Saturday, April 4, 2009

தேவதைகள் கொண்டாடும் தினம்…



மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...

அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்

முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்

வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்

விழிகளில் பேசியே
களைத்துப் போன
நீ
அருகிலிருந்த
மரத்தில் சாய்கிறாய்
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...

எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை
சிணுங்கும்
இந்த இருவரிக் கவிதை
முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?

உன் வெட்க ஒளியில்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன
நம் முத்தங்கள்
சற்றே கூடுதல் பிரகாசத்துடன்
விடிவெள்ளியாய் மின்னுகிறது
நம் முதல் முத்தம்...
என்ன இருந்தாலும்
நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...

வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்
ஏனெனில்,
இன்று தேவதைகள்
கொண்டாடும் தினம்

தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................



(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)

173 comments:

ஆதவா said...

வாங்க புதியவன்!!! தலைப்பெ நல்லா இருக்கு!!

ஆதவா said...

யாருங்க அவங்க கொடுத்து வெச்சவங்க...

உயர்தர கற்பனை, அழகான காதல் அற்புதமான கவிதைக்கட்டு!! படிக்கப்படிக்க இன்ப ஊற்று!! இரண்டு முறை படித்தேன்!!!

பகல் இரவு பிரிக்கும் அந்தியை விவரிக்கும் பொழுது சிலிர்த்தது!! உவமைகளை நன்கு உயர்வாக அமைத்திருக்கிறீர்கள்.

பட்டுப்பூச்சிகளின் மரணமும் உயர்தரம்

வழி நெடூகிலும் காதலை இரைத்துவிட்டுச் செல்லுவதைப் போன்று கவிதையின் ஒவ்வொரு எழுத்தின் இடுக்குகளிலும் விளிம்புகளில் காதல் நிறைந்து இரைந்து காணப்படுகிறது. குறுகுறு கவிதைகள் இணைத்து கட்டியிழுத்த காதல் தேர்!!!

இதயம் காதலால் ஆகிறது!!! காதல் திரவமாக உற்பத்தியாகி உடலெங்கும் ஓடுகிறது!!!
கவிதையைப் படிக்கையிலும்!!!!

அருமை புதிய்வன்.

குடுகுடுப்பை said...

பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//


அருமையோ அருமை. ஆனால் தற்கொலை செய்துகொண்டால் நூல் எப்படி வரும். பட்டு நூல் பட்டுப்பூச்சியின் ஜொள்தானே.?

அ.மு.செய்யது said...

உள்ளேன் ஐயா...படித்து விட்டு வருகிறேன்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

Anonymous said...

sorgathil erunthu kollai adiththu vellai adikka patta varthaigal vangi kondavar varam vaangi vazhkaiai vangiyavareyyyy...too sweet frnd..devathaigal vazhanthaal vasapadhum ungal vasam

குடந்தை அன்புமணி said...

வார்த்தைகள் வந்து வரிசைக்கட்டி உங்கள் கவிதைக்காக காத்திருக்கிறது போலும்... அருமையான உவமானங்கள்! காதலிக்கும், உங்கள் காதலுக்கும் எனது வாழ்த்துகள் நண்பா!

KarthigaVasudevan said...

பூந் தோட்டத்தை கடந்து வரும் போது காற்றில் கலவையாய் பூக்களின் மனம் நாசி நிரப்புமே எத்தனை முறை கடந்தாலும் அத்தனை முறையும்...அதே தான் இந்த கவிதையிலும்...இருமுறை வாசித்தாலும் ரசனையான ரசனை. வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

நம்ம வாழ்த்தையும் தெரியப்படுத்தி விடுங்கள்!

அ.மு.செய்யது said...

//மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...//

ர‌ம்மிய‌மான துவ‌க்க‌ம்...வெகு அழ‌கு..!!!!!!!

அ.மு.செய்யது said...

//முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்
//

உங்க‌ளுக்கு ம‌ட்டும் ஏங்க‌ இப்ப‌டி தோணுது..

ப‌ற‌வைக‌ளின் மொழி..பூச்சிக‌ளின் மொழி...அஃறிணைப் பொருட்க‌ளின் மொழி..

அனைத்தும் அறிந்த‌வ‌ர் புதிய‌வ‌ன்.

அ.மு.செய்யது said...

//உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்//

மீண்டும் மீண்டும் த‌ற்குறிப்பேற்ற‌ அணி...

த‌.அ.புதிய‌வ‌ன் என உங்க‌ள் பெய‌ரை கெஸ‌ட்டில் மாற்றி வைத்து கொள்ள‌லாமே !!!

அருமை..

அ.மு.செய்யது said...

//இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

சின்ன‌ சின்ன‌ வ‌ர்ண‌னைக‌ளையும் ர‌ச‌னையோடு வெளி கொணர்கிறீர்க‌ள்.

க‌விதையில் எந்த‌ தொய்வும் இல்லை.

அ.மு.செய்யது said...

//எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை//

உங்க கவிதை மாதிரினு சொல்லுங்க...

அ.மு.செய்யது said...

தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................


என்ன தவம் செய்தனை...என்று அவங்க இந்நேரம் பாடியிருக்கணுமே !!!!!

அ.மு.செய்யது said...

//(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)//

ஏங்க..அவங்கள போய் பார்க்காம இன்னாங்க உங்களுக்கு வேல..

உடனே ஒரு லாங் லீவு அப்ளை பண்ணுங்க...கிளம்புங்க பாஸூ..

அ.மு.செய்யது said...

ரொமான்ஸ்ல இங்க புதியவன அடிச்சிக்க யாரும் இல்லீங்கோ !!!!!!

யாராவது போட்டிக்கு ரெடியா ?? சோடி போட்டுக்குவோமா சோடி ????

பாலா said...

konutta machan

rasithon

bala

ரியாலியா said...

puthiyavaa ungalukku mattum yappadi ippadiyallam yallutha thonnuthu.thanks puthiyavaa,,,,,,,,,,,,,,,

sakthi said...

/மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...//

arampam alagu

sakthi said...

அ.மு.செய்யது said...

ரொமான்ஸ்ல இங்க புதியவன அடிச்சிக்க யாரும் இல்லீங்கோ !!!!!!

hahahahah appadiya puthiyavare

sakthi said...

முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்

wowwwwwwwwwwwww

sakthi said...
This comment has been removed by the author.
sakthi said...

உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்


வசந்தம் வஞ்சியின் உருவில் வந்ததோ???

sakthi said...

தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................

நாங்களும் வாழ்த்துகின்றோம்
வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்

sakthi said...

அ.மு.செய்யது said...

//(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)//

ஏங்க..அவங்கள போய் பார்க்காம இன்னாங்க உங்களுக்கு வேல..

உடனே ஒரு லாங் லீவு அப்ளை பண்ணுங்க...கிளம்புங்க பாஸூ..

athane

sakthi said...

ரசித்து படித்தேன் புதியவரே
மிக அருமை

வியா (Viyaa) said...

//உன் வெட்க ஒளியில்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன
நம் முத்தங்கள்
சற்றே கூடுதல் பிரகாசத்துடன்
விடிவெள்ளியாய் மின்னுகிறது
நம் முதல் முத்தம்...
என்ன இருந்தாலும்
நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...//

அழகான வரிகள் புதியவன்..
கவிதையில் நான் மிகவும் ரசித்த வரிகள்

வியா (Viyaa) said...

எனது வாழ்த்துக்களையும் உங்கள் தேவதைக்கு தெரிவித்து விடுங்கள் புதியவன்

அனுபவம் said...

