Thursday, June 18, 2009

பதிலைத் தேடிய கேள்விகள்...




ஏழு நண்பர்கள் என்னை இந்த தொடர் பதிவிற்கு அன்போடு அழைத்திருக்கிறார்கள்,
எட்டாவதாக ஒருவர் என்னை அழைக்க விரும்பி இருந்தார், முதலில் இந்த எட்டு
பேருக்கும் எனது நன்றிகள்...


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது…? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா…?

எங்கள் ஊரில் திருவிழாக்கள் கொண்டாடும் வழக்கமில்லை திருமணம் மற்றும் பெயர்சூட்டு விழா போன்றவற்றைத் தான் ஒவ்வொரு வீட்டிலும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். அப்படியொரு சிறு விழாவில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பெரியோர்களால் சூட்டப் பட்டது எனது பெயர். எனவே, என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனக்கு பெயர் சூட்டும் போது இரண்டு வயது இருக்கும்...



அப்போது நான் இப்படித்தான் இருந்தேன்...

புதியவன்” என்பது பள்ளி, கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதிய போது எனக்கு நானே வைத்துக் கொண்ட புனைப் பெயர். பதிவுலகிற்கு வந்த போது அந்த பெயரிலேயே எழுத ஆரம்பித்து விட்டேன்...இந்தப் பெயரும் எனக்கு மிகவும் பிடிக்கும்...

2. கடைசியாக அழுதது எப்பொழுது…?

நெகிழ்வான நிகழ்வுகள் மனதை நெருடும் போது கண்களில் நீர் துளிர்க்கும்...கடைசியாக எப்பொழுதென்று நினைவில் இல்லை...

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா…?

என்னுடைய கையெழுத்து அழகாக இருக்காது என்றாலும்...பிடிக்கும்...

4. பிடித்த மதிய உணவு என்ன…?

தேனும் திணை மாவும் எனக்குப் பிடிக்கும் என்று சொன்னால் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் என இன்னொரு கேள்வி கேட்க்கப் படலாம், வீட்டை விட்டு வெகு தொலைவில் இருப்பதால் மதிய உணவில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை...

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா…?

என் வானத்தில் நட்பு நட்சத்திரங்கள் மிக அதிகம் அவர்களுக்கான
எனது முதலீடு ஒரு சிறு புன்னகை மட்டுமே...
புன்னகைப்பதற்கு நான் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை...

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா…?

அருவியில்...

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்…?

விழிகள் பேசுவதை மொழி பெயர்த்தால் மனதில் உள்ளதை
புரிந்து கொள்ள முடியும் என்பதால், முதலில் விழிகள்...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன…?

பிடித்த விசயம் : பிறர் மனம் புண் படாமல் பேசுவது
பிடிக்காதது : அதீத பொறுமை என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அதீத கோபம்...

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது…?

சரி பாதின்னா...ஓ...கவிதையை பற்றிய கேள்வியா...?

என் கவிதை
கொஞ்சும் போதும்
கெஞ்சும் போதும்
எப்போதும் அழகு
சிணுங்கும் போதோ மிக அழகு
இவையெல்லாம்
எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
பிடிக்காததென்று எதுவும் இல்லை
பிழையில்லாக் கவிதையில்
குறை காண முயல்வது
முதல் குற்றம்
கவிதையின்றி
கவிஞன்
தனித்து செயல் பட
நினைப்பதும் குற்றமே...

10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்…?

தூரங்களெல்லாம் வெறும் இடைவெளிகள் மட்டுமே அவற்றையும் அவர்களின் நினைவுகள் கொண்டே நிரப்பி வைத்திருக்கிறேன்...
எல்லோரும் எப்போதும் என் மனதின் பக்கத்தில் இருப்பதால் வருந்துவதில்லை...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்…?

கிரீம் கலர் பேண்ட் கருப்பு நிற ஷர்ட்...

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க…?

சுதா ரகுநாதனின் மயக்கும் குரலில் ”அனல் மேலே பனித்துளி”...

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை…?

என்னவள் விழியின் வண்ணம்...அட...கருப்பு தாங்க...

