Friday, January 9, 2009

காதலாய்…என் டைரியின் சில பக்கங்கள்...

அவள் பெயர் மீரா. இதுவரை எந்தக் கண்ணனுக்காகவும் காத்திருந்ததாய் அவளில்லை. சில பெண்களைப் பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும் வேறு சில பெண்களிடம் பார்த்த உடனே பேசத் தோன்றும் வெகு சில பெண்களை மட்டுமே பக்கத்தில் பார்த்தாலும் எதுவுமே தோன்றாது, ஆனால் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது இதயம் துடிப்பது போல் இமைகளும் படபடக்கும். இதில் மீரா மூன்றாம் வகையைச் சார்ந்தவள். அவள் வயதென்ன...?...பெண்களிடம் கேட்கக் கூடாத கேள்வி அதானால் வேண்டாம். அவள் எப்படி இருப்பாள்...?...தாஜ்மஹாலுக்கு சுடிதார் போட்டு யாராவது பார்த்திருக்கிறீர்களா...?...அவள் சுடிதார் அணிந்து வந்தால் அப்படித்தான் இருக்கும்.

எங்கள் தெருவில் இருக்கும் நடனப் பள்ளியின் மாணவியவள். எப்படி இங்கு வந்து சேர்ந்திருப்பாள்...?... ஒரு வேளை யாராவது இங்கு மயில்களுக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாய் அவளிடம் தவறாகச் சொல்லி இருப்பார்களோ...?. கால்களில் சலங்கை கட்டி கைகளில் முத்திரை காட்டி விரல்களில் அபிநயம் பிடித்து இதழ்களில் ஜதி சொல்லி விழிகளில் விசித்திரம் படைக்கும் அதிசய தேவதையவள். முதன் முதலாய் அவளைப் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது நினைத்துக் கொண்டேன் இவளைப் படைப்பதற்கு மட்டும் இறைவன் சற்றுக் கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டிருப்பான் போலும்.

சலங்கை ஒலியோடு சிரிப்பொலியும் சேர்ந்து ஸ்வரங்கள் தாண்டிய ஒரு இசை அவள் நடந்து செல்லும் போதெல்லாம் ரசிக்கத் தவறியதில்லை. அன்று தான் அதுவரை வெற்றுக் காகிதங்களாய் இருந்த என் டைரியின் பக்கத்தில் முதல் முத்திரையாக அவள் பெயரை பதித்தது என் பேனா.

பின் வரும் நாட்களில் எங்களுக்குள் பார்வைகள் பேச்சுக்களாயின நட்பு நடை பயின்றது. எனக்கு இன்னது பிடிக்கும் உனக்கு என்ன பிடிக்கும் என்று பிடித்தவை பிடிக்காதவை என்று தொடங்கி அரசியலில் ஆரம்பித்து ஆன்மீகம் வரை பேசினோம். காதல் பற்றியும் பேசினோம்...ஆமாம், எங்கள் காதல் தவிர மற்ற அனைவருடைய காதல்களைப் பற்றியும் பேசினோம். நாட்களில் தொடந்த நட்பு மாதங்களைக் கடந்து ஆண்டுகளை அடைந்து கொண்டிருந்தது.

அன்று காலை மீராவிடம் இருந்து போன் வந்தது அரசுத்துறையில் பணிபுரியும் தன் அப்பாவிற்கு பதவி உயர்வோடு இடமாற்றமும் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் நாளைக்கே வடநாட்டுப் பக்கம் உள்ள ஒரு நகரத்திற்கு செல்ல விருப்பதாகவும். மாலையில் என்னை கட்டாயம் சந்திக்க வேண்டுமென்று என்னை அவள் வீட்டுற்கு வரச் சொல்லியிருந்தால். நானும் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது இன்று எப்படியாவது என் காதலை மீராவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து.  இவ்வளவு நாள் மனதிற்குள் மறைத்ததை இன்று கடிதத்தில் எழுதி என் கைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு மாலையில் அவள் வீட்டிற்கு செல்கிறேன்.

என்னைக் கண்டதும் வாசலுக்கு ஓடி வந்து...”உனக்காகத்தாம்பா காத்துக்கிட்டு இருக்கிறேன். அப்பாவும் அம்மாவும் இப்பத்தான் வெளியில போறாங்க நாளைக்குக் காலையில அப்பாக்கு வேளை மாற்றலான ஊருக்குப் போகப் போறோம்ல...அதான் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லிட்டு வரப் போயிருக்காங்க.. நானும் எல்லார் கிட்டயும் போன்லயே சொல்லிட்டேன் ஆனா உன்ன மட்டும் நேர்ல பார்க்கனும் போல இருந்தது அதான் உன்ன வீட்டுக்கு வரச்சொன்னேன்.” என்று பட படவென்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தால்.

