Thursday, April 23, 2009

பெய்யெனப் பெய்யும் காதல் மழை…


ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...

ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....

ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?

ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...

எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...

மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...

துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....

சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...


127 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....//

ஓ//// அந்த ட்ராக்கில வண்டி போகுதா.........

ஆ.சுதா said...

புதியவன் வார்த்தையை அழகுபடுத்தும் வித்தைகாரர் நீங்கள்.
கவிதைக்கு கவிதை சொற்களுக்கு வர்ணம் பூசி காதலில் கரைத்து விடுகிறீரகள்.

//குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...//

//ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?//

//ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ//

//அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....//

//விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...//

ரசிக்க வைக்கின்றது புதியவன்.

S.A. நவாஸுதீன் said...

ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...

சில்லுன்னு ஒரு காதலின் தொடக்கம்

S.A. நவாஸுதீன் said...

ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....

அட இது புதுசா இருக்கே, பிஞ்சுலேயே பழுத்ததோ! (உங்கள் காதல்)

S.A. நவாஸுதீன் said...

ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...

அசத்துறீங்களே புதியவன்

S.A. நவாஸுதீன் said...

மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...

நிம்மதியான சந்தோசமான ஒரு பெருமூச்சு சப்தம் கேட்கிறது.

S.A. நவாஸுதீன் said...

துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி..

பூப்பாதத்தின் புனித நீராடல் புல்லரிக்க வைக்கிறது

S.A. நவாஸுதீன் said...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...

இறுதிவரை தொடரட்டும்

S.A. நவாஸுதீன் said...

எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...

இது அடை மழையா அடம் பிடிக்கும் மழையா?

அ.மு.செய்யது said...

//ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...
//

ஒற்றைக் குடைக்குள் அடைமழை ஆரம்பம்..

அ.மு.செய்யது said...

//ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....//

பொறந்த வுடனே ஆரம்பிச்சாச்சா...அப்பவேவா ???

அ.மு.செய்யது said...

//ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...//

அது ஒரு புதிய‌ வ‌ண்ண‌ம்.செயற்கைச் சாய‌ங்க‌ளில்லா அழ‌கு வ‌ண்ண‌ம்.

வார்த்தை ஜால‌ம்.

அ.மு.செய்யது said...

//மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...//

ர‌ம்மிய‌மான‌ காத‌ல்...

அ.மு.செய்யது said...

உங்களுக்கு மட்டும் கற்பனை எப்படி ஊற்றெடுக்கிறது.

அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்க தல.

அ.மு.செய்யது said...

//புதியவன் வார்த்தையை அழகுபடுத்தும் வித்தைகாரர் நீங்கள்.
கவிதைக்கு கவிதை சொற்களுக்கு வர்ணம் பூசி காதலில் கரைத்து விடுகிறீரகள்.
//

முத்துராமலிங்கத்தின் கருத்தை வழிமொழிகிறேன்.

rose said...

ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....
\\
அதுசரி அப்பவேவா

rose said...

ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?
\\
ஒன்னுமே புரியலைங்க உங்க காதல் கை கூடியதா?இல்லையா?

rose said...

எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...
\\
உங்கள் பிடிவாதம் கவிதைய்லைதான் தெரிகிறதே

rose said...

சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று
\\
ஹலோ க்யூட் பேபி இந்த வார்த்தையை படித்திங்களா?உங்கள் கேள்விக்கு புதியவன் அழகான பதில் சொல்லிட்டாங்க‌

rose said...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...
\\
தொடரும் உங்கள் காதலை போல் தொடரும் உங்கள் கவிதையும் அழகு

அப்துல்மாலிக் said...

குடைக்குள் மழை கேள்விப்பட்டிருக்கிறேன்

புதியவனின் குடைக்குள் காதல்...

வியா (Viyaa) said...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்..

அழகான வரிகள் நான் மிகவும் ரசித்தேன் புதியவன்..
அருமை

அப்துல்மாலிக் said...

//ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
//

நல்ல புரிதலின் விளக்கம்

ஐந்து வருட இடைவெளியை இடைவெளியில்லாமல் சொல்லிருக்கீங்க

அப்துல்மாலிக் said...

//எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...
//

எட்டாவது வண்ணம்??? காதலின் வண்ணமா

அப்துல்மாலிக் said...

//உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....
//

இது டாப்கிளாஸ்

அப்துல்மாலிக் said...

//மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...
///

தொடரட்டும்...

Anonymous said...

உங்களை பின் தொடர்ந்தது வாசம் மட்டும் அல்ல பிறரை எழுதச்செய்யாமல் உங்கள் வசப்பட்டு இருப்பது வார்த்தைகளும் தான்...இவைகளை குத்தகைக்கு எடுத்திரோ குடியிருத்திக்கொண்டிரோ தெரியவில்லை எங்கள் வசப்படுவது இல்லை இந்த வார்த்தைகள் உங்களிடம் வர்ண்ஜாலமாய்...எத்தனை நுணுக்கமான கோர்வு...எல்லா கற்பனையும் கொள்ளயடித்து எனக்கு எழுத வார்த்தைகள் தாரத குற்றத்திக்காக தண்டனையாய் எனக்கு கிடைத்த பட்டாம் பூச்சி விருதை நான் அளிக்க நினைத்த முவரில் ஒருவராய் நீங்களும்.......

gayathri said...

hey ella linsum super pa

ennala thanithaniya solla mudiyala

Mythees said...
This comment has been removed by the author.
Mythees said...

super ma............

ஆதவா said...

இக்கவிதையை முன்பே படித்திருந்ததைப் போன்ற உணர்வு ஒவ்வொரு சொற்களையும் வாசிக்கையிலும் தெரிந்தது.. இதேமாதிரியான எளிமையான வார்த்தைகளால் நிரம்பிய காதல் கவிதைகள் ஷீ-நிசியிடம் வாசித்திருக்கிறேன். எளிமை சொட்டச்சொட்ட காதல் நனைந்து கவிதை உருவானதைப் போன்று!!

ஐந்து வருட காத்திருப்புக் குறும்பு காதலுக்கே உரியது. குறுநகை பூக்கச்செய்யும் வரிகளவை

ரொம்பவும் ரசிக்கவைக்கும் படைப்புகளை மட்டுமே தரவேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கிறீர்களோ???? மிக அருமை புதியவன்

ஆதவா said...

மீண்டுமொருமுறை வாசித்ததில்...

குடைக்குள் நனைந்த காதல் அற்புதம்... அதைப் போன்றே ஏழு வண்ணத்திலும் வெட்கப்படும் வானவில்!!! அற்புதமான வரிகள்... (ரூம் போட்டு யோசிப்பீங்களோ????)

Divya said...

கவிதை முழுவதுமாய் அழகோ அழகு!!

வரிகள் ஒவ்வொன்றும் 'கவி' சாரலில் நனைக்கிறது!

Divya said...

\\ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....\\

சூப்பர்!

Divya said...

\\ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...\\


வானவில் உவமையும், அந்த எட்டாவது வண்ணத்தில் வெட்கமும்.....சிம்ப்ளி சூப்பர்ப், மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை!

தொடரட்டும் உங்கள் காதல்'கவி' பயணம், வாழ்த்துக்கள் புதியவன்!!

வால்பையன் said...

குடை எடுத்துகிட்டு போங்க!

RAMYA said...

//
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...
//

அருமை அருமையான உவமானம் !!

RAMYA said...

//
ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....
//

ஐந்து வயது சிறுவனின் தவம்
கலையவில்லை பேசுகிறது
எப்படி?? அருமையாக !!

RAMYA said...

//
ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...
//

ஒரு உண்மையே உண்மையை பேசுகிறது :))

Divyapriya said...

கலக்கல் கவிதை புதியவன்....வழக்கம் போல அருமையோ அருமை...கடைசி கவிதை...என்ன சொல்ல? ரொம்ப அழகு...

RAMYA said...

//
மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...
//

உண்மையான காதலில் ஏற்பட்ட வாசம்
என்றென்றும் விலகிச் செல்லாது

கவிதைச் சோலைக்குள் புகுந்து
வெளியே வந்த ஒரு மன திருப்தி
புதியவன்.

ஒவ்வொரு சொற்களின் கோர்வைகளும் அருமையோ அருமை !!

kuma36 said...

///துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....///

நல்ல மழை, மிகவும் இரசித்தேன்!

ச.பிரேம்குமார் said...

