Wednesday, April 15, 2009

உன் வெட்கத்தை கொஞ்சம் காவல் வைத்து...


இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்

உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...

தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

உன் விழிகளின்
சிணுங்கலில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்கலில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது

காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
நீ
சரி செய்த போது தான்
முதன் முதலாய்
என் மனதும்
கலைந்து போனது
என்பது
உனக்குத் தெரியுமா...?

உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................



109 comments:

நட்புடன் ஜமால் said...

\\இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி\\


ஆஹா!

S.A. நவாஸுதீன் said...

இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்

ஆரம்பமே அசத்தல்

S.A. நவாஸுதீன் said...

உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

பின்னிட்டீங்க புதியவன்

அப்துல்மாலிக் said...

//உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்
//

அதிகமா பேசினால்... காலங்கள் வேகமாக கடக்கும் இல்லியா புதியவன்

அசத்தல் வரிகள்

அப்துல்மாலிக் said...

வெட்கத்திற்கே காவலா...
அந்த காவலாளீ யார்

அப்துல்மாலிக் said...

//உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...

///


பாவம் கூட்டுப்புழுக்கலாக மடிந்த பட்டாம்பூச்சிகள், உங்க அழகியின் வருகையால் பிழைத்துக்கொண்டன... என்னா வர்ணனை

S.A. நவாஸுதீன் said...

உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை

வாவ் அற்புதம் புதியவன். வழக்கம் போல் காதல் ரசம் கவிதை வரிகளில்!

அப்துல்மாலிக் said...

//மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்
///

காதலின் சின்னத்திற்கு உரியவளைவிட அழகானவங்களா?

அப்துல்மாலிக் said...

//உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...
//

இப்போதான் உண்மை புரியுது உங்களின் கவிரசத்துக்கு

அப்துல்மாலிக் said...

மொத்தத்தில் வெக்கத்தின் காவல் அழகு

வாழ்த்துக்கள்

ஆதவா said...

தலைப்பே பிரமாதமாக இருக்கிறது. " வெட்கத்தை காவல் வைத்து "

வினாடி - தேவவினாடி ஒப்பீடல் மிக அருமை. முலாம் பூசாமல் ஜொலிக்கும் பாத்திரம் போல வார்த்தைகள் இருக்கின்றன. அதைப் போன்றே, இதழ்களின் சிணுங்களில் சிந்திய துளிகளால் பிறக்கும் கவிதைகளும் அபாரமான கற்பனை! காதல் கடல் போல் கொந்தளித்துக் கிடக்கிறது. !!!

களவாண்ட முத்தம், கவிதையின் உச்சம். மீண்டும் ஒரு சிறப்பான, எளிமையான கவிதை உங்களிடமிருந்து! வாழ்த்துக்கள் புதியவன்.!!

Poornima Saravana kumar said...

'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க
நீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'
//

நான் சமத்து:)

Natchathraa said...

//இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்//

அந்த‌ க‌விஞ‌ர் பேரு புதிய‌வ‌ன் தானே....

//உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...//

ஹ‌ம்ம்ம் அதி அற்புதுமான‌ ஒப்பீடு....

//தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்//

ஹ‌ம்ம்ம் உண்மைதான்...
உங்க‌ளோட‌ ஒரு ஒரு எழுத்தும் சொல்லுதே உங்க‌ளோட‌ அவ‌ங்க‌ளின் அழ‌கை...

//உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...//

அனேக‌ம் இல்லீங்க புதியவன் எல்லா க‌விதையுமே அங்க‌ இருந்துதான் பிற‌க்கின்ற‌ன...

//உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது//

காத‌ல் வ‌ந்தாலே இப்ப‌டிதான் க‌ரைந்து போயிடுது....என்ன‌ ப‌ண்ணுற‌து இந்த‌ காத‌ல் எல்லாத்தையும் மாத்திடுதே....

//காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
நீ
சரி செய்த போது தான்
முதன் முதலாய்
என் மனதும்
கலைந்து போனது
என்பது
உனக்குத் தெரியுமா...?//

ஹ‌ம்ம்ம‌ இப்போ சொல்லீட்டீங்க‌ளே இனிமே அடிக்க‌டி உங்க‌ ம‌ன‌தை க‌லைக்க‌ துப்ப‌ட்டா ப‌ற‌க்கும்... :‍)

//உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன//

ஹா ஹா ஹா...ந‌ல்ல‌ காவ‌ல் தான் போங்க‌....

//இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்....//


ஹ‌ம்ம்ம் அது ச‌ரி... ந‌ல்லா எண்ணிப்பார்த்து அடுத்த‌ க‌விதைல‌ க‌ண‌க்கு சொல்லுங்க‌ புதிய‌வ‌ன்...

உங்க‌ளின் எழுத்துக்க‌ள் ஒவ்வொன்றும் அற்புத‌ம் புதிய‌வ‌ன்... இனிமே பாராட்ட‌ வார்த்தைக‌ளை அக‌ராதியில் தேடித்தான் க‌ண்டுப்பிடிக்க‌னும்....


வாழ்த்துக‌ள் தோழ‌மையே...

Poornima Saravana kumar said...

குட்டி விடமாட்டேங்கறார்... அவருக்கு வெளிய போகனுமாம்..
அப்றம் பொருமையா வந்து படிச்சு கம்மெண்டறேன்:)

Unknown said...

எல்லாமே சூப்பர் :)))

Unknown said...

//தேவவினாடி//

நல்லாருக்கு இந்த வார்த்தை :)))

Unknown said...

//உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...//

நல்ல கற்பனை :))

Unknown said...

//தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்//

தகவல் :)))

Unknown said...

மற்ற மூன்றும் அழகு :)))

Unknown said...

இது சும்மா ஒரு கணக்குக்கு ;)))

ஆ.சுதா said...

//இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்..

ஆரம்ப வரிகளே அழகான கற்பனை.
கவிதைக்கு பொய் அழகு.. அந்த பொய்யிக்கு இத்தனை அழகா வியப்புதான்!
வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனையுடன் அருமையா எழுதியிக்கீங்க புதியவன்.
மிகவும் ரசிக்க வைத்தது.

//தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்//

இந்த கதையை நானும் படித்திருக்கிறேன். அதை கவிதையில் புகுத்திய விதம் அழகு.


//உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்//

இதை தனியொரு கவிதையாக கூட எழுதலாம்.

ரசனையான கவிதை புதியவன்.
வாழ்த்துகள்.

rose said...

தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

\\
காதலுக்கு கண் இல்லைனு இதைதான் சொல்வாங்கலோ

rose said...

உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...
\\
அருமை

rose said...

உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது
\\
பின்னிடீங்க‌

sakthi said...

உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...

nalla karpanai valam puthiyan

gud keep it up

sakthi said...

மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

athanai alagu devathai aaa????

sakthi said...

உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

அருமை

நாணல் said...

pudhiyavan... chance ah illaingka.. ovvouru kavithaiyum azhagu....

முக்கியமா...

///உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்//

:) நல்லா இருக்கே...

ரியாலியா said...

puthiyavaree thalaipee asathal.pinniteega machaan varigal ovondrum nenjai thottu vittana.

ரியாலியா said...

puthiyavaree thalaipee asathal.pinniteega machaan varigal ovondrum nenjai thottu vittana.

குடுகுடுப்பை said...

உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன//

எப்படிப்பா இப்படியெல்லாம் பொய் சொல்றாங்க

Suresh said...

//உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி/

ஹா ஹா அருமை

ஆ.ஞானசேகரன் said...

//இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்//

ஓ அப்படியா புதியவன்...

Sakthidevi.I said...

உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது

nalla irukku pudhiyavan.....unga pudhu kavidhaiya paaththavudan santhosama irukku..neraiya ezhuthunga...thangal uvamai eppodhum nalla azhagu.....

congrats.....

அ.மு.செய்யது said...

//உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன//

இதுக்கு பேரு தான் என்பார்களோ !!!

அசத்தல்.

( தாமத வருகைக்கு மன்னிக்கவும் )

அ.மு.செய்யது said...

இதுக்கு பேரு KT

தான் என்பார்களோ !!!

// Missed KT //

அ.மு.செய்யது said...

//உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...//

ஆனால் ஒவ்வொன்றும் புதியதாக..( புதியவனிடமிருந்து )

அ.மு.செய்யது said...

//உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது//

இது ஒரு ஆற்று நீர் பொருள்கோளின் வகை என்று நினைக்கிறேன்.

கூறிய விதம் !!!!

அ.மு.செய்யது said...

ஆமாம் நீங்கள் ஏன் காதலை மையமாக வைத்தே கவிதை எழுதுகிறீர்கள்.