அப்போது நான்ஏன் மீரா இந்த ஊரவிட்டு எங்களயெல்லாம் விட்டுட்டுப் போக உனக்கு வருத்தமா இல்லையா...?” அதற்கு அவள் வருத்தமாத்தாம்பா இருக்கு மத்தவங்களவிடு உன்ன விட்டுப் போறோமேன்னுதான் ரொம்ப வருத்தமா இருக்கு என்ன செய்ய ...?...ஆனா,  உன்ன மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா...?...பழகின மூனாவது நாளே லவ் லட்டரோட வந்து நிக்கிற பசங்களுக்கு மத்தியில இவ்வளவு நாள் பழகியும், ஒரு நல்ல நண்பனா தூய்மையான தோழனா என்கிட்ட பழகின விதம் என்னால என்னைக்குமே மறக்க முடியாது...”அப்போது நான் அவளிடம் சொல்ல வந்த வார்த்தைகள் அனைத்தும் என் நாவின் நுனிவரை வந்து உமிழ்நீருக்குள் அமிழ்ந்து போயின.

அதன் பிறகு அவள் சொன்ன வார்தைகள் எதுவும் என் செவிகளில் விழவில்லை. அவளிடம் எப்படி விடை பெற்று வீடு வந்து சேர்ந்தேன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. காதலில் உருகி உருகி எழுதிய என் விரல்களே முதலும் கடைசியுமான என் காதல் கடிதத்தைக் கிழித்தெறிந்தன இதயத்தில் வலியோடு.

அதுவரை என் டைரியின் பக்கங்களில் மூன்று புள்ளி வைத்து அடுத்த பக்கத்தை அடுத்த நாள் தொடருவதை வழக்கமாக்கியிருந்தேன். இப்போதும் மூன்று புள்ளி வைக்கிறேன் அவள் நினைவுகளையாவது தொடர வேண்டுமென்று ...முடிவில் என்னையும் அறியாமல் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது என் கண்ணீர்த் துளி...

என் டைரியின் பக்கங்கள் மீண்டும் வெற்றுக் காகிதங்களாகவே இன்றும்...

இது போல் இன்னும் எத்தனை வீடுகளில் டைரியின் பக்கங்கள் எழுதப் படாமல் வெற்றுக் காகிதங்களாய் இருக்கின்றனவோ...?...ஆசை ஆசையாய் எழுதப்பட்ட எத்தனை காதல் கடிதங்கள் கொடுக்கப் படாமல் இப்படிக் கிழிக்கப் பட்டிருக்கின்றனவோ...?

உடைக்கப் படாத உண்டியலில் ஆசையாய் சேர்த்து வைத்த சில்லரைக் காசுகளைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் திறக்கப் படாத நினைவுகள் சில மறக்கப் படாமல் இருக்கத்தான் செய்கின்றன. பழைய நினைவுகளில்  மனநீராடி நிகழ்வுலகிற்கு வருகிறேன். இங்கே இப்போது அன்பாய் அழகாய் என் மனைவி.
தத்தித்தாவி என் மடியில் கட்டிப்புரண்டு தன் வெள்ளைச் சிரிப்பில் என்னை சிறை வைக்கும் குட்டி தேவதையாய் என் செல்ல மகள். இப்போது இவர்கள் தான் என்னுலகம்.
இதோ சமையலறையில் இருக்கும் என் மனைவி விளையாடிக் கொண்டிருக்கும் என் மகளை அழைத்து ஏதோ சொல்லுகிறாள்...என்னவென்று கேட்போமா...

”மீரா.............!... அப்பா எழுந்துட்டாங்களான்னு பாரும்மா...எழுந்த உடனே காஃபி கேட்டாங்க...”

இந்த குட்டி மீரா போன்ற குழந்தைகளின் பெயர்களுக்குப் பின்னால் சொல்லப் படாத காதல்கள் எத்தனை எத்தனையோ.................................?

(பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...நமக்கு டைரி எழுதுர பழக்கமெல்லாம் கிடையாது. அப்படியே எழுதினாலும் கவிதைன்ற பேரால எதையாவது கிறுக்கி வைப்போமே தவிர சொந்தக் கதை சோகக் கதையெல்லாம் எழுத மாட்டோம்...பிற்காலத்தில இந்த மாதிரி டைரிங்க தான் டைம் பார்க்காம டைம்-பாமா வெடிக்கும்னு நாங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம்ல........)

70 comments:

Karthik Krishna said...