காதலை நன்றாக இருக்கிறது. ஆனாலும் சில இடங்கள் நண்பர் அருட்பெருங்கோவின் கவிதைகளை நினைவுப்படுத்துவிட்டன

//ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?//

//

Suresh said...

//
ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...//

நச் ;) சூப்பர் மச்சான்

Unknown said...

அழகு :))

ரியாலியா said...

hai puthiyavaree (5 varuda siruvanin 5 varuda thavathirkku kidaitha varam nee)intha varigal yen manathai thottu vittathu .mealum mealum yalutha yen vaalthukkal puthiyavaaaaaaaaaa.

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு புதியவன்

///அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி//

அந்த அமிர்த மழையிம் நனைய ஆர்வமாய் உள்ளதாய் தெரிகின்றதே!

பாலா said...

உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....


ennaththa solla ponga

arumai putiyavan

வெற்றி-[க்]-கதிரவன் said...

//மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...//

இதன் பெயர் தான் காதல்,

தலைப்பு கூட அற்புதம்.

sakthi said...

ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?

athanee

kovapadava mudiyum

sakthi said...

அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....

alagu varigal

sakthi said...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...

alagana kavithai puthiyavare

sriraj_sabre said...

காதல் மழை...

kavitha said...

மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...
ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...


yammadii (முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய் ) super para


விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்



oru azhagana love story partha, paditha, feelings.

onga mail id thedi, thedi, thedi, thedite iruken.

Natchathraa said...

Koncham Late-aaaa vandhutaen....
kavithai potta mudhal naley padithutalum.. comment poda latee....

//ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...//

ungal kavithaiyil nangal nanaivathu pola...

//ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....//

kutty vayasulaiyee kadhala...athu than ippadi kavi aruviyaa kotureengaloo... :-)

//ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?//

athu seriii....nalla koba pada try panureengaley... :-)

hmm intha 5 varudam 3 idathula thirumba thirumba varathu konchameyyyyy koncham than uruthala irukku..

//ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...//

ada parunga pa vetkathai... 8-m vanna vetkam...azhagu.. enga irunthu than ungaluku eppadillam yosikka thonudhoo....

//எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...//

antha mazhaikita irunthu than neengaley kathukiteenga pola....

//மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை//

This is my passion....enodavar kooda ippadi nadakka aasai.. kadarkaraiyil nadakanum...athula irukka sugamey thaniii...

//உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....//

hmm fantastic lines puthiyavan...

//சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...//

hmm yengeyda inum puthiyavanin muthiraiya kanomeynu ninaichaen...ethirparpey poi akkamey thanduteengaley....

//மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...//

mazhai nindra pinnum thooral poley.. ennai pirintha pinnum un kathal.. antha paatu ninaivuku varuthu....

en nanban oruvan.. avan ilatha samaiyam nan veetuku poitu vandalum.. nan vanduttu ponaenu saria soliruvanga anda vaasam vachu... athu madiri irukku...


Vaazhthukkal Puthiyavan...

நட்புடன் ஜமால் said...

படித்தேன்

இரசித்தேன்

மீண்டும் பின்னூட்டுவேன்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஆகா... காதலாகிக் கசிந்துருகிவிட்டீர் நண்பரே!

நான் ரசித்த வரிகள்,

//ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...//

//ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...
//

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

அப்பா! காதல் பொங்கி வழிந்தோடுகிறது. உங்க காதலி கொடுத்து வைத்தவர்.

அனுஜன்யா

கீழை ராஸா said...

காதல் மழை நனைந்தேன்...காதல் சொட்ட சொட்ட...

Revathyrkrishnan said...

காதலின் தோரணமாய் அழகிய கவிதைகள் புதியவன்... மிகவும் அழகாய் இருந்தன. பல வரிகளில் நானே மழையில் நனைவது போல் உணர்ந்தேன்

புதியவன் said...

//SUREஷ் said...
//ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....//

ஓ//// அந்த ட்ராக்கில வண்டி போகுதா.........//

முதல் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி SUREஷ்...

புதியவன் said...

// ஆ.முத்துராமலிங்கம் said...
புதியவன் வார்த்தையை அழகுபடுத்தும் வித்தைகாரர் நீங்கள்.
கவிதைக்கு கவிதை சொற்களுக்கு வர்ணம் பூசி காதலில் கரைத்து விடுகிறீரகள்.