கொஞ்சம் சமூகத்தை அலசலாமே !!! அல்லது பொதுவான வாழ்வியலை வெளி கொணரலாமே !!!

ஏனிந்த தயக்கம் புதியவன் ?

ஹேமா said...

புதியவன் மன்னிப்போடு பிந்திய வருகைக்கு.எப்பவும் போல அழகான வர்ணிப்போடு அருமையான காதல் கவிதை.மனம் என் ஊரோடும் உறவுகளோடும் இங்கு போராட்டங்களோடு இணைந்து
கொண்டிருந்தாலும் உங்கள் பக்கமும் ஓடி வந்தேன்.கவிதை ரசித்தேன்.

வியா (Viyaa) said...

உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

alagana varigal
migavum rasithen putiyavan

Poornima Saravana kumar said...

வாவ்!

எல்லாமே நல்லா இருக்குங்க புதியவன்..

வாழ்த்துகள்:)

Poornima Saravana kumar said...

உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்
//

அழகு!!

(ஒரே ஒரு வார்த்தையால் அலங்கரிக்கப்பட்டு நிற்கிறது மற்றவை!)

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லோருக்கும் புரியும் எளிமையான நடையில் அருமையான கவிதை..

//உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது//

அழகு நண்பா..

Divyapriya said...

//தேவவினாடி//

அழகிய விளக்கம்...

Anonymous said...

உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................///

வாவ்! இந்த முத்த பகுதிதான் என்னை மொத்தமாய் கவர்ந்தது புதியவன்!

gayathri said...

உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................



superpa

Arun said...

நல்ல கவிதைகள்..

Anonymous said...

புதியவன் என்றதும் பூரித்து புது வடிவு எடுத்து கொடுக்கிறது வார்த்தைகள்...தேவவினாடி தோன்றிய பொற்காலத்தில் பிறந்தமைக்கு பேருவுவகை கொள்கிறோம்.....இதயம் ஈகை தர இதழோ ஈரம் தர கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக கோதையவள் கொள்ளை அழகு நீர் கொண்டதால் கோடி அதிசயம் இனி நடக்கும் இங்கு ....இதழ் தந்த ஈரத்திற்கு காவல் வைத்த கலி காலம் வெள்ளாமையை வேலி தின்ற கூற்றாய் முன்னுறு முத்தம்களை நீங்களே தின்றதில் விந்தை என்ன?மது உண்ட வண்டாய் மயங்குகிறது மனது...கவி படிக்க வரும் எங்களை காதல் படிக்கவைப்பீரோ!!!!!!!!! இன்னும் கருத்துரைகள் சொல்ல கவிபூக்கள் இருக்கிறது என் வார்த்தைகளுக்கு காவல் வைக்க உங்கள் காதலியின் வெட்கத்தை கொஞ்சம் தருவிரோ!!!!!!!

gayathri said...

me they 50

Thamira said...

மீ த 51.!

ரசனையான கவிதைகள்.!

(அப்புறம் அது 'சிணுங்களில்' அல்ல, 'சிணுங்கலில்'..)

Suresh said...
This comment has been removed by the author.
Suresh said...

மச்சான் என்ன கடைபக்கம் காணோம்

ivingobi said...

'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க
நீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'


oru குற்றம் illai irandu குற்றம் kandaen maelae kand vaakkiyathil mattum Kalakkura nanba kalakkikittae iru..... All the best

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
\\இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி\\


ஆஹா!//

அழகிய ரசிப்பு நன்றி ஜமால்...

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்

ஆரம்பமே அசத்தல்//

அசத்தலான வருகை வாங்க நவாஸூதீன்...

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

பின்னிட்டீங்க புதியவன்//

நன்றி...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்
//

அதிகமா பேசினால்... காலங்கள் வேகமாக கடக்கும் இல்லியா புதியவன்

அசத்தல் வரிகள்//

வாங்க அபுஅஃப்ஸர்...அதிகமா பேசினால் காலங்கள் வேகமாக கடப்பது போன்று ஒரு தோற்றமே..உண்மையல்ல...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
வெட்கத்திற்கே காவலா...
அந்த காவலாளீ யார்//

வேறு யார் அந்த காதலன் தான்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...

///


பாவம் கூட்டுப்புழுக்கலாக மடிந்த பட்டாம்பூச்சிகள், உங்க அழகியின் வருகையால் பிழைத்துக்கொண்டன... என்னா வர்ணனை//

வர்ணணை ரசித்ததற்கு நன்றி...

