Thursday, May 7, 2009

காதல்…ஒரு அழகிய முரண்பாடு…


மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...

மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...

இன்று முழுதும்
நீ வீட்டை விட்டு
வெளியே வரவில்லை
உன்னைப் பார்க்காமல்
இனி மலர்வதில்லை என்று
தீர்மானம் நிறைவேற்றி
இருக்கின்றன
நீ
வெட்கம் ஊற்றி வளர்த்த
உன் தோட்டத்து
மலர்களெல்லாம்

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........



59 comments:

ஆ.சுதா said...

|நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........|

கடைசியில் அழகான முடிவு முத்தங்களைப் போல்,
மீண்டும் ஒரு அழகியல் கவிதை
நல்லா இருக்கு புதியவன்

sakthi said...

me the second

sakthi said...

மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?

ithu nan eluthi vechu eruken same ithe lines
alagana line

sakthi said...

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

superb

sakthi said...

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை


arumai puthiya anna alagana kavithai

sakthi said...

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........


hahhaha

mudithu erukum vitham arumai puthiya anna

கார்த்திகைப் பாண்டியன் said...

//உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை//

பூக்களும் காதலும் நிறைந்த கவிதை.. அருமையா இருக்கு புதியவன்.. காதல் கவிதை மட்டும்தான் எழுதுவேன்னு ஏதும் சத்தியம் பண்ணி இருக்கீங்களா?

கடைக்குட்டி said...

வாலறுந்த பட்டத்தையும்.. நூலறுந்த பட்டத்தையும் ரசித்தேன்

:-)

நாடோடி இலக்கியன் said...

//தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தடுமாறி விடுகிறேன் நான்...//

ithu kalakkalaana varikaL.

kaadhal kavithaikaL ezhuthi romba naal aachu ippo ungka pathivai padissathu miindum ezhuthanum pola irukku.

S.A. நவாஸுதீன் said...

மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...

காதல் வருவதே அழகிய முரண்பாடு(ஆண், பெண்)களுக்கிடையில் தானே!

S.A. நவாஸுதீன் said...

மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

அழகிய அவஸ்தை. சூப்பர் புதியவன்

S.A. நவாஸுதீன் said...

தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்..

தடுமாற்றம் தெளிவாக இருக்கிறது

S.A. நவாஸுதீன் said...

இன்று முழுதும்
நீ வீட்டை விட்டு
வெளியே வரவில்லை
உன்னைப் பார்க்காமல்
இனி மலர்வதில்லை என்று
தீர்மானம் நிறைவேற்றி
இருக்கின்றன
நீ
வெட்கம் ஊற்றி வளர்த்த
உன் தோட்டத்து
மலர்களெல்லாம்

பூ(பந்த்)தம்

S.A. நவாஸுதீன் said...

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை

முள்ளும் ரோஜாவாய் மாறி இருக்குமோ

S.A. நவாஸுதீன் said...

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

அழகான வரிகள்

S.A. நவாஸுதீன் said...

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........

மிகவும் ரசித்த வரிகள். அற்புதம் புதியவன்.

அ.மு.செய்யது said...

//மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
//

கார வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே

மஞ்சள அரைக்கும் முன்ன மனச அரைச்சவளே !!! ( வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருதுங்க இத படிக்கும் போது )

அசத்தல் ஆரம்பம் புதியவன்.

அ.மு.செய்யது said...

//காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...//

அதென்ன‌ காத‌லில் ம‌ட்டும்..காத‌லே ஒரு முர‌ண்பாடு தான்...ச‌ர்ச்சை தான்..

அ.மு.செய்யது said...

//மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?//

நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டியலு !!!

அ.மு.செய்யது said...

//உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது
//

இதை கலாச முடியாது..காரணம் இது கிளாஸ்..!!!!

அ.மு.செய்யது said...

//நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........//

பிரிந்திருக்கும் கால கட்டங்களில் கூட இப்படியெல்லாம் உங்களுக்கு எப்படி எழுத தோன்றுகிறது ?

ஆதவா said...

கவிஞர் வைரமுத்து சொன்னதைப் போல, காதல் ஒரு முரண்பாட்டு மூட்டை. உங்கள் பழைய கவிதைகளில் கொஞ்சும் காதல் தேன்சொற்கள் இதில் குறைவு. என்றாலும் முன்பைப் போன்றே கவிதையின் சுவை குறையவில்லை.

///வெட்கத்தை உண்டு..../// அழகான கற்பனை...

உங்களது காதல் கவிதைகள் பலவற்றிலிருந்து தள்ளி நிற்பதற்கும் இதைப் போன்ற சொற்களே காரணம்.

//சக்கரவாகப் பறவை/// எனக்குப் புதிய தகவல்.

///புன்னகை திருடும் ரோஜாக்களுக்கு முற்களில்லை... ///

அபாரம்!!!! தொடருங்கள் புதியவன்!!!!

RAMYA said...

//
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...
//

முரண்பாடு இல்லாமல் எதுவே இல்லையே புதியவன்
தலைப்பே அட்டகாசமா இருக்கு!

Divyapriya said...

செம்ம அழகு...கலக்கல் கவிதைகள்...எல்லாமே அழகோ அழகு...
அதுலிம் இந்த வரிகள்...அட!!
//நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்//

RAMYA said...

//மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?//

நான் கூட அதுபோல் வைத்து ஏமாந்து இருக்கேன்.

ஆனால் உங்கள் கவிதையில் இது கலக்கல் வரிகள்!

RAMYA said...

//உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை//

ஆம்மாம் அதுவும் உண்மையே !!

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

//நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........
//

அருமை கலக்கல் உவமானம்.

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் கவிதையாக அரங்கேறி உள்ளன!!

ரியாலியா said...

puthiyavaa unga manam choddi chenra avga kuduthu vaithavaga.
varigal manathai thottu vittana.

மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்

asathal varigal yen nianiugalukee yennai kondu chendru vittathu.ungal yeluthukal,yennagl,sithanaigal,men mealum thodarattum.

Divya said...

All the lines are so very nice:))

\\தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...\\

intha lines romba nalla irukku:)

Divya said...

\\நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்\

Awesome, really admired these lines:))

Asusuall kalakkals kavithai Puthiyavan!

நசரேயன் said...

ரசித்து எழுதி இருக்கீங்க

ivingobi said...

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை Superb friend

தேவன் மாயம் said...

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது//

நல்லா சிக்கிட்டீங்க போல!!

*இயற்கை ராஜி* said...

super kavithainga

Anonymous said...

எந்த வரிகளை மேற்கோளிட்டு காட்டுவது...காதல் என்றாலே காட்டுத்தீயாய் கார் மேகமாய் வார்த்தைகளின் பொழிவு.....உங்கள் கவிதை வெளிவரும் போதெல்லாம் கானல் நீராகிறது எனக்கு கவிதை... நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்கும் நேரம் பார்த்து எழுத வருகிறேன் நான்..எல்லா வார்த்தைகளுக்கும் உவமைகளுக்கும் நீரே ஓட்டு மொத்த குத்தகைகாரர்...இதை எங்கே வழக்காடுவது என வதைந்து கொண்டு நான்...பாரட்டத்தெரியவில்லை அதான் புலம்பிவிட்டு போகிறேன்..வாழ்த்துக்கள் நண்பா...

அப்துல்மாலிக் said...

Good words as usual

vaazhthukkal

rose said...

மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
\\
wow

rose said...

தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...
\\
super

rose said...

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........
\\
அருமையான முடிவு சூப்பர் புதியவன்

gayathri said...

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

super pa

வியா (Viyaa) said...

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

alagana varigal
kavithai arumai putiyavan

Anonymous said...

வாழ்த்துக்கள் புதியவன்....விகடனில் உங்கள் காதல் அழகிய முரண்பாடு முகப்பு பகுதியில் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...
வாழ்த்துக்கள் புதியவன்...மேலும் சிறப்புற எழுதுங்கள்.....

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

நிஜமா நல்லவன் said...

தலைப்பே ஒரு கவிதை!

நட்புடன் ஜமால் said...

\\தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...\\

அழகிய நிலை.

நட்புடன் ஜமால் said...

அழகிய உதாரணத்தோடு
(சக்கரவாக பறவை)

அற்புத முடிவு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

'நிழல் தேடி நாம் மரம் ஒதுங்குவதுபோல் -உன்
மனம் தேடி என் உயிர் ஒதுங்குமிடம்.'
மிக அழகான வரிகளினால் காதலை உணர்த்தியிருக்கிறீர்கள் .
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள்..! புதியவன்

உங்க படைப்பு இன்று விகடனில்

http://youthful.vikatan.com/youth/puthiyavanpoem13052009.asp

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

வாழ்த்துக்கள்..! புதியவன்

உங்க படைப்பு இன்று விகடனில்

http://youthful.vikatan.com/youth/puthiyavanpoem13052009.asp

வாழ்த்துக்கள் புதியவன். தொடரட்டும் மேன்மேலும்.

Sakthidevi.I said...

மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...


nice one...cheers

Anonymous said...

புதியவன் உங்கள் கவிதை இளமை விகடனில் வெளிவந்துள்ளது.....வாழ்த்துக்கள்...

Natchathraa said...

//மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...//

intha azhagiya muranpadu iruppathu thaney kadhalukku alagu...

//மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?//

appo unga puthaga pai fulla orey koondhal izhaigalthan irukkum pola...:-)


//உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது//

vaal aruntha.. nool aruntha.. nice rhyming puthiyavan....

//தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...//

azhagiya thadumattram.. thaangi pidikkathaan avanga irukangaley... tharalama thadumarikonga puthiyavan... :-)

//நீ
வெட்கம் ஊற்றி வளர்த்த
உன் தோட்டத்து
மலர்களெல்லாம்//

ada...asathureenga ponga...:-)

//உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை//

velila solatheenga pa... appuram unga avanga veetu thootathula kootam adigamagidum...


//நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்//

roumba safe-ana idam than...

//உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........//

Na[i]chu-nu mudichuteenga ungalukey uriya style-lil....

Meendum meendum valthukkal puthiyavan...

enna intha week inum kavithai post pannala....

waiting for ur next muthakavi... ;-)

Revathyrkrishnan said...

//தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...//

மிக அழகாக இருந்தது புதியவன் இந்த கவிதையும்...

//சில நேரங்களில் முத்தங்கலையும்...//

மிகவும் ரசித்தேன்

குடந்தை அன்புமணி said...

காதல் கவிதைகளில் பின்னி பெடலெடுக்கிறீங்க போங்க! அனைத்தையும் ரசித்தேன்!

kavitha said...

enna sollarthu .....
avlooooooo super.

Suresh said...
This comment has been removed by the author.
Gowripriya said...

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை

அழகு

கபிலன் said...

"உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது"

அருமையான நடையில், தெளிவான கவிதை!

இனிமையான கவிதை விருந்திற்கு நன்றிகள்!