அருமையான கவிதை! வரிகள் ஒவ்வொன்று சுவையானவை.

S.A. நவாஸுதீன் said...

அருமையிலும் அருமை புதியவன். மனதை வருடிச் செல்லும் இதமான தென்றலாய் வரிகள் ஒவ்வொன்றும் அழகு. அவர் நிச்சயாமாக கொடுத்து வைத்தவர்.

அப்துல்மாலிக் said...

எப்போதும் போல காதல் ரசம் சொட்டுது தலைப்பிலே

வாவ் அவுங்களுக்கு பிறந்தநாளா ம்ம்ஹூம் நானும் வாழ்த்திக்கிறேன்

அப்துல்மாலிக் said...

நினைவுகளை சொன்ன விதம் அழகு

அப்துல்மாலிக் said...

பகலுக்கும் இரவிற்கு இடையேயான அந்திநேரத்தை சொல்லியவிதம் கலக்கல் புதியவன்

Revathyrkrishnan said...

மிக அழகான காதல் கவிதை புதியவன்...அழகான உவமைகள்... மரபு மீறியும் மீறாத சொற்கட்டு... காதல் உணர்த்தும் வரிகள்... அருமை, வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

//பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...
//

ம்ம்ஹூம இலையுதிர்காலத்தை பூயுதிர் காலமாக மாற்றிய உன் கற்பனை வாழ்க‌

அப்துல்மாலிக் said...

//(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)///

ஹூம் பாவம்ங்க எத்தனை கவிதை எழுதினாலும் நேரில் இருப்பதுபோல் வருமா?

ம்ம் பரவாயில்லை நானும் என்னுடைய வாழ்த்தை சொல்லிகிறேன்

நல்லாயிருக்கு உங்க பிறந்தநாள் பரிசு..........

Natchathraa said...

Excellent Puthiyavan....


as usual....Choooooo Romantic...

tamil software problem...

couldn't resist to wait to say word about ur lovable poem...

virivaana pinnootam viraivil... :-)

ungaloda inda kavithailaiyum nanirukkaen...

ungal devathaikku en piranthanal vazhthukkal puthiyavan....

she is toooo lucky to have u friend... :-)

Keep rocking...

Divyapriya said...

//உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//

wowwww!!!

//நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்//

hayyo :))

//பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

konnutteenga :)

//முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?//

chance less...

sema super pudhiyavan...konnuteenga...vazhakkam pola thaan, too good and romantic...

ஆ.சுதா said...

கவிதையில் தேன் குழைத்திருக்கின்றீர்கள் படிக்க படிக்க
தித்திப்பிதான்.
ஊற்றாக பெருக்கெடுத்திருக்கின்றது
வார்த்தைகள் ஒவ்வொரு வரியும் காதலின் ஈர்த்தை உறிஞ்சி வைத்துள்ளது.

ஆதவா சொன்னமாதிரி அது யாருங்க
ரொம்ப கொடுத்து வைத்தவங்க

S.A. நவாஸுதீன் said...

நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்

எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை புதியவன்.

பின்னிட்டீங்க போங்க

மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்..

என்னே ஒரு உவமை. தூள்

என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...

நானும் வாழ்த்திக்கிறேன் பாஸ்.

தமிழ் அமுதன் said...

வழக்கம் போல கலக்கல்!!

rose said...

மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில்

\\
ஆரம்பமே அமர்க்களம்

rose said...

எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை
\\
உங்கள் கவிதை போலவே

rose said...

sakthi said...
/மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...//

arampam alagu

\\
sssssssss

rose said...

sakthi said...
அ.மு.செய்யது said...

//(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)//

ஏங்க..அவங்கள போய் பார்க்காம இன்னாங்க உங்களுக்கு வேல..

உடனே ஒரு லாங் லீவு அப்ளை பண்ணுங்க...கிளம்புங்க பாஸூ..

athane

\\
போய் பார்த்துட்டு வந்து ஒரு கவிதை போடுங்க‌

rose said...

தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
\\
யார் அந்த தேவதை?

நட்புடன் ஜமால் said...

\\உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்\\

அருமை.

நட்புடன் ஜமால் said...

\\வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்\\

நல்ல காத்திருப்பு (நாட்களின் இருப்பு)

நட்புடன் ஜமால் said...

\\ரியாலியா said...

puthiyavaa ungalukku mattum yappadi ippadiyallam yallutha thonnuthu.thanks puthiyavaa,,,,,,,,,,,,,,,\\

ஆ.ஞானசேகரன் said...

தலைப்பும் வரிகளும் ஒன்றுகொன்ரு பேசிக்கொள்கின்றது..

ஆ.ஞானசேகரன் said...

//அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்//

நல்ல வரிகள்.. பாராட்டுகள்

ஆ.ஞானசேகரன் said...

//தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................//

உங்களின் தேவதை ....????

தேவன் மாயம் said...

அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்///

ஆஹா அருமை நண்பரே!!

தேவன் மாயம் said...

தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.//

காதலி உச்சத்திற்குப்போய் விட்டீர்கள் !!

gayathri said...

ella kavithai varikalum arumai pa

MaDhi said...

//அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்//

ரொம்ப அழகான உவமை!!

//அருகிலிருந்த
மரத்தில் சாய்கிறாய்
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

என்ன ஒரு சிந்தனை..

//
(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...) //
ஆக இந்த கவிதை எல்லாம் உங்க நிஜ தேவதைக்காகவா .. உங்கள் காதலுக்கும் கற்பனைக்கும் "HATS OFF" :-)

ரியாலியா said...

புதியவன் தலைப்பு அசத்தல்.கலக்குரே மச்சான்...............

RAMYA said...

"தேவதைகள் கொண்டாடும் தினம்…"

தலைப்பே அருமையோ அருமை புதியவன்.

RAMYA said...

//
மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...
//

ஆரம்பமே அசத்தல் வரிகள் !!

நினைவுகளின் அலசலே ஒரு அற்புதம்
அருமையான துவக்கம் புதியவன்.

RAMYA said...

//
அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்
//

இதைவிட அருமையான உதாரணம் வேறு எங்கு கிடைக்கும்??

நம் புதிவனிடம் இருந்தான் கிடக்கும்.

RAMYA said...

//
முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்
//

பட்டுப் பூச்சிகளின் தியாகம்
அதனால் கிடைக்கபெற்ற பட்டு புடவை.

அதற்கு கோர்த்த வார்த்தைகளின் அணிவகுப்போ அட்டகாசம்.

RAMYA said...

//
வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்
//

காதலின் நளினம் காட்டிய ஆரவாரம்
இங்கே சத்தமில்லாமல் ஒரு அரங்கேற்றமா ??

RAMYA said...

//
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...
//

பூ உதிர்காலம்..

கால்களுக்கு மலர் விரிப்போ ??

RAMYA said...

முற்றுப்புள்ளிக்கு மச்சம் உவமானம்
அருமை நண்பரே!!

RAMYA said...

ஒரு தேவதையின் கொண்டாட்டத்தில் காதல் தெளிவான வர்ணனைகள், வார்த்தைகள்.

கவிதை நடையும் அழகு, அதை யோசித்து, மனதில் அனுபவித்து பார்க்கும் போது உங்கள் கவிதையின் உயிரோட்டம் அசர வைக்கின்றது புதியவன்.

நாணல் said...

//பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்//

நல்ல உவமை... :)

//தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//

ஹ்ம்ம் ஹ்ம்ம் என்ன சொலறதுன்னே தெரியலை...அருமை... :)

//நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்//

:) பிடித்த வரிகள்...

//நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...//

:)

மொத்ததில் உங்கள் தேவதைக்கு என் பிறந்த நாள் வாழ்துக்கள்... :)
நல்ல பிறந்த நாள் பரிசு... :)

Divya said...

கவிதை மிக மிக அருமை:))

உங்கள் தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Divya said...

\\உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்\\

சூப்பர்ப் வரிகள்!!

கவிதை முழுவதுமாய் அழகோ அழகு!

ரசித்து படித்தேன்!

Princess said...

புதியவன் உங்கள் கவிதையும்,..அதில் காதலும்,..நீங்கள் தேர்ந்தெடுத்துப் போடும் படங்களும்....அருமை..அருமை அருமை...!!!!
(சே! அருமை ரொம்பச் சின்ன வார்த்தையா இருக்கு உங்க கவிதைகளை வர்ணிக்க :((( )

*இயற்கை ராஜி* said...

nice:-)

ஹேமா said...

புதியவன்,வந்திட்டேன் வந்திட்டேன்.இரணடு கவிதைகள் தவற விட்டிட்டேன்.

எப்படி இப்படி வர்ணணையைக் கொட்டிக் கொட்டிக் காதல் கவிதைகள்.யாரோ குடுத்து வச்சவங்க.அவங்களை நினைச்சாலே கவிதையாய்க் கொட்டித் தீர்க்கிறீங்க புதியவன்.அருமை.

//முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//

பட்டுப் பூச்சிகளைக் கொன்று பட்டு எடுக்கிறார்களோ என்னவோ,பட்டுப் பூச்சியாய் மனதைக் கொன்று போடுகிறது உங்கள் கவிதைகள்.

Sakthidevi.I said...

superb one...cheers....

நவீன் ப்ரகாஷ் said...

காதல் செறிந்த வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிகவும் அருமை புதியவன்..! :)))

நவீன் ப்ரகாஷ் said...

//வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்//

அழகு... அழகு..!! :)))

வாழ்த்துகள் புதியவன்..!!

kavitha said...

varthaikku varthi rasikkiren, rusikkiren...
puthiyavan heading, ne yaar vasappadamalum irunthal,
yennakkula irukkira rasigaiyai uchathukku kondu vanthu oonjalada vitta ungalin lines... etc.,

Anonymous said...

///அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்////

வாவ்! என்ன அழகு வரிகள்! கொள்ளை அழகு!


///உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்///

என் கண்ணே ‘பட்டு’ விட்டது... வளமான கற்பனை!

///இந்த இருவரிக் கவிதை
முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?///

அருமை!

இந்த வாழ்த்து உங்கள் காதலிக்கு சிறந்த பரிசாய் அமைந்திருக்கும் புதியவன்!

கயல் said...

//
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்
//

நல்ல உவமை! வரிக்கு வரி காதல் கோலோச்சியிருக்கிறது!

Suresh said...

புதியவா :-) அருமையா உனக்கு என்ன தர ... கலக்கிட்ட :-) மச்சான்

Suresh said...

//முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்/

அஹா ஹா பிண்ணிட்ட .. நான் உன்னோட கவிதைக்கு என் மனைதை கொடுத்தேன்

Suresh said...

தலைவா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் என்னோட மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

Suresh said...

மச்சான் தமிஷிலும் தமிழ் மணத்திலும் வோட்டு போட்டாச்சு

நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

Natchathraa said...

//மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...//


வ‌ழ‌க்க‌ம் போல‌வே அச‌த்த‌ல் ஆர‌ம்ப‌ம்...
எப்ப‌டிதான் உங்க‌ளுக்கு ம‌ட்டும் இப்ப‌டில்லாம் ஒப்பீடு ப‌ண்ண‌ தோணுதோ....


//அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்//

ஹ‌ம்ம்ம்...என்ன‌ சொல்ல‌ வார்த்தைக‌ள் இல்லையே....
ர‌சிக்கிறேன்...

//முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//

உங்க‌ அவ‌ங்க‌ ரொம்ப‌வே கொடுத்து வ‌ச்ச‌வ‌ங்க‌...

//வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்//

அதானேங்க‌ காதல்..

//விழிகளில் பேசியே
களைத்துப் போன
நீ
அருகிலிருந்த
மரத்தில் சாய்கிறாய்
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

சான்சேயில்ல‌ங்க‌... இதுபோல‌ யாராலும் ஒப்பீட‌ முடியாதுங்க‌....

//எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை
சிணுங்கும்
இந்த இருவரிக் கவிதை
முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?//

உங்க‌ க‌விதைக‌ள் மாதிரியா புதியவன்...

//உன் வெட்க ஒளியில்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன
நம் முத்தங்கள்
சற்றே கூடுதல் பிரகாசத்துடன்
விடிவெள்ளியாய் மின்னுகிறது
நம் முதல் முத்தம்...
என்ன இருந்தாலும்
நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...//

என்ன‌ங்க‌ நீங்க‌ முத்த‌க்க‌வி வித்த‌கரே எந்த‌ க‌விதைக‌ளிலும் முத்த‌த்தினை விட‌ மாட்டீங்க‌ க‌டைசில‌ இப்ப‌டி உங்க‌ முத்த‌தினையே ந‌ட்ச‌த்திர‌மா மாத்தி என‌க்கு வெட்க‌ம் வ‌ர‌ வ‌ச்சுட்டீங்க‌ளே....

//வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்
ஏனெனில்,
இன்று தேவதைகள்
கொண்டாடும் தினம்//

இப்ப‌டில்லாம் க‌விதை எழுதிக் கொடுத்தீங்க‌ன்னா அந்த‌ தேவ‌தைக‌ளுக்கு உங்க‌ அவ‌ங்க‌ மேல‌ பொறாமைதாங்க‌ வ‌ரும்... வாழ்த்த‌ வ‌ந்த‌ தேவ‌தைக‌ள் உங்க‌ளை மிஸ் ப‌ண்ணிட்ட‌மேன்னு வ‌ருத்த‌ ப‌ட்டுட்டு இருப்பாங்க‌... :‍)

//தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....//

ஹ‌ம்ம்ம்.... சூப்ப‌ர் இத‌யமுங்க‌.... எல்லாருக்கும் இர‌த்த‌மும் ச‌தையுமாலான‌ இத‌ய‌ம் புதிய‌வ‌னுக்கு ம‌ட்டும் காத‌லால் ஆன‌ இத‌ய‌ம்.... உங்க‌ளுக்கு அழிவேயில்லைங்க‌... இதயம் துடிக்க மறக்கலாம்...காத‌ல் ம‌றையுமா??

மறுபடியும் வாழ்த்துகள்.....

புதியவன் said...

//ஆதவா said...
வாங்க புதியவன்!!! தலைப்பெ நல்லா இருக்கு!!//

வாங்க ஆதவன்...

புதியவன் said...

//ஆதவா said...
யாருங்க அவங்க கொடுத்து வெச்சவங்க...

உயர்தர கற்பனை, அழகான காதல் அற்புதமான கவிதைக்கட்டு!! படிக்கப்படிக்க இன்ப ஊற்று!! இரண்டு முறை படித்தேன்!!!

பகல் இரவு பிரிக்கும் அந்தியை விவரிக்கும் பொழுது சிலிர்த்தது!! உவமைகளை நன்கு உயர்வாக அமைத்திருக்கிறீர்கள்.

பட்டுப்பூச்சிகளின் மரணமும் உயர்தரம்

வழி நெடூகிலும் காதலை இரைத்துவிட்டுச் செல்லுவதைப் போன்று கவிதையின் ஒவ்வொரு எழுத்தின் இடுக்குகளிலும் விளிம்புகளில் காதல் நிறைந்து இரைந்து காணப்படுகிறது. குறுகுறு கவிதைகள் இணைத்து கட்டியிழுத்த காதல் தேர்!!!