//இது போல் இன்னும் எத்தனை வீடுகளில் டைரியின் பக்கங்கள் எழுதப் படாமல் வெற்றுக் காகிதங்களாய் இருக்கின்றனவோ...?...ஆசை ஆசையாய் எழுதப்பட்ட எத்தனை காதல் கடிதங்கள் கொடுக்கப் படாமல் இப்படிக் கிழிக்கப் பட்டிருக்கின்றனவோ...?//
அருமையான வரிகள்.......

நட்புடன் ஜமால் said...

புகைப்படம் மிக அழகு

ரொம்ப பெரிதாயிருக்கறதால படித்துவிட்டு வர்றேன்

ஓட்டு போட்டாச்சி ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நம்பிட்டேன் பாஸ் நம்பிட்டேன் இது கற்பனைன்னு...

நெறையபேரின் பாஸ்வேர்ட் அவர்களின் பழைய காதலியின் பேராகத்தான் இருக்கும், தெரியுமா.
கொஞ்சம் பேரு தைரியமா (!?!) தன் குழந்தைகளுக்கும் அந்தப் பேரையே வைப்பாங்க.

ஹேமா said...

புதியவன்,கதை இயல்பாய் அழகாய் கொஞ்சம் வலியோட இருக்கு.
ஆனாலும் ஒன்று.ஒவ்வொரு முறையும் உங்க பொய்யை உறுதிப்படுத்த பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...ன்னும் சொல்லியும் முடிக்கிறீங்க.

நட்புடன் ஜமால் said...

நாமதான் தெரிஞ்சிக்கனும்

அது 999999999% உண்மையென்று ...

Mathu said...

//பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே//

ஓஓஓ...ஓகே..

அழகாக எழுதி இருக்கிறீர்கள்....நடுவில் கவிதை வாசிப்பது போல் இருந்தது...ரொம்ப நல்லா இருக்கு கதை..:)

anujanya said...

நல்லா இருக்கு. முழுதும் புனைவு என்று நானும் நம்பி விட்டேன் :)

அனுஜன்யா

ISR Selvakumar said...

ஈர்க்கும் புகைப்படம்.
ஆனால் வழக்கமான, நிறைய வாசித்துவிட்ட கதை.
நன்றாக எழுத ஆரம்பித்துவிட்டு, (காதல் கடிதத்தை அவள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பாராவிலிருந்து) அவசரமாக எழுதி முடித்துவிட்டது போலிருக்கிறது.

நிறைய எழுதுங்கள் பிரதர். வாசிக்க காத்திருக்கிறேன்.

நசரேயன் said...

அருமை. அழகான வரிகள்

தமிழ் தோழி said...

நான் நம்பிட்டேனுங்கோ...
இது கதை அல்ல நிஜம்ன்னு..
ஹ....ஹ....ஹ.....

தமிழ் தோழி said...

///தாஜ்மஹாலுக்கு சுடிதார் போட்டு யாராவது பார்த்திருக்கிறீர்களா...?///

சத்தியமா நான் பாக்கலைங்கோ.

தமிழ் தோழி said...

///அதுவரை என் டைரியின் பக்கங்களில் மூன்று புள்ளி வைத்து அடுத்த பக்கத்தை அடுத்த நாள் தொடருவதை வழக்கமாக்கியிருந்தேன். இபோதும் மூன்று புள்ளி வைக்கிறேன் அவள் நினைவுகளையாவது தொடர வேண்டுமென்று ////

ஓஹோ இதான் அந்த மூனு புள்ளியா.

iskcon said...

ஒரு நான் ராஜா ஒருவர் நகர்வலம் செல்லும் வழியில் ஒரு ஏழையை பார்த்தார். அவன் மேல் இரக்கம் கொண்டு அவனை அருகிலிருந்த மலை உச்சிக்கு அழைத்துக்கொண்டுப்போய் , " இதோ பார்! கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள சந்தன மரக்காடுகள் முழுவதும் உனக்கே சொந்தம் '' என்று சொன்னார். வருடம் பல கழிந்தன. மறுமுறை நகர் வலம் வந்த மன்னன் தான் முன்பு கண்ட ஏழையை அதே கோலத்தில் பார்த்தான். நாம் தான் அவ்வளவு பெரிய காட்டை கொடுத்தோமே , இன்னும் ஏன் இவர் இப்படி வறுமையில் இருக்கிறார் என்று அவரருகில் போய்க்கேட்டான். அந்த ஏழை சொன்னான், '' ஐயா, அந்த காட்டு மரங்களை எல்லாம் வெட்டி கரியாக்கி விற்று விட்டேன் .மரம் எல்லாம் காலியாகி விட்டது." என்று சொன்னான். ஆம்! அவன் ஒரு கரி வியாபாரி. தன் கையில் இருப்பது சந்தனமரம் என்று தெரியாமல் அதை எரித்து கரியாக்கி விட்டான் அந்த துரதிர்ஷ்டசாலி. இந்த கதை புரிந்து கொள்பவர்களுக்கு புரியும்.

