Thursday, April 30, 2009

எதனை பரிசெனத் தருவது…?


உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்

இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்

நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்

பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்

இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
தேசத்துக் கொடிகள் தவிர
வேறொன்றும் அங்குமில்லை

காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………



(அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...)


125 comments:

Sasirekha Ramachandran said...

athanaiyum arumai!!!
simply superb!

மாதேவி said...

"உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்.. அருமை.

வால்பையன் said...

இந்த கவிதையே நல்லாதான் இருக்கு!

இதையே பரிசா கொடுத்துருங்க!

அப்துல்மாலிக் said...

//உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்
//

சரியாகத்தான் சொல்லிருக்கீங்க புதியவன்

அப்துல்மாலிக் said...

//நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

//

காதல்லே உடனே கிடைக்குமா என்னா.... அவனவன் காலம் காலமக காலம் கனிய காத்துக்கிட்டிருக்கான்....

அழகான கேள்வி

அப்துல்மாலிக் said...

//உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்
//

இது வித்தியாசமான கற்பனை, ரொம்ப ரசித்த வரிகள்

குடந்தை அன்புமணி said...

உங்களின் காதல் கவிதைகளில் இளைப்பாறுகிறது. வாழ்த்துகள்!

கடைக்குட்டி said...

//என்னிடம் இருக்கும் உன்னைத்தவிர...//

எனக்கே புரியுதே.. கவத கவித.. :-)

அப்துல்மாலிக் said...

//காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,//

இவ்வளவு வர்ணித்து.... ரசித்து எழுதுகின்ற வரிகள் போதாதா அவுங்களுக்கு.. இதைவிட வேறு என்ன வேண்டும் பரிசு...

நல்ல வரிகள் வாழ்த்துக்கள்

RAMYA said...

எனது அகராதியில் கவிதை என்றால் அது புதியவன்.

நான் ரசித்து மகிழ்ந்த உங்கள் கவிதைகள் மிகவும் அபாரமானது

புகழ்ச்சிக்கு அப்பாற்பட்டது, நீங்கள் எழுதிய எந்த வரிகளை நான் பாராட்டுவது மொத்தவரிகளும் அருமை என்ற வர்ணத்தைப் பூசிக் கொண்டு ஆற்பரிக்கின்றது.

ஒரு வரியை பாராட்டினால், மற்றொன்று வருத்தப் படுமே
அதனால் ஏற்படும் வலிகள் என்னால் தாங்க இயலாதே!

உங்களின் நிஜக் காதலியாக இருந்தால் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
அவ்வளவு அருமையா அணு அணுவா உணர்ந்து எழுதறீங்க.

மொத்தத்தில் எல்லாவற்றிற்கும் மேலான எனது ரசனைகள் உங்களின்
கவிதை வரிகளுடன் ஐக்கியம் ஆகிவிட்டதை இப்போ தான் உணர்ந்தேன்
புதியவன்.

இது ஒரு படைப்பாளிக்கு கிடைத்த வெற்றி அல்லவா?

அந்த வரிசையில் நீங்க
எங்கோ இருக்கீங்க புதியவன்.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!

உங்களுக்கும் எனது உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள்!

ஆ.சுதா said...

|உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற|

என்னது வார்த்தை தேடி கடற்கரைக்கு போணீங்களா... புதியவன். பொய்.. பொய்.. சுத்த பொய்,
வார்த்தைகள் தானே உங்களை தேடிவரும்...!!


//உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்//

அடுத்த வரியிலேயே உங்கள் கைவண்ணம்.. ஆரம்பம்.

அழகு.. கவிதை மிக அழகு
புதியவன்.

Unknown said...

கவிதை மிக அழகு :)))

gayathri said...

hi pa unga kavithai

மெல்லிய பூக்களிலெல்லாம்
anantha vekadanla vanthuriuku pa vazthukkal

gayathri said...

heyeppadi pa

ivalavu azaka eluthi irukenga

super pa enna sollrathunu theiriyala ithuku apparam

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை புதியவன்.. காதலின் வாசம் தெறித்து வரும் வார்த்தைகள்.. கடைசில

//காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………//

செம அழகா முடிச்சு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

rose said...

நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்
\\
அருமை புதியவன்

rose said...

பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்

\\
ரசித்த வரிகள்

rose said...

காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………


\\
வார்த்தை இல்லை புதியவன் fentastic

Anonymous said...

அலை கடலில் மீன் பிடிப்பர்,ஆழ்கடலில் முத்தெடுப்பர் கால் தடத்தில் மண் எடுப்பர்....ஆதவனே கடல் அலைகள் கால் தடங்களை கொண்டனவாம் கவிதைகள் என எண்ணி!!!!!! புதியவனே இங்கு உமக்காக மட்டுமே பூப்பெய்துகிறது வார்த்தைகள்..பிடிமண் தாருங்கள் என்னை போன்ற படைப்பாளிகள் பாக்கியசாலிகள் ஆகின்றோம்...இனி என் கற்பனைகள் காவல் காக்க கடவுள் மட்டுமே... நானும் எழுதனும் அதனால் கொஞ்சும் நிலவை கொஞ்சம் கொட்டும் மழையில் கொஞ்சம் பூக்கும் பூவில் கொஞ்சம் உதிக்கும் சூரியனைக் கொஞ்சம் தோன்றும் கற்பனையில் கொஞ்சம் எனக்கும் மிச்சம் வையுங்கள் வார்த்தைகள் கொஞ்சம் என் வசப்பட வாழ்த்துங்கள்.....உங்கள் கவிதை விகடனில் வெளிவந்ததுள்ளது வாழ்த்துக்கள் புதியவன்...பூக்கட்டும் உங்கள் தோட்டத்தில் மேலும் வாசனை பூக்கள் எங்களை வசியம் செய்யும் உங்கள் பாக்கள் என்றும்......

Divya said...

Amazing!!
Superb Kavithai:))

Divya said...

\\நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்\\

இந்த வரிகள் மிக அழகு!!

Divya said...

கவிதை முழுவதுமாய் மிகவும் அருமை, வர்ணனைகள் ஒவ்வொன்றும் தனி அழகு!

வாழ்த்துக்கள் புதியவன்!

அருள் said...

என்ன கவிதை புதியவன்...
ஆழமான சிந்தனை...உணர்வுப்பூர்வமான வரிகள்... அழகான எழுத்து நடை...
வாழ்த்துகள்...

ரியாலியா said...

puthiyavaa naan rasitha yen manathai kavartha varikal.

நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்!!!!!!!!!!!!!!
super puthiyavaree மே தின வாழ்த்துகள்.

நசரேயன் said...

ம்ம்ம்.. நல்லா இருக்கு

sakthi said...

meendum oru alagiya padaippu

valthukkal anna

sakthi said...

இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்

rasitha varigal

sakthi said...

காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………

alagana varigal arumai

அன்புடன் அருணா said...

ஒவ்வொரு வரியும் அழகு புதியவன்....
அன்புடன் அருணா

Vijay said...

ஒவ்வொரு வரியும் அழகோ அழகு :-)

Raj said...

நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்

அழகான வ‌ரிக‌ள்.கவிதை முழுவதும் அருமை..Finishing is simply superb.. வாழ்த்துக்கள் புதியவன்.

Madhan said...

பிரமாதம்.

பாலா said...

puuthiyavan

mmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

ellar mathiriyum super arumailaam solla maaten


athaan mela mmmmmmmmm poturukenla neengale purunjukunga

வழிப்போக்கன் said...

நல்லாருக்கு புதியவன்...
சரி கடைசியில் எத கொடுக்குறதா முடிவு செய்திருக்கீங்க???
:)))

ஆதவா said...

அதே அற்புதம் புதியவன்... நீங்கள் ஒவ்வொரு கவிதையையும் கவனமாக நேர்த்தியாகத் தருகிறீர்கள்.

கடற்கரையிடம் சொற்களை வாங்கப் போவது கற்பனையின் உச்சம். அது ஒரு குறுங்கவிதை போன்று.. அதைப் போன்றே நிலவு ரசிப்பதும்... அழகான குறுங்கவிதை...

இப்படி பல சிறந்த குறுங்காதல் கவிதைகளை இணைத்த கவிதையாக!!!!

அபாரம் புதியவன்.... இன்னும் வியப்பு மட்டும் போகவில்லை!!!

ஆதவா said...

இறுதியில் முடித்ததும் பிரமாதம்!!! வாழ்த்துக்கள் புதியவன்

மே தின வாழ்த்துகள்

uma said...

உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்


katru vanga ponen oru kavithai

vangi vanthen

KADUVETTI said...

இறுதியில் முடித்ததும் பிரமாதம்!!! வாழ்த்துக்கள் புதியவன்

மே தின வாழ்த்துகள்

Divyapriya said...

chanceless...superaa irukku...

அ.மு.செய்யது said...

//உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
//

நீங்க தான் ரூம் போட்டு யோசிப்பவராச்சே !!

கடற்கரைக்கு ஏன் போறீங்க..

அ.மு.செய்யது said...

தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

//நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்//

கற்பனையின் உச்சம்..

அ.மு.செய்யது said...

ரம்யா டீச்சர் சொன்னதுக்கு அப்புறம் நானும் இந்த கவிதையை விமர்சிக்க எனக்கு மசாலா பத்தாது,

நான் சொல்ல நினைச்சத அவங்க அழகா தெளிவா சொல்லிட்டாங்க..

புதியவனை புகழ்ந்து சலித்து விட்டது.வேண்டுமென்றால் உங்கள் பெயரை மாற்றி கொள்ளுங்கள்.

வியா (Viyaa) said...

நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

ரசித்த வரிகள்..
கவிதை மிகவும் அழகு புதியவன்

S.A. நவாஸுதீன் said...

உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

S.A. நவாஸுதீன் said...

உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

புதுமையான கற்பனை புதியவன். அழகு

S.A. நவாஸுதீன் said...

நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்

ஒரு இரவில் இரு நிலா. ஆஹா!!!

S.A. நவாஸுதீன் said...

இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்

சங்க இலக்கியக் காதல்

S.A. நவாஸுதீன் said...

நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

காத்திருக்க வைப்பதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள்

S.A. நவாஸுதீன் said...

நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்

சிலிர்ப்பு.

S.A. நவாஸுதீன் said...

பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்

பூ மழையாய் பொழிகிறது.

S.A. நவாஸுதீன் said...

இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
தேசத்துக் கொடிகள் தவிர
வேறொன்றும் அங்குமில்லை

நல்ல சிந்தனை

S.A. நவாஸுதீன் said...

காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………

நல்ல படைப்பு புதியவன்.

ROJA said...

அருமையான கவிதைங்க...

Anonymous said...

kavi paada puvi vantheero puthiyavaney............thurigai eduthu neer thiruthuvadhu ellamey kavi oviyamgal eppadi idhu sadhiyam nanba....vikatanil ungal ne illadha pozhuthugalil vaazhthukkal...melum melum menmai pera......vazhthi magizhgirenpa....

நவீன் ப்ரகாஷ் said...

அருமையாக சமைத்திருக்கிறீர்கள் கவிதை வரிகளை புதியவன்.. !! :))

நவீன் ப்ரகாஷ் said...

//ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்//

மிகவும் ரசித்தேன்...:)))

Princess said...

எப்படிங்க இப்படி...இல்ல எப்படி இப்படின்னு கேட்கிறேன்.
அழகு, அழகு, அழகு..!!!
உங்களுக்கு ஒண்ணு சொல்லவா,..உங்க கவிதையெல்லாம் படிக்கிறேன் ஆனா கருத்துச்சொல்ல முடியாம தெரியாம ஒதுங்கிப் போய்டுவேன்,..இன்னைக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல ஏதோ நம்ம ரேஞ்சுக்கு ஒரு பின்னுட்டம் போடலாம்னு போட்டுட்டுப் போறேன் :)

தமிழிச்சி said...

அழகான கவிதை.ரொம்ப ரசித்தேன். நிறைய எழுதுங்கள் புதியவன்.

Natchathraa said...

//உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்//

ohhh neenga vaarthaigalai enga irunthu kandu pudikureenganu soliteengala... irunga nanum vanthu angaiyee theduraen... :)

காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

athana nan thedum bodhu kidaikala...:)

//நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்//

hmm ama ama.. adikadi nila karuthu poguthu.. unga avangala parthu porammaila than pola... :)

//இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்//

paarthunga.. forest officer unga avanga mela case potura poraru...;-) eppadi ella vilanginathaiyum paravai inathaiyum avanga veetu vaasaluku vara vachutanga... :)

//நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்//

neenga saria guru thatchanai eduthuttu poirukka mateenga puthiyavan....:-)

//நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்//

hmmm kudukka vendia guru thatchanaiyaa correcta kuduthuteengaley... ipo solli thandirupangaley paadathai...:)

//பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்//

Exxxxxxxxxxxcellent...

//இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
தேசத்துக் கொடிகள் தவிர
வேறொன்றும் அங்குமில்லை//

hmm athuthaan anga irundhu unga kadhali inga irangi vanditangaley appuram anga enna irukka poguthu... :)

//காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………//

athu thaan ungalaiyee parisa kuduthirukeengaley puthiyavan... ippadi kavithaiyaa ezhuthuravaru kanavara kidaikka avanga thaney punniyam panirukanum....

last lines are simply superb... ethai vendumanalum kel ennidam irukkum unnai thavira...

hmmm migavum rasithaen.....

Endrendrum ungal kadhal siranthu irukka intha thozhiyin manamarntha vazhthukkal puthiyavan.....

புதியவன் said...

புதியவன் said...
//Sasirekha Ramachandran said...
athanaiyum arumai!!!
simply superb!//

முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் முதல் பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி சசிரேகா ராமச்சந்திரன்...

புதியவன் said...

//மாதேவி said...
"உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்.. அருமை.//

முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதேவி...

புதியவன் said...

// வால்பையன் said...
இந்த கவிதையே நல்லாதான் இருக்கு!

இதையே பரிசா கொடுத்துருங்க!//

கவிதை நல்லா இருக்குன்னு சொன்னதற்கு மிக்க நன்றி அருண்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்
//

சரியாகத்தான் சொல்லிருக்கீங்க புதியவன்//

வாங்க அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

//

காதல்லே உடனே கிடைக்குமா என்னா.... அவனவன் காலம் காலமக காலம் கனிய காத்துக்கிட்டிருக்கான்....

அழகான கேள்வி//

அபுஅஃப்ஸருக்கு காத்திருந்து ரொம்ப அனுபவம் போல...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்
//

இது வித்தியாசமான கற்பனை, ரொம்ப ரசித்த வரிகள்//

ரசிப்பிற்கு நன்றி...

புதியவன் said...

//குடந்தைஅன்புமணி said...
உங்களின் காதல் கவிதைகளில் இளைப்பாறுகிறது. வாழ்த்துகள்!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அன்புமணி...

புதியவன் said...

//கடைக்குட்டி said...
//என்னிடம் இருக்கும் உன்னைத்தவிர...//

எனக்கே புரியுதே.. கவத கவித.. :-)//

முதல் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி கடைக்குட்டி...உங்க பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கு...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,//

இவ்வளவு வர்ணித்து.... ரசித்து எழுதுகின்ற வரிகள் போதாதா அவுங்களுக்கு.. இதைவிட வேறு என்ன வேண்டும் பரிசு...

நல்ல வரிகள் வாழ்த்துக்கள்//

இதையே பரிசா கொடுத்திடலாமா...?வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//RAMYA said...
எனது அகராதியில் கவிதை என்றால் அது புதியவன்.

நான் ரசித்து மகிழ்ந்த உங்கள் கவிதைகள் மிகவும் அபாரமானது

புகழ்ச்சிக்கு அப்பாற்பட்டது, நீங்கள் எழுதிய எந்த வரிகளை நான் பாராட்டுவது மொத்தவரிகளும் அருமை என்ற வர்ணத்தைப் பூசிக் கொண்டு ஆற்பரிக்கின்றது.

ஒரு வரியை பாராட்டினால், மற்றொன்று வருத்தப் படுமே
அதனால் ஏற்படும் வலிகள் என்னால் தாங்க இயலாதே!

உங்களின் நிஜக் காதலியாக இருந்தால் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
அவ்வளவு அருமையா அணு அணுவா உணர்ந்து எழுதறீங்க.

மொத்தத்தில் எல்லாவற்றிற்கும் மேலான எனது ரசனைகள் உங்களின்
கவிதை வரிகளுடன் ஐக்கியம் ஆகிவிட்டதை இப்போ தான் உணர்ந்தேன்
புதியவன்.

இது ஒரு படைப்பாளிக்கு கிடைத்த வெற்றி அல்லவா?

அந்த வரிசையில் நீங்க
எங்கோ இருக்கீங்க புதியவன்.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!