இதயம் காதலால் ஆகிறது!!! காதல் திரவமாக உற்பத்தியாகி உடலெங்கும் ஓடுகிறது!!!
கவிதையைப் படிக்கையிலும்!!!!

அருமை புதியவன்.//

ஆஹா...என்ன ஒரு விரிவான பின்னூட்டம் மிகவும் நெகிழ்ந்தேன் உங்கள் பின்னூட்டம் பார்த்து...மிக்க நன்றி ஆதவன்...

புதியவன் said...

//குடுகுடுப்பை said...
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//


அருமையோ அருமை. ஆனால் தற்கொலை செய்துகொண்டால் நூல் எப்படி வரும். பட்டு நூல் பட்டுப்பூச்சியின் ஜொள்தானே.?//

வாங்க குடுகுடுப்பை அண்ணா...நீங்கள் கூறுவது உண்மை தான் கவிதைக்காக தற்கொலை என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன்...மிக்க நன்றி...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
உள்ளேன் ஐயா...படித்து விட்டு வருகிறேன்.//

வாங்க செய்யது...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள்//

நன்றி ஜமால்...

புதியவன் said...

//தமிழரசி said...
sorgathil erunthu kollai adiththu vellai adikka patta varthaigal vangi kondavar varam vaangi vazhkaiai vangiyavareyyyy...too sweet frnd..devathaigal vazhanthaal vasapadhum ungal vasam//

கவிதையாய் வந்து தேவதையை வாழ்த்திய தமிழரசிக்கு நன்றிகள்...

புதியவன் said...

//குடந்தைஅன்புமணி said...
வார்த்தைகள் வந்து வரிசைக்கட்டி உங்கள் கவிதைக்காக காத்திருக்கிறது போலும்... அருமையான உவமானங்கள்! காதலிக்கும், உங்கள் காதலுக்கும் எனது வாழ்த்துகள் நண்பா!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அன்புமணி...

புதியவன் said...

//மிஸஸ்.தேவ் said...
பூந் தோட்டத்தை கடந்து வரும் போது காற்றில் கலவையாய் பூக்களின் மனம் நாசி நிரப்புமே எத்தனை முறை கடந்தாலும் அத்தனை முறையும்...அதே தான் இந்த கவிதையிலும்...இருமுறை வாசித்தாலும் ரசனையான ரசனை. வாழ்த்துக்கள்.//

உங்கள் அழகிய ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மிஸஸ்.தேவ்...

புதியவன் said...

//நாமக்கல் சிபி said...
நம்ம வாழ்த்தையும் தெரியப்படுத்தி விடுங்கள்!//

உங்கள் வாழ்த்துகளும் சென்று சேர்ந்துவிட்டது...மிக்க நன்றி சிபி...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...//

ர‌ம்மிய‌மான துவ‌க்க‌ம்...வெகு அழ‌கு..!!!!!!!//

உங்கள் ரசனையும் மிக ரம்மியமாகத்தான் இருக்கிறது செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்
//

உங்க‌ளுக்கு ம‌ட்டும் ஏங்க‌ இப்ப‌டி தோணுது..

///என்ன செய்யது இப்படியெல்லாம் கேட்டால் என்ன பதில் சொல்வது...?///

ப‌ற‌வைக‌ளின் மொழி..பூச்சிக‌ளின் மொழி...அஃறிணைப் பொருட்க‌ளின் மொழி..

அனைத்தும் அறிந்த‌வ‌ர் புதிய‌வ‌ன்.//

கற்றது கைமண் அளவு தான் செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்//

மீண்டும் மீண்டும் த‌ற்குறிப்பேற்ற‌ அணி...

த‌.அ.புதிய‌வ‌ன் என உங்க‌ள் பெய‌ரை கெஸ‌ட்டில் மாற்றி வைத்து கொள்ள‌லாமே !!!

அருமை..//

எனக்குத் தெரிந்து கவிதைகளில் த‌ற்குறிப்பேற்ற‌ அணி குறைவாகவே பயன்படுத்தப் பட்டுவருகிறது...என் எழுத்துக்களில் அவை தானாகவே வந்து விடுகின்றன இதற்காக நான் திட்டம் எதுவும் போடுவதில்லை...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

சின்ன‌ சின்ன‌ வ‌ர்ண‌னைக‌ளையும் ர‌ச‌னையோடு வெளி கொணர்கிறீர்க‌ள்.

க‌விதையில் எந்த‌ தொய்வும் இல்லை.//

நன்றி செய்யது...

புதியவன் said...

// அ.மு.செய்யது said...
//எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை//

உங்க கவிதை மாதிரினு சொல்லுங்க...//

ஹா...ஹா...ஹா...நன்றி...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................


என்ன தவம் செய்தனை...என்று அவங்க இந்நேரம் பாடியிருக்கணுமே !!!!!//

ம்...அப்படியெல்லாம் கூட பாடுவாங்களா என்ன...?

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)//

ஏங்க..அவங்கள போய் பார்க்காம இன்னாங்க உங்களுக்கு வேல..

உடனே ஒரு லாங் லீவு அப்ளை பண்ணுங்க...கிளம்புங்க பாஸூ..//

பிரிந்திருக்கும் காதலிக்கு தான் விரும்பினாலும் வரமுடியாத நிலையில் காதலன் இருப்பதை உணர்த்துவதற்கா எழுதியது அந்த வரிகள் மற்றபடி வேறொன்றும் இல்லை செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
ரொமான்ஸ்ல இங்க புதியவன அடிச்சிக்க யாரும் இல்லீங்கோ !!!!!!

யாராவது போட்டிக்கு ரெடியா ?? சோடி போட்டுக்குவோமா சோடி ????//

என்ன செய்யது கிரிக்கெட் போட்டிக்கு ஆள் சேர்க்கிற மாதிரி கூப்பிடுறீங்க....விரிவான குறும்பான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி செய்யது...

புதியவன் said...

//sayrabala said...
konutta machan

rasithon

bala//

ரசிப்பிற்கு மிக்க நன்றி பாலா...

புதியவன் said...

//ரியாலியா said...
puthiyavaa ungalukku mattum yappadi ippadiyallam yallutha thonnuthu.thanks puthiyavaa,,,,,,,,,,,,,,,//

இப்படியெல்லாம் கேட்டால் எப்படி பதில் சொல்வது...?

புதியவன் said...

sakthi said...
/மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...//

arampam alagu

வாங்க சக்தி உங்கள் வருகையும் அழகு தான்...

புதியவன் said...

//sakthi said...
அ.மு.செய்யது said...

ரொமான்ஸ்ல இங்க புதியவன அடிச்சிக்க யாரும் இல்லீங்கோ !!!!!!

hahahahah appadiya puthiyavare//

செய்யது ஏதோ விளையாட்டுக்கு சொல்லிட்டார் சக்தி...

புதியவன் said...

//sakthi said...
முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்

wowwwwwwwwwwwww//

வாவ்...என்ன அழகிய ரசிப்பு...?

புதியவன் said...

//sakthi said...
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்


வசந்தம் வஞ்சியின் உருவில் வந்ததோ???//

ம்...அப்படியும் சொல்லலாம்...

புதியவன் said...

//sakthi said...
தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................

நாங்களும் வாழ்த்துகின்றோம்
வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சக்தி...

புதியவன் said...

//sakthi said...
அ.மு.செய்யது said...