அப்துல்மாலிக் said...

//கால்களில் சலங்கை கட்டி கைகளில் முத்திரை காட்டி விரல்களில் அபிநயம் பிடித்து இதழ்களில் ஜதி சொல்லி விழிகளில் விசித்திரம் படைக்கும் அதிசய தேவதையவள்//

அழகு வரிகள்...
மார்கழி மாத இசைக்கச்சேரியை நினைவுப்படுத்துது

அப்துல்மாலிக் said...

//இவளைப் படைப்பதற்கு மட்டும் இறைவன் சற்றுக் கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டிருப்பான் போலும்.
//

இது கொஞ்சம் ஓவர்தான்...இருந்தாலும் ரசிக்கலாம்..

அப்துல்மாலிக் said...

//உடைக்கப் படாத உண்டியலில் ஆசையாய் சேர்த்து வைத்த சில்லரைக் காசுகளைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் திறக்கப் படாத நினைவுகள் சில மறக்கப் படாமல் இருக்கத்தான் செய்கின்றன. //

இருக்காலாம்....

பாறை மீது உடைக்கப்பட்ட உண்டியலிருந்து சிதறிய சில்லரையை பொருக்குவது யாரு..????
நல்ல வரிகள் புதியவரே

Divyapriya said...

99.99% கற்பனைன்னா? 0.01% என்னது ;)

புகைப்படம் அருமை...கதையும் (?!?!) அருமை :)

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

நம்புறோம்க இது கற்பனை கதைன்னு...

நட்புடன் ஜமால் said...

\\ஆசை ஆசையாய் எழுதப்பட்ட எத்தனை காதல் கடிதங்கள் கொடுக்கப் படாமல் இப்படிக் கிழிக்கப் பட்டிருக்கின்றனவோ...?\\

உண்மைதான்.

இன்னும் எழுதப்படாதா காதல்களும், கடிதங்களும் உண்டு ...

நட்புடன் ஜமால் said...

...

புள்ளி வைப்பர்களின் பின்னனியில் வெவ்வேறு காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

தாங்கள் சொன்ன காரணம் மிக அருமை.

99.99% கற்பனைன்னு சொன்னதும் மிக அருமை. கவிஞர் தானே நீங்கள், பொய் சொல்வதும் கவிதையின் மரபுதானே ...

நட்புடன் ஜமால் said...

அப்புறம் ...

அந்த பாஸ்வேர்டு மேட்டரு அமித்து அம்மாவுக்கும் தெரிஞ்சிடுச்சா ...

அ.அ உங்க பாஸ்வேட்டு என்னங்க ...

நட்புடன் ஜமால் said...

\\இதழ்களில் ஜதி சொல்லி விழிகளில் விசித்திரம் படைக்கும்\\

மிக அழகு வர்ணனை.

கவி தெரிக்காமல் வருவதில்லை, உங்கள் பழைய டைரியின் பக்கத்திலும்.

குடுகுடுப்பை said...

கவிஞர்களுக்குதான் இப்படியெல்லாம் ரசனையா டைரி எழுத வருமா?

மேவி... said...

இந்த வரிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் ...
" இந்த கதையில் வரும் பெயர்கள், சம்பவம்கள் எல்லாம் கற்பனையே.... "
உங்க கதைப்படி பார்த்தால் ..... என்னிடம் பல பெயர்கள் கைவசம் உள்ளதே. என்ன செய்ய,,,,,,
நல்ல கற்பனை கதை....

அ.மு.செய்யது$ said...

//உடைக்கப் படாத உண்டியலில் ஆசையாய் சேர்த்து வைத்த சில்லரைக் காசுகளைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் திறக்கப் படாத நினைவுகள் சில மறக்கப் படாமல் இருக்கத்தான் செய்கின்றன//

வெகுநாட்களுக்கு பின் ஒரு இதமானதும் மனதைத் தொட்டதுமான வரிகளைப் படித்த திருப்தி...
உரைந‌டையை கூட‌ ஒரு க‌விதை போல‌ செதுக்கியிருக்கிறீர்க‌ள்.....
ந‌ன்றி புதிய‌வ‌ன்.....

Poornima Saravana kumar said...

// ஹேமா said...
புதியவன்,கதை இயல்பாய் அழகாய் கொஞ்சம் வலியோட இருக்கு.
ஆனாலும் ஒன்று.ஒவ்வொரு முறையும் உங்க பொய்யை உறுதிப்படுத்த பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...ன்னும் சொல்லியும் முடிக்கிறீங்க.