புதியவன் said...

//Syed Ahamed Navasudeen said...
உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை

வாவ் அற்புதம் புதியவன். வழக்கம் போல் காதல் ரசம் கவிதை வரிகளில்!//

வருகை தந்து கவிதையை ரசித்ததற்கு மிக்க நன்றி நவாஸுதீன்...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்
///

காதலின் சின்னத்திற்கு உரியவளைவிட அழகானவங்களா?//

இல்லையா பின்னே...

புதியவன் said...

// அபுஅஃப்ஸர் said...
//உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...
//

இப்போதான் உண்மை புரியுது உங்களின் கவிரசத்துக்கு//

ஆஹா...தெரிஞ்சுடுச்சா...

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
மொத்தத்தில் வெக்கத்தின் காவல் அழகு

வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அபுஅஃப்ஸர்...

புதியவன் said...

//ஆதவா said...
தலைப்பே பிரமாதமாக இருக்கிறது. " வெட்கத்தை காவல் வைத்து "

வினாடி - தேவவினாடி ஒப்பீடல் மிக அருமை. முலாம் பூசாமல் ஜொலிக்கும் பாத்திரம் போல வார்த்தைகள் இருக்கின்றன. அதைப் போன்றே, இதழ்களின் சிணுங்களில் சிந்திய துளிகளால் பிறக்கும் கவிதைகளும் அபாரமான கற்பனை! காதல் கடல் போல் கொந்தளித்துக் கிடக்கிறது. !!!

களவாண்ட முத்தம், கவிதையின் உச்சம். மீண்டும் ஒரு சிறப்பான, எளிமையான கவிதை உங்களிடமிருந்து! வாழ்த்துக்கள் புதியவன்.!!//

விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவன்...வாழ்த்துக்களுக்கு மீண்டுமொரு நன்றி...

புதியவன் said...

// Poornima Saravana kumar said...
'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க
நீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'
//

நான் சமத்து:)//

அது தான் எனக்குத் தெரியுமே பூர்ணிமா சரண்...

புதியவன் said...

//Natchathraa said...
//இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்//

அந்த‌ க‌விஞ‌ர் பேரு புதிய‌வ‌ன் தானே....

///அவராகத் தான் இருக்கணும்னு நெனைக்கிறேன்///

//உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...//

ஹ‌ம்ம்ம் அதி அற்புதுமான‌ ஒப்பீடு....

///ரசிப்பிற்கு நன்றி...///

//தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்//

ஹ‌ம்ம்ம் உண்மைதான்...
உங்க‌ளோட‌ ஒரு ஒரு எழுத்தும் சொல்லுதே உங்க‌ளோட‌ அவ‌ங்க‌ளின் அழ‌கை...

///தன் காதலி எப்போதும் எல்லா பெண்களையும் விட அழகானவள் என்று தான் காதலன் நினைக்கிறான்...இந்தக் காதலனும் அப்படித்தான் நினைக்கிறான், ஆனால் என்ன இவனால் ஓரளவுக்குத் தான் அவள் அழகை வார்த்தைகளில் சொல்லிட முடிகிறது...///

//உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...//

அனேக‌ம் இல்லீங்க புதியவன் எல்லா க‌விதையுமே அங்க‌ இருந்துதான் பிற‌க்கின்ற‌ன...

///ம்...அப்படிக் கூட சொல்லலாம்...///

//உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது//

காத‌ல் வ‌ந்தாலே இப்ப‌டிதான் க‌ரைந்து போயிடுது....என்ன‌ ப‌ண்ணுற‌து இந்த‌ காத‌ல் எல்லாத்தையும் மாத்திடுதே....

///இது தான் காதலின் ஒரு வகையான மாயத்தோற்றம்...///

//காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
நீ
சரி செய்த போது தான்
முதன் முதலாய்
என் மனதும்
கலைந்து போனது
என்பது
உனக்குத் தெரியுமா...?//

ஹ‌ம்ம்ம‌ இப்போ சொல்லீட்டீங்க‌ளே இனிமே அடிக்க‌டி உங்க‌ ம‌ன‌தை க‌லைக்க‌ துப்ப‌ட்டா ப‌ற‌க்கும்... :‍)

///மனதை பறக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதும் காதலில் ஒரு வகை விளையாட்டு தான்...///

//உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன//

ஹா ஹா ஹா...ந‌ல்ல‌ காவ‌ல் தான் போங்க‌....