///காதலில் கரைவது தானே காதலுக்கும் கவிதைக்கும் அழகு...இல்லை முத்துராமலிங்கம்...?///

//குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...//

//ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?//

//ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ//

//அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....//

//விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...//

ரசிக்க வைக்கின்றது புதியவன்.//

வருகைக்கும் விரிவான கருத்திற்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முத்துராமலிங்கம்...

புதியவன் said...

//S.A. நவாஸுதீன் said...
ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...

சில்லுன்னு ஒரு காதலின் தொடக்கம்//

வாங்க நவாஸுதீன்...

புதியவன் said...

//S.A. நவாஸுதீன் said...
ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....

அட இது புதுசா இருக்கே, பிஞ்சுலேயே பழுத்ததோ! (உங்கள் காதல்)//

ஹா....ஹா...ஹா...அப்படி இல்லை நவாஸுதீன் இவன் பிறந்து அவள் பிறப்பிற்காக காத்திருந்ததாய் சொன்னேன்...

புதியவன் said...

// S.A. நவாஸுதீன் said...
ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...

அசத்துறீங்களே புதியவன்//

பெண்ணின் வெட்கம் எப்படிச் சொன்னாலும் அழகு தான் இல்லை நவாஸுதீன்...?

புதியவன் said...

//S.A. நவாஸுதீன் said...
மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...

நிம்மதியான சந்தோசமான ஒரு பெருமூச்சு சப்தம் கேட்கிறது.//

ம்...உங்களுக்கும் கேட்டு விட்டதா...?

புதியவன் said...

//S.A. நவாஸுதீன் said...
துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி..

பூப்பாதத்தின் புனித நீராடல் புல்லரிக்க வைக்கிறது//

ம்...அப்படியா...?...நன்றி...

புதியவன் said...

//S.A. நவாஸுதீன் said...
எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...

இது அடை மழையா அடம் பிடிக்கும் மழையா?//

இந்த இடத்தில் அடம் பிடிக்கும் மழை என்று கூட சொல்லலாம்...

புதியவன் said...

//S.A. நவாஸுதீன் said...
மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...

இறுதிவரை தொடரட்டும்//

வருகைக்கும் கரும்பான குறும்பான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நவாஸுதீன்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...
//

ஒற்றைக் குடைக்குள் அடைமழை ஆரம்பம்..//

வாங்க செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....//

பொறந்த வுடனே ஆரம்பிச்சாச்சா...அப்பவேவா ???//

ம்...அப்படி இருக்கக் கூடும் என்று தான் நினைக்கிறேன்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...//

அது ஒரு புதிய‌ வ‌ண்ண‌ம்.செயற்கைச் சாய‌ங்க‌ளில்லா அழ‌கு வ‌ண்ண‌ம்.

வார்த்தை ஜால‌ம்.//

ரசிப்பிற்கு நன்றி...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...//

ர‌ம்மிய‌மான‌ காத‌ல்...//

உண்மை...அது ரம்மியமான காதலின் தருணம் தான்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
உங்களுக்கு மட்டும் கற்பனை எப்படி ஊற்றெடுக்கிறது.

அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்க தல.//

”அந்த முதல் சந்திப்பு” எழுதிய உங்களுக்கு தெரியாததா செய்யது...?

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//புதியவன் வார்த்தையை அழகுபடுத்தும் வித்தைகாரர் நீங்கள்.
கவிதைக்கு கவிதை சொற்களுக்கு வர்ணம் பூசி காதலில் கரைத்து விடுகிறீரகள்.
//

முத்துராமலிங்கத்தின் கருத்தை வழிமொழிகிறேன்.//

வருகைக்கும் குறும்பான பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி செய்யது...

புதியவன் said...

//rose said...
ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....
\\
அதுசரி அப்பவேவா//

வாங்க ரோஸ்

வரும் போதே கேள்வியோடு வர்றீங்களே...

புதியவன் said...

//rose said...
ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?
\\
ஒன்னுமே புரியலைங்க உங்க காதல் கை கூடியதா?இல்லையா?//

கவிதையின் முடிவில் தான் முடிவு இருக்கிறது ரோஸ்...

புதியவன் said...

//rose said...
எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...
\\
உங்கள் பிடிவாதம் கவிதைய்லைதான் தெரிகிறதே//

அது சும்மா கவிதைக்காக எழுதினது...

புதியவன் said...

