Friday, January 16, 2009

இன்னும் சில முத்தங்கள்...



கண்களில் தொடங்கி
கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...


இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...



முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...



சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...


ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...



உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?


79 comments:

Unknown said...

காதல் நிரம்பி வழிந்தோடுகிறது நண்பரே.. அருமை..

நட்புடன் ஜமால் said...

ம்ம்ம் நடக்கட்டும் ...

Unknown said...

:)))

//உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?//

இது அழகு :))

நட்புடன் ஜமால் said...

\\இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...\\

ஜூப்பருங்கோ ...

நட்புடன் ஜமால் said...

\\உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...\\


நல்ல கொஞ்சல் - கெஞ்சல் போல ...

நட்புடன் ஜமால் said...

\\உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...\\

ரொமாண்டிக் ...

நட்புடன் ஜமால் said...

\\உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...\\

நல்ல போர்

காதல் போர் ...

நட்புடன் ஜமால் said...

\\கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?
\\\

அட அட அடா

அருமை ப்பா ...

anujanya said...

ஸ்ஹ்ஹ்ஹ் ஷப்பா, முத்தத்தில் இத்தனையா! நம்மள ஒருத்தரும் சீந்தாமல் இருப்பதன் இரகசியம் இதுதானா :(((

நல்லா இருங்க தம்பி. எல்லாக் கவிதைகளும் அழகு.

அனுஜன்யா

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
ம்ம்ம் நடக்கட்டும் ...

//

நடக்கட்டும் நடக்கட்டும்...

Poornima Saravana kumar said...

naan thaan 10:))

Poornima Saravana kumar said...

Really superb:)

தமிழ் தோழி said...

கவிதைகள் அருமை

தமிழ் தோழி said...

//கண்களில் தொடங்கி
கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...//

உங்களை பார்த்தால் பாவமா இருக்கு. இவ்வளவு ஃபீல் பன்னி எழுதி இருக்கீங்க.

தமிழ் தோழி said...

//ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...//

அருமை.

na.jothi said...

அருமையா இருக்கு புதியவன்
எல்லா கவிதைகளும்

நசரேயன் said...

காதல் நிரம்பி முத்தமா ஓடுது

குடுகுடுப்பை said...

கவிதை நல்லா இருக்கு.
கவிதைல மட்டும்தான் இருக்குமா?

குடுகுடுப்பை said...

ஆனா எதிர் கவுஜ போடாலாமான்னு தோனுது.பொழச்சு போங்க விட்டுடறேன்

Divya said...

கவிதை வரிகள் அனைத்துமே.......கொள்ளை அழகு!!

வாழ்த்துக்கள் புதியவன்!!!

Divya said...

\\ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...\\


சூப்பர்ப்!!

ஹேமா said...

புதியவன் பதிவில் ஒரே முத்தச் சத்தம்.

ஹேமா said...

புதியவன்,இது (பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...)சரியா?

ஹேமா said...

உண்மையில் கவிதை அருமை.இது கற்பனை என்று சொல்வது நம்பமுடியாத ஒன்று.காதல் உணர்வோடு கலந்த வரிகள் அத்தனையும்.

அப்துல்மாலிக் said...

ம்ம் மீண்டும் ஒரு முத்த/வெட்கப்போராட்டம்...
உங்களி வரிகள் அனைத்தும் அருமைப்பூ.. தொடருங்கள் உங்கள் முத்தத்தை ச்சே கவிதைகளை...

அப்துல்மாலிக் said...

//கண்களில் தொடங்கி

கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்//

நல்லதொரு தொடக்கம்...

வெட்கம் அதிகமாவதால் தான் முத்ததின் சத்தமும் அதிகமாகும்

அப்துல்மாலிக் said...

//இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...//

காதல் = காமம்
உங்கள் வரிகளில் தெரிகிறது காதல்....

Divyapriya said...

//சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...//

அட்டகாசமான உவமை :) எல்லா கவிதையுமே கலக்கல் :)

வியா (Viyaa) said...

உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?

வரிகள் அற்புதம்..
காதல் நிரம்பிய கவிதை..ரசித்தேன்

Natchathraa said...

//உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...//

இந்த கவிதை வரியில் தொலைந்து போறவங்களை யாரு கண்டுப்பிடிப்பாங்கங்க???

//இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...//

ரொம்பவே ஏங்கி போயிட்டீங்க போல..

:-))

//முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...//

வரிகள் ரொம்ப அழகு...

//சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்//

அழகான உவமை...


//இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...//

காதலில் இந்த கள்ளத்தனம் தானே அழகு...

//இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?//

:-))))

கவிதையின் ஒரு ஒரு வரியும் காதலாகவே இருக்கிறது.....

கவிதையும் படங்களும் அருமை புதியவன்....

தேவன் மாயம் said...

இருந்தால்...
Friday, January 16, 2009
இன்னும் சில முத்தங்கள்...


கண்களில் தொடங்கி
கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...


இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...



முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...



சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...


ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...


உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்...///


முடியும்!
முடியும்
தேவா

Mathu said...

Wow very nice puthiyavan.
Superb Kavithai.

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

புதியவன் said...

//காதல் ராஜா said...
காதல் நிரம்பி வழிந்தோடுகிறது நண்பரே.. அருமை..//

முதல் வருகைக்கு நன்றி காதல் ராஜா...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
ம்ம்ம் நடக்கட்டும் ...//

ம்ம்ம்...சரி...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
:)))

//உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?//

இது அழகு :))//

நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...\\

ஜூப்பருங்கோ ...//

நன்றிங்கோ...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...\\


நல்ல கொஞ்சல் - கெஞ்சல் போல ...//

அதே...அதே...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...\\

ரொமாண்டிக் ...//

கரெக்ட்டு...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...\\

நல்ல போர்

காதல் போர் ...//

அதே தான்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?
\\\

அட அட அடா

அருமை ப்பா ...//

நன்றி ஜமால்...

புதியவன் said...

//அனுஜன்யா said...
ஸ்ஹ்ஹ்ஹ் ஷப்பா, முத்தத்தில் இத்தனையா! நம்மள ஒருத்தரும் சீந்தாமல் இருப்பதன் இரகசியம் இதுதானா :(((

நல்லா இருங்க தம்பி. எல்லாக் கவிதைகளும் அழகு.

அனுஜன்யா//

உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது
மிக்க நன்றி அனுஜன்யா...

புதியவன் said...

//PoornimaSaran said...
// நட்புடன் ஜமால் said...
ம்ம்ம் நடக்கட்டும் ...

//

நடக்கட்டும் நடக்கட்டும்...//

ம்ம்ம்...சரி...சரி...

புதியவன் said...

//PoornimaSaran said...
naan thaan 10:))//

ஆமாங்கோ...

புதியவன் said...

//PoornimaSaran said...
Really superb:)//

நன்றி பூர்ணிமா சரண்...

புதியவன் said...

// தமிழ் தோழி said...
கவிதைகள் அருமை//

நன்றி தமிழ் தோழி...

புதியவன் said...

//தமிழ் தோழி said...
//கண்களில் தொடங்கி
கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...//

உங்களை பார்த்தால் பாவமா இருக்கு. இவ்வளவு ஃபீல் பன்னி எழுதி இருக்கீங்க.//

ஆமாம்... ஃபீல் பண்ணி எழுதுனது தான்...

புதியவன் said...

//தமிழ் தோழி said...
//ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...//

அருமை.//

மிக்க நன்றி...

புதியவன் said...

//smile said...
அருமையா இருக்கு புதியவன்
எல்லா கவிதைகளும்//

முதல் வருகைக்கு நன்றி ஸ்மைல்...

புதியவன் said...

//நசரேயன் said...
காதல் நிரம்பி முத்தமா ஓடுது//

வருகைக்கும் அழகிய தருகைக்கும்
நன்றி நசரேயன்...

புதியவன் said...

//குடுகுடுப்பை said...
கவிதை நல்லா இருக்கு.
கவிதைல மட்டும்தான் இருக்குமா?//

இப்போதைக்கு கவிதைல மட்டும் தான்...

புதியவன் said...

//குடுகுடுப்பை said...
ஆனா எதிர் கவுஜ போடாலாமான்னு தோனுது.பொழச்சு போங்க விட்டுடறேன்//

ஐயோ..அண்ணா ஏனிந்த கொலைவெறி...
நல்ல வேளை முடிவை மாத்திக்கிட்டீங்க...
நன்றி குடுகுடுப்பை...