///ம்...இந்தக் காவல் காதலில் மட்டுமே சாத்தியம்...///

//இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்....//


ஹ‌ம்ம்ம் அது ச‌ரி... ந‌ல்லா எண்ணிப்பார்த்து அடுத்த‌ க‌விதைல‌ க‌ண‌க்கு சொல்லுங்க‌ புதிய‌வ‌ன்...

உங்க‌ளின் எழுத்துக்க‌ள் ஒவ்வொன்றும் அற்புத‌ம் புதிய‌வ‌ன்... இனிமே பாராட்ட‌ வார்த்தைக‌ளை அக‌ராதியில் தேடித்தான் க‌ண்டுப்பிடிக்க‌னும்....


வாழ்த்துக‌ள் தோழ‌மையே...//

எப்போதும் போல் உங்கள் விரிவான பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்சத்திரா...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
எல்லாமே சூப்பர் :)))//

நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
//தேவவினாடி//

நல்லாருக்கு இந்த வார்த்தை :)))//

அப்படியா...நன்றி...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
//உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...//

நல்ல கற்பனை :))//

கற்பனையை ரசித்தமைக்கு நன்றி...

புதியவன் said...

// ஸ்ரீமதி said...
//தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்//

தகவல் :)))//

ம்...தகவல் தான்...

புதியவன் said...

//ஸ்ரீமதி said...
மற்ற மூன்றும் அழகு :)))//

நன்றி...

புதியவன் said...

// ஸ்ரீமதி said...
இது சும்மா ஒரு கணக்குக்கு ;)))//

ஓ...சும்மா கணக்குக்கா...நன்றி ஸ்ரீமதி...

புதியவன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
//இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்..

ஆரம்ப வரிகளே அழகான கற்பனை.
கவிதைக்கு பொய் அழகு.. அந்த பொய்யிக்கு இத்தனை அழகா வியப்புதான்!
வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனையுடன் அருமையா எழுதியிக்கீங்க புதியவன்.
மிகவும் ரசிக்க வைத்தது.

///கவிதையில் சுவை கூட்டுவதற்காக சில நேரம் இப்படி கற்பனையை கலக்க வேண்டியிருக்கிறது...///

//தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்//

இந்த கதையை நானும் படித்திருக்கிறேன். அதை கவிதையில் புகுத்திய விதம் அழகு.

///கவிஞர் பா.விஜயின் உடைந்த நிலாக்கள் பாகம் 1ல் தாஜ்மஹாலுக்கு பின்னால் என்ற தலைப்பில் இதைப் பற்றி குறிபிட்டுள்ளார்...///

//உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்//

இதை தனியொரு கவிதையாக கூட எழுதலாம்.

ரசனையான கவிதை புதியவன்.
வாழ்த்துகள்.//

வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி முத்துராமலிங்கம்...

புதியவன் said...

//rose said...
தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

\\
காதலுக்கு கண் இல்லைனு இதைதான் சொல்வாங்கலோ//

காதலுக்கு கண் தேவை இல்லை ரோஸ் மனசு தான் தேவை...

புதியவன் said...

//rose said...
உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...
\\
அருமை//

நன்றி...

புதியவன் said...

//rose said...
உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது
\\
பின்னிடீங்க‌//

வலையில தானே...

புதியவன் said...

//sakthi said...
உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...

nalla karpanai valam puthiyan

gud keep it up//

நன்றி சக்தி...

புதியவன் said...

//sakthi said...
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

athanai alagu devathai aaa????//

தேவதைன்னா அழகாத்தான் இருக்கும்...ஆனா, இந்த தேவதை ரொம்ப ரொம்ப அழகா இருக்கும்...

புதியவன் said...

// sakthi said...
உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

அருமை//

ரசிப்பிற்கு நன்றி சக்தி...

புதியவன் said...

// நாணல் said...
pudhiyavan... chance ah illaingka.. ovvouru kavithaiyum azhagu....

முக்கியமா...

///உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்//

:) நல்லா இருக்கே...//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நாணல்...

புதியவன் said...

//ரியாலியா said...
puthiyavaree thalaipee asathal.pinniteega machaan varigal ovondrum nenjai thottu vittana.//

மிக்க நன்றிங்க மேடம்...

புதியவன் said...