//(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)//

ஏங்க..அவங்கள போய் பார்க்காம இன்னாங்க உங்களுக்கு வேல..

உடனே ஒரு லாங் லீவு அப்ளை பண்ணுங்க...கிளம்புங்க பாஸூ..

athane
//

என்ன அதானே...?

புதியவன் said...

//sakthi said...
ரசித்து படித்தேன் புதியவரே
மிக அருமை/

ரசிப்பிற்கு நன்றி சக்தி...?

புதியவன் said...

//வியா (Viyaa) said...
//உன் வெட்க ஒளியில்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன
நம் முத்தங்கள்
சற்றே கூடுதல் பிரகாசத்துடன்
விடிவெள்ளியாய் மின்னுகிறது
நம் முதல் முத்தம்...
என்ன இருந்தாலும்
நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...//

அழகான வரிகள் புதியவன்..
கவிதையில் நான் மிகவும் ரசித்த வரிகள்//

நீங்கள் ரசித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான் வியா...

புதியவன் said...

//வியா (Viyaa) said...
எனது வாழ்த்துக்களையும் உங்கள் தேவதைக்கு தெரிவித்து விடுங்கள் புதியவன்//

உங்கள் வாழ்த்துக்களும் தேவதைக்குப் போய் சேர்ந்துவிட்டது...நன்றி வியா...

புதியவன் said...

//அனுபவம் said...
அருமையான கவிதை! வரிகள் ஒவ்வொன்று சுவையானவை.//

முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அனுபவம்...

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
அருமையிலும் அருமை புதியவன். மனதை வருடிச் செல்லும் இதமான தென்றலாய் வரிகள் ஒவ்வொன்றும் அழகு. அவர் நிச்சயாமாக கொடுத்து வைத்தவர்.//

வாங்க நவாஸ்...

உங்கள் ரசிப்பு மிக அருமை...

//அவர் நிச்சயாமாக கொடுத்து வைத்தவர்.////

அப்படியா நவாஸ்...?...நன்றி ...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
எப்போதும் போல காதல் ரசம் சொட்டுது தலைப்பிலே

வாவ் அவுங்களுக்கு பிறந்தநாளா ம்ம்ஹூம் நானும் வாழ்த்திக்கிறேன்//

வாழ்த்துக்களோடு வருகிறீர்கள் அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
நினைவுகளை சொன்ன விதம் அழகு//

நினைவுகளும் அழகு தானே அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
பகலுக்கும் இரவிற்கு இடையேயான அந்திநேரத்தை சொல்லியவிதம் கலக்கல் புதியவன்//

உவமையை ரசித்ததற்கு நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//reena said...
மிக அழகான காதல் கவிதை புதியவன்...அழகான உவமைகள்... மரபு மீறியும் மீறாத சொற்கட்டு... காதல் உணர்த்தும் வரிகள்... அருமை, வாழ்த்துக்கள்//

அழகான வருகைக்கும்...வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரீனா...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...
//

ம்ம்ஹூம இலையுதிர்காலத்தை பூயுதிர் காலமாக மாற்றிய உன் கற்பனை வாழ்க‌//

கற்பனை இருந்தால் தானே கவிதைக்கு அழகு இல்லையா அபுஅஃப்ஸர்...?

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)///

ஹூம் பாவம்ங்க எத்தனை கவிதை எழுதினாலும் நேரில் இருப்பதுபோல் வருமா?

ம்ம் பரவாயில்லை நானும் என்னுடைய வாழ்த்தை சொல்லிகிறேன்

நல்லாயிருக்கு உங்க பிறந்தநாள் பரிசு..........//

விரிவான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//Natchathraa said...
Excellent Puthiyavan....


as usual....Choooooo Romantic...

tamil software problem...

couldn't resist to wait to say word about ur lovable poem...

virivaana pinnootam viraivil... :-)

ungaloda inda kavithailaiyum nanirukkaen...

ungal devathaikku en piranthanal vazhthukkal puthiyavan....

she is toooo lucky to have u friend... :-)

Keep rocking...//

அட...ஆமால்ல...என்னோட இந்தக் கவிதையிலும் நீங்க இருக்கீங்க...
இது திட்டமிட்டு செய்த செயல் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...
ஹா....ஹா...ஹா...
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நட்சத்திரா...

புதியவன் said...

//Divyapriya said...
//உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//

wowwww!!!

///வாவ்...அழகிய ரசிப்பு///

//நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்//

hayyo :))

///ஹா...ஹா...ஹா...///

//பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

konnutteenga :)

///ஐயோ...இந்த கொலைக்கு என்ன தண்டனைன்னு தெரியலையே...?///

//முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?//

chance less...

///நன்றி...///

sema super pudhiyavan...konnuteenga...vazhakkam pola thaan, too good and romantic...//

விரிவான அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
கவிதையில் தேன் குழைத்திருக்கின்றீர்கள் படிக்க படிக்க
தித்திப்பிதான்.
ஊற்றாக பெருக்கெடுத்திருக்கின்றது
வார்த்தைகள் ஒவ்வொரு வரியும் காதலின் ஈர்த்தை உறிஞ்சி வைத்துள்ளது.

ஆதவா சொன்னமாதிரி அது யாருங்க
ரொம்ப கொடுத்து வைத்தவங்க//

அழகான பின்னூட்டம்...மிகவும் ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை...மிக்க நன்றி முத்துராமலிங்கம்...

புதியவன் said...

/Syed Ahamed Navasudeen said...
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்

எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை புதியவன்.

பின்னிட்டீங்க போங்க

///எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை என்று அழகாகப் பாராட்டிவிட்டீர்களே நவாஸ்...///

மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்..

என்னே ஒரு உவமை. தூள்

///உவமையையும் அழகாக ரசிக்கிறீர்கள்...///

என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...

நானும் வாழ்த்திக்கிறேன் பாஸ்.//

உங்கள் வாழ்த்துக்களும் காற்று வழி சென்று காதல் தேவதையை சேர்ந்துவிட்டது...மிக்க நன்றி நவாஸ்...

புதியவன் said...

//ஜீவன் said...
வழக்கம் போல கலக்கல்!!//

மிக்க நன்றி ஜீவன் அண்ணா...

புதியவன் said...

// rose said...
மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில்

\\
ஆரம்பமே அமர்க்களம்//

அமர்க்களமான வருகை ரோஸ்..

புதியவன் said...

//rose said...
எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை
\\
உங்கள் கவிதை போலவே//

நன்றி ரோஸ்...

புதியவன் said...

//rose said...
sakthi said...
அ.மு.செய்யது said...

//(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)//

ஏங்க..அவங்கள போய் பார்க்காம இன்னாங்க உங்களுக்கு வேல..

உடனே ஒரு லாங் லீவு அப்ளை பண்ணுங்க...கிளம்புங்க பாஸூ..

athane

\\
போய் பார்த்துட்டு வந்து ஒரு கவிதை போடுங்க‌//

நிச்சயமா கவிதை போடுகிறேன்...வருகைக்கு மிக்க நன்றி ரோஸ்...

புதியவன் said...

//rose said...
தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
\\
யார் அந்த தேவதை?//

அதான் சொன்னேனே என் மனதில் பிறந்த தேவதைன்னு...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்\\

அருமை.//

உங்கள் ரசிப்பும் அருமை ஜமால்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்\\

நல்ல காத்திருப்பு (நாட்களின் இருப்பு)//

காத்திருப்பும் காதலில் ஒரு பகுதி தானே இது உங்களுக்குத் தெரியாததா ஜமால்...

புதியவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
தலைப்பும் வரிகளும் ஒன்றுகொன்ரு பேசிக்கொள்கின்றது..//

வாங்க ஞானசேகரன்...

புதியவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
//அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்//

நல்ல வரிகள்.. பாராட்டுகள்//

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ஞானசேகரன்...

புதியவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
//தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................//

உங்களின் தேவதை ....????//

ஹா...ஹா...ஹா....

புதியவன் said...

//thevanmayam said...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்///

ஆஹா அருமை நண்பரே!!//

வாங்க டாக்டர் தேவா...

புதியவன் said...

//thevanmayam said...
தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.//

காதலி உச்சத்திற்குப்போய் விட்டீர்கள் !!//

நான் எங்கேயும் போகவில்லை தேவா இங்கே தான் இருக்கிறேன்...நன்றி தேவா...

புதியவன் said...

// gayathri said...
ella kavithai varikalum arumai pa//

மிக்க நன்றி காயத்ரி...

புதியவன் said...

//MaDhi said...
//அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்//

ரொம்ப அழகான உவமை!!

///அழகிய ரசிப்பு///

//அருகிலிருந்த
மரத்தில் சாய்கிறாய்
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

என்ன ஒரு சிந்தனை..

///சும்மா...சாதாரணமான சிந்தனை தான் மதி...///

//
(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...) //
ஆக இந்த கவிதை எல்லாம் உங்க நிஜ தேவதைக்காகவா .. உங்கள் காதலுக்கும் கற்பனைக்கும் "HATS OFF" :-)//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மதி...

புதியவன் said...

// ரியாலியா said...
புதியவன் தலைப்பு அசத்தல்.கலக்குரே மச்சான்...............//


ஹா...ஹா...ஹா...என்ன இதெல்லாம்...?
மிக்க நன்றிங்க மேடம்...

புதியவன் said...

//RAMYA said...
"தேவதைகள் கொண்டாடும் தினம்…"

தலைப்பே அருமையோ அருமை புதியவன்.//

வாங்க ரம்யா...

புதியவன் said...

// RAMYA said...
//
மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...
//

ஆரம்பமே அசத்தல் வரிகள் !!

நினைவுகளின் அலசலே ஒரு அற்புதம்
அருமையான துவக்கம் புதியவன்.//

உங்கள் ரசிப்பு என்றுமே எனக்கு வியப்பு தான் ரம்யா...

புதியவன் said...

//RAMYA said...
//
அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்
//

இதைவிட அருமையான உதாரணம் வேறு எங்கு கிடைக்கும்??

நம் புதிவனிடம் இருந்தான் கிடக்கும்.//

அப்படியா ரம்யா...?

புதியவன் said...

// RAMYA said...
//
முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்
//

பட்டுப் பூச்சிகளின் தியாகம்
அதனால் கிடைக்கபெற்ற பட்டு புடவை.

அதற்கு கோர்த்த வார்த்தைகளின் அணிவகுப்போ அட்டகாசம்.//

பட்டாம்பூச்சியின் தியாகத்தை ரசித்தமைக்கு நன்றி ரம்யா...

புதியவன் said...

//RAMYA said...
//
வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்
//

காதலின் நளினம் காட்டிய ஆரவாரம்
இங்கே சத்தமில்லாமல் ஒரு அரங்கேற்றமா ??//

ம்...இதுவும் ஒருவகையில் அரங்கேற்றம் தான்...

புதியவன் said...

// RAMYA said...
//
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...
//

பூ உதிர்காலம்..

கால்களுக்கு மலர் விரிப்போ ??//

இல்லை ரம்யா இது மலர்களுக்கு மலர் விரிப்பு...

புதியவன் said...

//RAMYA said...
முற்றுப்புள்ளிக்கு மச்சம் உவமானம்
அருமை நண்பரே!!//

உவமையை ரசித்தமைக்கு நன்றி ரம்யா...

புதியவன் said...

//RAMYA said...
ஒரு தேவதையின் கொண்டாட்டத்தில் காதல் தெளிவான வர்ணனைகள், வார்த்தைகள்.

கவிதை நடையும் அழகு, அதை யோசித்து, மனதில் அனுபவித்து பார்க்கும் போது உங்கள் கவிதையின் உயிரோட்டம் அசர வைக்கின்றது புதியவன்.//

அழகிய வார்த்தைகளால் பின்னூட்டமிட்டு அலங்கரித்ததற்கு மிக்க நன்றி ரம்யா...

புதியவன் said...

//நாணல் said...
//பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்//

நல்ல உவமை... :)

///நன்றி நாணல்///

//தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//

ஹ்ம்ம் ஹ்ம்ம் என்ன சொலறதுன்னே தெரியலை...அருமை... :)

///ரசிப்பிற்கு நன்றி...///

//நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்//

:) பிடித்த வரிகள்...

///எனக்கும் இந்த வரிகள் பிடித்திருந்தது...///

//நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...//

:)

///நன்றி...///

மொத்ததில் உங்கள் தேவதைக்கு என் பிறந்த நாள் வாழ்துக்கள்... :)
நல்ல பிறந்த நாள் பரிசு... :)//

விரிவான பின்னூட்டதிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நாணல்...

புதியவன் said...

//Divya said...
கவிதை மிக மிக அருமை:))

உங்கள் தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!//

கதாசிரியையின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

புதியவன் said...

// Divya said...
\\உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்\\

சூப்பர்ப் வரிகள்!!

கவிதை முழுவதுமாய் அழகோ அழகு!

ரசித்து படித்தேன்!//


உங்களின் ரசிப்பு எனக்கு மகிழ்ச்சி...வருகைக்கு மிக்க நன்றி திவ்யா...

புதியவன் said...

//ஸாவரியா said...
புதியவன் உங்கள் கவிதையும்,..அதில் காதலும்,..நீங்கள் தேர்ந்தெடுத்துப் போடும் படங்களும்....அருமை..அருமை அருமை...!!!!
(சே! அருமை ரொம்பச் சின்ன வார்த்தையா இருக்கு உங்க கவிதைகளை வர்ணிக்க :((( )//

அருமை ரொம்ப சின்ன வார்த்தை தான் ஸாவரியா அதை சொல்லிக் கேட்க்கும் போது கிடைக்கும் சந்தோசம் மிகப்பெரிது...

கவிதையையும்...காதலையும்...படங்களையும் ரசித்ததற்கு மிக்க நன்றி ஸாவரியா...

புதியவன் said...

//இய‌ற்கை said...
nice:-)//

நன்றி இயற்கை...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன்,வந்திட்டேன் வந்திட்டேன்.இரணடு கவிதைகள் தவற விட்டிட்டேன்.

///வாங்க ஹேமா...உங்களை தான் வலையுலகம் வலை வீசித் தேடிக்கொண்டிருந்தது...///

எப்படி இப்படி வர்ணணையைக் கொட்டிக் கொட்டிக் காதல் கவிதைகள்.யாரோ குடுத்து வச்சவங்க.அவங்களை நினைச்சாலே கவிதையாய்க் கொட்டித் தீர்க்கிறீங்க புதியவன்.அருமை.

///ஆமா...ஹேமா...நினைவுகளின் வடிகாலாய் தான் சில நேரம் கவிதைகள் வருகின்றன...///


//முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//

பட்டுப் பூச்சிகளைக் கொன்று பட்டு எடுக்கிறார்களோ என்னவோ,பட்டுப் பூச்சியாய் மனதைக் கொன்று போடுகிறது உங்கள் கவிதைகள்.//

மனதை மகிழ்ச்சியாய் கொன்று போடுவதற்கு நல்லவேளையாக எந்த ஒரு தண்டனையும் இல்லை...அழகிய ரசிப்பிற்கு மிக்க நன்றி ஹேமா...