புதியவன் said...

//Divya said...
கவிதை வரிகள் அனைத்துமே.......கொள்ளை அழகு!!

வாழ்த்துக்கள் புதியவன்!!!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
நன்றி திவ்யா...

புதியவன் said...

//Divya said...
\\ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...\\


சூப்பர்ப்!!//

ரசிப்பிற்கு மிக்க நன்றி திவ்யா...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன் பதிவில் ஒரே முத்தச் சத்தம்.//

வாங்க ஹேமா
எனக்கும் சத்தம் கேட்குது...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன்,இது (பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...)சரியா?//

அப்பா... இப்பத்தான் சரியா சொல்லியிருக்கீங்க...

புதியவன் said...

//ஹேமா said...
உண்மையில் கவிதை அருமை.இது கற்பனை என்று சொல்வது நம்பமுடியாத ஒன்று.காதல் உணர்வோடு கலந்த வரிகள் அத்தனையும்.//

//இது கற்பனை என்று சொல்வது நம்பமுடியாத ஒன்று//

நம்புங்க ஹேமா...

மிக்க நன்றி...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
ம்ம் மீண்டும் ஒரு முத்த/வெட்கப்போராட்டம்...
உங்களி வரிகள் அனைத்தும் அருமைப்பூ.. தொடருங்கள் உங்கள் முத்தத்தை ச்சே கவிதைகளை...//

வாங்க அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//கண்களில் தொடங்கி

கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்//

நல்லதொரு தொடக்கம்...

வெட்கம் அதிகமாவதால் தான் முத்ததின் சத்தமும் அதிகமாகும்//

இந்த விசயம் எனக்குத் தெரியாதே...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...//

காதல் = காமம்
உங்கள் வரிகளில் தெரிகிறது காதல்....//

காதல் தெரிகிறதா...?
நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//Divyapriya said...
//சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...//

அட்டகாசமான உவமை :) எல்லா கவிதையுமே கலக்கல் :)//

உவமையை ரசித்தமைக்கு
ரொம்ப நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//வியா..(Viyaa) said...
உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?

வரிகள் அற்புதம்..
காதல் நிரம்பிய கவிதை..ரசித்தேன்//

மிக்க நன்றி வியா...மீண்டும் வாருங்கள்...

புதியவன் said...

//Natchathraa said...
//உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...//

இந்த கவிதை வரியில் தொலைந்து போறவங்களை யாரு கண்டுப்பிடிப்பாங்கங்க???

தொலையிரதுக்கு யாரு காரணமோ
அவங்க தான் கண்டு பிடிக்கணும்...


//இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...//

ரொம்பவே ஏங்கி போயிட்டீங்க போல..

:-))

ஆமாம்...கொஞ்சம் ரொம்பவே...கற்பனையில...

//முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...//

வரிகள் ரொம்ப அழகு...

மிக்க நன்றி...

//சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்//

அழகான உவமை...

உவமையை ரசித்தமைக்கு நன்றி...

//இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...//

காதலில் இந்த கள்ளத்தனம் தானே அழகு...

ஆமாம், காதலில் கள்ளத்தனமும் அழகுதான்...

//இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?//

:-))))

இது என்ன சிரிப்பு...?

கவிதையின் ஒரு ஒரு வரியும் காதலாகவே இருக்கிறது.....

கவிதையும் படங்களும் அருமை புதியவன்....//

வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி நட்சத்ரா...

புதியவன் said...

//thevanmayam said...

முடியும்!
முடியும்
தேவா//

முயன்றால் முடியாதது எதுவுமில்லைன்னு
சொல்ரீங்க...நன்றி தேவா...

புதியவன் said...

//Mathu said...
Wow very nice puthiyavan.
Superb Kavithai.//

ரொம்ப நன்றி மது...

நட்புடன் ஜமால் said...

சத்தம் குறையறதுக்குள்ளே

அடுத்து ...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
சத்தம் குறையறதுக்குள்ளே

அடுத்து ...//

இந்த சத்தம் செவிக்கு நல்லது தானே...?

து. பவனேஸ்வரி said...

வணக்கம்,
அழகான கவிதை. காதல் நிரம்பி வழிகிறது. அனைத்தையும் கவிதையிலேயே கொட்டிவிடாதீர்கள். உங்கள் மனைவிக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் ஐயா.