உங்களுக்கும் எனது உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள்!//

ரம்யா நீங்க இவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க எனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை...

உங்கள் பின்னூட்டம் என்னை மிக மிக மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது மிக்க நன்றி தோழி...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

புதியவன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
|உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற|

என்னது வார்த்தை தேடி கடற்கரைக்கு போணீங்களா... புதியவன். பொய்.. பொய்.. சுத்த பொய்,
வார்த்தைகள் தானே உங்களை தேடிவரும்...!!


//உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்//

அடுத்த வரியிலேயே உங்கள் கைவண்ணம்.. ஆரம்பம்.

அழகு.. கவிதை மிக அழகு
புதியவன்.//

உங்கள் உற்சாகமான பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது மிக்க நன்றி முத்துராமலிங்கம்...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
கவிதை மிக அழகு :)))//

மிக்க நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

// gayathri said...
hi pa unga kavithai

மெல்லிய பூக்களிலெல்லாம்
anantha vekadanla vanthuriuku pa vazthukkal//

நானும் இப்போது தான் பார்த்தேன் நன்றி காயத்ரி...

புதியவன் said...

//gayathri said...
heyeppadi pa

ivalavu azaka eluthi irukenga

super pa enna sollrathunu theiriyala ithuku apparam//

என்ன சொல்வதென்று தெரியலில்லையென்று அழகாகவே சொல்லிவிட்டீர்கள் நன்றி காயத்ரி...

புதியவன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அருமை புதியவன்.. காதலின் வாசம் தெறித்து வரும் வார்த்தைகள்.. கடைசில

//காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………//

செம அழகா முடிச்சு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்...

புதியவன் said...

//rose said...
நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்
\\
அருமை புதியவன்//

வாங்க ரோஸ்...

புதியவன் said...

// rose said...
பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்

\\
ரசித்த வரிகள்//

ரசிப்பிற்கு நன்றி ரோஸ்...

புதியவன் said...

//rose said...
காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………


\\
வார்த்தை இல்லை புதியவன் fentastic//

வார்த்தை இல்லையென்று அழகான வார்த்தையில் சொல்லிவிட்டீர்கள் நன்றி ரோஸ்...

புதியவன் said...

//தமிழரசி said...
அலை கடலில் மீன் பிடிப்பர்,ஆழ்கடலில் முத்தெடுப்பர் கால் தடத்தில் மண் எடுப்பர்....ஆதவனே கடல் அலைகள் கால் தடங்களை கொண்டனவாம் கவிதைகள் என எண்ணி!!!!!! புதியவனே இங்கு உமக்காக மட்டுமே பூப்பெய்துகிறது வார்த்தைகள்..பிடிமண் தாருங்கள் என்னை போன்ற படைப்பாளிகள் பாக்கியசாலிகள் ஆகின்றோம்...இனி என் கற்பனைகள் காவல் காக்க கடவுள் மட்டுமே... நானும் எழுதனும் அதனால் கொஞ்சும் நிலவை கொஞ்சம் கொட்டும் மழையில் கொஞ்சம் பூக்கும் பூவில் கொஞ்சம் உதிக்கும் சூரியனைக் கொஞ்சம் தோன்றும் கற்பனையில் கொஞ்சம் எனக்கும் மிச்சம் வையுங்கள் வார்த்தைகள் கொஞ்சம் என் வசப்பட வாழ்த்துங்கள்.....உங்கள் கவிதை விகடனில் வெளிவந்ததுள்ளது வாழ்த்துக்கள் புதியவன்...பூக்கட்டும் உங்கள் தோட்டத்தில் மேலும் வாசனை பூக்கள் எங்களை வசியம் செய்யும் உங்கள் பாக்கள் என்றும்......//

கவிதையைப் படித்து கவி மழை பொழிந்த தமிழரசி..எப்படி நன்றி சொல்வது உங்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் தவிர வேறு சொல் இல்லையே என்னிடம்...

புதியவன் said...

//Divya said...
Amazing!!
Superb Kavithai:))//

வாங்க திவ்யா...

புதியவன் said...

// Divya said...
\\நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்\\

இந்த வரிகள் மிக அழகு!!//

அழகான ரசிப்பிற்கு நன்றி திவ்யா...

புதியவன் said...