//rose said...
சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று
\\
ஹலோ க்யூட் பேபி இந்த வார்த்தையை படித்திங்களா?உங்கள் கேள்விக்கு புதியவன் அழகான பதில் சொல்லிட்டாங்க‌//

க்யூட் பேபிக்கு இதிலென்ன சந்தேகம்...இப்ப எனக்கு தான் எதுவும் புரியவில்லை...

புதியவன் said...

//rose said...
மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...
\\
தொடரும் உங்கள் காதலை போல் தொடரும் உங்கள் கவிதையும் அழகு//

அழகிய உங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி ரோஸ்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
குடைக்குள் மழை கேள்விப்பட்டிருக்கிறேன்

புதியவனின் குடைக்குள் காதல்...//

வாங்க அபுஅஃப்ஸர்

நீங்கள் நனைவதற்கே இந்த மழை...

புதியவன் said...

//வியா (Viyaa) said...
மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்..

அழகான வரிகள் நான் மிகவும் ரசித்தேன் புதியவன்..
அருமை//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வியா...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
//

நல்ல புரிதலின் விளக்கம்

ஐந்து வருட இடைவெளியை இடைவெளியில்லாமல் சொல்லிருக்கீங்க//

புரிந்தால் மகிழ்ச்சியே...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...
//

எட்டாவது வண்ணம்??? காதலின் வண்ணமா//

இல்லை அபுஅஃப்ஸர் அது வெட்கத்தின் வண்ணம்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....
//

இது டாப்கிளாஸ்//

ரசிப்பிற்கு நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

// அபுஅஃப்ஸர் said...
//மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...
///

தொடரட்டும்...//

மிக்க நன்றி அபு அஃப்ஸர்..

புதியவன் said...

//தமிழரசி said...
உங்களை பின் தொடர்ந்தது வாசம் மட்டும் அல்ல பிறரை எழுதச்செய்யாமல் உங்கள் வசப்பட்டு இருப்பது வார்த்தைகளும் தான்...இவைகளை குத்தகைக்கு எடுத்திரோ குடியிருத்திக்கொண்டிரோ தெரியவில்லை எங்கள் வசப்படுவது இல்லை இந்த வார்த்தைகள் உங்களிடம் வர்ண்ஜாலமாய்...எத்தனை நுணுக்கமான கோர்வு...எல்லா கற்பனையும் கொள்ளயடித்து எனக்கு எழுத வார்த்தைகள் தாரத குற்றத்திக்காக தண்டனையாய் எனக்கு கிடைத்த பட்டாம் பூச்சி விருதை நான் அளிக்க நினைத்த முவரில் ஒருவராய் நீங்களும்.......//

காதல் மழைக்கு கவிமழை பொழிந்தது போல் இருக்கிறது உங்கள் பின்னூட்டம்...உங்கள் தண்டனையை மன மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் தோழி...அழகிய தருகையோடு படபடக்கும் பட்டாம்பூச்சி விருதையும் வழங்கிய தமிழரசிக்கு எனது நன்றிகள்...

புதியவன் said...

//gayathri said...
hey ella linsum super pa

ennala thanithaniya solla mudiyala//

மிக்க நன்றி காயத்ரி...

புதியவன் said...

// mythees said...
super ma............//

முதல் வருகைக்கு மிக்க நன்றி mythees...

புதியவன் said...

//ஆதவா said...
இக்கவிதையை முன்பே படித்திருந்ததைப் போன்ற உணர்வு ஒவ்வொரு சொற்களையும் வாசிக்கையிலும் தெரிந்தது.. இதேமாதிரியான எளிமையான வார்த்தைகளால் நிரம்பிய காதல் கவிதைகள் ஷீ-நிசியிடம் வாசித்திருக்கிறேன். எளிமை சொட்டச்சொட்ட காதல் நனைந்து கவிதை உருவானதைப் போன்று!!

ஐந்து வருட காத்திருப்புக் குறும்பு காதலுக்கே உரியது. குறுநகை பூக்கச்செய்யும் வரிகளவை

ரொம்பவும் ரசிக்கவைக்கும் படைப்புகளை மட்டுமே தரவேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கிறீர்களோ???? மிக அருமை புதியவன்//

மனதில் தோன்றுவதை அப்படியே சொல்வது ஆதவனிடம் எனக்கு மிகவும் பிடித்த விசயம்...