//குடுகுடுப்பை said...
உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன//

எப்படிப்பா இப்படியெல்லாம் பொய் சொல்றாங்க//

இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ இருக்கே...நன்றி குடுகுடுப்பை...

புதியவன் said...

// Suresh said...
//உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி/

ஹா ஹா அருமை//

நன்றி சுரேஷ்...

புதியவன் said...

//ஆ.ஞானசேகரன் said...
//இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்//

ஓ அப்படியா புதியவன்...//

இது உங்களுக்கு தெரியாததா...நன்றி ஞானசேகரன்...

புதியவன் said...

//sathya said...
உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது

nalla irukku pudhiyavan.....unga pudhu kavidhaiya paaththavudan santhosama irukku..neraiya ezhuthunga...thangal uvamai eppodhum nalla azhagu.....

congrats.....//

உங்களுக்கு சந்தோசமென்றால் எனக்கும் மகிழ்ச்சியே...வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சத்யா...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன//

இதுக்கு பேரு தான் என்பார்களோ !!!

அசத்தல்.

( தாமத வருகைக்கு மன்னிக்கவும் )//

மன்னிப்பெல்லாம் தேவை இல்லை செய்யது நீங்கள் எப்போது வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
இதுக்கு பேரு KT

தான் என்பார்களோ !!!

// Missed KT ////

அது என்ன செய்யது KT...?

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...//

ஆனால் ஒவ்வொன்றும் புதியதாக..( புதியவனிடமிருந்து )//

நன்றி செய்யது...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
//உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது//

இது ஒரு ஆற்று நீர் பொருள்கோளின் வகை என்று நினைக்கிறேன்.

கூறிய விதம் !!!!//

மிகவும் சரியே...இது ஒரு ஆற்று நீர் பொருள்கோளின் வகை தான்...

புதியவன் said...

//அ.மு.செய்யது said...
ஆமாம் நீங்கள் ஏன் காதலை மையமாக வைத்தே கவிதை எழுதுகிறீர்கள்.

கொஞ்சம் சமூகத்தை அலசலாமே !!! அல்லது பொதுவான வாழ்வியலை வெளி கொணரலாமே !!!

ஏனிந்த தயக்கம் புதியவன் ?//


தயக்கம் எதுவும் இல்லை செய்யது...வலையுலகில் நண்பர்கள் சமூகத்தையும் பொது வாழ்வியலையும் அரசியலையும் மையமாக வைத்து நிறைய எழுதுகிறார்கள்...

காதல் என்ற ஒற்றை சொல் மனதிற்குள் கொண்டு வரும் ஸ்பரிஸத்தை மற்றவைகளால் அவ்வளவு எளிதில் கொண்டு வர முடிவதில்லை ஆகவே தான் என் பதிவுகள் காதலை மையமாக வைத்து பதியப் படுகின்றன...

எனினும் வரும் பதிவுகளில் மற்றவற்றையும் முயற்சிக்கிறேன்...நன்றி செய்யது...

புதியவன் said...

//ஹேமா said...
புதியவன் மன்னிப்போடு பிந்திய வருகைக்கு.எப்பவும் போல அழகான வர்ணிப்போடு அருமையான காதல் கவிதை.மனம் என் ஊரோடும் உறவுகளோடும் இங்கு போராட்டங்களோடு இணைந்து
கொண்டிருந்தாலும் உங்கள் பக்கமும் ஓடி வந்தேன்.கவிதை ரசித்தேன்.//

புரிந்து கொள்ள முடிகிறது...மிக்க நன்றி ஹேமா...

புதியவன் said...

//வியா (Viyaa) said...
உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

alagana varigal
migavum rasithen putiyavan//

ரசிப்பிற்கு மிக்க நன்றி வியா...

புதியவன் said...

// Poornima Saravana kumar said...
வாவ்!

எல்லாமே நல்லா இருக்குங்க புதியவன்..

வாழ்த்துகள்:)/

வாழ்த்துக்களுக்கு நன்றி பூர்ணிமா சரண்...

புதியவன் said...

// Poornima Saravana kumar said...
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்
//

அழகு!!

(ஒரே ஒரு வார்த்தையால் அலங்கரிக்கப்பட்டு நிற்கிறது மற்றவை!)//

நன்றி...

புதியவன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
எல்லோருக்கும் புரியும் எளிமையான நடையில் அருமையான கவிதை..

//உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது//

அழகு நண்பா..//

நன்றி நண்பரே...