//Divya said...
கவிதை முழுவதுமாய் மிகவும் அருமை, வர்ணனைகள் ஒவ்வொன்றும் தனி அழகு!

வாழ்த்துக்கள் புதியவன்!//

உங்கள் வருகையும் ரசிப்பும் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான விசயம்...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திவ்யா...

புதியவன் said...

//அருள் said...
என்ன கவிதை புதியவன்...
ஆழமான சிந்தனை...உணர்வுப்பூர்வமான வரிகள்... அழகான எழுத்து நடை...
வாழ்த்துகள்...//

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி அருள்...

வாழ்த்துக்களுக்கு நன்ற...

உங்கள் அடுத்த பதிவை விரைவில் பதியுங்கள் அருள்...

புதியவன் said...

//ரியாலியா said...
puthiyavaa naan rasitha yen manathai kavartha varikal.

நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்!!!!!!!!!!!!!!
super puthiyavaree மே தின வாழ்த்துகள்.//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றிங்க மேடம்...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

புதியவன் said...

//நசரேயன் said...
ம்ம்ம்.. நல்லா இருக்கு//

மிக்க நன்றி நசரேயன்...

புதியவன் said...

// sakthi said...
meendum oru alagiya padaippu

valthukkal anna//

வாழ்த்துக்களுக்கு நன்றி சக்தி...

புதியவன் said...

//sakthi said...
இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்

rasitha varigal//

ரசிப்பிற்கு நன்றி...

புதியவன் said...

//sakthi said...
காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………

alagana varigal arumai//

மிக்க நன்றி சக்தி...

புதியவன் said...

//அன்புடன் அருணா said...
ஒவ்வொரு வரியும் அழகு புதியவன்....
அன்புடன் அருணா//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அருணா மேடம்...

புதியவன் said...

//விஜய் said...
ஒவ்வொரு வரியும் அழகோ அழகு :-)//

ரசிப்பிற்கு மிக்க நன்றி விஜய்...

புதியவன் said...

//Raj said...
நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்

அழகான வ‌ரிக‌ள்.கவிதை முழுவதும் அருமை..Finishing is simply superb.. வாழ்த்துக்கள் புதியவன்.//

வருகைக்கும் அழகான ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜ்...

புதியவன் said...

//Madhan said...
பிரமாதம்.//

முதல் வருகைக்கு மிக்க நன்றி மதன்...

புதியவன் said...

//sayrabala said...
puuthiyavan

mmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

ellar mathiriyum super arumailaam solla maaten


athaan mela mmmmmmmmm poturukenla neengale purunjukunga//

வித்தியாசமான பின்னூட்டம் புரிந்து கொண்டேன் நன்றி பாலா...

புதியவன் said...

//வழிப்போக்கன் said...
நல்லாருக்கு புதியவன்...
சரி கடைசியில் எத கொடுக்குறதா முடிவு செய்திருக்கீங்க???
:)))//

ஹா...ஹா...ஹா...இன்னும் முடிவு செய்யவில்லை...

முதல் வருகைக்கு மிக்க நன்றி வழிப்போக்கன்...

புதியவன் said...

//ஆதவா said...
அதே அற்புதம் புதியவன்... நீங்கள் ஒவ்வொரு கவிதையையும் கவனமாக நேர்த்தியாகத் தருகிறீர்கள்.

கடற்கரையிடம் சொற்களை வாங்கப் போவது கற்பனையின் உச்சம். அது ஒரு குறுங்கவிதை போன்று.. அதைப் போன்றே நிலவு ரசிப்பதும்... அழகான குறுங்கவிதை...

இப்படி பல சிறந்த குறுங்காதல் கவிதைகளை இணைத்த கவிதையாக!!!!

அபாரம் புதியவன்.... இன்னும் வியப்பு மட்டும் போகவில்லை!!!//

ஆதவனின் பின்னூட்டம் எனக்கு எப்போது பிடித்தமான ஒன்று நன்றி ஆதவன்...

புதியவன் said...

//ஆதவா said...
இறுதியில் முடித்ததும் பிரமாதம்!!! வாழ்த்துக்கள் புதியவன்

மே தின வாழ்த்துகள்//

மிக்க நன்றி ஆதவன்...உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

புதியவன் said...

//uma said...
உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்


katru vanga ponen oru kavithai

vangi vanthen//

நல்லா அழகா பாடுறீங்களே...முதல் வருகைக்கு நன்றி உமா...

