beautiful kavithai.//

முதல் வருகைக்கு நன்றி முனியப்பன்...

Poornima Saravana kumar said...

//(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...?)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)//

அது சரி!!

புதியவன் said...

//PoornimaSaran said...
//(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...?)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)//

அது சரி!!//

எது சரி...?

Unknown said...

//(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...?)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)//

அப்படியா??????? ;)))))

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
//(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...?)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)//

அப்படியா??????? ;)))))//

அப்படியே தான்...

Natchatra said...

\\நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................\\

ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க புதியவன்...

இப்படி தானே வாழ்கையில் எல்லாரும் கிடைக்காதுன்னு தெரிஞ்சும் முயற்சிட்டேயிருக்காங்க...

சரி நீங்க முயற்சிக்குறது சீக்கிரம் கிடைக்க வாழ்த்துகள்.....:-)

புதியவன் said...

//Natchatra said...
\\நீ
எனக்குக்
கிடைக்க
மாட்டாய்
என்று தெரிந்த பின்னும்..................\\

ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க புதியவன்...

இப்படி தானே வாழ்கையில் எல்லாரும் கிடைக்காதுன்னு தெரிஞ்சும் முயற்சிட்டேயிருக்காங்க...

சரி நீங்க முயற்சிக்குறது சீக்கிரம் கிடைக்க வாழ்த்துகள்.....:-)//

வாழ்த்துக்களுக்கு நன்றி நட்சத்ரா...

Sakthidevi.I said...

yes.....this bird is for selfconfidence...
thanks for remembering this...good one..

புதியவன் said...

//புதியவன் said...
//sathya said...
yes.....this bird is for selfconfidence...
thanks for remembering this...good one..//

தோல்வி என்னும் விருப்பமில்லாத வேள்வியில் தீக்குளித்து தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் வெற்றி பெற கற்பனை என்றாலும் ஃபீனிக்ஸ் பறவை ஒரு நல்ல அடையாளம் தான் இல்லையா...?... நன்றி சத்யா...

Sakthidevi.I said...

indha kavidhaiye pramadhama irukku....unmai than...