புதியவன் said...

//Divyapriya said...
//தேவவினாடி//

அழகிய விளக்கம்...//

மிக்க நன்றி திவ்யப்பிரியா...

புதியவன் said...

//ஷீ-நிசி said...
உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................///

வாவ்! இந்த முத்த பகுதிதான் என்னை மொத்தமாய் கவர்ந்தது புதியவன்!//

முத்தப் பகுதியை ரசித்ததற்கு மிக்க நன்றி ஷீ-நிசி...

புதியவன் said...

//gayathri said...
உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................



superpa//

நன்றி காயத்ரி...

புதியவன் said...

//Arun said...
நல்ல கவிதைகள்..//

முதல் வருகைக்கு நன்றி அருண்...

புதியவன் said...

//தமிழரசி said...
புதியவன் என்றதும் பூரித்து புது வடிவு எடுத்து கொடுக்கிறது வார்த்தைகள்...தேவவினாடி தோன்றிய பொற்காலத்தில் பிறந்தமைக்கு பேருவுவகை கொள்கிறோம்.....இதயம் ஈகை தர இதழோ ஈரம் தர கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக கோதையவள் கொள்ளை அழகு நீர் கொண்டதால் கோடி அதிசயம் இனி நடக்கும் இங்கு ....இதழ் தந்த ஈரத்திற்கு காவல் வைத்த கலி காலம் வெள்ளாமையை வேலி தின்ற கூற்றாய் முன்னுறு முத்தம்களை நீங்களே தின்றதில் விந்தை என்ன?மது உண்ட வண்டாய் மயங்குகிறது மனது...கவி படிக்க வரும் எங்களை காதல் படிக்கவைப்பீரோ!!!!!!!!! இன்னும் கருத்துரைகள் சொல்ல கவிபூக்கள் இருக்கிறது என் வார்த்தைகளுக்கு காவல் வைக்க உங்கள் காதலியின் வெட்கத்தை கொஞ்சம் தருவிரோ!!!!!!!//

ஆஹா...என் கவிதைக்கு கவிதையாக ஒரு பின்னூட்டம் மிக அழகு...மிக்க நன்றி தமிழரசி...

புதியவன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
மீ த 51.!

ரசனையான கவிதைகள்.!

//ரசிப்பிற்கு நன்றி...//

(அப்புறம் அது 'சிணுங்களில்' அல்ல, 'சிணுங்கலில்'..)//

எழுத்துப் பிழை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா...

புதியவன் said...

//ivingobi said...
'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க
நீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'


oru குற்றம் illai irandu குற்றம் kandaen maelae kand vaakkiyathil mattum Kalakkura nanba kalakkikittae iru..... All the best//

முதல் வருகைக்கும் குற்றம் என்ற இரு வார்த்தைகளைத் தவிர குற்றம் இல்லை என்று நக்கீரனாய் உரைத்ததற்கும் மிக்க நன்றி கோபி...

kavitha said...

உன் இதழ்களின்
சிணுங்கலில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...
முதன் முதலாய்
என் மனதும்
கலைந்து போனது

Nan rusittha, rasitha varigal puthiyavan. onga name yenna ?

புதியவன் said...

//kavi said...
உன் இதழ்களின்
சிணுங்கலில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...
முதன் முதலாய்
என் மனதும்
கலைந்து போனது

Nan rusittha, rasitha varigal puthiyavan.onga name yenna ? //

வருகைக்கும் கவிதையை ருசித்து ரசித்ததற்கும்
மிக்க நன்றி கவி...

என்னுடைய பெயரை சொல்லித் தான்
என் பெயர் என்னவென்று கேட்க்கிறீங்க கவி...

Revathyrkrishnan said...

//உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................//

கொள்ளை கொன்ட முத்தங்களை வர்ணிக்கும் கொள்ளை அழகு வரிகள்... மிகவும் ரசித்தேன்... ரொம்ப நல்லாருக்கு புதியவன்

புதியவன் said...

//reena said...
//உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................//

கொள்ளை கொன்ட முத்தங்களை வர்ணிக்கும் கொள்ளை அழகு வரிகள்... மிகவும் ரசித்தேன்... ரொம்ப நல்லாருக்கு புதியவன்//

வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரீனா...

Sakthidevi.I said...

உன் விழிகளின்
சிணுங்களில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்களில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

again superb one............ :) congrats

Sakthidevi.I said...

தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

nice