14. பிடித்த மணம்…?

மண் வாசனையும்
மழலை வாசனையும் பிடிக்கும்
அவள் கூந்தலில் இருக்கும் போது மட்டும்
மல்லிகை வாசனை பிடிக்கும்,
அவள் வாசனை
பிடிக்காது என்று சொன்னால்
காதல் கவிதை எழுதுவதற்கு
நான்
தகுதியற்றவனாகிவிடுவேன்...

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்…? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன…?

எனக்குத் தெரிந்த அனைவரும் எழுதி விட்டதால் யாரை அழைப்பதென்று தெரியவில்லை...

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு…?

1. இரவீ
2. வழிப்போக்கன்
3. ஜீவன் அண்ணா
4. ரோஸ்
5. மயில்
6. குடந்தை அன்புமணி
7. ஸ்ரீமதி
8. தமிழரசி

தனித்தனியே பிரித்து சொல்ல முடியவில்லை, எனவே இவர்களின் அனைத்து பதிவுகளும் பிடிக்கும் என்று சொல்லலாம்...

17. பிடித்த விளையாட்டு…?

பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்
கல்லூரியில் டென்னிஸ்
எப்போதும் செஸ்
இப்போதும் அதுவே...

18. கண்ணாடி அணிபவரா…?

இந்த பதிவு எழுதும் போது கண்ணாடி அணிந்திருக்கவில்லை...

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்…?

மென்மையான காதல் சொல்லும் படங்கள் மற்றும்
வன்முறையில்லாத நகைச்சுவை படங்கள்...

20. கடைசியாகப் பார்த்த படம்…?

Angels and Demons...

21. பிடித்த பருவ காலம் எது…?

இலையில் வழியும்
ஒரு துளியில்
விரல் நனைக்க
மனம் நனையும்
பனி படர்ந்த
அந்த அழகிய
மார்கழி மாதம்...

நான் பிறந்ததும் அந்த மாதத்தில் தான்...

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்…?

மாலனின் ”வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்”...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்…?

மாற்றுவதில்லை...

24. உங்களுக்கு பிடித்த சத்தம்…? பிடிக்காத சத்தம்…?

மூங்கில் துளைத்து வெளி வரும் சுவரங்கள் அனைத்தும் பிடிக்கும்

அபசுவரங்கள் பிடிக்காது...

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு…?

எங்க வீட்டில் இருந்து ஏறக்குறைய 3,145,000 மீட்டர்...
(சிங்கப்பூர்)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா..?

இந்த கேள்விகளுக்கு பதில் எழுதுவதற்கே பெரிய திறமை
வேண்டும் போலிருக்கே...

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்…?

நம்பிக்கை துரோகம்...

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்…?

சாத்தான்களெல்லாம் காதல் கற்றுக் கொண்டதில் சமத்தா ஆகிடுச்சுங்க...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்…?

இயற்கை எழில் கொஞ்சும் எந்த தலமும் எனக்குப் பிடிக்கும்...

30. எப்படி இருக்கணும்னு ஆசை…?

தீயோர்க்கும் நல்லவனாக...

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்…?
(இதையே நான் இப்படி எடுத்துக் கொள்கிறேனே...)
கவிதை இல்லாம செய்ய விரும்பும் காரியம்…?

கேள்வி (9) திற்கான பதிலில் கடைசி நான்கு வரிகளை மட்டும் படித்துக் கொள்ளுங்கள்...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இறைவன் எழுதிய கவிதை
மனிதன் வாழும் வாழ்க்கை,
வாழ்வின் இலக்கணங்களை மட்டுமே
அவன் எழுதியனுப்புகிறான்
இலக்குகளை
நாம் தான்
தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்

நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு
இனிப்பு சுவை சொட்டும்
தேனாக இருக்கட்டும்
வலிக்கக் கொட்டித்
துடிக்கச் செய்யும்
தேளாக இருக்க வேண்டாமே...



ஒரு அறிவிப்பு நண்பர்களே...


நெடுநாட்களாக
நான்
நேசித்து எழுதிய
காதலொன்று
நான் வாசிப்பதற்காக
காத்திருக்கிறது...


எனவே,

விடுமுறையில் ஊர் செல்கிறேன் நண்பர்களே, இதுவரை என் எழுத்துக்களை வாசித்து கருத்தூட்டமிட்டு உற்சாகமளித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...இறைவன் நாடினால் வலையின் வழியே சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்...


நிகரில்லா நட்புடன்,

- புதியவன்.




96 comments:

நட்புடன் ஜமால் said...

நெடுநாட்களாக
நான்
நேசித்து எழுதிய
காதலொன்று
நான் வாசிப்பதற்காக
காத்திருக்கிறது...

\\

பொட்டிய கட்டு ராஸா

நட்புடன் ஜமால் said...

எனக்கு பெயர் சூட்டும் போது இரண்டு வயது இருக்கும்...
\\

அழகனுக்கு அழகு பெயர் சூட்ட இவ்வளவு காலங்களா ...

நட்புடன் ஜமால் said...

இந்தப் பெயரும் எனக்கு மிகவும் பிடிக்கும்...\\

எங்களுக்கு தான் ராஸா

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வான நிகழ்வுகள் மனதை நெருடும் போது கண்களில் நீர் துளிர்க்கும்.\\

பதிலும் நெகிழ்வாய்!

நட்புடன் ஜமால் said...

தேனும் திணை மாவும்\\

சங்கத்தமிழ் மூன்றும் தான்னு கேட்க்கவில்லையிலே சரிதான்

நட்புடன் ஜமால் said...

என் வானத்தில் நட்பு நட்சத்திரங்கள் மிக அதிகம் அவர்களுக்கான
எனது முதலீடு ஒரு சிறு புன்னகை மட்டுமே...
புன்னகைப்பதற்கு நான் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை...\\

அருமை

மின்னலான பதில்

நட்புடன் ஜமால் said...

விழிகள் பேசுவதை மொழி பெயர்த்தால் மனதில் உள்ளதை
புரிந்து கொள்ள முடியும் என்பதால், முதலில் விழிகள்...\\

கவிஞர்கிட்ட கேட்டா

கவிதையாகத்தான் வரும் பதில்

நட்புடன் ஜமால் said...

பிடித்த விசயம் : பிறர் மனம் புண் படாமல் பேசுவது
பிடிக்காதது : அதீத பொறுமை என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அதீத கோபம்...\\

கிட்டதட்ட நம்ம பதில் மாதிரியே தான்

சொல்லியிருக்கும் விதம் தங்கள் பஞ்ச்

நட்புடன் ஜமால் said...

பிழையில்லாக் கவிதையில்
குறை காண முயல்வது
முதல் குற்றம்
கவிதையின்றி
கவிஞன்
தனித்து செயல் பட
நினைப்பதும் குற்றமே...\\

ஒன்னாங் கிளாஸானும் சாரே!

நட்புடன் ஜமால் said...

எல்லோரும் எப்போதும் என் மனதின் பக்கத்தில் இருப்பதால் வருந்துவதில்லை...\\

உணர்வுப்பூர்வமாக ...

நட்புடன் ஜமால் said...

சுதா ரகுநாதனின் மயக்கும் குரலில் ”அனல் மேலே பனித்துளி”...\\

உருக வைக்கும் ...

நட்புடன் ஜமால் said...

என்னவள் விழியின் வண்ணம்...அட...கருப்பு தாங்க...\\

ஆகா ஆகா ஆகா (பருத்திவீரன் ...)

நட்புடன் ஜமால் said...

அவள் கூந்தலில் இருக்கும் போது மட்டும்
மல்லிகை வாசனை பிடிக்கும்,\\

அருமைங்கோவ் ...

\\அவள் வாசனை
பிடிக்காது என்று சொன்னால்
காதல் கவிதை எழுதுவதற்கு
நான்
தகுதியற்றவனாகிவிடுவேன்...\\

இது தான் வலைக்கே தெரியுமே

நட்புடன் ஜமால் said...

எப்போதும் செஸ்
இப்போதும் அதுவே...\\

ஹையா சேம் பிளட்டூடூடூ ...

நட்புடன் ஜமால் said...

18. கண்ணாடி அணிபவரா…?

இந்த பதிவு எழுதும் போது கண்ணாடி அணிந்திருக்கவில்லை...\\

குசும்பு ...

நட்புடன் ஜமால் said...

அந்த அழகிய
மார்கழி மாதம்...

நான் பிறந்ததும் அந்த மாதத்தில் தான்...\\

அதான் கொட்டுதோ! ...

நட்புடன் ஜமால் said...

இந்த கேள்விகளுக்கு பதில் எழுதுவதற்கே பெரிய திறமை
வேண்டும் போலிருக்கே...\\

இதென்னவோ உண்மை தான்

மற்றபடி தங்கள் திறமை பற்றி நான் சொல்வதைவிட

நமது மக்கள் இன்னும் இன்னும் சொல்வார்கள்

நட்புடன் ஜமால் said...

சாத்தான்களெல்லாம் காதல் கற்றுக் கொண்டதில் சமத்தா ஆகிடுச்சுங்க...\\


அட்டகாசம் ...

நட்புடன் ஜமால் said...

இறைவன் எழுதிய கவிதை
மனிதன் வாழும் வாழ்க்கை,
வாழ்வின் இலக்கணங்களை மட்டுமே
அவன் எழுதியனுப்புகிறான்
இலக்குகளை
நாம் தான்
தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்

நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு
இனிப்பு சுவை சொட்டும்
தேனாக இருக்கட்டும்
வலிக்கக் கொட்டித்
துடிக்கச் செய்யும்
தேளாக இருக்க வேண்டாமே...\\

வாழ்க்கை பற்றி ரொம்ப இனிமையாக சொல்லியிருக்கீங்க ...

நட்புடன் ஜமால் said...

விடுமுறையில் ஊர் செல்கிறேன் நண்பர்களே\\

நல்லது, பத்திரமாக சென்று வாருங்கள்.

\\இதுவரை என் எழுத்துக்களை வாசித்து கருத்தூட்டமிட்டு உற்சாகமளித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...\\

அட என்னங்க நீங்க - உங்க கவிதைகளால் எங்களை நாங்க உயிர்ப்போடு வைத்து கொள்ள உதவுகிறது, நாங்க தான் நன்றி சொல்லனும்.


\\இறைவன் நாடினால் வலையின் வழியே சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்\\

நல்லது! நாங்கள் உங்கள் கவி வரவிற்காக காத்திருப்போம்.

பெற்றோர் உடன் பிறந்தோர் சுற்றத்தார் மற்றும் தங்கள் தங்கள் அனைவருடனும் ஆனந்தமாக இருந்து விட்டு வாருங்கள்

Suresh said...

பாத்து பத்திரமா போயிட்டு வாங்க சின்ன வயசு போட்டோ அழகா இருக்கு :-)
ஜமால் உன் பின்னூட்டங்கள் :-) சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

பெயர் விளக்கம் அழகா சொல்லி இருக்கீங்க (பெயரைச் சொல்லவில்லையே?)

போட்டோவில் ரொம்ப அழகா இருக்கீங்க.

S.A. நவாஸுதீன் said...

3. ரசித்தேன்

S.A. நவாஸுதீன் said...

4. இயல்பான நேர்த்தியான பதில்

S.A. நவாஸுதீன் said...

என் வானத்தில் நட்பு நட்சத்திரங்கள் மிக அதிகம் அவர்களுக்கான
எனது முதலீடு ஒரு சிறு புன்னகை மட்டுமே...
புன்னகைப்பதற்கு நான் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை...

அதானே புதியவனோட ஸ்பெசாலிட்டி

S.A. நவாஸுதீன் said...

விழிகள் பேசுவதை மொழி பெயர்த்தால் மனதில் உள்ளதை
புரிந்து கொள்ள முடியும் என்பதால், முதலில் விழிகள்...

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். அசத்தலா சொல்லி இருக்கீங்க. உங்க பாணியிலேயே சொல்லி இருப்பது கூடுதல் அழகு

S.A. நவாஸுதீன் said...

பிடித்த விசயம் : பிறர் மனம் புண் படாமல் பேசுவது

எல்லோரையும் பாராட்டி ஊக்குவிப்பதும்

பிடிக்காதது : அதீத பொறுமை என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அதீத கோபம்...

அதுவும் உங்களுக்கு கவிதையாய் தான் வெளி வரும்

S.A. நவாஸுதீன் said...

9. கவிதைக்கு ஒரு கவிதை. புதியவன் இதற்காக கூடுதலாகவே நேரம் எடுத்து காக்க வைத்து விட்டீர்கள். எனினும் அருமையான பந்தியே பரிமாறிவிட்டீர்கள்.

S.A. நவாஸுதீன் said...

10. நெகிழ்ந்தேன்

S.A. நவாஸுதீன் said...

11. நான் வெள்ளை கலர் பைஜாமா இல்ல எதிர்பார்த்தேன்.

S.A. நவாஸுதீன் said...

13. நல்ல ஆசை.

S.A. நவாஸுதீன் said...

14. கவிதை சூப்பர் புதியவன்

15. நிஜம்தான்

21. அதனால்தான் உங்க கவிதை எப்போதுமே குளிர்ச்சியாய் இருக்கு.

24. ரசித்தேன்

28. சூப்பர்

31. புதியவன் பாணி

S.A. நவாஸுதீன் said...

கவிதையாவே வாழ்ந்துகிட்டு இருக்கீங்க. வாழ்க்கை பற்றிய கவிதை நல்லா இருக்கு புதியவன்

அ.மு.செய்யது said...

இந்த பதிவை விட அந்த பொடியனின் படம் வெகு அழகு.

S.A. நவாஸுதீன் said...

மொத்தத்தில் முப்பத்தி இரண்டு கவிதைகள் படைத்திருக்கின்றீர்கள்.
ஊருக்கு நல்ல படியாக போய் வாருங்கள்.

அ.மு.செய்யது said...

//புதியவன்” என்பது பள்ளி, கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதிய போது எனக்கு நானே வைத்துக் கொண்ட புனைப் பெயர்//

கடைசி வரை உங்கள் இயற்பெயரை சொல்லவேயில்லையே ???

அ.மு.செய்யது said...

//என் கவிதை
கொஞ்சும் போதும்
கெஞ்சும் போதும்
எப்போதும் அழகு
சிணுங்கும் போதோ மிக அழகு
இவையெல்லாம்
எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
பிடிக்காததென்று எதுவும் இல்லை
பிழையில்லாக் கவிதையில்
குறை காண முயல்வது
முதல் குற்றம்
கவிதையின்றி
கவிஞன்
தனித்து செயல் பட
நினைப்பதும் குற்றமே...
//

பலமுறை நான் சொல்லியிருந்தாலும் மீண்டுமொருமுறை சொல்லிவிடுகிறேன்.

இந்த கவிதைகளுக்கு சொந்தக்காரவங்க ரெம்ப கொடுத்து வச்சவங்க.

அ.மு.செய்யது said...

//தூரங்களெல்லாம் வெறும் இடைவெளிகள் மட்டுமே அவற்றையும் அவர்களின் நினைவுகள் கொண்டே நிரப்பி வைத்திருக்கிறேன்...//

புதியவன் !!!!

அ.மு.செய்யது said...

//சுதா ரகுநாதனின் மயக்கும் குரலில் ”அனல் மேலே பனித்துளி”...//

வாவ் !!!!!!!!!!! என்னோட ஃபேவரைட்.

அ.மு.செய்யது said...

//அவள் கூந்தலில் இருக்கும் போது மட்டும்
மல்லிகை வாசனை பிடிக்கும்,//

அதாங்க...சூடப்படும் இடத்தை பொறுத்து நான் கூட எழுதியிருந்தேனே..அந்த மாதிரியா ??

Anonymous said...

விடுமுறைய??? ஆஅவ்வ்வ்வ்...

கம்ப்யூட்டரை கையோடு எடுத்து செல்லுங்கள், உங்கள் கவிதையை ரொம்ப நாள் பிரிந்து இருக்க முடியாது..

அ.மு.செய்யது said...

//நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு
இனிப்பு சுவை சொட்டும்
தேனாக இருக்கட்டும்
வலிக்கக் கொட்டித்
துடிக்கச் செய்யும்
தேளாக இருக்க வேண்டாமே...//


நோட் ப‌ண்ணுங்க‌ப்பா..நோட் ப‌ண்ணுங்க‌ப்பா...

அ.மு.செய்யது said...

வ‌லையுல‌கில் சுய‌ அடையாள‌ங்க‌ளை த‌விர்க்கும் வெகுசில‌ரில் நீங்க‌ளும் ஒருவ‌ர்.

எங்க‌ளுக்கு இந்த‌ ப‌திவு ஒரு ஏமாற்ற‌மே.

Anonymous said...

1.புதியவன் பெயர் சொல்லதா பதிலால் மேலும் புதுப்பிக்கப்படுகிறார்
2.சமத்து புள்ளை
3.பின்ன வேறவழியில்லை....
4.வள்ளித்திருமணம் நினைவில் வந்தது...
5.புன்னகை முதலீடே நட்புக்கு வைப்பீடு
7.மொழிகளின் மறுமொழியல்லவா விழிமொழி(குழப்பறேனோ)
8. நீங்க ரொம்ப நல்லவங்க....
9.கவிதையே காதல் காதலே இங்கு காவியம்
10.எல்லாரையும் நிறைவு படுத்தும் பதில்
13.ஹைய்யா எனக்கு பிடிச்ச கலர்
14.மனம் விரும்பும் மணம்
15.எஸ்கோப்பு
16. ஹைய் என் எழுத்துமா?
21.மார்கழிப்பூவா நீங்கள்....
31.,32,உண்மை

sakthi said...

yarupa ennai sethukama aatam aadiyathu

sakthi said...

எங்கள் ஊரில் திருவிழாக்கள் கொண்டாடும் வழக்கமில்லை திருமணம் மற்றும் பெயர்சூட்டு விழா போன்றவற்றைத் தான் ஒவ்வொரு வீட்டிலும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். அப்படியொரு சிறு விழாவில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பெரியோர்களால் சூட்டப் பட்டது எனது பெயர். எனவே, என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அது எந்த ஊருங்கோ

எப்படியோ உண்மையான பெயரை சொல்லவேயில்லையே....

sakthi said...

நெடுநாட்களாக
நான்
நேசித்து எழுதிய
காதலொன்று
நான் வாசிப்பதற்காக
காத்திருக்கிறது...


அண்ணியை சொல்றீங்களா

sakthi said...

என் வானத்தில் நட்பு நட்சத்திரங்கள் மிக அதிகம் அவர்களுக்கான
எனது முதலீடு ஒரு சிறு புன்னகை மட்டுமே...
புன்னகைப்பதற்கு நான் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை...

அப்படியா

sakthi said...

பிடித்த விசயம் : பிறர் மனம் புண் படாமல் பேசுவது
பிடிக்காதது : அதீத பொறுமை என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அதீத கோபம்...

அது எப்படிங்க அண்ணா இப்படி எல்லாம் பதில் சொல்றீங்க
கோபத்தை கூட அழகாய்

sakthi said...

விழிகள் பேசுவதை மொழி பெயர்த்தால் மனதில் உள்ளதை
புரிந்து கொள்ள முடியும் என்பதால், முதலில் விழிகள்...


எல்லா பதிலும் கவித்துவமாய்

sakthi said...

மண் வாசனையும்
மழலை வாசனையும் பிடிக்கும்
அவள் கூந்தலில் இருக்கும் போது மட்டும்
மல்லிகை வாசனை பிடிக்கும்,
அவள் வாசனை
பிடிக்காது என்று சொன்னால்
காதல் கவிதை எழுதுவதற்கு
நான்
தகுதியற்றவனாகிவிடுவேன்...


ஆஹா ஆஹா

முடியலை

sakthi said...

அ.மு.செய்யது said...

வ‌லையுல‌கில் சுய‌ அடையாள‌ங்க‌ளை த‌விர்க்கும் வெகுசில‌ரில் நீங்க‌ளும் ஒருவ‌ர்.

எங்க‌ளுக்கு இந்த‌ ப‌திவு ஒரு ஏமாற்ற‌மே.


ஆமாம் செய்யது தம்பி

அட்லீஸ்ட் பெயரையாவது

கூறியிருக்கலாம் புதியவன் அண்ணா

sakthi said...

தூரங்களெல்லாம் வெறும் இடைவெளிகள் மட்டுமே அவற்றையும் அவர்களின் நினைவுகள் கொண்டே நிரப்பி வைத்திருக்கிறேன்...
எல்லோரும் எப்போதும் என் மனதின் பக்கத்தில் இருப்பதால் வருந்துவதில்லை...


அருமையான பதில் நெகிழவைத்த பதில்

வால்பையன் said...

எங்கும் கவிதை
எதிலும் கவிதை!

வழிப்போக்கன் said...

கலக்கீட்டீங்க...
அருமையான பதில்கள் வாழ்த்துகள்...

RAMYA said...

//
அப்போது நான் இப்படித்தான் இருந்தேன்...
//

புதிதாகப் பிறந்த புதியவனைப் பார்த்து விட்டோம் :))

RAMYA said...

//
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன…?

பிடித்த விசயம் : பிறர் மனம் புண் படாமல் பேசுவது
பிடிக்காதது : அதீத பொறுமை என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அதீத கோபம்...
//

கோபத்தையும் பொறுமையாக கூறி இருக்கின்றீர்கள் :)

RAMYA said...

//
என் கவிதை
கொஞ்சும் போதும்
கெஞ்சும் போதும்
எப்போதும் அழகு
சிணுங்கும் போதோ மிக அழகு
//

ரசனை அழகோ அழகு!!

RAMYA said...

//
இவையெல்லாம்
எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
பிடிக்காததென்று எதுவும் இல்லை
பிழையில்லாக் கவிதையில்
குறை காண முயல்வது
//

எதார்த்தமான கவிதையில் இடைச்செருகல் !

RAMYA said...

//
முதல் குற்றம்
கவிதையின்றி
கவிஞன்
தனித்து செயல் பட
நினைப்பதும் குற்றமே...
//

சரியாச் சொன்னீங்க.

பாலா said...

rasiththen nanbare

RAMYA said...

//
10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்…?

தூரங்களெல்லாம் வெறும் இடைவெளிகள் மட்டுமே அவற்றையும் அவர்களின் நினைவுகள் கொண்டே நிரப்பி வைத்திருக்கிறேன்...
எல்லோரும் எப்போதும் என் மனதின் பக்கத்தில் இருப்பதால் வருந்துவதில்லை...
//

அருமையான விளக்கம் !

RAMYA said...

//
மண் வாசனையும்
மழலை வாசனையும் பிடிக்கும்
அவள் கூந்தலில் இருக்கும் போது மட்டும்
மல்லிகை வாசனை பிடிக்கும்,
அவள் வாசனை
பிடிக்காது என்று சொன்னால்
காதல் கவிதை எழுதுவதற்கு
நான்
தகுதியற்றவனாகிவிடுவேன்...
//

அருமை புதியவன்!

RAMYA said...

//
நெகிழ்வான நிகழ்வுகள் மனதை நெருடும் போது கண்களில் நீர் துளிர்க்கும்.
//

இதை படிக்கும் அனைவருமே நெகிழ்ந்து விடுவார்கள் புதியவன்.

RAMYA said...

வாழ்வு பற்றி எழுதி இருக்கும் வரிகள் அருமை.

உங்கள் பதில்கள் அனைத்துமே நேர்த்தியாக தேர்ந்தெடுத்த பதில்கள் புதியவன்.

செந்தில்குமார் said...

நண்பரே,

கவித்துவமான பதில்கள் !! அனைத்தையும் ரசித்தேன்....

உங்கள் வானம் விரைவில் வசப்பட வாழ்த்துக்கள் !!

நசரேயன் said...

நல்ல படியா போயிட்டு பத்திரமா வாங்க

Divyapriya said...

வாழ்த்துக்கள்...

குடந்தை அன்புமணி said...

கவித்துவமான பதில்களை படித்து ரசித்தேன். வாழ்த்துகள் நண்பா!

ஆ.ஞானசேகரன் said...

பதிவில் உங்களைப்பற்றி அறிந்துகொண்டேன்... வாழ்த்துகள்

//விடுமுறையில் ஊர் செல்கிறேன் நண்பர்களே, இதுவரை என் எழுத்துக்களை வாசித்து கருத்தூட்டமிட்டு உற்சாகமளித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..//

சென்று வாருங்கள் நண்பரே

தமிழிச்சி said...

ரசிக்கக் கூடிய கவினயமுள்ள பதில்கள். சிறுவயது படம் மிக அழகு. (cute)

gayathri said...

பெயர் விளக்கம் அழகா சொல்லி இருக்கீங்க (பெயரைச் சொல்லவில்லையே?)


athane first unga name solluga pa

hello sir first ooruku poitu vanthu intha questionku muzusa pathil solluga ok

gayathri said...

nalla padiya ooruku poitu sekarama vanga pa

rose said...

unga photo super

rose said...

ungaludaiya sila bathilkal puriyatha puthirave irukku

rose said...

nalla padiya india vanga

குடுகுடுப்பை said...

நல்லா அழகா இருக்கீங்க புதியவன். நானும் என் போட்டோவப்போடறேன் சீக்கிரம்

இரசிகை said...

nalla pathilkal...

Sakthidevi.I said...

nice answers.....

kavitha said...

nalla irukkirathu, kannathula kai vachu rasichu padichen

ஹேமா said...

ஓ...புதியவன்.சந்திக்க ஆவலாய் ஓடி வந்தேன்.உங்கள் சந்தோஷமான அறிவிப்பு....!

காதல் முழுக்கா...!மீண்டு எழுந்து வாருங்கள்.காத்திருக்கிறோம்.அழகை ரசிக்க இன்னொரு அழகா...!

நட்புடன் ஜமால் said...

இங்கே பாருங்கள் - பெற்று கொள்ளுங்கள்

வாழ்த்துகள்

Anonymous said...

:)

Unknown said...

தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணையத்தளத்தை பார்வையிடவும்
http://www.thanthi.co.cc

Revathyrkrishnan said...

//நெடுநாட்களாக
நான்
நேசித்து எழுதிய
காதலொன்று
நான் வாசிப்பதற்காக
காத்திருக்கிறது...//

ம்ம்ம்... அத்தனை அவசரத்திலும் இத்தனை அழகாய் பதிலளித்து இருக்கிறீர்கள். நல்ல பதில்கள் புதியவன்

ரியாலியா said...

pathilgal ovoundrum arumai puthiyavaree ungal varugai kaga karthirukkirom.

வழிப்போக்கன் said...

உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன்...
வாழ்த்துகள்...

சீமான்கனி said...

நெடுநாட்களாக
நான்
நேசித்து எழுதிய
காதலொன்று
நான் வாசிப்பதற்காக
காத்திருக்கிறது...

அப்படியே...அந்த..
மழலை கவிதையை
சேகரித்து வாருங்கள் நண்பரே....

உங்கள் கவிதைகள் எல்லாம் அருமை....
இந்த நொடியில் இருந்து உங்கள் ரசிகனாகி போனேன்....
நன்றி.....

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

உங்கள் பெயர் பிறந்த கதை அருமை

சந்தித்த வேளை சம்மதம்

அருமையான நகர்வு வாழ்த்துக்கள்! மேலும் உங்களை தொடர் பதிவிற்கு அழைக்கின்றேன்

உங்கள் சிறகடிக்கும் ஆசைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/09/blog-post_24.html

நன்றி

புலவன் புலிகேசி said...

கலக்கீட்டீங்க...

S.A. நவாஸுதீன் said...

நாங்களும் உங்களைத் தேடிகிட்டுதான் இருக்கோம்

புலவன் புலிகேசி said...

அழகான கவிதை

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு :-)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

வால்பையன் said...

தல!

பதிவு எழுதி ஒரு வருசம் ஆச்சு!


ஏன்?

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life