//

கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன் :)

புதியவன் said...

// Karthik Krishna said...
//இது போல் இன்னும் எத்தனை வீடுகளில் டைரியின் பக்கங்கள் எழுதப் படாமல் வெற்றுக் காகிதங்களாய் இருக்கின்றனவோ...?...ஆசை ஆசையாய் எழுதப்பட்ட எத்தனை காதல் கடிதங்கள் கொடுக்கப் படாமல் இப்படிக் கிழிக்கப் பட்டிருக்கின்றனவோ...?//
அருமையான வரிகள்.......//

முதல் வருகைக்கு நன்றி கார்த்திக் கிருஷ்ணா...

புதியவன் said...

// நட்புடன் ஜமால் said...
புகைப்படம் மிக அழகு

ரொம்ப பெரிதாயிருக்கறதால படித்துவிட்டு வர்றேன்

ஓட்டு போட்டாச்சி ...//

நன்றி ஜமால்...

புதியவன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நம்பிட்டேன் பாஸ் நம்பிட்டேன் இது கற்பனைன்னு...

நெறையபேரின் பாஸ்வேர்ட் அவர்களின் பழைய காதலியின் பேராகத்தான் இருக்கும், தெரியுமா.
கொஞ்சம் பேரு தைரியமா (!?!) தன் குழந்தைகளுக்கும் அந்தப் பேரையே வைப்பாங்க.//

எப்பவுமே மறக்கக் கூடாது
அப்படிங்கிறதுனால வச்சிருக்கலாம்...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா ...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன்,கதை இயல்பாய் அழகாய் கொஞ்சம் வலியோட இருக்கு.
ஆனாலும் ஒன்று.ஒவ்வொரு முறையும் உங்க பொய்யை உறுதிப்படுத்த பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...ன்னும் சொல்லியும் முடிக்கிறீங்க.//

என்ன ஹேமா இப்படி சொல்லிட்டீங்க
கற்பனைய உண்மைன்னு சொன்னா
அது பொய்யாகிடுமே...அதனால தான்
கற்பனைன்னு சொல்லுரேன்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
நாமதான் தெரிஞ்சிக்கனும்

அது 999999999% உண்மையென்று //

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
இந்தக் கொலை வெறி......?

புதியவன் said...

//Mathu said...
//பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே//

ஓஓஓ...ஓகே..

அழகாக எழுதி இருக்கிறீர்கள்....நடுவில் கவிதை வாசிப்பது போல் இருந்தது...ரொம்ப நல்லா இருக்கு கதை..:)//

ரொம்ப நன்றி மது...

புதியவன் said...

//அனுஜன்யா said...
நல்லா இருக்கு. முழுதும் புனைவு என்று நானும் நம்பி விட்டேன் :)

அனுஜன்யா//

நீங்க நம்பிட்டீங்கள்ல நன்றி அனுஜன்யா...
ஆனா கடைசில சிரிக்கிறதப் பார்த்தா.......?

புதியவன் said...

புதியவன் said...
//r.selvakkumar said...
ஈர்க்கும் புகைப்படம்.
ஆனால் வழக்கமான, நிறைய வாசித்துவிட்ட கதை.
நன்றாக எழுத ஆரம்பித்துவிட்டு, (காதல் கடிதத்தை அவள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பாராவிலிருந்து) அவசரமாக எழுதி முடித்துவிட்டது போலிருக்கிறது.

நிறைய எழுதுங்கள் பிரதர். வாசிக்க காத்திருக்கிறேன்.//

முதல் வருகைக்கும்
மனம் திறந்த கருத்திற்கும்
நன்றி r.selvakkumar...மீண்டும் வருக...

புதியவன் said...

//நசரேயன் said...
அருமை. அழகான வரிகள்//

நன்றி நசரேயன் மீண்டும் வாருங்கள்...

புதியவன் said...

//தமிழ் தோழி said...
நான் நம்பிட்டேனுங்கோ...
இது கதை அல்ல நிஜம்ன்னு..
ஹ....ஹ....ஹ....//

நீங்க அதிகமா டீவி பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன்...

புதியவன் said...

//தமிழ் தோழி said...
///தாஜ்மஹாலுக்கு சுடிதார் போட்டு யாராவது பார்த்திருக்கிறீர்களா...?///

சத்தியமா நான் பாக்கலைங்கோ.//

நானுந்தான் பார்த்ததில்லை...

நட்புடன் ஜமால் said...

\\Blogger புதியவன் said...

//தமிழ் தோழி said...
நான் நம்பிட்டேனுங்கோ...
இது கதை அல்ல நிஜம்ன்னு..
ஹ....ஹ....ஹ....//

நீங்க அதிகமா டீவி பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன்...\\

புதியவன் T.V.ஆ

புதியவன் said...

