பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது
அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்
கையில்
நீ
அனுப்பிய
கடிதத்துடன்
உன் வருகைக்காக
காத்திருக்கும்
எல்லா நேரங்களிலும்
எப்படியாவது வந்து
ஒட்டிக் கொள்கிறது
மாலை நேரமும்
ஒரு அழகு நிலாவும்
உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...
அல்லிக் குளத்தில்
வளர்ந்திருந்த
மல்லிச் செடிகளெல்லாம்
உன் வரவுக்காக
ஒற்றைக் காலில்
தவமிருக்கின்றன
சற்று தாமதமாய்
வந்த நீ
தாமதிக்காமல்
ஒரு புன்னகைப் பூவை
பறித்து வைக்கிறாய்
மலர்களெல்லாம்
மலர்வதற்கு
கற்றுக் கொள்கின்றன...
ஒரு மலரை கொய்து
பரிசளிக்கிறேன்
என் மனதைக்
கொய்து போய்விடுகிறாய்
எனக்குத் தெரியும்
இது மலர்களுக்குள்
தீட்டப் படும்
பழிவாங்கும் திட்டமென...
காதல் சாலையெங்கும்
வெட்கம் விதைத்துச்
செல்கிறாய் நீ
முத்தம் விளைவதற்காய்
காத்திருக்கிறேன் நான்...
என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................
83 comments:
\\பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது\\
துவக்க வர்ணனையே அழகுங்க
me the second anna
உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...
ஹ ஹ ஹ ஹ
எப்படி எல்லாம் யோசிக்கறிங்க புதியவன் அண்ணா
அல்லிக் குளத்தில்
வளர்ந்திருந்த
மல்லிச் செடிகளெல்லாம்
உன் வரவுக்காக
ஒற்றைக் காலில்
தவமிருக்கின்றன
ஹையோ அழகான உவமை
பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது
அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்//
அழகான ஆகான ஆரம்பம்.
கடையிவரியில் கவிதை இன்னும் அழகுபடுகின்றது.
ரசித்தேன்.
என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................
ஒஹோ இப்படி தான் கவிதை உருவாகின்றதா....
புதியவன் அண்ணா
பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது
அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்
ம்ம்ம்ம்
எதுகை மோனை அழகு
ரசித்தேன் இவ் வரிகளை
//சற்று தாமதமாய்
வந்த நீ
தாமதிக்காமல்
ஒரு புன்னகைப் பூவை
பறித்து வைக்கிறாய்
மலர்களெல்லாம்
மலர்வதற்கு
கற்றுக் கொள்கின்றன//
இனி காதல் கவிதை எழுதுவதில்லை என்று இருந்த என்னை மீண்டும் அந்த பக்கம் திரும்ப வைக்கும்படி இருக்கிறது உங்க கவிதை.
எப்படியிருந்தாலும் உங்கள் காதலியோ மனைவியோ குடுத்து வெச்சவங்க...
நல்ல ரசனை
பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது
ஆரம்பமே அருமை..
மிகவும் ரசனையுடன் கவிதையை அழகா அமைத்து இருக்கீங்க..
படிக்கும் பொழுதே மனதுக்குள் எதோ ஓர் உணர்வு..
புதியவரே ஆரம்பமே அசத்தல்.கலக்கிட்டீங்க போங்க.வரிகள் மனதை கொள்ளூதடா
அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்\\
எதுகை மோனை அதிகமாயிருக்கு இந்த கவிதையில.
அருமை.
இந்த வரிகளை படிக்கும் போது எனது ஞாபங்களில் ஒரு பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல், நான் அதிகம் இரசித்த பாடல்
(நீ வருவாயென இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்)
/பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது/
அருமை
எப்படியாவது வந்து
ஒட்டிக் கொள்கிறது
மாலை நேரமும்
ஒரு அழகு நிலாவும்\\
கடிதத்தை அனுப்பிவிட்டு
அவங்களும் வந்துட்டாங்களா ...
எப்போதும் போல இப்போதும்....
பகல் உதடாக, இரவு முத்தமிட.... அழகான காட்சி. இதே உவமையொன்றை உங்கள் வேறொரு கவிதையில் படித்ததாக நினைவு. ஒவ்வொரு வரியினுள்ளும் காதலே தவளுகிறது.. முத்தாய்ப்பான முடிவு இன்னும் அபாரம்.
அந்த இறுதி பத்தி மட்டும் மீண்டும் மீண்டும் படிக்கத் தோணுகிறது.
எப்போதும் போல இப்போதும்....
பகல் உதடாக, இரவு முத்தமிட.... அழகான காட்சி. இதே உவமையொன்றை உங்கள் வேறொரு கவிதையில் படித்ததாக நினைவு. ஒவ்வொரு வரியினுள்ளும் காதலே தவளுகிறது.. முத்தாய்ப்பான முடிவு இன்னும் அபாரம்.