புதியவன் said...

//KADUVETTI said...
இறுதியில் முடித்ததும் பிரமாதம்!!! வாழ்த்துக்கள் புதியவன்

மே தின வாழ்த்துகள்//

முதல் வருகைக்கு நன்றி காடுவெட்டி...உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

புதியவன் said...

// Divyapriya said...
chanceless...superaa irukku...//

மிக்க நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
//

நீங்க தான் ரூம் போட்டு யோசிப்பவராச்சே !!

கடற்கரைக்கு ஏன் போறீங்க..//

வாங்க செய்யது

நான் எப்போ ரூம் போட்டு யோசிச்சேன்...?

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

//நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்//

கற்பனையின் உச்சம்..//

நன்றி செய்யது...

புதியவன் said...

// அ.மு.செய்யது said...
ரம்யா டீச்சர் சொன்னதுக்கு அப்புறம் நானும் இந்த கவிதையை விமர்சிக்க எனக்கு மசாலா பத்தாது,

நான் சொல்ல நினைச்சத அவங்க அழகா தெளிவா சொல்லிட்டாங்க..

புதியவனை புகழ்ந்து சலித்து விட்டது.வேண்டுமென்றால் உங்கள் பெயரை மாற்றி கொள்ளுங்கள்.//

ஆமா, ரம்யா சொன்னதற்கு என்னால் நன்றி மட்டுமே சொல்ல முடிந்தது...உங்களுக்கும் அது மட்டும் தான்...

புதியவன் said...

//வியா (Viyaa) said...
நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

ரசித்த வரிகள்..
கவிதை மிகவும் அழகு புதியவன்//

வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி வியா...

புதியவன் said...

//S.A. நவாஸுதீன் said...
உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

புதுமையான கற்பனை புதியவன். அழகு//

வாங்க நவாஸுதீன்...

புதியவன் said...

// S.A. நவாஸுதீன் said...
நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்

ஒரு இரவில் இரு நிலா. ஆஹா!!!//

ஆமால்ல இரண்டு நிலா...

புதியவன் said...

//S.A. நவாஸுதீன் said...
இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்

சங்க இலக்கியக் காதல்//

ரொம்ப சரி...

புதியவன் said...

// S.A. நவாஸுதீன் said...
நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

காத்திருக்க வைப்பதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள்//

ரொம்ப அனுபவப்பட்டுட்டீங்க போல...

புதியவன் said...

// S.A. நவாஸுதீன் said...
நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்

சிலிர்ப்பு.//

ஹா...ஹா...நன்றி...

புதியவன் said...

//S.A. நவாஸுதீன் said...
பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்

பூ மழையாய் பொழிகிறது.//

ம்...பூமழை தான்...

புதியவன் said...

// S.A. நவாஸுதீன் said...
இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
தேசத்துக் கொடிகள் தவிர
வேறொன்றும் அங்குமில்லை

நல்ல சிந்தனை//

நன்றி...

புதியவன் said...

// S.A. நவாஸுதீன் said...
காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………

நல்ல படைப்பு புதியவன்.//

விரிவான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நவாஸுதீன்...

புதியவன் said...

//ROJA said...
அருமையான கவிதைங்க...//

முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரோஜா...

புதியவன் said...

//தமிழரசி said...
kavi paada puvi vantheero puthiyavaney............thurigai eduthu neer thiruthuvadhu ellamey kavi oviyamgal eppadi idhu sadhiyam nanba....vikatanil ungal ne illadha pozhuthugalil vaazhthukkal...melum melum menmai pera......vazhthi magizhgirenpa....//

நீங்கள் சொல்லித்தான் எனக்கு இந்த விசயம் தெரியும்...தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி...

புதியவன் said...

//நவீன் ப்ரகாஷ் said...
அருமையாக சமைத்திருக்கிறீர்கள் கவிதை வரிகளை புதியவன்.. !! :))//

வாங்க கவிஞரே

கவிச் சமையலை ரசித்ததற்கு நன்றி...

புதியவன் said...

//நவீன் ப்ரகாஷ் said...
//ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்//

மிகவும் ரசித்தேன்...:)))//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நவீன்...

புதியவன் said...