புதியவன் said...

//sathya said...
superb one...cheers....//

உங்கள் வருகை எனக்கும் மிக்க மகிழ்ச்சி சத்யா...

புதியவன் said...

// நவீன் ப்ரகாஷ் said...
காதல் செறிந்த வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிகவும் அருமை புதியவன்..! :)))//

கவிஞரின் வருகை எனக்கு உவகையளிக்கிறது...

புதியவன் said...

//நவீன் ப்ரகாஷ் said...
//வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்//

அழகு... அழகு..!! :)))

வாழ்த்துகள் புதியவன்..!!//

அழகிய ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நவீன் ப்ரகாஷ்...

புதியவன் said...

//kavi said...
varthaikku varthi rasikkiren, rusikkiren...
puthiyavan heading, ne yaar vasappadamalum irunthal,
yennakkula irukkira rasigaiyai uchathukku kondu vanthu oonjalada vitta ungalin lines... etc.,//

வரிகளில் ஊஞ்சலாடினீர்களா...உங்கள் ரசிப்புத்தன்மை வெகு அழகு...மிக்க நன்றி கவி...

புதியவன் said...

//ஷீ-நிசி said...
///அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்////

வாவ்! என்ன அழகு வரிகள்! கொள்ளை அழகு!

////அழகான ரசிப்பு நன்றி ஷீ-நிசி////

///உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்///

என் கண்ணே ‘பட்டு’ விட்டது... வளமான கற்பனை!

////ரசித்தேன் உங்கள் வார்த்தை விளையாட்டை...////

///இந்த இருவரிக் கவிதை
முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?///

அருமை!

////நன்றி...////

இந்த வாழ்த்து உங்கள் காதலிக்கு சிறந்த பரிசாய் அமைந்திருக்கும் புதியவன்!//

விரிவான அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஷீ-நிஷி...

புதியவன் said...

//கயல் said...
//
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்
//

நல்ல உவமை! வரிக்கு வரி காதல் கோலோச்சியிருக்கிறது!//

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கயல்...

புதியவன் said...

//Suresh said...
புதியவா :-) அருமையா உனக்கு என்ன தர ... கலக்கிட்ட :-) மச்சான்//

சுரேஷ் எனக்கு உங்கள் அன்பும் நட்பும் மட்டுமே போதும்...

புதியவன் said...

// Suresh said...
//முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்/

அஹா ஹா பின்னிட்ட .. நான் உன்னோட கவிதைக்கு என் மனைதை கொடுத்தேன்//

ஹா...ஹா...ஹா...மிக்க நன்றி சுரேஷ்...

புதியவன் said...

//Suresh said...
தலைவா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் என்னோட மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!//

உங்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சுரேஷ்...

புதியவன் said...

Natchathraa said...
//மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...//


வ‌ழ‌க்க‌ம் போல‌வே அச‌த்த‌ல் ஆர‌ம்ப‌ம்...
எப்ப‌டிதான் உங்க‌ளுக்கு ம‌ட்டும் இப்ப‌டில்லாம் ஒப்பீடு ப‌ண்ண‌ தோணுதோ....

///கவிதையில் உவமைக்கு என்றும் ஒரு தனியிடம் உண்டு அது முக்கியமான இடமும் கூட அதில் எனக்கும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு...///


//அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்//

ஹ‌ம்ம்ம்...என்ன‌ சொல்ல‌ வார்த்தைக‌ள் இல்லையே....
ர‌சிக்கிறேன்...

///சொல்ல வார்த்தைகள் இல்லையென்றே அழகாகச் சொல்லிவிட்டீர்கள்...///

//முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்//

உங்க‌ அவ‌ங்க‌ ரொம்ப‌வே கொடுத்து வ‌ச்ச‌வ‌ங்க‌...

///அப்படியென்றால் நானும் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் கவிதைகளில் தேவதையை காதலிப்பதற்கும்...
காதலிக்கப்படுவதற்கும்...இல்லையா...?///

//வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்//

அதானேங்க‌ காதல்..

///அட...இது எனக்குப் தெரியாமல் போயிடுச்சே...ம்...சரி இப்போதாவது தெரிந்து கொண்டேனே...///

//விழிகளில் பேசியே
களைத்துப் போன
நீ
அருகிலிருந்த
மரத்தில் சாய்கிறாய்
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

சான்சேயில்ல‌ங்க‌... இதுபோல‌ யாராலும் ஒப்பீட‌ முடியாதுங்க‌....

///நன்றி நட்சத்திரா...///

//எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை
சிணுங்கும்
இந்த இருவரிக் கவிதை
முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?//

உங்க‌ க‌விதைக‌ள் மாதிரியா புதியவன்...

///என் கவிதைகள் உங்களுக்கு திகட்டவில்லையென்பது எனக்கு மகிழ்ச்சியே...///

//உன் வெட்க ஒளியில்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன
நம் முத்தங்கள்
சற்றே கூடுதல் பிரகாசத்துடன்
விடிவெள்ளியாய் மின்னுகிறது
நம் முதல் முத்தம்...
என்ன இருந்தாலும்
நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...//

என்ன‌ங்க‌ நீங்க‌ முத்த‌க்க‌வி வித்த‌கரே எந்த‌ க‌விதைக‌ளிலும் முத்த‌த்தினை விட‌ மாட்டீங்க‌ க‌டைசில‌ இப்ப‌டி உங்க‌ முத்த‌தினையே ந‌ட்ச‌த்திர‌மா மாத்தி என‌க்கு வெட்க‌ம் வ‌ர‌ வ‌ச்சுட்டீங்க‌ளே....

///ஹா...ஹா...ஹா...வெட்கம் நல்ல விசயம் தானேங்க நட்சத்திரா...///

//வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்
ஏனெனில்,
இன்று தேவதைகள்
கொண்டாடும் தினம்//

இப்ப‌டில்லாம் க‌விதை எழுதிக் கொடுத்தீங்க‌ன்னா அந்த‌ தேவ‌தைக‌ளுக்கு உங்க‌ அவ‌ங்க‌ மேல‌ பொறாமைதாங்க‌ வ‌ரும்... வாழ்த்த‌ வ‌ந்த‌ தேவ‌தைக‌ள் உங்க‌ளை மிஸ் ப‌ண்ணிட்ட‌மேன்னு வ‌ருத்த‌ ப‌ட்டுட்டு இருப்பாங்க‌... :‍)

///தேவதைகளுக்குப் தேவதை மேல் பொறாமை வருமா...?...ஆனால் அவள் காதல் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு இந்த சாமானிய மனிதனின் கவிதைகளில் பிறந்தவளாயிற்றே...
அவளுக்கு என்றும் குறையொன்றும் வராது என்று நம்புகிறேன்///

//தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....//

ஹ‌ம்ம்ம்.... சூப்ப‌ர் இத‌யமுங்க‌.... எல்லாருக்கும் இர‌த்த‌மும் ச‌தையுமாலான‌ இத‌ய‌ம் புதிய‌வ‌னுக்கு ம‌ட்டும் காத‌லால் ஆன‌ இத‌ய‌ம்.... உங்க‌ளுக்கு அழிவேயில்லைங்க‌... இதயம் துடிக்க மறக்கலாம்...காத‌ல் ம‌றையுமா??

///காதல் என்றென்றும் மறையாது...பூமி சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுகிறது என்று என் அறிவுக்குத் தெரிந்தாலும்...மனது காதலை மையமாக வைத்து தான் இந்தப் பிரபஞ்சமே சுற்றுவதாக நம்புகிறது என்ன செய்வது...?///

மறுபடியும் வாழ்த்துகள்.....