//தமிழ் தோழி said...
///அதுவரை என் டைரியின் பக்கங்களில் மூன்று புள்ளி வைத்து அடுத்த பக்கத்தை அடுத்த நாள் தொடருவதை வழக்கமாக்கியிருந்தேன். இபோதும் மூன்று புள்ளி வைக்கிறேன் அவள் நினைவுகளையாவது தொடர வேண்டுமென்று ////

ஓஹோ இதான் அந்த மூனு புள்ளியா.//

தமிழ் தோழி அக்கா...நீங்க டிடெக்டிவ் வேலை ஏதாவது பார்க்கிறீங்களா...உங்கள்
கண்டு பிடிப்பிற்கு இந்த வருசத்தில ஒரு நோபல் பரிசு கட்டாயம் உண்டு...

புதியவன் said...

// நட்புடன் ஜமால் said...
\\Blogger புதியவன் said...

//தமிழ் தோழி said...
நான் நம்பிட்டேனுங்கோ...
இது கதை அல்ல நிஜம்ன்னு..
ஹ....ஹ....ஹ....//

நீங்க அதிகமா டீவி பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன்...\\

புதியவன் T.V.ஆ//

என் பேருல T.V. ஆரப்பிச்சிருக்கீங்களா ஜமால்...?

புதியவன் said...

//iskcon said...
ஒரு நான் ராஜா ஒருவர் நகர்வலம் செல்லும் வழியில் ஒரு ஏழையை பார்த்தார். அவன் மேல் இரக்கம் கொண்டு அவனை அருகிலிருந்த மலை உச்சிக்கு அழைத்துக்கொண்டுப்போய் , " இதோ பார்! கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள சந்தன மரக்காடுகள் முழுவதும் உனக்கே சொந்தம் '' என்று சொன்னார். வருடம் பல கழிந்தன. மறுமுறை நகர் வலம் வந்த மன்னன் தான் முன்பு கண்ட ஏழையை அதே கோலத்தில் பார்த்தான். நாம் தான் அவ்வளவு பெரிய காட்டை கொடுத்தோமே , இன்னும் ஏன் இவர் இப்படி வறுமையில் இருக்கிறார் என்று அவரருகில் போய்க்கேட்டான். அந்த ஏழை சொன்னான், '' ஐயா, அந்த காட்டு மரங்களை எல்லாம் வெட்டி கரியாக்கி விற்று விட்டேன் .மரம் எல்லாம் காலியாகி விட்டது." என்று சொன்னான். ஆம்! அவன் ஒரு கரி வியாபாரி. தன் கையில் இருப்பது சந்தனமரம் என்று தெரியாமல் அதை எரித்து கரியாக்கி விட்டான் அந்த துரதிர்ஷ்டசாலி. இந்த கதை புரிந்து கொள்பவர்களுக்கு புரியும்.//

என் கதைக்கு அதை விட அழகான கதை சொன்ன iskcon. உங்களுக்கு நன்றி...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//கால்களில் சலங்கை கட்டி கைகளில் முத்திரை காட்டி விரல்களில் அபிநயம் பிடித்து இதழ்களில் ஜதி சொல்லி விழிகளில் விசித்திரம் படைக்கும் அதிசய தேவதையவள்//

அழகு வரிகள்...
மார்கழி மாத இசைக்கச்சேரியை நினைவுப்படுத்துது//

இசைக்கச்சேரியை நினைவு படுத்துதா...
நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//இவளைப் படைப்பதற்கு மட்டும் இறைவன் சற்றுக் கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டிருப்பான் போலும்.
//

இது கொஞ்சம் ஓவர்தான்...இருந்தாலும் ரசிக்கலாம்..//

ரசிப்பதற்காக மட்டுமே வர்ணனைகள்...

நட்புடன் ஜமால் said...

\\என் பேருல T.V. ஆரப்பிச்சிருக்கீங்களா ஜமால்...?\\

ங ...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உடைக்கப் படாத உண்டியலில் ஆசையாய் சேர்த்து வைத்த சில்லரைக் காசுகளைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் திறக்கப் படாத நினைவுகள் சில மறக்கப் படாமல் இருக்கத்தான் செய்கின்றன. //

இருக்காலாம்....

பாறை மீது உடைக்கப்பட்ட உண்டியலிருந்து சிதறிய சில்லரையை பொருக்குவது யாரு..????
நல்ல வரிகள் புதியவரே//

நன்றி அபுஅஃப்ஸர் உங்கள் அழகான வருகைக்கும் விரிவான தருகைக்கும்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\என் பேருல T.V. ஆரப்பிச்சிருக்கீங்களா ஜமால்...?\\

ங ...//

இது உங்க புனைப் பேரா...?

புதியவன் said...

//Divyapriya said...
99.99% கற்பனைன்னா? 0.01% என்னது ;)

புகைப்படம் அருமை...கதையும் (?!?!) அருமை :)//

0.01% உண்மை...ஆமாம் எனக்கு டைரி எழுதுர
பழக்கமில்லை என்பது மட்டும் உண்மை...
நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

// தமிழன்-கறுப்பி... said...
:)
//

என்ன தமிழன் ஒரே சிரிப்பா இருக்கு...

புதியவன் said...

//தமிழன்-கறுப்பி... said...
நம்புறோம்க இது கற்பனை கதைன்னு...//

நன்றி தமிழன்...வருகைக்கும் நம்பினதற்கும்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\ஆசை ஆசையாய் எழுதப்பட்ட எத்தனை காதல் கடிதங்கள் கொடுக்கப் படாமல் இப்படிக் கிழிக்கப் பட்டிருக்கின்றனவோ...?\\

உண்மைதான்.

இன்னும் எழுதப்படாதா காதல்களும், கடிதங்களும் உண்டு ...//

எழுதப் படாத கடிதங்கள் என்னிடமும் உண்டு...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
...

புள்ளி வைப்பர்களின் பின்னனியில் வெவ்வேறு காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

தாங்கள் சொன்ன காரணம் மிக அருமை.

99.99% கற்பனைன்னு சொன்னதும் மிக அருமை. கவிஞர் தானே நீங்கள், பொய் சொல்வதும் கவிதையின் மரபுதானே ...//

கவிஞர்கள் எல்லோரும் பொய் சொல்லுரவங்கன்னு உங்ககிட்ட யாரோ பொய் சொல்லி இருக்கிறாங்க...அதயெல்லாம் நம்பாதீங்கோ...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
அப்புறம் ...

அந்த பாஸ்வேர்டு மேட்டரு அமித்து அம்மாவுக்கும் தெரிஞ்சிடுச்சா ...

அ.அ உங்க பாஸ்வேட்டு என்னங்க ...//

நான் அவங்ககிட்ட என் பாஸ்வேர்டை பத்தி எதுவும் சொல்லலியே...
என்னோட பாஸ்வேர்ட கண்டு பிடிக்கிறது
ரொம்ப சுலபம்...என் கிட்ட கேட்டா நானே சொல்லிட்டுப் போறேன்...

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\இதழ்களில் ஜதி சொல்லி விழிகளில் விசித்திரம் படைக்கும்\\

மிக அழகு வர்ணனை.

கவி தெரிக்காமல் வருவதில்லை, உங்கள் பழைய டைரியின் பக்கத்திலும்.//

என் டைரியின் பக்கத்தில் கவிதைகளில்
மட்டும் தான் காதல்...நன்றி ஜமால்...

புதியவன் said...

//குடுகுடுப்பை said...
கவிஞர்களுக்குதான் இப்படியெல்லாம் ரசனையா டைரி எழுத வருமா?//

வாங்க குடுகுடுப்பை
யார் வேணும்னாலும் எழுதலாம்
ரசனையா எழுதினா அது ரசிக்கும் படி
அழகாகத்தானிருக்கும்... நன்றி...

புதியவன் said...

//MayVee said...
இந்த வரிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் ...
" இந்த கதையில் வரும் பெயர்கள், சம்பவம்கள் எல்லாம் கற்பனையே.... "
உங்க கதைப்படி பார்த்தால் ..... என்னிடம் பல பெயர்கள் கைவசம் உள்ளதே. என்ன செய்ய,,,,,,
நல்ல கற்பனை கதை....//

வாங்க MayVee

பல பெயர்கள் கைவசம் உள்ளதா...
நீங்க நிறைய கதை எழுதலாம் போலிருக்கே
நன்றி MayVee...மீண்டும் வாருங்கள்...

புதியவன் said...

//Syed Abdul kadhar.M said...
//உடைக்கப் படாத உண்டியலில் ஆசையாய் சேர்த்து வைத்த சில்லரைக் காசுகளைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் திறக்கப் படாத நினைவுகள் சில மறக்கப் படாமல் இருக்கத்தான் செய்கின்றன//

வெகுநாட்களுக்கு பின் ஒரு இதமானதும் மனதைத் தொட்டதுமான வரிகளைப் படித்த திருப்தி...
உரைந‌டையை கூட‌ ஒரு க‌விதை போல‌ செதுக்கியிருக்கிறீர்க‌ள்.....
ந‌ன்றி புதிய‌வ‌ன்.....//

முதல் வருகைக்கும் அழகான கருத்திற்கும்
நன்றி Syed Abdul kadhar.M...மீண்டும் வாருங்கள்...

புதியவன் said...

//PoornimaSaran said...
// ஹேமா said...
புதியவன்,கதை இயல்பாய் அழகாய் கொஞ்சம் வலியோட இருக்கு.
ஆனாலும் ஒன்று.ஒவ்வொரு முறையும் உங்க பொய்யை உறுதிப்படுத்த பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...ன்னும் சொல்லியும் முடிக்கிறீங்க.

//

கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன் :)//

இப்பத்தான் ஸ்கூல் லீவு முடிஞ்சு வந்திருக்கீங்க
வந்த உடனே ஏன் இந்த திடீர் கொலை வெறித் தாக்குதல்...?...நன்றி பூர்ணிமா சரண்

வில்லன் said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நெறையபேரின் பாஸ்வேர்ட் அவர்களின் பழைய காதலியின் பேராகத்தான் இருக்கும், தெரியுமா.
கொஞ்சம் பேரு தைரியமா (!?!) தன் குழந்தைகளுக்கும் அந்தப் பேரையே வைப்பாங்க.

இதை நான் வழிமொழிகிறேன்

புதியவன் said...

//வில்லன் said...
அமிர்தவர்ஷினி அம்மா said...

நெறையபேரின் பாஸ்வேர்ட் அவர்களின் பழைய காதலியின் பேராகத்தான் இருக்கும், தெரியுமா.
கொஞ்சம் பேரு தைரியமா (!?!) தன் குழந்தைகளுக்கும் அந்தப் பேரையே வைப்பாங்க.

இதை நான் வழிமொழிகிறேன்//

இதை நானும் வழிமொழிகிறேன்...

Unknown said...

கதை அழகு... :)) பின் குறிப்பு இன்னும் அழகு.. ;)))))))

புதியவன் said...

புதியவன் said...
//ஸ்ரீமதி said...
கதை அழகு... :)) பின் குறிப்பு இன்னும் அழகு.. ;)))))))//

வாங்க ஸ்ரீமதி

கதைய விட பின்குறிப்பு தான்
நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு...

எப்படியோ உண்மையை சொன்னது
பிடித்திருந்தால் சரிதான்...

நன்றி ஸ்ரீமதி...

வியா (Viyaa) said...

எனக்கும் டைரி எழுதும் பழக்கம் உண்டு இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது,நீங்கள் எழுதியது கற்பனை மட்டுமே ஆனால் இதை போலவே நிறைய பசுமையான நாட்கள் என் டைரியில் உள்ளது..

புதியவன் said...

/வியா..(Viyaa) said...
எனக்கும் டைரி எழுதும் பழக்கம் உண்டு இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது,நீங்கள் எழுதியது கற்பனை மட்டுமே ஆனால் இதை போலவே நிறைய பசுமையான நாட்கள் என் டைரியில் உள்ளது..//

பசுமையான நாட்களின் நினைவுகள்
பாதுகாக்கப்படவேண்டியவை தான்...
நன்றி வியா...

Unknown said...

ஹேமா said...
புதியவன்,கதை இயல்பாய் அழகாய் கொஞ்சம் வலியோட இருக்கு.
ஆனாலும் ஒன்று.ஒவ்வொரு முறையும் உங்க பொய்யை உறுதிப்படுத்த பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...ன்னும் சொல்லியும் முடிக்கிறீங்க.

//

கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன் :)

நானும்.....!!! :-)))

புதியவன் said...

//Kanthi said...

நானும்.....!!! :-)))//

வாங்க காந்தி புதுசா வந்து புயலக்கிளப்பலாமா...நன்றி காந்தி...

Unknown said...

'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க
நீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'

சே..சே... அப்படியெல்லாம் சொல்லாம போக மாட்டேன்...நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு சொல்லிட்டு தானே மறு வேலை பார்ப்பேன்! நல்லா எழுதறீங்க...வாழ்த்துகள்!

புதியவன் said...

//Kanthi said...
'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க
நீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'

சே..சே... அப்படியெல்லாம் சொல்லாம போக மாட்டேன்...நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு சொல்லிட்டு தானே மறு வேலை பார்ப்பேன்! நல்லா எழுதறீங்க...வாழ்த்துகள்!//

வாழ்த்துக்களுக்கு நன்றி காந்தி...

Sakthidevi.I said...

good one..also good comedy.. :-)
nice narration...

புதியவன் said...

//sathya said...
good one..also good comedy.. :-)
nice narration...//

கதையை படித்து ரசித்ததற்கு நன்றி சத்யா...