//ஸாவரியா said...
எப்படிங்க இப்படி...இல்ல எப்படி இப்படின்னு கேட்கிறேன்.
அழகு, அழகு, அழகு..!!!
உங்களுக்கு ஒண்ணு சொல்லவா,..உங்க கவிதையெல்லாம் படிக்கிறேன் ஆனா கருத்துச்சொல்ல முடியாம தெரியாம ஒதுங்கிப் போய்டுவேன்,..இன்னைக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல ஏதோ நம்ம ரேஞ்சுக்கு ஒரு பின்னுட்டம் போடலாம்னு போட்டுட்டுப் போறேன் :)//

உங்கள் பின்னூட்டம் எப்போதும் அழகு தான் உங்கள் கவிதைகள் போலவே...மிக்க நன்றி ஸாவரியா...

புதியவன் said...

//தமிழிச்சி said...
அழகான கவிதை.ரொம்ப ரசித்தேன். நிறைய எழுதுங்கள் புதியவன்.//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தமிழிச்சி...

புதியவன் said...

// Natchathraa said...
//உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்//

ohhh neenga vaarthaigalai enga irunthu kandu pudikureenganu soliteengala... irunga nanum vanthu angaiyee theduraen... :)

///ஹா...ஹா...கடல் அலைகளோடு மன அலைகளும் சேர்ந்து சில நேரம் நமக்குள் வார்த்தைகளை உருவாக்கிவிடும் அதைத் தான் அப்படி சொன்னேன்...///

காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

athana nan thedum bodhu kidaikala...:)

///சரியா தேடிப்பருங்க...கிடைத்தாலும் கிடைக்கலாம்...///

//நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்//

hmm ama ama.. adikadi nila karuthu poguthu.. unga avangala parthu porammaila than pola... :)

///ஓ...அப்படியா...?///

//இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்//

paarthunga.. forest officer unga avanga mela case potura poraru...;-) eppadi ella vilanginathaiyum paravai inathaiyum avanga veetu vaasaluku vara vachutanga... :)

///இதில இப்படி ஒரு பிரச்சனை வேற இருக்க...///

//நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்//

neenga saria guru thatchanai eduthuttu poirukka mateenga puthiyavan....:-)

///காதலுக்கு குருதட்சணை தேவையில்லைன்னு நினைச்சேன்...///


//நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்//

hmmm kudukka vendia guru thatchanaiyaa correcta kuduthuteengaley... ipo solli thandirupangaley paadathai...:)


///ஆமாங்க...ஏதோ கொஞ்சம் கொஞ்சமா சொல்லித்தர்றாங்க...///


//பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்//

Exxxxxxxxxxxcellent...

///ரசிப்பிற்கு நன்றி///

//இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
தேசத்துக் கொடிகள் தவிர
வேறொன்றும் அங்குமில்லை//

hmm athuthaan anga irundhu unga kadhali inga irangi vanditangaley appuram anga enna irukka poguthu... :)

///அது தான் அங்க எதுவுமே இல்லையா...?///

//காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………//

athu thaan ungalaiyee parisa kuduthirukeengaley puthiyavan... ippadi kavithaiyaa ezhuthuravaru kanavara kidaikka avanga thaney punniyam panirukanum....

///ஹா...ஹா...அப்படியா...?...நன்றி...///

last lines are simply superb... ethai vendumanalum kel ennidam irukkum unnai thavira...

hmmm migavum rasithaen.....

Endrendrum ungal kadhal siranthu irukka intha thozhiyin manamarntha vazhthukkal puthiyavan.....//

வருகைக்கும் அழகான விரிவான தருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்சத்திரா...

நட்புடன் ஜமால் said...

காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்\\

மிக அழகுப்பா ...

நட்புடன் ஜமால் said...

\\காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்\\

உங்களுக்கு தெரியுமுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமே அதனாலோ?

நட்புடன் ஜமால் said...

\உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்\\

மிக அருமை நண்பரே!

நட்புடன் ஜமால் said...

\\எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர\\

ஆழமான காதல்.

sakthi said...

sayrabala said...

puuthiyavan

mmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

ellar mathiriyum super arumailaam solla maaten


athaan mela mmmmmmmmm poturukenla neengale purunjukunga

உன் பின் நவீனம் இங்குமா பாலா

Sakthidevi.I said...

good one.......

Gowripriya said...

nice ...

Sayosiga said...

nice lines..loved the last two lines more..