எனது படைப்புகளை வாசிக்கும் அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எளிமையான சொற்களை மட்டுமே பயன் படுத்துகிறேன்...

ம்...நண்பர்கள் ரசிப்பதற்காகத் தான் நாம் எழுதுகிறோம் இல்லையா ஆதவன்...

புதியவன் said...

//ஆதவா said...
மீண்டுமொருமுறை வாசித்ததில்...

குடைக்குள் நனைந்த காதல் அற்புதம்... அதைப் போன்றே ஏழு வண்ணத்திலும் வெட்கப்படும் வானவில்!!! அற்புதமான வரிகள்... (ரூம் போட்டு யோசிப்பீங்களோ????)//


ஹா...ஹா..ஹா...எல்லோரும் ரூம் போட்டு யோசிக்கிறாங்களா ஆதவன்...?

மீண்டுமொரு முறை வாசித்து ரசித்ததற்கு மிக்க நன்றி ஆதவன்...

புதியவன் said...

//Divya said...
கவிதை முழுவதுமாய் அழகோ அழகு!!

வரிகள் ஒவ்வொன்றும் 'கவி' சாரலில் நனைக்கிறது!//

வாங்க திவ்யா...உங்கள் வருகை என்றும் எனக்கு மகிழ்ச்சியே...

புதியவன் said...

//Divya said...
\\ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....\\

சூப்பர்!//

கதாசிரியையின் ரசிப்பிற்கு நன்றி...

புதியவன் said...

//Divya said...
\\ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...\\


வானவில் உவமையும், அந்த எட்டாவது வண்ணத்தில் வெட்கமும்.....சிம்ப்ளி சூப்பர்ப், மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை!

தொடரட்டும் உங்கள் காதல்'கவி' பயணம், வாழ்த்துக்கள் புதியவன்!//

அழகிய வருகைக்கும் ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திவ்யா...

புதியவன் said...

//வால்பையன் said...
குடை எடுத்துகிட்டு போங்க!//

ஹா...ஹா...ஹா...நன்றி அருண்...

புதியவன் said...

//RAMYA said...
//
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...
//

அருமை அருமையான உவமானம் !!//

வாங்க ரம்யா

உவமை உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே...

புதியவன் said...

//RAMYA said...
//
ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....
//

ஐந்து வயது சிறுவனின் தவம்
கலையவில்லை பேசுகிறது
எப்படி?? அருமையாக !!//

தவம் பெற்ற சிறுவன் கவிதை வழியே அருமையாக பேசுகிறான் இல்லையா ரம்யா...?

புதியவன் said...

// RAMYA said...
//
ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...
//

ஒரு உண்மையே உண்மையை பேசுகிறது :))//

உண்மையை உண்மையென்று உண்மையாகவே சொல்லிவிட்டீர்கள் ரம்யா...

புதியவன் said...

//Divyapriya said...
கலக்கல் கவிதை புதியவன்....வழக்கம் போல அருமையோ அருமை...கடைசி கவிதை...என்ன சொல்ல? ரொம்ப அழகு...//

கவிதையை ரசித்ததற்கு மிக்க நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//RAMYA said...
//
மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...
//

உண்மையான காதலில் ஏற்பட்ட வாசம்
என்றென்றும் விலகிச் செல்லாது

கவிதைச் சோலைக்குள் புகுந்து
வெளியே வந்த ஒரு மன திருப்தி
புதியவன்.

ஒவ்வொரு சொற்களின் கோர்வைகளும் அருமையோ அருமை !!//

மழையை ரசித்து மழைத்துளியின் குளிர்ச்சியைப் போல் பின்னூட்டமிட்டு எனக்கு உற்சாகமளித்ததற்கு மிக்க நன்றி ரம்யா...

புதியவன் said...

//கலை - இராகலை said...
///துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....///

நல்ல மழை, மிகவும் இரசித்தேன்!//

முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கலை - இராகலை...உங்களின் பெயர் வித்தியாசமாக இருக்கிறது...

புதியவன் said...

//பிரேம்குமார் said...
காதலை நன்றாக இருக்கிறது. ஆனாலும் சில இடங்கள் நண்பர் அருட்பெருங்கோவின் கவிதைகளை நினைவுப்படுத்துவிட்டன

//ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?//

//
ம்...நண்பர் அருட்பெருங்கோவின் வலைப்பூ சென்று பார்த்தேன் அவரும் இதே பொருள் படும்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறார், எனினும் தகவலுக்கும் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பிரேம்குமார்...

புதியவன் said...

//Suresh said...
//
ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...//

நச் ;) சூப்பர் மச்சான்//

ரசிப்பிற்கு மிக்க நன்றி சுரேஷ்...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
அழகு :))//

மிக்க நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//ரியாலியா said...
hai puthiyavaree (5 varuda siruvanin 5 varuda thavathirkku kidaitha varam nee)intha varigal yen manathai thottu vittathu .mealum mealum yalutha yen vaalthukkal puthiyavaaaaaaaaa//

அழகிய ரசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மேடம்...

புதியவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்லா இருக்கு புதியவன்

///அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி//

அந்த அமிர்த மழையிம் நனைய ஆர்வமாய் உள்ளதாய் தெரிகின்றதே!//

அமிர்த மழையில் நனைய யாருக்காவது ஆர்வம் இல்லாமல் இருக்குமா ஞானசேகரன் ...?...நன்றி ஞானசேகரன்...

புதியவன் said...

// sayrabala said...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....


ennaththa solla ponga

arumai putiyavan//

ரசிப்பிற்கு மிக்க நன்றி பாலா...

புதியவன் said...

// பித்தன் said...
//மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...//

இதன் பெயர் தான் காதல்,

தலைப்பு கூட அற்புதம்//

ம்...இதன் பெயரும் காதல்...

முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பித்தன்...

புதியவன் said...

//sakthi said...
ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?

athanee

kovapadava mudiyum//

நீங்களும் ரோஸ் மாதிரி வரும் போதே கேள்வியோடு வர்றீங்களே சக்தி...

புதியவன் said...

//sakthi said...
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....

alagu varigal//

ரசிப்பிற்கு நன்றி சக்தி...

புதியவன் said...

//sakthi said...
மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...

alagana kavithai puthiyavare//

கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி சக்தி...

புதியவன் said...

//தமிழ் விரும்பி said...
காதல் மழை...//

முதல் வருகைக்கு மிக்க நன்றி தமிழ் விரும்பி..

ஆஹா...என்ன ஒரு அழகான பெயர்...

புதியவன் said...

//kavi said...
மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...
ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...


yammadii (முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய் ) super para


விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்



oru azhagana love story partha, paditha, feelings.

onga mail id thedi, thedi, thedi, thedite iruken//



என்னது...என்னோட மெயில் ஐடிய தேடிக்கிட்டு இருக்கீங்களா...?...எந்த இடத்தில தொலைச்சீங்கன்னு சொன்னா நானும் தேடிப் பார்ப்பேன்ல...

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கவி...

புதியவன் said...

// Natchathraa said...
Koncham Late-aaaa vandhutaen....
kavithai potta mudhal naley padithutalum.. comment poda latee....

///அதனாலென்ன பரவாயில்லை நட்சத்திரா..///

//ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...//

ungal kavithaiyil nangal nanaivathu pola...

///ரொம்ப நனைஞ்சிட்டீங்க போல...இங்க இரண்டு நாளா நல்ல மழை அதப் பார்த்து எழுதினது தான் இந்தக் கவிதை...///

//ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....//

kutty vayasulaiyee kadhala...athu than ippadi kavi aruviyaa kotureengaloo... :-)

///இவன் பிறந்ததே காதலை காதலிக்கத்தான் என்று சொன்னால் நம்புவீர்களா...?...ஆனால், அது தான் உண்மை...///

//ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?//

athu seriii....nalla koba pada try panureengaley... :-)

hmm intha 5 varudam 3 idathula thirumba thirumba varathu konchameyyyyy koncham than uruthala irukku..

///உண்மை தான் எனக்கும் கொஞ்சம் உறுத்தலா தான் இருந்தது...இனிமேல் தவிர்த்துக் கொள்கிறேன்...///

//ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...//

ada parunga pa vetkathai... 8-m vanna vetkam...azhagu.. enga irunthu than ungaluku eppadillam yosikka thonudhoo....

