சூல் கொள்ளப் பட்ட
மேகக் கருவறையின் வழியே
கோடிப் புள்ளிகளாய் கொட்டுகிறது மழை
மண்புழுவின் உபயத்தில் வெளியேறிய
மண்வாசம் சுவாசம் நிரப்புகிறது
மழைத்துளி ஒவ்வொன்றும்
மரம் மீதும் மலை மீதும் கடல் மீதும்
இன்னுமுள்ள எல்லாவற்றின் மீதும்
பட்டுத் தெறித்து பரவசப் படுத்துகிறது
மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது
எல்லா மலர்களோடல்லாமல்
நீ மட்டும் தனி மலராய்
இவையனைத்தையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறாய்
இந்த மழைத்துளியின் ஒரு துளி
உன் மேல் காதல் கொண்டு
சுழற்றி அடிக்கும் காற்றின்
உதவியோடு உன்னை நனைக்கிறது
தன் ஈரத்தால் குளிர்விக்கிறது
எப்படியாவது உன் காதலை பெற்றிட
தன்னாலான அனைத்தையும் செய்கிறது
ம்ம்ம்ஹூம்ம்ம்...
ஒன்றும் நடக்கவில்லை
உன்னில் எந்த ஒரு மாற்றமோ
காதல் துடிப்போ ஏற்படுவதாயில்லை
பாவம்...இந்த மழைத்துளி
அதற்கெப்படித் தெரியும்
நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...................
இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...
68 comments:
ஆஹா மீண்டும் ஒரு காதலை சொல்லும் காதல் காவியம்..
காதல் காவியத்தை அழகான வரிகளில் வடித்திருக்கிறீர்
வழ்த்துக்கள் புதியவன்
//மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது//
நான் ரசித்த வரிகள் நச் வரிகள்
//அதற்கெப்படித் தெரியும்
நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...................//
இன்னும் முயற்சித்தால் காகிதப்பூக்கள் கூட காதல்சொல்லும்
//ஒரு மழைத்துளியின் போராட்டம்//
தலைப்போடு படங்களும் சொல்லுது கவிதை...!
//மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது
//
கவிதையின் தரம் உயர்கிறது...புதியவன் !!!!
\\"ஒரு மழைத்துளியின் போராட்டம்…"\\
தலைப்பும் படமும் அருமை ...
\\சூல் கொள்ளப் பட்ட
மேகக் கருவறை\\
அருமையான வரிகள் ...
(மற்ற கருத்துக்கள் பின்னர்)
சூல் கொள்ளப் பட்ட
மேகக் கருவறையின் வழியே
கோடிப் புள்ளிகளாய் கொட்டுகிறது மழை
மண்புழுவின் உபயத்தில் வெளியேரிய
மண்வாசம் சுவாசம் நிரப்புகிறது
அருமையான கற்பனை.
கவிதை முழுவதும் கற்பனை ததும்பி வழிகிறது.
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...................
///
நல்ல
அழகுணர்ச்சியுடன்
கவிதை
வெள்ளம்!!
//பாவம்...இந்த மழைத்துளி
அதற்கெப்படித் தெரியும்
நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று....................//
கலக்கிட்டீங்க...அருமை.
அன்புடன் அருணா
அருமையான வரிகள். ரொம்பவும் ரசித்தேன்.
\\மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது\\
கற்பனை அபாரம் :-)
மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது
வார்த்தைகள் அழகு புதியவன்
Anbare,
Ithil Ethu Sari:
வெளியேரிய or வெளியேறிய
Nanri...Kavithai Arumai!
அழகான சொற்கள் உபயோகிக்கறதுல உங்களுக்கு நிகர் நீங்க தான்! தொடருங்க...
புதியவன் அருமையான வரிகள்.
அழகான சிந்தனை.சொற்களைக் கோர்த்த அழகான கவிதை.
//நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று................//
கவிதையை இறுதியாக முடித்த விதம் இன்னும் அருமை.
வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் அழகு;))
\\மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது\
ரசித்தேன் வரிகளை......
அருமையான கவிதை புதியவன், வாழ்த்துக்கள்:))
வெகு அழகு :)))
ரீடர்ல படிச்சி புரிஞ்சி கமெண்டு போடுரேன் சாமி
காதலென்றாலே அனைவரும் உருகிவிடுகிறார்கள். நன்றாக இருக்கிறது..கவிதையும், படமும்!
நெல்லைத்தமிழ் இணையத்தின் திரட்டியில் இணைத்தமைக்கு நன்றி.
nellaitamil
வாவ், ரொம்ப அழகான கவிதைங்க புதியவன். கலக்குங்க :)
காகிதப்பூ
அன்று.....
கதம்பமாய் கொலு இருக்கையிலே....
