அது உலகத்தின் இறுதி நாள்
கலகத்தால் உலகம் அழிந்து விடுகிறது
கடைசி மனிதனின்
கடைசி மூச்சுக் காற்றில் கலந்து
எல்லாமுமாய் இருந்தது
எதுவுமில்லாமல் போய்விட்டது
சூன்யம் சூழ்ந்து கொள்கிறது
எங்கெங்கு காணினும் வெறுமை
காலங்கள் கணக்கின்றி கடக்கின்றன
வெறுமையில் வெறுப்படைந்த
இந்தப் பிரபஞ்ச நாயகன்
மீண்டும் தன் படைப்புத்
தொழிலைத் தொடங்க எண்ணி
தன் உயிர்க் காற்றை ஊதுகிறான்
உயிரினங்கள் உயிர்ப்பித்து
இரண்டிரண்டாய் பல்கிப் பரவுகின்றன
முதல் மனிதன் மட்டும் இறுதியாக
தனியாகப் படைக்கப்படுகிறான்
அவனுக்கு முன் இளமை மாறாத
அழகிய தேவதைகள் அணிவகுக்கப் பட்டு
இவர்களில் யாரை வேண்டுமானாலும்
நீ துணையாக்கிக் கொள்ளலாம்
என்று சொல்லப் படுகிறது
ஒருவர் பின் ஒருவராக
அனைவருடைய விழிகளையும்
மனதையும் பார்த்து விட்டு
”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை” என்று
மூலப்பொருளிடம் முதல் மனிதன் கூறுகிறான்
ஆச்சர்யமடைந்த ஆதிசக்தி
தனக்குள் நினைத்துக் கொள்கிறது
”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”
வேறு வழியின்றி அவனிடமிருந்தே
அவனுக்கான துணையை படைத்து
காதல் காற்றை இருவர் இதயத்திலும்
நிரப்பி பூமிக்கு அனுப்பிவிட்டு...
இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது என்று
காலத்தைப் படைத்தவன்
காலப் புத்தகத்தில் தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........
Friday, January 23, 2009
மீண்டும்...மீண்டும்...காதலோடு...
Subscribe to:
Post Comments (Atom)
77 comments:
Me the First!!!
\\அது உலகத்தின் இறுதி நாள்\\
ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க :-(
\\அழகிய தேவதைகள் அணிவகுக்கப் பட்டு
இவர்களில் யாரை வேண்டுமானாலும்\\
ஆஹா!!!!
\\”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை” என்று
மூலப்பொருளிடம் முதல் மனிதன் கூறுகிறான்\\
காதலை விட பரஸ்பர அன்பு தான் முக்கியம் என்று நினைக்கிறேன். கவிஞரின் கருத்தென்னவோ?
\\”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”\\
ஆதி மனிதனெல்லாம் நல்லவனாத்தேன் இருப்பாய்ங்க
\\இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது \\
காதல் இல்லையேல் உலகம் அழிந்து விடும் என்கிறீர்கள்,
காதலி இல்லையேல் உலகத்தை அழித்துவிடுவேன் நான் என்கிறேன்.
இதெப்படி இருக்கு!!
ரொம்ப நல்ல கவிதை. வாழ்த்துக்கள் :-)
ஐயோ மீ த பஷ்டு போட வந்தேன்
ஜஸ்ட் மிஸ் பா !!!
விஜய் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!
இருங்க படிச்சிட்டு வாரேன் !!!
//
அவனுக்கு முன் இளமை மாறாத
அழகிய தேவதைகள் அணிவகுக்கப் பட்டு
இவர்களில் யாரை வேண்டுமானாலும்
நீ துணையாக்கிக் கொள்ளலாம்
என்று சொல்லப் படுகிறது
//
சொல்லுவாங்க சொல்லுவாங்க
நல்லா கற்பனைய வச்சிட்டு
ஏம்பா நீங்க வேஸ்ட் பண்ணறீங்க
ரொம்ப பெரிய ஆளா வர
எல்லா வாய்ப்புக்களும்
இருக்கு முயற்சி மட்டும் (சினிமாவுக்கு)
இல்லைன்னு நினைக்கிறேன்..
”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை” என்று
//
அருமை அருமை நண்பா
அதானே எது இடம்???
நான் உங்க கட்சிதான்.
”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”
நாம்ப ரொம்ப நல்லவங்கன்னு
மீண்டும் மீண்டும் நிருப்பிக்கறீங்க!!!
//
வேறு வழியின்றி அவனிடமிருந்தே
அவனுக்கான துணையை படைத்து
காதல் காற்றை இருவர் இதயத்திலும்
நிரப்பி பூமிக்கு அனுப்பிவிட்டு...
இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது என்று
காலத்தைப் படைத்தவன்
காலப் புத்தகத்தில் தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........//
அருமை அருமை அருமையான தீர்ப்பு
வாழ்த்துக்கள் !!!
”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை”
நல்ல வரிகள்...கவிதை அருமை.!
ஹ்ஹா.. மீண்டும் ஒரு காதல் பூத்தாச்சு.. இருங்க படிச்சிட்டு வாரேன்
இன்னுமொரு உலகத்தை காதலுடன் படைத்ததை காதலாக சொல்லிருக்கிறீர்கள்
//இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது என்று
காலத்தைப் படைத்தவன்
காலப் புத்தகத்தில் தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........//
என்னவொரு கற்பனை உவமையா உனக்கு..
காதல் இருந்தால்... உலகம் நிலைப்பெற்று இருக்கும் என்ற கருத்து இருக்கிறது உங்கள் வரிகளில்
//”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை”//
உண்மைதான்
//இளமை மாறாத
அழகிய தேவதைகள் அணிவகுக்கப் பட்டு
இவர்களில் யாரை வேண்டுமானாலும்
நீ துணையாக்கிக் கொள்ளலாம்//
மிஸ் பண்ணிட்டார்ப்பா... எல்லோரையும் துணையாக்கிருக்கலாம்..
மீண்டும் மீண்டும்
மீண்டு வர இயலாத காதலோடு
நல்ல ஆக்கம் புதியவன், வைரமுத்துவின் ஊழி கவிதை மற்றும் லவ் பேர்ட்ஸ் படப்பாடலான நாளை உலகம் இல்லையென்றானால் அழகே என்ன செய்வாய்? பாடலும் நினைவுக்கு வந்தன.
நீ படம் மட்டுமே போட்டாலும் - நான் இரசிகன் தான்.
இதுல கதை வேறையா அதுவும் காதலோடு ...
அப்புறம்...?! :)
கடவுள் என்னை வந்து கேட்க மாட்டன் எண்டுறார்..:)
அப்பாடி...பி.கு இல்ல.
//ஆதிசக்தி
தனக்குள் நினைத்துக் கொள்கிறது
”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”//
ஆதிசக்தி இன்னும் இந்த மனுசங்ககிட்ட அடிபடல.அதுதான் தைரியமா மனுசன் நல்லவ்ன்ன்னு சொல்லிட்டாங்க.
புதியவன்,என்னதான் சும்மா கடிச்சாலும்,அருமையான் கற்பனையில் உதித்த கவிதை.
அப்போ உங்க கற்பனையின்படி உலகம் அழிந்து மீண்டும் பிறந்தால் அழகாய் அமைதியாய் இருக்கும்.அப்படித்தானே!அதையும் கெடுக்க எங்கிருந்தோ ஒரு சைத்தான் பிறந்து வருவானே!
நன்று :))
அழகிய கற்பனை....இனிய கவிதை....
அன்புடன் அருணா
//”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை”//
அருமை
தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........
அவருக்கும் காதல் வருமா?
அவரு ஏதோ ஜட்ஜ் மாதிரின்னு நெனச்சேன்.பூகம்பம் ,சுனாமின்னு உருவாக்கி குற்றவாளிகளை தண்டிப்பாருன்னு நெனச்சிட்டிருந்தேன்
//காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை//
சூப்பர்..நல்ல கவிதை!
பழமையான கதை,புதுமையான கவிதை
கவிதை மிகவும் அருமை புதியவன்!
:)
//விஜய் said...
Me the First!!!/
வாங்க விஜய்...
//விஜய் said...
//காதலை விட பரஸ்பர அன்பு தான் முக்கியம் என்று நினைக்கிறேன். கவிஞரின் கருத்தென்னவோ?//
காதலும் ஒரு வகையில் அன்பு தானே...
//\\இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது \\
காதல் இல்லையேல் உலகம் அழிந்து விடும் என்கிறீர்கள்,
காதலி இல்லையேல் உலகத்தை அழித்துவிடுவேன் நான் என்கிறேன்.//
இதெப்படி இருக்கு!!
அருமையா இருக்கு...நீங்களும் கவிதை எழுதலாமே...
ரொம்ப நல்ல கவிதை. வாழ்த்துக்கள் :-)//
வருகைக்கும் விரிவான தருகைக்கும் ரொம்ப நன்றி விஜய்...
//RAMYA said...
ஐயோ மீ த பஷ்டு போட வந்தேன்
ஜஸ்ட் மிஸ் பா !!!//
அடுத்த முறை முயற்சி செய்ங்க ரம்யா...
//RAMYA said...
விஜய் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!//
ஐயோ...பாவம் விஜய்...
//RAMYA said...
இருங்க படிச்சிட்டு வாரேன் !!!//
ம்...படிச்சிட்டு வாங்க...
//RAMYA said...
//
அவனுக்கு முன் இளமை மாறாத
அழகிய தேவதைகள் அணிவகுக்கப் பட்டு
இவர்களில் யாரை வேண்டுமானாலும்
நீ துணையாக்கிக் கொள்ளலாம்
என்று சொல்லப் படுகிறது
//
சொல்லுவாங்க சொல்லுவாங்க
நல்லா கற்பனைய வச்சிட்டு
ஏம்பா நீங்க வேஸ்ட் பண்ணறீங்க
ரொம்ப பெரிய ஆளா வர
எல்லா வாய்ப்புக்களும்
இருக்கு முயற்சி மட்டும் (சினிமாவுக்கு)
இல்லைன்னு நினைக்கிறேன்..//
நமக்கும் சினிமாவுக்குமான தொடர்பு எப்பவாவது சினிமா பார்க்கிறதுல மட்டும் தான் இருக்கு ரம்யா...
//RAMYA said...
”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை” என்று
//
அருமை அருமை நண்பா
அதானே எது இடம்???
நான் உங்க கட்சிதான்.//
ஆமாம்...நல்ல வங்க எல்லாம் நம்ம கட்சி தான்...
//RAMYA said...
”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”
நாம்ப ரொம்ப நல்லவங்கன்னு
மீண்டும் மீண்டும் நிருப்பிக்கறீங்க!!!//
நாம எப்பவுமே நல்ல வங்க தானே...
//RAMYA said...
//
வேறு வழியின்றி அவனிடமிருந்தே
அவனுக்கான துணையை படைத்து
காதல் காற்றை இருவர் இதயத்திலும்
நிரப்பி பூமிக்கு அனுப்பிவிட்டு...
இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது என்று
காலத்தைப் படைத்தவன்
காலப் புத்தகத்தில் தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........//
அருமை அருமை அருமையான தீர்ப்பு
வாழ்த்துக்கள் !!!//
வருகை தந்து வாழ்த்துக்கள் கூறியமைக்கு நன்றி ரம்யா...
//Muthusamy said...
”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை”
நல்ல வரிகள்...கவிதை அருமை.!//
மிக்க நன்றி முத்துசாமி...
//அபுஅஃப்ஸர் said...
ஹ்ஹா.. மீண்டும் ஒரு காதல் பூத்தாச்சு.. இருங்க படிச்சிட்டு வாரேன்//
வாங்க அபுஅஃப்ஸர்...
//அபுஅஃப்ஸர் said...
இன்னுமொரு உலகத்தை காதலுடன் படைத்ததை காதலாக சொல்லிருக்கிறீர்கள்//
மிகவும் சரி அது காதலர் உலகம் தான்...
//அபுஅஃப்ஸர் said...
//இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது என்று
காலத்தைப் படைத்தவன்
காலப் புத்தகத்தில் தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........//
என்னவொரு கற்பனை உவமையா உனக்கு..
காதல் இருந்தால்... உலகம் நிலைப்பெற்று இருக்கும் என்ற கருத்து இருக்கிறது உங்கள் வரிகளில்//
உண்மை... காதல் என்றால் விட்டுக் கொடுத்தல் தானே நாம் நம் தவறுகளை விட்டுக் கொடுத்துவிட்டால் உலகம் நிலைப்பெற்று இருக்கும் தானே...
//அபுஅஃப்ஸர் said...
//”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை”//
உண்மைதான்//
நன்றி அபுஅஃப்ஸர்...
//அபுஅஃப்ஸர் said...
//இளமை மாறாத
அழகிய தேவதைகள் அணிவகுக்கப் பட்டு
இவர்களில் யாரை வேண்டுமானாலும்
நீ துணையாக்கிக் கொள்ளலாம்//
மிஸ் பண்ணிட்டார்ப்பா... எல்லோரையும் துணையாக்கிருக்கலாம்..//
அவர் ரொம்ப நல்லவர்...
//காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை// puthiyavarae!!!!! yeluthiya ovvoru varigalum arumai,ungal kavithaikkaha kaattu kondirukkum ungal puthu varavu......
// நட்புடன் ஜமால் said...
மீண்டும் மீண்டும்
மீண்டு வர இயலாத காதலோடு//
வாங்க ஜமால்...மீண்டாலும் இயலாமல் போனாலும் காதல் காதல் தானே...
// RVC said...
நல்ல ஆக்கம் புதியவன், வைரமுத்துவின் ஊழி கவிதை மற்றும் லவ் பேர்ட்ஸ் படப்பாடலான நாளை உலகம் இல்லையென்றானால் அழகே என்ன செய்வாய்? பாடலும் நினைவுக்கு வந்தன.//
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சந்த்ரசேகர்...
//நட்புடன் ஜமால் said...
நீ படம் மட்டுமே போட்டாலும் - நான் இரசிகன் தான்.
இதுல கதை வேறையா அதுவும் காதலோடு ...//
உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்...நன்றி ஜமால்...
//தமிழன்-கறுப்பி... said...
அப்புறம்...?! :)//
எதற்கப்புறம் தமிழன்...?
//தமிழன்-கறுப்பி... said...
கடவுள் என்னை வந்து கேட்க மாட்டன் எண்டுறார்..:)//
உங்களுக்கு ஏற்கனவே தேவதை இருப்பது அவருக்கு தெரிந்திருக்கும்...அதனால் தான் உங்களிடம் கேட்க வில்லை என்று நினைக்கிறேன்...
//ஹேமா said...
அப்பாடி...பி.கு இல்ல.//
அடுத்த முறை பி.கு. போட முயற்சிக்கிறேன்
கவலை வேண்டாம் ஹேமா...
//ஹேமா said...
//ஆதிசக்தி
தனக்குள் நினைத்துக் கொள்கிறது
”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”//
ஆதிசக்தி இன்னும் இந்த மனுசங்ககிட்ட அடிபடல.அதுதான் தைரியமா மனுசன் நல்லவ்ன்ன்னு சொல்லிட்டாங்க.//
மனிதர்களில் நல்லவர்கள் தான் அதிகம் என்பது என்னுடைய நம்பிக்கை...
//ஹேமா said...
புதியவன்,என்னதான் சும்மா கடிச்சாலும்,அருமையான் கற்பனையில் உதித்த கவிதை.
அப்போ உங்க கற்பனையின்படி உலகம் அழிந்து மீண்டும் பிறந்தால் அழகாய் அமைதியாய் இருக்கும்.அப்படித்தானே!அதையும் கெடுக்க எங்கிருந்தோ ஒரு சைத்தான் பிறந்து வருவானே!//
சைத்தான் வரட்டுமே அவனையும் காதல் காற்றை சுவாசிக்க வைத்து நல்லவனாக மாற்றி விடலாம்...இந்தக் கடவுள்-சைத்தன் போன்ற சித்தாந்தங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை இவையெல்லாம் கவிதைக்காக மட்டுமே...நன்றி ஹேமா...
//ஸ்ரீமதி said...
நன்று :))//
நன்றி ஸ்ரீமதி...
//அன்புடன் அருணா said...
அழகிய கற்பனை....இனிய கவிதை....
அன்புடன் அருணா//
மிக்க நன்றி அருணா மேடம்...
//நசரேயன் said...
//”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை”//
அருமை//
நன்றி நசரேயன்...
// குடுகுடுப்பை said...
தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........
அவருக்கும் காதல் வருமா?
அவரு ஏதோ ஜட்ஜ் மாதிரின்னு நெனச்சேன்.பூகம்பம் ,சுனாமின்னு உருவாக்கி குற்றவாளிகளை தண்டிப்பாருன்னு நெனச்சிட்டிருந்தேன்//
அவருக்கு காதல் வரக்கூடாதா என்ன...?
பூகம்பம் சுனாமி எல்லாம் இயற்கையின் காலமாற்றத்தில் ஏற்படுபவை...அது தண்டனை என்று சொல்ல முடியாது...தண்டணை என்றால் தவறு செய்தவர்கள் மட்டும் தானே தண்டிக்கப் பட வேண்டு...பூகம்பத்திலும் சுனாமியிலும் ஒன்றுமறியாத குழந்தைகள் கூட கொல்லப் படுகிறார்களே...?...விரிவான கருத்துக்கு மிக்க நன்றி குடுகுடுப்பை...
”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை” என்று
மூலப்பொருளிடம் முதல் மனிதன் கூறுகிறான்
நல்லா இருக்கு புதியவன்
//Divyapriya said...
//காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை//
சூப்பர்..நல்ல கவிதை!//
ரொம்ப நன்றி தியப்பிரியா...
//sollarasan said...
பழமையான கதை,புதுமையான கவிதை//
முதல் வருகைக்கு நன்றி சொல்லரசன்...
//Divya said...
கவிதை மிகவும் அருமை புதியவன்!//
மிக்க நன்றி திவ்யா...
// கவின் said...
:)//
நன்றி கவின்...
//smile said...
”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை” என்று
மூலப்பொருளிடம் முதல் மனிதன் கூறுகிறான்
நல்லா இருக்கு புதியவன்//
மிக்க நன்றி ஸ்மைல்...
//aliya said...
//காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை// puthiyavarae!!!!! yeluthiya ovvoru varigalum arumai,ungal kavithaikkaha kaattu kondirukkum ungal puthu varavu......//
வாங்க ஆலியா புதிய வரவாக வருகை தந்து கவிதையை ரசித்தமைக்கு நன்றி...
//ஆதிசக்தி இன்னும் இந்த மனுசங்ககிட்ட அடிபடல.அதுதான் தைரியமா மனுசன் நல்லவ்ன்ன்னு சொல்லிட்டாங்க.//
மனிதர்களில் நல்லவர்கள் தான் அதிகம் என்பது என்னுடைய நம்பிக்கை...//
புதியவன் நீங்க சொலவது மிக மிக உண்மை.ஆனால் நல்லவர்கள் நிறையப்பேர் இருந்தாலும் ஒருசில கெட்ட மனிதர்களால்தான் உலகத்தில் அழிவுகள்.சாதாரணமாகக் குடும்பச்ச் சூழ்நிலைகளில்கூட கெட்ட மனிதர்க
ளால்தான் மன அழுத்தம்,நோய்,
குடும்பப் பிரச்சனை.எனவே நல்ல மனிதர்களைப் பற்றி நினைக்கவே நேரமே வராது.சாகும்வரை கெட்ட மனிதர்கள்தான் வாழ்வோடு நினைவில் நிற்கிறார்கள்.
கவிதை செம அழகு:))
//காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை//
காதல் என்பது மனதளவில் இருக்கனும் என்பதை தெளிவா சொல்லி இருக்கீங்க !!
வணக்கம் புதியவன் ...முதல் முறையாக உங்கள் கவிச்சோலைக்குள் வந்தேன்..முதல் கவிதையே வித்தியாசமாய்..அழகாய்..எளிய வரிகளோடு மனதை கவர்கிறது..
"”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”
இப்படி இறைவன் சொல்லும் நாள் வருமா?
வந்தால் நலமே..
கவிதைகள் எளிமையாகவும் நன்றாகவும் உள்ளது..வாழ்த்துக்கள்
//PoornimaSaran said...
கவிதை செம அழகு:))
//
மிக்க நன்றி...
//PoornimaSaran said...
//காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை//
காதல் என்பது மனதளவில் இருக்கனும் என்பதை தெளிவா சொல்லி இருக்கீங்க !!
//
மிகச் சரியாப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...நன்றி பூர்ணிமா சரண்...
//Monolisaa said...
வணக்கம் புதியவன் ...முதல் முறையாக உங்கள் கவிச்சோலைக்குள் வந்தேன்..முதல் கவிதையே வித்தியாசமாய்..அழகாய்..எளிய வரிகளோடு மனதை கவர்கிறது..
"”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”
இப்படி இறைவன் சொல்லும் நாள் வருமா?
வந்தால் நலமே..
கவிதைகள் எளிமையாகவும் நன்றாகவும் உள்ளது..வாழ்த்துக்கள்
//
வாங்க மோனலிசா
முதல் வருகைக்கும் விரிவான அழகிய தருகைக்கும் மிக்க நன்றி...மீண்டும் வாருங்கள்...
Chancey இல்ல!
Chancey இல்ல!
Chancey இல்ல!
Chancey இல்ல!
Chancey இல்ல!
வார்த்தைகள் வராமல் தத்தளித்துத் திணறி கிடக்கிறேன் உங்க கவிதையைப் படித்து விட்டு...ரொம்ப நல்லா இருக்கு...இந்த புது ஆதாம் ஏவாள் கதை.
ரொம்ப அருமை கலக்கிட்டீங்க!
//ஸாவரியா said...
Chancey இல்ல!
Chancey இல்ல!
Chancey இல்ல!
Chancey இல்ல!
Chancey இல்ல!
வார்த்தைகள் வராமல் தத்தளித்துத் திணறி கிடக்கிறேன் உங்க கவிதையைப் படித்து விட்டு...ரொம்ப நல்லா இருக்கு...இந்த புது ஆதாம் ஏவாள் கதை.
ரொம்ப அருமை கலக்கிட்டீங்க!//
மிக்க நன்றி ஸாவரியா உங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும்...
அந்தமாதிரி எழுத இன்று ஒருவன் இருக்கக் கூடாதா என்று ஏங்குகிறது... காதல் என்ற ஒற்றைச் சொல்லுக்கு எத்தனை தெய்வீக அழகுண்டு..!!!
காதல் பூசிய உலகம் ஒன்றை படைத்துத் தர ஆண்டவனிடம் வேண்டுவோம்.
கவிதையும் கற்பனையும் மிக அருமை..
/ஆதவா said...
அந்தமாதிரி எழுத இன்று ஒருவன் இருக்கக் கூடாதா என்று ஏங்குகிறது... காதல் என்ற ஒற்றைச் சொல்லுக்கு எத்தனை தெய்வீக அழகுண்டு..!!!
காதல் பூசிய உலகம் ஒன்றை படைத்துத் தர ஆண்டவனிடம் வேண்டுவோம்.
கவிதையும் கற்பனையும் மிக அருமை.//
கவிதையையும் கற்பனையையும் ரசித்தமைக்கு நன்றி ஆதவன்...
Post a Comment