அந்த இறுதி பத்தி மட்டும் மீண்டும் மீண்டும் படிக்கத் தோணுகிறது.
//உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...//
இப்படிப் போனால் பல பசை நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியது தான் போங்க...
//உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...//
இப்படிப் போனால் பல பசை நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியது தான் போங்க...
ம்ம் பாராட்டி பாராட்டி வாய் வழிக்குதய்யா
காதல்.. காதல்.. காலுக்கிடையே மிதிபடாதவாறு கொட்டிக்கிடக்கு உமது தோட்டத்தில்
//காதல் சாலையெங்கும்
வெட்கம் விதைத்துச்
செல்கிறாய் நீ
முத்தம் விளைவதற்காய்
காத்திருக்கிறேன் நான்...
//
கற்பனை வளம் இங்கே விதை தூவி ஆலமரமா வளர்ந்து நிற்கிறது
ஆரம்பத்தில் உதட்டு இதழ்களை பகலாகவும், அந்தியாகவும் ஒப்பிடல் அருமை
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் காதல் ரசம் சொட்டும் வரிகள்
புதியவன் மீண்டும் மீண்டும் புதியவனாக பிறக்கிறார் ஒவ்வொரு கவிதையிலும்
அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்
பாடல்போல் இவ்வரிகள் அருமை
இசையோடு நல்ல பாடகர் பாடக்கேட்டால் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யலாம்...
உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...
//
அய்யா!!
செமத்தியா இருக்கு!
என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................
///
கவிதையின் முடிவு பத்தி முத்தாய்ப்பாய் இருக்கு!
//கையில்
நீ
அனுப்பிய
கடிதத்துடன்
உன் வருகைக்காக
காத்திருக்கும்
எல்லா நேரங்களிலும்
எப்படியாவது வந்து
ஒட்டிக் கொள்கிறது
மாலை நேரமும்
ஒரு அழகு நிலாவும்// அழகு
\\ஒரு புன்னகைப் பூவை
பறித்து வைக்கிறாய்
மலர்களெல்லாம்
மலர்வதற்கு
கற்றுக் கொள்கின்றன...\\
ஆஹா! அருமை புதியவரே.
நன்றாக கற்று கொடுக்கின்றார் உங்களவர்.
உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...
\\
எப்படி இப்படிலாம்?
ஒரு மலரை கொய்து
பரிசளிக்கிறேன்
என் மனதைக்
கொய்து போய்விடுகிறாய்
\\
யாருப்பா அது (காதலியா?மனைவியா?)
என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................
\\
அழகு
மயில் said...
எப்படியிருந்தாலும் உங்கள் காதலியோ மனைவியோ
\\
அவரு சொல்ல மாட்டாரு
அபுஅஃப்ஸர் said...
ம்ம் பாராட்டி பாராட்டி வாய் வழிக்குதய்யா
\\
அதே அதே
//உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...//
super
//பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது//
பிரெஞ்சு முத்தமா
//அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்//
இதுக்குதான் ரெண்டு மூனு தேத்தி வச்சிக்கணும்
//கையில்
நீ
அனுப்பிய
கடிதத்துடன்
உன் வருகைக்காக
காத்திருக்கும்
எல்லா நேரங்களிலும்
எப்படியாவது வந்து
ஒட்டிக் கொள்கிறது
மாலை நேரமும்
ஒரு அழகு நிலாவும்//
ஈமெயில் போட்டா எப்படி இருக்கும் ?
//உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...//
அவங்களுக்கு பசலை நோய், அதான் பசை இல்லை
//உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...//
அப்படியென்றால் மின்னஞ்சல்கள் எல்லாமே ஸ்பாமுக்கு சென்று விடுமா...??
( இந்த வரிகள் வெகு அழகு புதியவன்)
//அல்லிக் குளத்தில்
வளர்ந்திருந்த
மல்லிச் செடிகளெல்லாம்
உன் வரவுக்காக
ஒற்றைக் காலில்
தவமிருக்கின்றன//
அப்ப நீங்க புதியவன் ??
//Blogger அ.மு.செய்யது said...
//உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...//
அப்படியென்றால் மின்னஞ்சல்கள் எல்லாமே ஸ்பாமுக்கு சென்று விடுமா...??
( இந்த வரிகள் வெகு அழகு புதியவன்)//
அதைத்தானே நானும் கேட்கிறேன்
//சற்று தாமதமாய்
வந்த நீ
தாமதிக்காமல்
ஒரு புன்னகைப் பூவை
பறித்து வைக்கிறாய்
மலர்களெல்லாம்
மலர்வதற்கு
கற்றுக் கொள்கின்றன...//
சீக்கிரம் வந்தா என்ன பூ ?
அது என்ன காதலன் மட்டும் வேலை வெட்டி இல்லாம காதலியை பத்தி நினைக்கிறது
இந்த கவிதைக்கு எப்படி பின்னூட்டமிடுவது என்று யோசித்து கொண்டேயிருக்கிறேன்.
அசத்தல்,அருமை,கலக்கல் போன்ற வார்த்தைகளை கொண்டு இந்த கவியை அளந்து விட முடியுமா என்று தெரியவில்லை.
என்னமோ போங்க..!!!!
( இந்த கவிதைகளை தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடலாமே !!! புதியவன். அழகான தாவணி பெண்களை அட்டைப் படமாக போடலாம். )
விரைவில் கிழக்கு பதிப்பகத்தாரை அணுகுங்கள்.உங்கள் ஆக்கங்கள் நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டுமென்பது என் ஆவல்.
//ஒரு மலரை கொய்து
பரிசளிக்கிறேன்
என் மனதைக்
கொய்து போய்விடுகிறாய்
எனக்குத் தெரியும்
//
அரளி மலரா இல்லை அல்லி மலரா ?
//
இது மலர்களுக்குள்
தீட்டப் படும்
பழிவாங்கும் திட்டமென...//
இது இடதயத்தை திருட .. அப்புறம் கொஞ்ச நாள்ள ங்ங்ங்ங்ங்ங்ங்ங்... ங்ங்ங்ங்ங்ங்ங்ங்... காதல் படம் மாதிரி
//காதல் சாலையெங்கும்
வெட்கம் விதைத்துச்
செல்கிறாய் நீ
முத்தம் விளைவதற்காய்
காத்திருக்கிறேன் நான்...//
அறுவடை எப்படி இருக்கு??
ஊரிலெ மழை இல்லனாலும் உங்க காட்டிலே நல்ல மழை தான்
//என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்//
சேட்டு கடையிலே அடகு வைக்கவா ?
//தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................//
நினைத்ததை விட அதிமா எடையோ கொலுசு
//சற்று தாமதமாய்
வந்த நீ
தாமதிக்காமல்
ஒரு புன்னகைப் பூவை
பறித்து வைக்கிறாய்
மலர்களெல்லாம்
மலர்வதற்கு
கற்றுக் கொள்கின்றன...//
நல்ல காதல் கவிதை எல்லா வரிகளும் நன்றாக இருக்கு நண்பா
//அல்லிக் குளத்தில்
வளர்ந்திருந்த
மல்லிச் செடிகளெல்லாம்
உன் வரவுக்காக
ஒற்றைக் காலில்
தவமிருக்கின்றன//
அண்ணாத்த ரகளை
//சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்//
//எப்படியாவது வந்து
ஒட்டிக் கொள்கிறது
மாலை நேரமும்
ஒரு அழகு நிலாவும்//
மிகவும் ரசித்த வரிகள்...மொத்த கவிதையுமே கொள்ளை அழகு...வழக்கம் போல :)
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு
இந்த சுட்டியை சொடுக்குங்கள்
தமிழர்ஸ் பிளாக்
ஓஹ் இரவுக்கும் பகலுக்கும் நடுவில் இது வேற இருக்கா? இந்த முறை வெட்கப்பட்டது மேகமா? வெட்கத்துக்கும் மேகத்தின் மேல் மோகமா?
கடித்தில் சுவாரஸ்யம் இதான,,,,,எச்சில் தொட்டு ஓட்டிய கடிதம் ஆஹா என்னே காதலில் காதலின் சுவை....
கலிகாலம் அல்லி குளத்தில் முடமான மல்லிச் செடிகள் ஹை லைட்டுன்னு சொல்வாங்களே அதா இது.......
மலர்களை பழிவாங்கவும் இங்கு வழி வகுக்கப்பட்டு இருக்கிறது...
என்னங்க நீங்க காதலியோ மனைவியோ கொஞ்சம் சொல்லுங்க உங்க ஆளுக்கு.....
இப்பத்தான் சக்தி சொல்லியிருக்காங்க இயற்கை வளத்தை அழிச்சிட்டோம் என்று.... ஜமாலும் சொல்லியிருக்கார் யாரும் தீர்வு சொல்லவில்லை என்று
இங்கே கவனியுங்கள்..........
இங்கு இவர் சாலையெல்லாம் வெட்கவிதை தூவுகிறார்..முத்தப்ப்யிர் விளைவதற்கு....இனி வசந்தகாலம் மட்டுமே வானிலை அறிக்கையில்..
மனவெளில் சிந்திய முத்துக்கள்.....கோர்த்து எடுக்க வேண்டாம் அவை சிந்தியே இருக்கட்டும் உம் சித்தம் தெளியும் வரை.......
மொத்தமாய் முத்தாய்ப்பு செய்கிறது இந்த கவிதை புதியவன்
' ஒரு மலரைக் கொய்து
பரிசளிக்கிறேன்
என் மனதைக் கொய்து
போய் விடுகிறாய் '
மிக அழகாக இருக்கிறது புதியவன். காதலைத் தவிர வேறு எதுவும் எழுதுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறீர்களா ?
அடேங்கப்பா....ரொம்ப அருமையா இருக்குங்க...!
வாழ்த்துக்கள்!
காதலை ஆராதிக்கும் அண்ணன் புதியவன்.. வாழ்க..வாழ்க.. சான்ஸ் இல்லப்பா.. சூப்பர்..
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்
nice :)
வாழ்த்துக்கள் புதியவன் விகடனில் ஜுட் பகுதியிலும் முகப்பு பகுதியிலும் உங்கள்” காதல் கடிதங்களென” வெளிவந்துள்ளது.....
பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது
புதுசு புதுசா சொல்றதால புதியவன் பெர்யர் பொருத்தமாத்தான் இருக்கு
அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்
கவிதை பந்திக்கு நான் ரொம்ப லேட் போல
கையில்
நீ
அனுப்பிய
கடிதத்துடன்
உன் வருகைக்காக
காத்திருக்கும்
எல்லா நேரங்களிலும்
எப்படியாவது வந்து
ஒட்டிக் கொள்கிறது
மாலை நேரமும்
ஒரு அழகு நிலாவும்
அழகு
உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...
அருமை புதியவன்
சற்று தாமதமாய்
வந்த நீ
தாமதிக்காமல்
ஒரு புன்னகைப் பூவை
பறித்து வைக்கிறாய்
மலர்களெல்லாம்
மலர்வதற்கு
கற்றுக் கொள்கின்றன...
பூக்களையும் பெருமிதம் கொள்ளச் செய்யும் வரிகள்
ஒரு மலரை கொய்து
பரிசளிக்கிறேன்
என் மனதைக்
கொய்து போய்விடுகிறாய்
எனக்குத் தெரியும்
இது மலர்களுக்குள்
தீட்டப் படும்
பழிவாங்கும் திட்டமென...
தெரிந்தும் நம்மை நாமே பலி கொடுப்பதில்தானே பரமானந்தம்
காதல் சாலையெங்கும்
வெட்கம் விதைத்துச்
செல்கிறாய் நீ
முத்தம் விளைவதற்காய்
காத்திருக்கிறேன் நான்...
பார்த்தால் அறியலாம், பயிரை கேட்கவேண்டியதில்லை. விரைவில் அறுவடை தொடங்கட்டும் புதியவன்.
என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................
நன்றாகவே தெரிகிறது.
கவிதையில் முத்திரை பதிப்பதை வழக்கம்போல வழக்கமாக்கி கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் புதியவன்
தமிழரசி said...
வாழ்த்துக்கள் புதியவன் விகடனில் ஜுட் பகுதியிலும் முகப்பு பகுதியிலும் உங்கள்” காதல் கடிதங்களென” வெளிவந்துள்ளது.....
வாழ்த்துக்கள் புதியவன்
beautiful lines
\\அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்\\
அருமை!
\\அல்லிக் குளத்தில்
வளர்ந்திருந்த
மல்லிச் செடிகளெல்லாம்
உன் வரவுக்காக
ஒற்றைக் காலில்
தவமிருக்கின்றன\\
அழகான உவமை!
\\என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................\
மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை....
கவிதை முழுவதுமாய் மிக அழகு புதியவன், வாழ்த்துக்கள்!!
/*பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது*/
ரொம்ப அருமை :)
/*/*உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...*/
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க :)
சூப்பர்.. சூப்பர்... :)
மொத்ததில் அருமையான கவிதை :)
பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது\\
azaka iruku pa rompapudichi iruku
புதியவன்...
எல்லாமே நல்லா இருக்கு:)
திரும்ப திரும்ப படிக்க வைகிறது அனைத்தும்..
என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................
//
அழகு:)
காதல் வழியும் வெகு நேர்த்தியான வரிகள்...
வாழ்த்துகள்..
உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...
//
perfect love!
அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்//
காதலோடு வார்த்தை விளையாடலோ!!
அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்
nice play of words
:-) அழகு
பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது
starting ae nalla irukku pudhiyavan..nice..........uvamai eppodhum padikka nalla irukku...
kadhal kaditham uvamaiyin pattiyalin kadithaththil mudhalidam...:)
புதியவன்! என் வலைத்தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்...
arumaiyaa irunthathunga..
super a irukku. but love poem yellam konjam thoram yenakku. but pudikkum
கவிதை அற்புதமாக இருக்கிறது...
கவிதை அற்புதமாக இருக்கிறது...
Post a Comment