உங்கள் விரிவான பின்னூட்டம் என்னை எப்போதும் மகிழ்ச்சி மழையில் தான் நனைக்கிறது...வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நட்சத்திரா...

Natchathraa said...

//கவிதையில் உவமைக்கு என்றும் ஒரு தனியிடம் உண்டு அது முக்கியமான இடமும் கூட அதில் எனக்கும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு...///

கொஞ்சம் இல்லீங்க நிறையவே ஈடுபாடு இருக்கு உங்களுக்கு...

///சொல்ல வார்த்தைகள் இல்லையென்றே அழகாகச் சொல்லிவிட்டீர்கள்...///

:-)))

///அப்படியென்றால் நானும் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் கவிதைகளில் தேவதையை காதலிப்பதற்கும்... காதலிக்கப்படுவதற்கும்...இல்லையா...?///

ஆமா ஆமா....

அதானேங்க‌ காதல்..

///அட...இது எனக்குப் தெரியாமல் போயிடுச்சே...ம்...சரி இப்போதாவது தெரிந்து கொண்டேனே...///

தெரியாமல் தான் இப்படி காதல் கவிதையா எழுதுறிங்களா புதியவன் ;-)
நம்பிட்டேன்...

///என் கவிதைகள் உங்களுக்கு திகட்டவில்லையென்பது எனக்கு மகிழ்ச்சியே...///

திகட்டுற மாதிரி நீங்க எழுதுறது இல்லை புதியவன்.. ஒவ்வொரு கவிதையிலும் ஒரு புதிதாய் பூக்கும் மலரின் சுகந்தமிருக்கு...மலரின் சுகந்தம் திகட்டுமா??

///ஹா...ஹா...ஹா...வெட்கம் நல்ல விசயம் தானே நட்சத்திரா...///

ஹம்ம் நல்லதுதான்... :-)

///தேவதைகளுக்குப் தேவதை மேல் பொறாமை வருமா...?...

வரவச்சுருவீங்க உங்க கவிதைகளால்....

///ஆனால் அவள் காதல் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு இந்த சாமானிய மனிதனின் கவிதைகளில் பிறந்தவளாயிற்றே...///

இவங்க கவிதை தேவதை மட்டுமா? இல்லை உங்களின் நிஜ தேவதையா?

///அவளுக்கு என்றும் குறையொன்றும் வராது என்று நம்புகிறேன்///

நிச்சயம் வராது நீங்க இருக்கும் வரை.....

///காதல் என்றென்றும் மறையாது...பூமி சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுகிறது என்று என் அறிவுக்குத் தெரிந்தாலும்...மனது காதலை மையமாக வைத்து தான் இந்தப் பிரபஞ்சமே சுற்றுவதாக நம்புகிறது என்ன செய்வது...?///

ஹ்ம்ம் ஒன்னு செய்யலாம் காதலோடு என்றும் சந்தோஷமா வாழலாம்..:-)

///உங்கள் விரிவான பின்னூட்டம் என்னை எப்போதும் மகிழ்ச்சி மழையில் தான் நனைக்கிறது...///

அச்சோ இனிமே நான் கொஞ்சம் பின்னூட்டத்தை குறைச்சுகுறேன்.... மழையில் நனைந்து சளி புடிச்சுக்கிட்டா உங்க தேவதை எங்க்கிட்ட சண்டைக்கு வந்திர போறாங்க..... :-)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நட்சத்திரா...

உங்களின் விரிவான பொறுமையான விளக்கங்களுக்கு நன்றி புதியவன்...

ச.பிரேம்குமார் said...

காதலும் தமிழும் விளையாடுகிறது... வாழ்த்துகள் புதியவன்

Nava said...

என் கவிதை திக்கு முக்கடுகின்றன உன் கவிதையின் ஒற்றை சொல் கண்டவுடன்..!!!

புதியவன் said...

//Natchathraa said...

திகட்டுற மாதிரி நீங்க எழுதுறது இல்லை புதியவன்.. ஒவ்வொரு கவிதையிலும் ஒரு புதிதாய் பூக்கும் மலரின் சுகந்தமிருக்கு...மலரின் சுகந்தம் திகட்டுமா??

///மலரின் சுகந்தத்திற்கு என் எழுத்துக்களை ஒப்பிட்டதற்கு நன்றி நட்சத்திரா...///

இவங்க கவிதை தேவதை மட்டுமா? இல்லை உங்களின் நிஜ தேவதையா?

///இவள் எல்லோரையும் போல் சாதாரண பெண்ணாகப் பிறந்தவள் தான்...என் காதலை சூடிக்கொண்டதால் காதல் சிறகு முளைத்ததில் என் கவிதைகளில் தேவதையாக பிரகாசிக்கிறாள்...///

ரொம்ப குழப்பிட்டேனோ...?...ஏதாவது புரிஞ்சுதா நட்சத்திரா...?

உற்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டங்களுக்கு மீண்டுமொரு நன்றி...

புதியவன் said...

//பிரேம்குமார் said...
காதலும் தமிழும் விளையாடுகிறது... வாழ்த்துகள் புதியவன்//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பிரேம்குமார்...

புதியவன் said...

புதியவன் said...
//Nava said...
என் கவிதை திக்கு முக்கடுகின்றன உன் கவிதையின் ஒற்றை சொல் கண்டவுடன்..!!!//

உங்கள் கவிதை திக்கு முக்காடுகின்றதா..?
ஏன் அப்படி...?...நன்றி Nava...

Natchathraa said...

//ரொம்ப குழப்பிட்டேனோ...?...ஏதாவது புரிஞ்சுதா நட்சத்திரா...?//

kulapura madiri solitu.. kulapitananu ketkureengaley pudhiyavan... but edho koncham purinjum puriyama irukku....
anyway thanks for ur reply... :-)

Thamira said...

இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

வாவ்.. ரசனையான வரிகள், தொடர்க உங்கள் காதல் பயணம்.!

புதியவன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...//

வாவ்.. ரசனையான வரிகள், தொடர்க உங்கள் காதல் பயணம்.!//

வருகைக்கும் அழகிய ரசிப்பிற்கும் மிக்க நன்றி தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்...

Revathyrkrishnan said...

அருமையான வரிகள் புதியவன்... பார்த்துக்கோங்க... இப்படியெல்லாம் வாழ்த்த போய், வாழ்த்துக்களே போதும் வர வேண்டாம்னு சொல்லிட போறாங்க... கொடுத்து வெச்சவங்க அவங்க... இப்படி உயிர்காதல், உயர்கவிதைக்கு கருப்பொருளாய் அமைவது பெரிய வரமல்லவா? வாழ்த்துக்கள் உங்களுக்கும் அவர்களுக்கும்

புதியவன் said...

//reena said...
அருமையான வரிகள் புதியவன்... பார்த்துக்கோங்க... இப்படியெல்லாம் வாழ்த்த போய், வாழ்த்துக்களே போதும் வர வேண்டாம்னு சொல்லிட போறாங்க... கொடுத்து வெச்சவங்க அவங்க... இப்படி உயிர்காதல், உயர்கவிதைக்கு கருப்பொருளாய் அமைவது பெரிய வரமல்லவா? வாழ்த்துக்கள் உங்களுக்கும் அவர்களுக்கும்//


வாழ்த்துக்களே போதும் வர வேண்டாம்னு சொல்லிட போறாங்களா...?...இதில இப்படி வேறு விசயம் இருக்கா...?

உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரீனா...