பெயர் தெரியாத
பெண் குழந்தைகளையெல்லாம்
நான்
உன் பெயர் சொல்லி
அழைத்த போது
தொடங்கியிருக்க வேண்டும்...
அல்லது...
என் பெயர் சூட்டப் பட்ட
ஆண் குழந்தையை
பெயர் சொல்லியழைக்க
நீ
தயங்கி நின்ற போதேனும்
ஆரம்பித்திருக்கக் கூடும்...
இல்லையெனில்...
எப்போதும்
என் கண்ணைப் பார்த்து
பேசும் நீ
முதன் முதலாய்
மண்ணைப் பார்த்துப்
பேசும் போதாவது
தோன்றியிருக்கலாம்...
அதுவும் இல்லையெனில்...
கொஞ்சம் கொஞ்சமாய்
பேச ஆரம்பித்த
நீ
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மாற்றம்...
இவையெதுவும் இல்லையெனில்...
நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து
முத்தத்தில் நனைந்த வேளையில்
தானும் சேர்ந்தே
நனைந்திருக்கலாம்
நம்முடனான காதல்.....
எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது
ஆயிரம் முறை நீ
என்னிடம்
கேட்ட கேள்வி...
ஒரு முறையேனும்
உனக்கு சொல்ல நினைத்து
சொல்லாத பதில்...
வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................
Thursday, May 21, 2009
காதல் வந்த காலமெது…?
Subscribe to:
Post Comments (Atom)
65 comments:
ஊனர்வுகள் வரிகளில் அப்படியே தெரிகிறது...
உணர்வுகள் வரிகளில் அப்படியே தெரிகிறது...
(முன்னைய பின்னூட்டத்தில் எழுத்துப்பிழை...)
படித்தேன்...
மிகவும் ரசித்தேன்...
ஓட்டும் போட்டாச்சு...
//பெயர் தெரியாத
பெண் குழந்தைகளையெல்லாம்
நான்
உன் பெயர் சொல்லி
அழைத்த போது
தொடங்கியிருக்க வேண்டும்...//
அழகு புதியவன்....
அப்படி கூப்பிடும் போது மத்தவங்க உங்கள சும்மாவா விட்டாங்க..?
//என் பெயர் சூட்டப் பட்ட
ஆண் குழந்தையை
பெயர் சொல்லியழைக்க
நீ
தயங்கி நின்ற போதேனும்
ஆரம்பித்திருக்கக் கூடும்...//
சான்ஸே இல்லங்க...
( இதை எப்படி புகழ்ந்து பின்னூட்டமிடுவது என்று யோசித்து கொண்டே இருக்கிறேன்.
என் வார்த்தைகள் பலவீனமானவை )
//கொஞ்சம் கொஞ்சமாய்
பேச ஆரம்பித்த
நீ
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட//
கவிதை பத்திகளில் பாரபட்சமே நீங்கள் பார்ப்பதில்லையா ?
//ஒரு முறையேனும்
உனக்கு சொல்ல நினைத்து
சொல்லாத பதில்...//
காரணங்களையும் அளவுகோல்களும் இல்லாதது தானே காதல்.
//வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................//
உண்மையிலே இக்கவிதைக்கு சொந்தமானவர் படித்தால் இந்த கவிதையின் கனத்தை அவரால் தாங்கி கொள்ள முடியுமா என்பது சந்தேகமே !!!
காதலின் ஆரம்ப கணங்களை இதைவிடத் தெளிவாய் சொல்ல முடியாது.. அருமை புதியவன்..
//நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து
முத்தத்தில் நனைந்த வேளையில்
தானும் சேர்ந்தே
நனைந்திருக்கலாம்
நம்முடனான காதல்.....//
அருமை..
//வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................//
உண்மைக்காதலின் உன்மத்த நிலை.. சூப்பர் நண்பா
அருமையா இருக்கிறது. அதெப்படி பெண்கள் எல்லாரும் அந்த கேள்வியையே கேட்கிறார்கள்...அதை தெரிந்துகொள்வதில்தான் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் இருக்கிறதே....ம்! அந்த நேரத்தில் நமது பதில்தான் அவர்களை இன்னும் நெருங்க வைக்கும். நடத்துங்க புதியவன்!
அருமையா இருக்கு புதியவன்.
வரிகள் ஒவ்வொன்றும் அபாரம்.
மீண்டும் அட்டகாசம் பண்ணிட்டீங்க!!
கவிதை முழுவதையும் ரசித்தேன். ஒரு பகுதியைத் தனியாகக் குறிப்பிட முடியாது.
கவிதைக்குப் புதியவன் என்ற மாதிரியல்லவா இருக்கிறது.
50ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்
கவிதை அபாரம் புதியவன். காதலைப் பற்றி எழுத இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று தோன்றுகிறது.
\\நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து
முத்தத்தில் நனைந்த வேளையில்
தானும் சேர்ந்தே
நனைந்திருக்கலாம்
நம்முடனான காதல்.....\\
ரொம்ப அழகாயிருக்கு
50 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்
இதுலே சிறப்பு என்னவென்றால் 50 பதிவுகளுமே
காதல்
காதல்
காதல்
காதல் இல்லையேல் வேறு எதுவுமே இல்லை இவர் பதிவில்
அனைத்தும் கற்பனைக்கு அப்பார்பட்ட வரிகள் அதனோடு சேர்ந்து படமும் கவிதைசொல்லும்
வாழ்த்துக்கள் புதியவன்
மேலும் வளர...
கொஞ்சம் கொஞ்சமாய்
பேச ஆரம்பித்த
நீ
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மாற்றம்...
//
இருக்கலாம்!! இருக்கலாம்!!!
ஒவ்வொரு வரிகளு அருமை, சூப்பர், கலக்கல் என்றே சொல்லத்தோனுகிறது ஒவ்வொரு வரியுமே கவிப்பாடுகிறது
மொத்தத்தில் மற்றுமொரு காதலை எடுத்துரைக்கும் காவியம்
நல்லாயிருக்கு புதியவன்
50 வதுக்கு வாழ்த்துக்கள்!!
//எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது
ஆயிரம் முறை நீ
என்னிடம்
கேட்ட கேள்வி.../
உங்ககிட்டே 1000 தடவைதான் கேட்டிடுக்காங்க, என்கிட்டே ம்ம்ஹூம்.. சொல்லமாட்டேன்..
எப்போதும்
என் கண்ணைப் பார்த்து
பேசும் நீ
முதன் முதலாய்
மண்ணைப் பார்த்துப்
பேசும் போதாவது
தோன்றியிருக்கலாம்
\\
உங்களுக்கே உரிய வரிகள் புதியவன்
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட
\\
காதலுக்கே உரிய வார்த்தை
வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................
\\
அருமையான வார்த்தை புதியவன்
\வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி...\\
இந்த முறை நான் அதிகம் இரசித்தது
ஒரு சில பெண்கள் மேக்கப் போட்டால்தான் அழகாக இருப்பார்கள், ஒருசிலர் யதார்த்தமாகவே மிக அழகாக இருப்பார்கள்...
கவிதையில் பூசி மொழுகப்பட்ட வார்த்தைகளின்றி மிக அழகாக இருக்கிறது புதியவன். அழகாக வந்து விழுந்த வார்த்தைகள்!! பிரமாதம்.
நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து ரொம்ப அருமையான கற்பனை... பார்வை வெட்கத்தில் விழுவதாக மிக அற்புதமாக இருக்கிறது!!!
நீங்கள் இக்கவிதைகளைத் தொகுத்து ஒரு நல்ல காதல் கவிதைபுத்தகமொன்றை விடலாமே!!!
நல்ல காதல் கவிதை,.. திரும்பி பார்க்கவைத்த வரிகள் அதிகம்... பாராட்டுகள் புதியவன்
\\நீங்கள் இக்கவிதைகளைத் தொகுத்து ஒரு நல்ல காதல் கவிதைபுத்தகமொன்றை விடலாமே!!!\\
விடலாமே
இம்முறை உங்கள் காதல் பிறந்த கதையை ஆராய்ந்து இருக்கீங்க.... எங்கு பிறந்தது எப்போது உணர்ந்தது என்பதை உங்களுக்கே உரிய நடையில் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கீங்க...கவிதைக்கு வார்த்தை வைக்காமல் களவாடி வீட்டீர் என புலம்புவேன் இம்முறை பாராட்ட வார்த்தை இல்லாமல் நம் நண்பர்கள் களவாடிவிட்டனர்....
காதல் பல்கலை கழகமே!!!!!!
காதல் கவிதைகள் உன் அரங்கமா?
வெட்கத்தின் வம்சத்தையும் வதை செய்கிறாய்...
வேரோடு காதலை வரையறுக்கிறாய்
முத்தங்கள் கொண்டே முதல் வைக்கிறாய்....
சத்தமேயின்றி எங்களை இங்கு வரவைக்கிறாய்...
புதியவன் என்ற பேரில் புதுக்கவிதைகள் புனைகிறாய்....
புதுப்புது வார்த்தைகளை புதுவிதமாய் இடுகிறாய்...
எம்போன்ற கவிகள் மேல் கழிவிரக்கம் உன்கில்லை...
ஒட்டு மொத்த காதலையும் ஒருவரே சொல்லிவிட்டால்....
ஓய்வு எடுப்பது மட்டுமே எங்களுக்கு ஒருமித்த வேலை இனி....
50வது பதிவு எழுதி அரைச்சதம் அடித்துவிட்டாய்
அத்தனையும் காதல் சொட்ட அமிலமழை பொழிந்துவிட்டாய்
இதழின் ஈரத்துக்கு வெட்கத்தை காவல் வைத்த வேந்தனே...வெற்றி வாசல் சாவி மட்டுமே.....உன் வசந்த வாசல் பூட்டுக்கு....வாழ்த்துக்கள் புதியவன்
very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks
வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
உங்க பேருக்கு ஏத்தாமாதிரியே புதுசா யோசிச்சிருக்கீங்க
புதியவரே 50 பதிவு வாழ்த்துக்கள்.எதை வர்ணீக்க தெரியவில்லை.எல்லாமே அழகு.
100 வது follower நாந்தான்.. இவ்வளவு அழகா கவிதை எழுதிட்டு என்னோட கவுஜய புகழ்ந்த?/ அஆவ்வ்வ் நீங்க ரொம்ப நல்லவங்க..
uyir katru - ul suvaasam - arumai
அனுபவம் கவிதையா பேசுதோ!!
இல்லையெனில்...
எப்போதும்
என் கண்ணைப் பார்த்து
பேசும் நீ
முதன் முதலாய்
மண்ணைப் பார்த்துப்
பேசும் போதாவது
தோன்றியிருக்கலாம்...
ரொம்ப அழகு புதியவன். அடுத்தவிரல் மெட்டிக்கு ஆசைப்பட கட்டைவிரல் காதலோடு வெட்கப்பட தலையாட்டி மறுப்பதே இவர்களின் கா(த)ல்.
அதுவும் இல்லையெனில்...
கொஞ்சம் கொஞ்சமாய்
பேச ஆரம்பித்த
நீ
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மாற்றம்...
நீங்களும் ரொம்ப அழகா கொஞ்சி இருக்கீங்க
நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து
முத்தத்தில் நனைந்த வேளையில்
தானும் சேர்ந்தே
நனைந்திருக்கலாம்
நம்முடனான காதல்.....
இருவரும் ஒருவராய் மாறும்போது இருப்பது காதல் ஒன்றுமட்டுமே. நீங்கள் அங்கே காணாமல் கரைந்து போயிருப்பீர்கள்.
வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................
ஆழமான காதல். புதியவன், வழக்கம்போல் இதையும் இரண்டு முறைப் படித்தேன். உங்களுக்காக ஒருமுறை, உங்கள் காதலுக்காக ஒருமுறை.
எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது
ஆயிரம் முறை நீ
என்னிடம்
கேட்ட கேள்வி...
மிகவும் ரசித்தேன்.
அருமை புதியவன்....
//பெயர் தெரியாத
பெண் குழந்தைகளையெல்லாம்
நான்
உன் பெயர் சொல்லி
அழைத்த போது
தொடங்கியிருக்க வேண்டும்...//
அழகு... (பார்த்துங்க... உங்க சொந்தக்கார பெண் குழந்தையா இருக்கப்போய் வீட்டில் மாட்டி விட்டுட போகுது!)
//என் பெயர் சூட்டப் பட்ட
ஆண் குழந்தையை
பெயர் சொல்லியழைக்க
நீ
தயங்கி நின்ற போதேனும்
ஆரம்பித்திருக்கக் கூடும்...//
அடாடா... அப்படியா?
//வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி......//
மிக அழகான வரிகள் புதியவன்... மொத்த கவிதையுமே மிக்க அழகு... வாழ்த்துக்கள்
உள்ளக்கிளர்ச்சியை வார்த்தைகளில் அடைக்கமுடியவில்லை. அந்த அளவு சந்தோசம். ஹ்ம்ம், எந்த மொழிகொண்டும் புரியவைக்க முடியாததுதான் காதல் புதியவன்
வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................
அழகு :)
எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது
ஆயிரம் முறை நீ
என்னிடம்
கேட்ட கேள்வி...
அருமை
வேற வார்த்தை தமிழில் இருக்கா புதியவன் அண்ணா???
ஓரே வார்த்தை சொல்லி சொல்லி சலித்து விட்டது
அருமை பிரமாதம் என
சரியாக பின்னூட்டம் இட
தெரியவில்லை எனக்கு எனும் வருத்தத்துடன் செல்கின்றேன்
வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி.....
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
காதல் காதல் காதல்
ஒரே தலைப்பில் 50 கவிதை கிரேட்
புதியவன் அண்ணா
உங்களது பிளாக் தமிழர்ஸ் மெயின் பேஜில் பப்ளிஷ் ஆகிவிட்டது,
அப்படியே ஓட்டு பட்டையை சேர்த்துவிடுகள் இன்னும் நிறைய பேர் ஓட்டு போட வசதியாக இருக்கும்
நன்றி
தமிழர்ஸ்
எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி
mmmmmmmmmmm ella ponnugalum ippadi than pa kepanga
50ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்
வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி
oooooooooooo ithan karanama okok
உங்களுக்கு ஒரு வேளை வச்சிருக்கேன்...
வந்து பாருங்க...
http://jspraveen.blogspot.com/2009/05/blog-post_28.html
எதுவோ அதுவே வசந்த காலம் சரியா??
:-) nice!!!
:-))
Vaaippe illa. Especialy end up lines "குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க
நீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க". :) Rompa nalla ennanghal, vaalthukkal!!.
Inga prabhu.
supperb pathiyavan...very nice...
காதல் ஆரம்பிக்கும் அனைத்து இடங்களும் மனதை நெருடுகின்றன. அருமையான கவிதை
வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................
superb....................kadhal vandha kaalam.............
பெயர் தெரியாத
பெண் குழந்தைகளையெல்லாம்
நான்
உன் பெயர் சொல்லி
அழைத்த போது
தொடங்கியிருக்க வேண்டும்
nalla irukku illenga ?.
very nice!!
nallayirukku..
தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...
nanum intha varikalai parthu thadumari vitten
தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...
nanum intha varikalai parthu thadumari vitten
Post a Comment