பேசாமடந்தை பிள்ளைப் பூச்சி
பயந்தாங் கொள்ளி இளகியமனசு
காலத்தின் கோலத்தால்
காகிதப் பூவாய் மாற......
மணம் இல்லை என்றாலும் ....
மலர்தான்
அவளைச் சுற்றி இட்டாள்
மின்சார வலையம்.
அதனால் இன்று......
அடங்காப் பிடாரி ஆணவக்காரி
வாயாடி கல் நெஞ்சக்காரி
பாவம்!
மின்சார வலையத்துக்குள்ளும்
கருணை உள்ளம் இருப்பதை
யாரறிவார்?..?
இது நான் எப்பவோ எழுதிய கவிதை உங்கள் கவிதையைப் படிக்கும் போது இக்
கவிதை எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. உங்கள் கவியில் அழகு,அருமை,ஆழம்.எளிமைஅனைத்தும் உண்டு.குறிப்பாக1 ‘எப்படியாவது உன் காதலைப் பெற்றிட’ வரிகளில் தொடங்கி முடிவு வரைக்கும் பிரமாதமான வரிகள் மேலும் உங்கள் கவி மிளிர என் வாழ்த்துக்கள்.
பீஷான் கலா
//
மண்புழுவின் உபயத்தில் வெளியேறிய
மண்வாசம் சுவாசம் நிரப்புகிறது
//
அருமை அருமை
மண் வாசனைக்கு
உவமானம் நல்லா
கொடுத்து இருக்கீங்க
//
மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது
எல்லா மலர்களோடல்லாமல்
நீ மட்டும் தனி மலராய்
இவையனைத்தையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறாய்
//
சூப்பர் சூப்பர்
புதியவன் உங்களாலே மட்டும்தான்
இப்படி எழுத முடியும
அருமை அருமை
வரிகள் அத்தனையும் அருமை !!!
//
இந்த மழைத்துளியின் ஒரு துளி
உன் மேல் காதல் கொண்டு
சுழற்றி அடிக்கும் காற்றின்
உதவியோடு உன்னை நனைக்கிறது
தன் ஈரத்தால் குளிர்விக்கிறது
எப்படியாவது உன் காதலை பெற்றிட
தன்னாலான அனைத்தையும் செய்கிறது
//
சூப்பர் ஒ சூப்பர் !!!
காதலுக்கு நீங்க முழு அதாரிட்டி போங்க
நல்ல எழுதறீங்க வாழ்த்துக்கள் !!!
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...................
//
மழையில நனைஞ்சு கிழிஞ்சிராதா புதியவன்.உங்களுக்கு போட்டியா நாளைக்கு என்னோட கவிதைய மறுபதிவு போடறேன்
//அபுஅஃப்ஸர் said...
ஆஹா மீண்டும் ஒரு காதலை சொல்லும் காதல் காவியம்..
காதல் காவியத்தை அழகான வரிகளில் வடித்திருக்கிறீர்
வழ்த்துக்கள் புதியவன்//
வாங்க அபுஅஃப்ஸர்
முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி...
//அபுஅஃப்ஸர் said...
//மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது//
நான் ரசித்த வரிகள் நச் வரிகள்//
எனக்கும் இந்த வரிகள் ரொம்ப பிடித்திருந்தது...
//அபுஅஃப்ஸர் said...
//அதற்கெப்படித் தெரியும்
நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...................//
இன்னும் முயற்சித்தால் காகிதப்பூக்கள் கூட காதல்சொல்லும்//
முயற்சிகள் தொடரும்...
//அபுஅஃப்ஸர் said...
//ஒரு மழைத்துளியின் போராட்டம்//
தலைப்போடு படங்களும் சொல்லுது கவிதை...!//
மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...
//அ.மு.செய்யது said...
//மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது
//
கவிதையின் தரம் உயர்கிறது...புதியவன் !!!!//
மிக்க நன்றி அ.மு.செய்யது...மீண்டும் வாருங்கள்...
//நட்புடன் ஜமால் said...
\\"ஒரு மழைத்துளியின் போராட்டம்…"\\
தலைப்பும் படமும் அருமை ...//
நன்றி ஜமால்...
//நட்புடன் ஜமால் said...
\\சூல் கொள்ளப் பட்ட
மேகக் கருவறை\\
அருமையான வரிகள் ...
(மற்ற கருத்துக்கள் பின்னர்)//
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி ஜமால்...
//அமிர்தவர்ஷினி அம்மா said...
சூல் கொள்ளப் பட்ட
மேகக் கருவறையின் வழியே
கோடிப் புள்ளிகளாய் கொட்டுகிறது மழை
மண்புழுவின் உபயத்தில் வெளியேரிய
மண்வாசம் சுவாசம் நிரப்புகிறது
அருமையான கற்பனை.
கவிதை முழுவதும் கற்பனை ததும்பி வழிகிறது.//
மிக்க நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...
//thevanmayam said...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...................
///
நல்ல
அழகுணர்ச்சியுடன்
கவிதை
வெள்ளம்!!//
நன்றி தேவா...
//அன்புடன் அருணா said...
//பாவம்...இந்த மழைத்துளி
அதற்கெப்படித் தெரியும்
நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று....................//
கலக்கிட்டீங்க...அருமை.
அன்புடன் அருணா//
ரொம்ப நன்றி அருணா மேடம்...
//விஜய் said...
அருமையான வரிகள். ரொம்பவும் ரசித்தேன்.
\\மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது\\
கற்பனை அபாரம் :-)//
நன்றி விஜய்...
// smile said...
மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது
வார்த்தைகள் அழகு புதியவன்//
நன்றி ஸ்மைல்...
// Muthusamy said...
Anbare,
Ithil Ethu Sari:
வெளியேரிய or வெளியேறிய
Nanri...Kavithai Arumai!//
வாங்க முத்துசாமி
’வெளியேறிய’ இதுதான் சரியான வார்த்தை
எழுத்துப்பிழை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி...மீண்டும் வாருங்கள்...
//Divyapriya said...
அழகான சொற்கள் உபயோகிக்கறதுல உங்களுக்கு நிகர் நீங்க தான்! தொடருங்க...//
நன்றி திவ்யப்பிரியா...
//ஹேமா said...
புதியவன் அருமையான வரிகள்.
அழகான சிந்தனை.சொற்களைக் கோர்த்த அழகான கவிதை.//
அழகான தருகை நன்றி ஹேமா...
//ஹேமா said...
//நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று................//
கவிதையை இறுதியாக முடித்த விதம் இன்னும் அருமை.//
நன்றி ஹேமா...
//Divya said...
வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் அழகு;))
\\மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது\
ரசித்தேன் வரிகளை......
அருமையான கவிதை புதியவன், வாழ்த்துக்கள்:))//
வருகை தந்து வாழ்த்தியதற்கு நன்றி திவ்யா...
//ஸ்ரீமதி said...
வெகு அழகு :)))//
மிக்க நன்றி ஸ்ரீமதி...
//குடுகுடுப்பை said...
ரீடர்ல படிச்சி புரிஞ்சி கமெண்டு போடுரேன் சாமி//
ரொம்ப நன்றி குடுகுடுப்பை...
//அன்புமணி said...
காதலென்றாலே அனைவரும் உருகிவிடுகிறார்கள். நன்றாக இருக்கிறது..கவிதையும், படமும்!//
உண்மைதான் காதல் அனைவரையும் உருக
வைத்துவிடும் தான்...நன்றி அன்புமணி...
//TKB காந்தி said...
வாவ், ரொம்ப அழகான கவிதைங்க புதியவன். கலக்குங்க :)//
மிக்க நன்றி காந்தி...
// Kala said...
காகிதப்பூ
அன்று.....
கதம்பமாய் கொலு இருக்கையிலே....
பேசாமடந்தை பிள்ளைப் பூச்சி
பயந்தாங் கொள்ளி இளகியமனசு
காலத்தின் கோலத்தால்
காகிதப் பூவாய் மாற......
மணம் இல்லை என்றாலும் ....
மலர்தான்
அவளைச் சுற்றி இட்டாள்
மின்சார வலையம்.
அதனால் இன்று......
அடங்காப் பிடாரி ஆணவக்காரி
வாயாடி கல் நெஞ்சக்காரி
பாவம்!
மின்சார வலையத்துக்குள்ளும்
கருணை உள்ளம் இருப்பதை
யாரறிவார்?..?
இது நான் எப்பவோ எழுதிய கவிதை உங்கள் கவிதையைப் படிக்கும் போது இக்
கவிதை எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. உங்கள் கவியில் அழகு,அருமை,ஆழம்.எளிமைஅனைத்தும் உண்டு.குறிப்பாக1 ‘எப்படியாவது உன் காதலைப் பெற்றிட’ வரிகளில் தொடங்கி முடிவு வரைக்கும் பிரமாதமான வரிகள் மேலும் உங்கள் கவி மிளிர என் வாழ்த்துக்கள்.
பீஷான் கலா//
உங்க கவிதையும் ரொம்ப அழகாக
இருக்கிறது...இப்போதும் நீங்கள் எழுதலாமே...நன்றி பீஷான் கலா...
//RAMYA said...
//
மண்புழுவின் உபயத்தில் வெளியேறிய
மண்வாசம் சுவாசம் நிரப்புகிறது
//
அருமை அருமை
மண் வாசனைக்கு
உவமானம் நல்லா
கொடுத்து இருக்கீங்க//
வாங்க ரம்யா
உவமையை ரசித்தமைக்கு நன்றி...
//RAMYA said...
//
மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது
எல்லா மலர்களோடல்லாமல்
நீ மட்டும் தனி மலராய்
இவையனைத்தையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறாய்
//
சூப்பர் சூப்பர்
புதியவன் உங்களாலே மட்டும்தான்
இப்படி எழுத முடியும
அருமை அருமை
வரிகள் அத்தனையும் அருமை !!!//
நன்றி...நன்றி...
//RAMYA said...
//
இந்த மழைத்துளியின் ஒரு துளி
உன் மேல் காதல் கொண்டு
சுழற்றி அடிக்கும் காற்றின்
உதவியோடு உன்னை நனைக்கிறது
தன் ஈரத்தால் குளிர்விக்கிறது
எப்படியாவது உன் காதலை பெற்றிட
தன்னாலான அனைத்தையும் செய்கிறது
//
சூப்பர் ஒ சூப்பர் !!!
காதலுக்கு நீங்க முழு அதாரிட்டி போங்க
நல்ல எழுதறீங்க வாழ்த்துக்கள் !!!//
வருகைக்கும் தருகைக்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி ரம்யா...
//குடுகுடுப்பை said...
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...................
//
மழையில நனைஞ்சு கிழிஞ்சிராதா புதியவன்.உங்களுக்கு போட்டியா நாளைக்கு என்னோட கவிதைய மறுபதிவு போடறேன்//
அதற்கு பயந்துதானே காகிதப் பூக்கள் காதல் கொள்வதில்லைனு சொல்லி இருக்கிறேன்... சீக்கிரமா உங்க கவிதையோட
மறுபதிவ போடுங்க படிக்கக் காத்திருக்கிறேன்...
என் அறிவியல் பதிவு
பற்றி
அறிவுரை
வழங்க வருக..
//காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை //
எப்பிடி இப்பிடி எல்லாம் :))
//PoornimaSaran said...
//காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை //
எப்பிடி இப்பிடி எல்லாம் :))
//
வாங்க பூர்ணிமா சரண்
எங்க கொஞ்ச நாளா ஆள காணேம்...
தவறாமல் வந்து கவிதையை ரசித்தமைக்கு நன்றி...
ஒரு மழைத்துளியின் அவஸ்தையை வித்தியாசமாக சொல்லியிருக்கிறீர்கள்.. காதல் எந்த ஒரு பொருளையும் விட்டுவைப்பதில்லை...
/// மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி ////
வித்தியாசமான கற்பனை... காதல் தழும்பி வழிகிறது இக்கவிதையில்..
//ஆதவா said...
ஒரு மழைத்துளியின் அவஸ்தையை வித்தியாசமாக சொல்லியிருக்கிறீர்கள்.. காதல் எந்த ஒரு பொருளையும் விட்டுவைப்பதில்லை...
/// மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி ////
வித்தியாசமான கற்பனை... காதல் தழும்பி வழிகிறது இக்கவிதையில்..//
உண்மை தான் காதல் எந்த ஒரு உயிரையும் விட்டு வைப்பதில்லை...நன்றி ஆதவன்...
Congratulations!!!
யூத் விகடனின் கவிதை வெளியாகியுள்ளதற்கு எனது வாழ்த்துகள்!
//நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...//
அருமை!
\\சூல் கொள்ளப் பட்ட
மேகக் கருவறை\\
\\மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது\\
அற்புதமான படைப்பு புதியவன். மீண்டும் மீண்டும் படித்தேன்.
வாழ்துக்கள் புதியவரே:))
//பாவம்...இந்த மழைத்துளி
அதற்கெப்படித் தெரியும்
நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று.........//
அற்புதம் வாழ்த்துக்கள் புதியவன்
//RAD MADHAV said...
Congratulations!!!//
நன்றி RAD MADHAV...
//அன்புமணி said...
யூத் விகடனின் கவிதை வெளியாகியுள்ளதற்கு எனது வாழ்த்துகள்!
//நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...//
அருமை!//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்புமணி...
//Syed Ahamed Navasudeen said...
\\சூல் கொள்ளப் பட்ட
மேகக் கருவறை\\
\\மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது\\
அற்புதமான படைப்பு புதியவன். மீண்டும் மீண்டும் படித்தேன்.//
முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி நவாஸுதீன்...
//Poornima Saravana kumar said...
வாழ்துக்கள் புதியவரே:))//
நன்றி பூர்ணிமா சரண்...
//Rajeswari said...
//பாவம்...இந்த மழைத்துளி
அதற்கெப்படித் தெரியும்
நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று.........//
அற்புதம் வாழ்த்துக்கள் புதியவன்//
முதல் வருகைக்கு மிக்க நன்றி ராஜேஸ்வரி...
Post a Comment