புதியவன் said...

//து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
அழகான கவிதை. காதல் நிரம்பி வழிகிறது. அனைத்தையும் கவிதையிலேயே கொட்டிவிடாதீர்கள். உங்கள் மனைவிக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் ஐயா.//

கற்பனை இன்னும் மிச்சம் இருக்கிறது
து.பவனேஸ்வரி...அளவு தான்
தெரியவில்லை...அதிலிருந்து
மிகக் கொஞ்சமாய் கொட்டியது தான் இது...

நன்றி து. பவனேஸ்வரி..

Sinthu said...

அட......... super...........உங்களுக்கு காதலி இல்லையா என்று யாரும் கேக்கள்ளயா? என்னைக் கேட்டாங்க அண்ணா....

Muthusamy Palaniappan said...

Arumai Aurmai...Mutha Malaiyil Nanaikirathu Kaadhal

புதியவன் said...

//Sinthu said...
அட......... super...........உங்களுக்கு காதலி இல்லையா என்று யாரும் கேக்கள்ளயா? என்னைக் கேட்டாங்க அண்ணா....//

என்னிடம் அப்படி யாரும் கேட்கவில்லை...
வருகைக்கு நன்றி சிந்து...

புதியவன் said...

//Muthusamy said...
Arumai Aurmai...Mutha Malaiyil Nanaikirathu Kaadhal//

வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி முத்துசாமி...

நவீன் ப்ரகாஷ் said...

மிக அழகான காதலான முத்தங்கள் புதியவன்..... !!!

முத்தங்களின் சத்தத்தில் ஈரமாகின்றது மனது...:))

நவீன் ப்ரகாஷ் said...

//இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...//

குறும்பு கொப்பளிக்கின்றது ஒவ்வொரு வரிகளிலும்...:)))

புதியவன் said...

//நவீன் ப்ரகாஷ் said...
மிக அழகான காதலான முத்தங்கள் புதியவன்..... !!!

முத்தங்களின் சத்தத்தில் ஈரமாகின்றது மனது...:))//

வாங்க கவிஞரே

நீங்க நம்ம வலைப்பக்கம் வந்ததில் மிக்க மகிழ்ச்சி...மனது ஈரமாகின்றதா...?...நன்றி நவீன்...

புதியவன் said...

//நவீன் ப்ரகாஷ் said...
//இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...//

குறும்பு கொப்பளிக்கின்றது ஒவ்வொரு வரிகளிலும்...:)))//

குறும்பான தருகைக்கு மிக்க நன்றி கவிஞரே...

ஆதவா said...

///கண்களில் தொடங்கி
கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...///

ஆஹா.... அருமை அருமை... தன்னையே தேடி காதலியிடம் தேடச் சொல்லுவது...


//////
இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...////////

சூப்பர்... வெட்கப்படுகிறது கவிதை....

////////
முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...//////

முத்த சத்தம்.... அழகான சொற்பதம்.. ஊடலின் சுகம் அல்லவா அது.... பிரமாதம்..

/////////
சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...////

சங்கொலி - சிணுங்கல் ஒலி... அருமையான எடுத்துக்காட்டு உவமை... வெட்கத்தை வெல்ல முடியுமா??


/////////
ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...////////

அடடே!!! தவறான பாடம்.. சரியான செயல்....ஹி ஹி.. நல்லா அனுபவிக்கிறீங்க

///////////
உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............/////////////

ஆமாம்ல.... யாருங்க அது.... நம்ம புதியவருக்கு கொடுத்திடுங்க..... :D


அனைத்து கவிதைகளும் மிகப்பிரமாதமாக இருக்கின்றன... முத்தக்கவிராயர் என்று உங்களுக்கு பட்டமே கொடுக்கலாம் போல....

அன்புடன்
ஆதவன்

புதியவன் said...

//ஆதவா said...

அனைத்து கவிதைகளும் மிகப்பிரமாதமாக இருக்கின்றன... முத்தக்கவிராயர் என்று உங்களுக்கு பட்டமே கொடுக்கலாம் போல....

அன்புடன்
ஆதவன்//

பட்ட மெல்லாம் வேண்டாம் ஆதவன், அன்பிருந்தால் போதும்...நன்றி ஆதவன்...