///மழை பெய்யும் போது வானவில்லைப் பார்த்ததும் எழுத்தத் தோன்றியது...இந்த வரிகள் அனேகமாக என்னோருக்கும் பிடிக்கும் என்று நினைத்தேன்... ///

//எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...//

antha mazhaikita irunthu than neengaley kathukiteenga pola....

///உண்மையிலேயே எனக்கு பிடிவாதம் பிடிக்காதுங்க. ஆனா இந்த இடத்தில பிடிவாதம் தானே அழகு...///

//மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை//

This is my passion....enodavar kooda ippadi nadakka aasai.. kadarkaraiyil nadakanum...athula irukka sugamey thaniii...

///எல்லோருக்கும் இருக்கும் அழகான ஆசை...உங்கள் ஆசை நிறை வேற வாழ்த்துக்கள்...///

//உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....//

hmm fantastic lines puthiyavan...

///ரசிப்பிற்கு நன்றி...///

//சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...//

hmm yengeyda inum puthiyavanin muthiraiya kanomeynu ninaichaen...ethirparpey poi akkamey thanduteengaley....

///நண்பர்களின் எதிர் பார்ப்பிற்காகத் தான் இந்த வரிகள்...இந்த வரிகள் இல்லையென்றால் இது புதியவன் எழுதியதில்லை என்று சொல்லி விடுவார்களோ என்னவோ...///

//மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...//

mazhai nindra pinnum thooral poley.. ennai pirintha pinnum un kathal.. antha paatu ninaivuku varuthu....

///அந்த பாட்டும் அழகு தான்...///

en nanban oruvan.. avan ilatha samaiyam nan veetuku poitu vandalum.. nan vanduttu ponaenu saria soliruvanga anda vaasam vachu... athu madiri irukku...

///இது உண்மையான நட்பிற்கு ஒரு அழகிய உதாரணம்...///

Vaazhthukkal Puthiyavan...//

எப்போதும் போல் உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்ககுக்கும் என்னுடைய நன்றிகள் மட்டுமே...

புதியவன் said...

// நட்புடன் ஜமால் said...
படித்தேன்

இரசித்தேன்

மீண்டும் பின்னூட்டுவேன்//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜமால்...ஊரில் அனைவரும் நலம் தானே...?

புதியவன் said...

//சேரல் said...
ஆகா... காதலாகிக் கசிந்துருகிவிட்டீர் நண்பரே!

நான் ரசித்த வரிகள்,

//ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...//

//ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...
//

-ப்ரியமுடன்
சேரல்//

முதல் வருகைக்கும் காதலில் கசிந்துருகியதற்கும் மிக்க நன்றி சேரல்...

புதியவன் said...

//கீழை ராஸா said...
காதல் மழை நனைந்தேன்...காதல் சொட்ட சொட்ட...//

காதல் சொட்ட சொட்ட...காதல் மழையில் நனைந்ததற்கு மிக்க நன்றி கீழை ராஸா (எ) ராஜாக்கான்...

புதியவன் said...

// reena said...
காதலின் தோரணமாய் அழகிய கவிதைகள் புதியவன்... மிகவும் அழகாய் இருந்தன. பல வரிகளில் நானே மழையில் நனைவது போல் உணர்ந்தேன்//

காதல் மழையில் நனைந்ததாய் உணர்ந்தீர்களா...?...மிக்க நன்றி ரீனா...//

புதியவன் said...

//அனுஜன்யா said...
அப்பா! காதல் பொங்கி வழிந்தோடுகிறது. உங்க காதலி கொடுத்து வைத்தவர்.

அனுஜன்யா//

மிக்க நன்றி அனுஜன்யா...

நட்புடன் ஜமால் said...

ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....\\

எதார்த்தங்களின் ஆழம் - மிக அருமை.

நட்புடன் ஜமால் said...

\\நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்\\

சில காத்திருப்புகள் மிக அவசியம் தானே

நட்புடன் ஜமால் said...

\\விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி\\

உங்கள மாதிரி கிடையாதுங்க அது.

நட்புடன் ஜமால் said...

\\
சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...\\

அட அதுவா இது ...

நட்புடன் ஜமால் said...

\\நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...\\

நேசத்தோடு ...

Sakthidevi.I said...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...


superb one

Gowripriya said...

எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...

:))

SUFFIX said...

//ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்//

ரசித்த வரிகள்...சமாளிக்க சாதுர்யமான வரிகள்